பாஜகவும் பாலியல் குற்றச்சாட்டுகளும் ;
உத்தரகாண்ட் மாநிலத்தில் பாஜக தலைவர் வினோத் ஆர்யாவின் மகன் பல்காரியா கடந்த ஆண்டு அக்டோபரில் தனது அலுவலகத்தில் பணியாற்றிய பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தார். இதை வெளியே சொல்ல கூடாது என தனது டிரைவரையும் கடுமையாக தாக்கினார். மற்றும் அவரது தந்தை மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. கடந்த 2018ல் முன்னாள் ஒன்றிய பாஜக அமைச்சர் எம்.ஜே அக்பர் மீது ஆறு பெண் பத்திரிக்கையாளர்கள் பாலியல் குற்றச்சாட்டு கூறினர். கொல்கத்தாவில் பேட்டி தருகிறேன் என்று கூறி ஓட்டலுக்கு வரவழைத்து பாலியல் பலாத்காரம் செய்தார் என்ற குற்றச்சாட்டின் மீது ஈரத் துண்டை போட்டு வெற்றிகரமாக மறைத்து விட்டது மோடி தலைமையிலான ஒன்றிய அரசு. அரியானா மாநில பாஜக தலைவர் சுபாஷ் பராலாவின் மகன் விகாஸ் பராலா. [இவரும் பாஜகவில் பொறுப்பில் இருந்தார்] தனது நண்பர் ஆசிஷ் குமாருடன் சேர்ந்து IAS அதிகாரியின் மகளை பாலியல்...
