கோட்சே ஆர்.எஸ்.எஸ்.காரர் தான்!

 

  • மொரார்ஜி – கோட்சே ஆர்.எஸ்.எஸ்.காரர் என்பதை உறுதிப்படுத்தியதோடு, கோட்சே தம்பி கோபால் கோட்சே – தாங்கள் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் என்பதை உறுதி செய்துள்ளார்.
  • காந்தி ஆர்.எஸ்.எஸ். முகாமைப் பார்வையிட்டு பாராட்டினார் என்பது அப்பட்டமான பொய்.
  • காந்தி நினைவிடத்தில் வழிகாட்டியை ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளர்கள் வேலையை விட்டு நீக்கியது ஏன்?

 

கோட்சே வாக்குமூலத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பைக் காப்பாற்ற, தான் அந்த அமைப்பில் இல்லை என்று கூறியுள்ளான். உண்மையில் ஆர்.எஸ்.எஸ். தயாரிப்பு தான் கோட்சே என்பதற்கான ஆதாரங்களை கீழே தருகிறோம்.

காந்தியார் கொலைக்கும் ஆர்.எஸ்.எஸ்.சுக்கும் தொடர்பு உண்டு என்பதற்கு அடுக்கடுக்கான ஆதாரங்கள் உண்டு!

மொரார்ஜி தேசாய் தனது சுயசரிதையை,  ‘ளுவடிசல டிக அல டகைந’ என்ற பெயரில் எழுதியிருக்கிறார். அதில் 248 ஆவது பக்கத்தில், காந்தியாரை சுட்டுக்கொன்றது நாதுராம் கோட்சே என்பவன் புனேயில், ‘ஆர்.எஸ்.எஸ். ஊழியனாக அவன் பணியாற்றியவன்’ என்று எழுதியிருக்கிறார். ஏ.ஜே.குர்ரான் எழுதிய ‘ஆடைவையவே ழiனேரளைஅ in ஐனேயைn யீடிடவைiஉள’ என்ற நூலில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் ஹெட்கேவருடன், சுற்றுப் பயணங்களில் உடன் சென்று கொண்டிருந்தவன் கோட்சே என்பதை எடுத்துக் காட்டியிருக்கிறார்.

நாதுராம் கோட்சேயின் சகோதரர் கோபால் கோட்சே காந்தியாரைக் கொலை செய்யப் புறப்பட்டபோது நடந்த நிகழ்ச்சிகளை, தனது வாக்குமூலத்தில் விவரிக்கிறார். காந்தியாரை சுட்டுக்கொல்ல சென்ற போது, கோட்சே பாடிய பிரார்த்தனைப் பாடலை அவர் குறிப்பிட்டிருக்கிறார். அது ஆர்.எஸ்.எஸ். ஷாகாக்களில் பாடப்படும் சமஸ்கிருதப் பிரார்த்தனைப் பாடல். கோட்சே ஒரு காலத்தில் ஆர்.எஸ்.எஸ்.சில் இருந்துவிட்டு பிறகு அதிலிருந்து விலகிப் போய் விட்டார் என்ற ஒரு வாதத்தை ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் முன் வைத்து தப்பித்துக்கொள்ளப் பார்க்கிறார்கள். அது உண்மைக்கு சம்பந்தமில்லாத வாதம் என்பதை கோபால் கோட்சேயின் இந்த ஒப்புதல் வாக்கு மூலமே காட்டிக் கொடுத்துவிடுகிறது.

கோட்சே பாடிய அந்த பிரார்த்தனைப் பாடல் – அவர் ஆர்.எஸ்.எஸ். உறுப்பினராக இருந்த அந்தக் காலத்தில் ஆர்.எஸ்.எஸ். ‘ஷாகா’க்களில் பாடப்பட்ட பாடல் அல்ல; அப்போது மராத்திய மொழியில்தான் அவர்கள் பாடினார்கள். அதற்குப் பிறகு 1940 ஆம் ஆண்டில்தான் கோட்சே உச்சரித்த அந்த சமஸ்கிருதப் பிரார்த்தனைப் பாடல் நடைமுறைக்கு வந்தது.  இந்தப் பாடல்ஆர்.எஸ்.எஸ்.காரர்களுக்கு மட்டுமே தெரியும், அவர்கள் ரகசியமாக அதை வைத்திருக்கிறார்கள்.

