காதல் உண்மையல்ல
உலகத்தில் காதலென்பதாக ஒரு வார்த்தையைச் சொல்லி, அதனுள் ஏதோ பிரமாதமான தன்மையொன்று தனிமையாக இருப்பதாகக் கற்பித்து மக்களுக்குள் புகுத்தி அனாவசியமாய் ஆண் – பெண் கூட்டு வாழ்க்கையின் பயனை மங்கச் செய்து காதலுக்காக என்று இன்ப மில்லாமல், திருப்தியில்லாமல் தொல்லைப்படுத்தப்பட்டு வரப்படு கிறதை ஒழிக்க வேண்டும் என்பதற்காகவே ஆகும்.
ஆனால், காதலென்றாலென்ன ? அதற்குள்ள சக்தி என்ன ? அது எப்படி உண்டாகிறது ? அது எதுவரையில் இருக்கின்றது ? அது எந்தெந்த சமயத்தில் உண்டாவது ? அது எவ்வப்போது மறைகின்றது ? அப்படி மறைந்து போய் விடுவதற்குக் காரணமென்ன ? என்பதைப் போன்ற விஷயங்களைக் கவனித்து ஆழ்ந்து யோசித்துப் பார்த்தால் காதலென்பது சத்தற்ற தன்மையும், உண்மையற்ற தன்மையும், நிச்சயமற்ற தன்மையும் அதை (காதலை)ப் பிரமாதப்படுத்துவதன் அசட்டுத்தனமும் ஆகியவைகள் எளிதில் விளங்கிவிடும். – குடி அரசு – 18.01.1931
பெரியார் முழக்கம் 06102022 இதழ்