1932ஆம் ஆண்டிலேயே நாதுராம் கோட்சே – ஆர்.எஸ்.எஸ். சை விட்டுப் போய் விட்டார் என்றால் – 1940ஆம் ஆண்டுக்குப் பிறகு அறிமுகப்படுத்தப்பட்ட ஆர்.எஸ்.எஸ்.காரர்களிடம் மட்டுமே ரகசியமாக வைக்கப் பட்டிருந்த – ஒரு சமஸ்கிருத பிரார்த்தனைப் பாடலை – காந்தியாரைக் கொலை செய்வதற்கு முன்பே கோட்சே எப்படிப் பாடினான்?

தங்களுக்கும் காந்தியார் கொலைக்கும் தொடர்பு இல்லை என்று காட்டுவதற்காக சில ஆதாரங்களைக் காட்டி அவர்கள் நூல் ஒன்றை வெளியிட்டார்கள். உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் பட்டேல் – பிரதமர் நேருவுக்கு எழுதிய ஒரு கடிதத்தை (27 பிப் 1948ல் எழுதியது) அவர்கள் சான்றாக எடுத்துக் காட்டியிருந்தார்கள். அந்தக் கடிதத்தில் – காந்தியாரைக் கொலை செய்ய திட்டமிட்டது இந்து மகாசபை என்ற அமைப்புதானே தவிர ஆர்.எஸ்.எஸ். அல்ல என்று பட்டேல் எழுதியிருக்கிறார்.

துர்கா தாஸ் எழுதிய ‘ளுயசனயசயீயவநட’ள ஊடிசநளயீடினேநnஉந’ நூலில் 6 ஆவது தொகுதியிலிருந்து மேற்கண்ட கடிதம் எடுத்துக் காட்டப்பட்டது. அதே நூலில் அதே 6 ஆவது தொகுதியில் பட்டேலின் மற்றொரு கடிதமும் இருக்கிறது. இந்தக் கடிதம் – முன்னாள் இந்து மகாசபைத் தலைவரும் – பின்னாள் ஜனசங்கத் தலைவருமான டாக்டர் முகர்ஜி என்ற பார்ப்பனருக்கு எழுதப்பட்ட கடிதம். இந்தக் கடிதத்திலே பட்டேல் என்ன குறிப்பிடுகிறார்?

நேருவுக்கு – பட்டேல் எழுதிய ஆர்.ஏஸ்.ஏஸ்.  காரர்கள் எடுத்துக்காட்டியிருக்கும் முதல் கடிதம், காந்தியார் கொலை வழக்கு விசாரணை தொடங்குவதற்கு முன்பு எழுதப்பட்டதாகும். கொலை வழக்கு விசாரணை துவங்கி ஒரு மாத காலத்துக்குப் பிறகு – டாக்டர் முகர்ஜிக்கு பட்டேல் இந்தக் கடிதத்தை எழுதுகிறார்; அதாவது வழக்கு பற்றிய புலன் விசாரணைகள் நடத்தப்பட்டு – பல உண்மைகள் அரசாங்கத்துக்கு தெரியவந்த பிறகு எழுதப்பட்ட கடிதம் இது.

ஆர்.எஸ்.எஸ்.க்கும். இந்து மகா சபைக்கும் காந்தியார் கொலைக்கும் தொடர்பு உண்டா என்பது பற்றி இப்போது நான் எதுவும் சொல்லக் கூடாது; வழக்கு நடக்கும் இந்த நேரத்தில் அப்படிச் சொல்வது. நீதிமன்றத்தில் குறுக்கிட்டதாக ஆகிவிடும். ஆனால் அரசாங்கத்துக்கு வரும் தகவல்கள் ஒன்றை உறுதிப் படுத்திவிட்டது. இந்த இரண்டு அமைப்புகளின் நடவடிக்கைகளினால் தான் குறிப்பாக ஆர்.எஸ்.எஸ்.  நடவடிக்கையினால் தான், இப்படிப்பட்ட ஒரு துயரமான நிகழ்ச்சி நடப்பதற்கான சூழ்நிலை நாட்டில் உருவாகியது.  இது பட்டேல் அவர்கள் – விசாரணை விவரங்கள் முழுதும் கிடைத்த பிறகு முகர்ஜிக்கு எழுதிய கடிதம் .

நேருவுக்கு எழுதிய கடிதத்தை எடுத்துக் காட்டி – குளிர்காய நினைக்கும் இந்தக் கூட்டம் – அதே தொகுதியில் டாக்டர் முகர்ஜிக்கு எழுதிய கடிதம் இருக்கிறதே, அதை எடுத்துக்காட்டாமல் போனது ஏன்? அதுவும் கொலை வழக்கு பற்றிய ரகசிய போலீஸ் விசாரணைகள் நடத்தி பல உண்மைகளைத் தெரிந்து கொண்ட பிறகு எழுதப்பட்ட கடிதம் அல்லவா?

காந்தியாரின் கொலை வழக்கு விசாரணை – 1948ஆம் ஆண்டு ஜுன் 22ஆம் தேதி டில்லி செங்கோட்டையிலே துவங்குகிறது, ஆத்மாச்சரன் என்ற விசேஷ நீதிபதி முன் விசாரணைகள் நடக்கின்றன. பிறகு இந்த வழக்கு அப்பீலுக்கு போகிறது; கிழக்கு பஞ்சாப் மாநிலத்தில் – சிம்லா உயர்நீதிமன்றத்தில் 1949 ஆம் ஆண்டு மே 2 ஆம் தேதி அப்பீல் விசாரணை துவங்கி, அதே ஆண்டு ஜுன் 21 ஆம் தேதி தீர்ப்பு வழங்கப் படுகிறது. குற்றவாளிகள் தண்டிக்கப்படுகின்றனர். பம்பாய் அட்வகேட் ஜெனரல் சி.கே.தப்தாரி (ஊ.மு.னுயயீhவயசல) அரசாங்கத் தின் வழக்கறிஞர்.

இந்த வழக்கில் – அரசு வழக்கறிஞர் காந்தியார் கொலைக்கும் ஆர்.எஸ்.எஸ்.காரர்களுக்கும் தொடர்பு உண்டு என்று எந்த இடத்திலும் வாதாடவில்லை என்றும், நீதிபதியின் தீர்ப்பிலும் ஆர்.எஸ்.உஸ். மீது எந்தக் குற்றமும் சாட்டவில்லை என்றும் – ஆர்.எஸ்எஸ். காரர்கள் வாதாடுகிறார்கள். இந்த வாதத்திலேயும் சாரமும் இல்லை; சத்தும் இல்லை. எந்த ஒரு அரசாங்கமும், வழக்கு விசாரணையில் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதைத் தான் முக்கிய நோக்கமாகக் கொண்டிருப்பது வழக்கம். ஒருவனைக் குற்றவாளி என்று நிரூபிக்கும் முயற்சிகளில் ஈடுபடும்போது அதற்கு ஒரு அமைப்போ அல்லது ஒரு தத்துவமோதான் காரணமாக இருந்தது என்று குற்றம் சாட்டி வாதாடுவது இந்தியாவில், அந்தக் காலத்திலும் சரி; இந்தக் காலத்திலும் சரி; நீதிமன்ற நடைமுறையாக இருக்கவில்லை. காரணம் இந்த அடிப்படையில், குற்றத்தை நிரூபிப்பது மிகவும் கடினம்.

காந்தியாரைக் கொலை செய்த கோட்சே ஒரு ஆர்.எஸ்.எஸ்.காரர்தான் என்பதை சட்டப்படி நிரூபித்துவிட்டதாக வைத்துக்கொண்டாலும் – அந்த அடிப்படையினால் மட்டும் ஆர்.எஸ்.எஸ். அமைப்புச் சட்டப்படியான ஒரு குற்றவாளி அமைப்பாகிவிட முடியாது. அந்த அமைப்பின் முக்கிய பொறுப்பில் உள்ளவர்கள் ஒன்றாக சந்தித்து காந்தியாரை கொலை செய்யவேண்டும் என்று முடிவு எடுத்து அதற்குப் பிறகு கோட்சேயிடம் அந்தப் பொறுப்பை ஒப்படைத்தார்கள் என்பதை நிரூபித்தால் தான் ஆர்.எஸ்.எஸ். என்ற அமைப்பே “குற்றவாளி” ஆகமுடியும். இவைகளை “ரெக்கார்டு” பூர்வமாக நிரூபிப்பது இயலாத காரியம்! இந்த விவகாரங்களில் ஈடுபட்டு வழக்கு திசை திரும்பி குற்றவாளிகள் தப்பித்துக்கொள்ளும் சூழ்நிலை உருவாகி விடக்கூடாது அல்லவா? எனவேதான் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் – அரசு வழக்கறிஞர் – இதில் ஆர்.எஸ்.எஸ்.  அமைப்பைக் கொண்டு வந்து சேர்க்கவில்லை. அது மட்டுமல்ல; ஆர்.எஸ்.எஸ்.  அமைப்புக்கு உறுப்பினர் புத்தகம் எதுவும் கிடையாது, உறுப்பினர் அட்டை கிடையாது. உறுப்பினர் கட்டணமும் கிடையாது; எனவே, ரசீது கொடுப்பது என்ற பிரச்சினையே எழவில்லை. எனவே – கோட்சே ஆர்.எஸ்.எஸ்.  உறுப்பினர் என்பதை நிரூபிப்பது “ரெக்கார்டுகளின்” மூலம் இயலாது; எனவே நீதிமன்றத்தில் அரசு வாதாடவில்லை என்ற காரணமோ தீர்ப்பில் ஆர்.எஸ்.எஸ். பற்றி எதுவும் குறிப்பிடவில்லை என்ற வாதமோ இவர்களைக் காப்பாற்றிவிட முடியாது.

காந்தியார் கொலை வழக்கு விசாரணை முடிந்த பிறகு மத்திய அரசு இந்தக் கொலை பற்றி விசாரிக்க ஒரு விசாரணைக் கமிஷனை அமைத்தது. ஓய்வு பெற்ற முன்னாள் சுப்ரீம் கோர்ட் நீதிபதி ஜே.எல்.கபூர் இந்த விசாரணைக் கமிஷனின் தலைவர். இந்தக் கமிஷன் பல்வேறு நகரங்களில் விசாரணையை நடத்தி, 1969 ஆம் ஆண்டு விசாரணை அறிக்கையை அரசிடம் தாக்கல் செய்தது. இதில் 101 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர்; 407 ஆதாரப் பத்திரங்கள் (டாக்குமெண்ட்ஸ்) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

கபூர் கமிஷன் நியமிக்கப்பட்டபோது அதிலே தந்திரமான ஒரு சூழ்ச்சியை செய்துவிட்டார்கள்; அதாவது விசாரணைத் கமிஷனுக்கு நிர்ணயிக்கப் பட்ட வரம்புகளில் (கூநசஅள டிக சநகநசநnஉந) காந்தியார் கொலையில் ஆர்.எஸ்.எஸ். நேரடி பங்கு உண்டா என்பது பற்றி குறிப்பிடவில்லை . எனவே – இந்தப் பிரச்சினை விசாரணைக் கமிஷனின் வரம்புக்கே உட்படாத ஒரு பிரச்சினையாக ஆக்கப்பட்டு விட்டது. அப்படிப் பட்ட சூழ்நிலையில் கமிஷன் ஆர்.எஸ்.எஸ். காரர்கள் பற்றி தனது பரிந்துரையில் எப்படிக் குறிப்பிட முடியும்?

கபூர் ஆணையத்தில் சாட்சியளித்த சிலர் ஆர்.எஸ்.எஸ். தொடர்பு பற்றி பதிவு செய் துள்ளார்கள். அவற்றில் சில:

95ஆவது சாட்சி ஜே.என்.சஹானி (ளுயாயni). அவரது சாட்சியத்தை கமிஷன் அறிக்கையில் 19 ஆவது அத்தியாயம் 56ஆவது பாராவில் கீழ்க் கண்டவாறு தொகுத்துத் தந்திருக்கிறது.

“ஜே.என்.சஹானி, ஒரு ரகசிய அமைப்புப்பற்றி சாட்சியம் அளித்தார். ஆனால் அது ஆர்.எஸ்.எஸ். என்று நேரடியாக அவர் குறிப்பிடவில்லை அந்த நாள்களில் பிர்லா மாளிகையில் (காந்தியார் இருந்த போது) குண்டு வெடித்த நிகழ்ச்சி பற்றி பகிரங்கமாக விவாதிக்கப்பட்டது. அந்த ரகசிய அமைப்பில் சுமார் 6 இலட்சம் தொண்டர்கள் இருந்தார்கள். அவர்கள் உள்நாட்டில் ஒரு ஆட்சிக் கவிழ்ப்புப் புரட்சியை நடத்தத் திட்டமிட்டிருந்தார்கள். அந்த அமைப்பின் தலைவர்களாக கோல்வாக்கர், போபாத்கார், டாக்டர் காரே என்பவர்கள் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. முக்கிய தலைவர்களைத் தீர்த்துக்கட்டிவிட்டு பிறகு அரசாங்கத்தைக் கவிழ்க்க அவர்கள் திட்டமிட் டிருந்தார்கள் என்றும் அதற்காக அந்த அமைப்பின் தொண்டர்களுக்கு ஆல்வார் பரத்பூர் மற்றும் வேறு சில இடங்களில் பயிற்சி தரப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. மகாத்மா காந்தி கொல்லப் பட்டது அந்த திட்டத்தின் ஒரு பகுதியே ஆகும். இந்த அமைப்புக்கு பல மன்னர்களும் ஆதரவு தருகிறார்கள். பிரிட்டிஷார் போனவுடன் குறைந்தது தாங்கள் ஆட்சி செய்த ராஜ்யமாவது தங்களிடம் மீண்டும் கிடைக்கும் என்று இவர்கள் எதிர்பார்த்தார்கள். ஜெய்ஸ்லா மார். ஜோத்பூர் ஆல்வார், பரத்பூர், பரோடா, போபால் மன்னர்கள் தான் இந்த அமைப்புக்கு உதவி செய்தவர்கள். இந்த ரகசிய அமைப்புக்கு நாக்பூரிலிருந்து கோல்வாக்கரும் புனேயிலிருந்து போபாத்கார் என்ப வரும் தலைமை தாங்கி நடத்தினார்கள்.”

இப்படிப்பட்ட மன்னர்களின் ஆதரவோடு இந்தப் பார்ப்பனக் கூட்டம் நடத்திய கொலைவெறி சதித் திட்டத்தை ஜே.என். சஹானி தனது சாட்சியத்தில் எடுத்துச் சொல்லியிருக்கிறார். இதற்கு விசாரணைக் கமிஷன் – தனது கருத்தை அடுத்த பாராவில் கீழ்க்கண்டவாறு தெரிவித்திருக்கிறது :

“குருஜி கோல்வாக்கர் என்பவர் ஆர்.எஸ்.எஸ்.  என்ற அமைப்புக்குத் தலைவராக இருக்கிறார் என்பது மட்டுமே கமிஷனுக்குத் தெரிகிறது.  சஹானி இந்த நடவடிக்கைகள் ஆர்.எஸ்.எஸ். நடவடிக்கை கள் என்று பெயரைக் குறிப்பிட்டுச் சொல்லாமல் , பொதுவாக ரகசிய அமைப்பு என்றே சொல்லி இருக்கிறார்.” (கமிஷன் அறிக்கை 19 ஆவது அத்தியாயம் – 57 ஆவது பாரா) என்று கமிஷன் தனது கருத்தை சொல்லியிருக்கிறது.

95ஆவது சாட்சியமான ஹீஜா என்பவர் தந்திருக்கிற சாட்சியங்கள் இன்னும் அதிர்ச்சியூட்டக் கூடியதாகும். அவர் கூறுவதைப் பாருங்கள் : 1947 மே – ஜூன் மாதத்தில் ஆல்வார் என்ற இடத்தில் ஒரு ஆர்.எஸ்.எஸ்.  முகாம் நடந்தது. அந்தப்பகுதி மன்னர் ஆட்சியில் பிரதமராக இருந்த டாக்டர் காரே, உள் துறை அமைச்சராக இருந்தவர். இருவருமே அந்த முகாமுக்கு தங்கள் முழு ஆதரவையும் அளித்தனர். மன்னருக்கும் இது நன்றாகத் தெரியும். மன்னரும் இந்த இரண்டு அமைச்சர்களும் ஆர்.எஸ்.எஸ்.  நடவடிக்கைகளுக்கு முழு ஆதரவை தந்தனர். பிப்ரவரி மாத ஆரம்பத்தில் ஆர்.எஸ்.எஸ்.காரர்களுக்கு ராணுவப் பயிற்சி அளிக்கப்பட்டது. ராஜாவின் ராணுவ வீரர்கள் தங்கியிருந்த பாசறையிலே இவர்களும் தங்கி ராணுவப்பயிற்சி பெற்றனர். சுழல் துப்பாக்கி கைத்துப்பாக்கி சுடும் பயிற்சிகளும் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் பெற்றனர்.” ( 19ஆவது அத்தியாயம் – 60ஆவது பாரா)

பி.பி.எஸ். ஜெட்லே என்ற சீனியர் புலனாய்வுத்துறை அதிகாரி கமிஷன் முன் அளித்த சாட்சியத்தைப் பாருங்கள்; இவர் 55 ஆவது சாட்சி! இவரது சாட்சியத்தை கமிஷன் தனது அறிக்கையில் கீழ்க்கண்டவாறு தொகுத்துக் கூறியுள்ளது.

சுதந்திரத்துக்குப் பிறகு – இரண்டு மாதங்களில், ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் மீது

600லிருந்து 700 வழக்குகள் வரை இந்த அதிகாரி பதிவு செய்துள்ளார். ஆயுதங்கள் சேகரித்து, கிராமத்தினர் மீது தாக்குதல் நடத்தியது, தனி நபர்களைத் தாக்கியது போன்ற பல்வேறு குற்றங்களில் அவர்கள் ஈடுபட்டனர். எனவே இந்த அதிகாரி ஆர்.எஸ்.எஸ். தடை செய்யப்பட வேண்டும் என்று பரிந்துரைத்தார். உ பி. பிரதமர் (ஞசநஅநைச) ஜி.பி. பந்த் உள்துறை அமைச்சர் லால் பகதூர் சாஸ்திரி ஆகியோரை சந்தித்து, இந்தக் கருத்தை எடுத்துச் சொன்னார். அவர்கள் பட்டேலிடம் கலந்து ஆலோசிப்பதாகக் கூறினர். ஆனால் மகாத்மா காந்தி கொலை செய்யப்பட்ட பிறகுதான், ஆர்.எஸ்.எஸ். தடை செய்யப்பட்டது. (கமிஷன் அறிக்கை 19 ஆவது அத்தியாயம் 59 ஆவது பாரா)

டில்லி இரகசிய போலீஸ் துறையின் புலனாய்வு அறிக்கையையும் கமிஷன் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியிருக்கிறது. 1947ஆம் ஆண்டு டிசம்பர் 8 ஆம் தேதி ரகசிய போலீஸ்துறை அரசுக்கு அளித்த அறிக்கையில் குறிப்பிட்டிருப்பது, இதோ: “1947 ஆம் ஆண்டு டிசம்பர் 8 ஆம் தேதி டில்லி ராமலீலா மைதானத் தில் ஆர்.எஸ்.எஸ்.  ஊழியர்கள் கூட்டம் ஒன்று நடந்தது. அதில் 2500 பேர் கலந்து கொண்டனர். கோல்வாக்கர் பேசுகையில், மேலும் தொண்டர்களை அதிகமாக சேர்க்குமாறும். சிவாஜி மன்னனைப்போல் கொரில்லா யுத்தத்திற்கும் தயாராகுமாறும் அழைப்பு விடுத்தார். ஆர்.எஸ்.எஸ்.  பாகிஸ்தானை ஒழித்துக் கட்டும்; அதில் யாராவது குறுக்கே வந்தால் அவர்களையும் ஆர்.எஸ்.எஸ்.  ஒழித்துக் கட்டும் என்றும் கோல்வாக்கர் பேசினார். “அது நேரு அரசாங்கமாக இருந்தாலும் சரி; வேறு எந்த அரசாங்கமாக இருந்தாலும் சரி, அது பிரச்சினை அல்ல; நாம் வாழ்வதற்கு இங்கே இடம் கிடையாது. நமது எதிரிகளை உடனடியாக மூச்சை அடக்கச் செய்யும் முறை நமக்குத் தெரியும்” என்று வன்முறையைத் தூண்டிவிடும் வகையில் கோல்வாக்கர் பேசினார். (கமிஷன் அறிக்கை 19 ஆவது அத்தியாயம் 78 ஆவது பாரா) இப்படி ஏராளமான சாட்சியங்களை எடுத்துக் காட்டிக்கொண்டே போகலாம்!

காந்தியார் கொலைக்கும் ஆர்.எஸ்.எஸ். சுக்கும் தொடர்பு இல்லை என்றால் கோட்சே செய்தது தவறான நடவடிக்கை என்று இதுவரைக் கண்டித்து இருக்கிறீர்களா? காந்தியாரைக் கொலை செய்வதற்கு கோட்சே சொன்ன காரணம் எங்களுக்கு உடன்பாடு இல்லை என்று இதுவரை கூறியிருக்கிறீர்களா? மற்ற தரப்பிலிருந்து எடுத்து வைக்கப்படும் கருத்துக்களை வைத்துக் கொண்டு நழுவப் பார்க்கும் வேலைகள் வேண்டாம்; மக்கள் மன்றத்தை நீண்டநாள் ஏமாற்றிவிட முடியாது.

மொரார்ஜி தேசாய் தனது சுயசரிதையில் – கோட்சே ஒரு ஆர்.எஸ்.எஸ்.  காரர்தான் என்று திட்டவட்டமாக சொல்லியிருப்பதை – டில்லி காந்தி சமாதியில் உள்ள ஒரு கைடு, பார்க்க வருபவர்களிடம் எடுத்துச் சொல்லிக் கொண்டிருப்பார். அவரது பெயர் பி.என். தாமோதரன் (நாயர்) காந்தியார் பற்றிய வரலாற்றைச் சொல்லும் போது இந்த விவரத்தையும் அவர் நீண்ட காலமாகவே சொல்லி வந்தார்.

மொரார்ஜி தேசாய் பிரதமரான பிறகு, 1977ஆம் ஆண்டு அக்டோபர் 8ஆம் தேதி மொரார்ஜி அந்த சமாதிக்குச் செல்கிறார்; அப்போது உடன் சென்றவர் சிக்கந்தர் பக்த் என்ற வீட்டு வசதித்துறை அமைச்சர். அப்போது இந்தக் கைடு கோட்சே ஒரு ஆர்.எஸ்.எஸ்.காரர் என்று எல்லோரிடமும் விளக்குவது மொரார்ஜியின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டது. உடனே மொரார்ஜி சொன்னார்: “அது சரித்திர உண்மை ; அதை யாராலும் மாற்ற முடியாது; என்று அதற்கு சில நாள்களி லேயே அந்தக் கைடு வித்யார்த்தி பரிஷத் (இது ஒரு ஆர்.எஸ்.எஸ்.  மாணவர் அமைப்பு)காரர்களால் மூர்க்கத்தனமாகத் தாக்கப்பட்டார். வீட்டு வசதித் துறை அமைச்சர் நிர்வாகத்தின் கீழ்தான் காந்தி சமாதி இருந்தது; எனவே அந்த ஊழியர் வேலையை விட்டே நீக்கப்பட்டு விட்டார். பிறகு நாடாளுமன்றத்தில் இது மிகப் பெரிய பிரச்சினை யாகியது.  (ஆதாரம்: டி ஆர் கோயல் எழுதிய ஆர்.ஏஸ்.ஏஸ்.  நூல் – பக். 133)

தவறு செய்தவர்களை, கொலை செய்ய கீதையில் கிருஷ்ணன் வலியுறுத்த வில்லையா என்று அப்போது காந்தியாரிடம் இவர்கள் கேட்கிறார்கள். தவறு செய்தவர்களைத் தண்டிக்கும் பொறுப்பு இப்போது அரசாங்கத்திற்குத்தான் உண்டு. அந்த அதிகாரத்தை நீங்கள் எடுத்துக் கொண்டுவிட்டால் நேருவும், பட்டேலும் அதிகாரமற்றவர்கள் ஆகிவிடுவார்கள் என்று காந்தியார் பதிலளித்தார்.

பெரியார் முழக்கம் 06102022 இதழ்

 

You may also like...