மாநில மாநாடு: களப்பணியில் பம்பரமாய் சுழலும் தோழர்கள்
உதயநிதியுடன் சந்திப்பு : அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை கழகத் தலைவர் கடந்த மார்ச் 26 மாலை சென்னை அன்பகத்தில் சந்தித்து, மாநாட்டில் பங்கேற்க அழைப்பு விடுத்தார். கட்டாயம் வருவேன் என்று அமைச்சர் உறுதியளித்தார். தலைமைக் கழகச் செயலாளர் தபசி. குமரன், தலைமைக் குழு உறுப்பினர் அன்பு தனசேகர் உடன் சென்றிருந்தனர்.
- மாநாட்டுக்கான இரண்டு நாள் நிகழ்ச்சிகள் உறுதி செய்யப்பட்டுவிட்டன. கழகத் தலைவர், பொதுச் செயலாளர், தலைமைக் கழகச் செயலாளர், சென்னை மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட தோழர்கள் கடந்த மூன்று நாள்களாக அமர்ந்து கலந்து பேசி நிகழ்ச்சி நிரல் தயாரிக்கப்பட்டது. பேச்சாளர்களிடம் ஒப்புதலும் பெறப்பட்டுள்ளது.
- மாநாட்டுத் தீர்மானங்கள் – மாநாட்டில் எடுக்கும் உறுதி மொழிகளை கழகத் தலைவர், பொதுச் செயலாளர் கலந்து பேசி இறுதி வடிவம் கொடுத்து வருகின்றனர்.
- ராசிபுரம் புதிய பேருந்து நிலையம் அருகே தோழர்கள் சுவரெழுத்து எழுதிக் கொண்டிருந்த போது முன்னாள் நகர கூட்டுறவு வங்கி இயக்குநரும், அ.இ.அ.தி.மு.க. பிரமுகருமான வி. சுந்தரம் தோழர்களைப் பாராட்டி நன்கொடை வழங்கினார்.
- கழக மாநாட்டில் இடம் பெறும் இயக்கக் குழந்தைகளுக்கான கலை நிகழ்ச்சிகளில் 10 முதல் 15 வயதுக்குட்பட்டவர்கள் பங்கு பெறலாம். தனிநபர் கலை நிகழ்ச்சி எனில் 3 நிமிடம்; குழுவாக நிகழ்த்தினால் 5 முதல் 7 நிமிடம் எடுத்துக் கொள்ளலாம். கலந்து கொள்ள விரும்பும் குழந்தைகளின் பெயர்களை மார்ச் 15க்குள் கீழ்க்கண்ட எண்களுக்குப் பதிவு செய்ய வேண்டும்.
சிவகாமி : 9824 48175
சிவக்குமார் : 9688 856151
சேலம் : 23.3.23 அன்று சேலம் மேற்கு மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் புதுசாம்பள்ளி முதல் மேட்டூர் ஆர்.எஸ். வரை இந்திராணி, சுதா தலைமையில் காலை 12 மணிக்கு மாநாட்டு வசூல் தொடங்கி இரவு 8 மணிவரை நடைபெற்றது. அந்தப் பகுதிகளிலுள்ள மளிகை கடை, ஒர்க் ஷாப், தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் பெருமளவில் மாநாட்டிற்கு நிதி வழங்கி ஆதரவு தெரிவித்தனர். வசூல் தொகை ரூ. 27,740 வசூலானது.
மாநாட்டு வசூல் பணியில் தங்களை இணைத்துக் கொண்ட தோழர்கள் நங்கவள்ளி பகுதி குமார், இந்திராணி, அருள்குமார், ராஜேந்திரன், அன்பு, மேட்டூர் ஆர்.எஸ். பகுதி சக்திவேல், முரளி, ராமச்சந்திரன், நாகராஜ், விவேக், ஜெகதீஷ், மேட்டூர் பகுதி
முத்துராஜ், அம்ஜத்கான், கொளத்தூர் சுதா, ராமமூர்த்தி, மாரி, செட்டி உள்ளிட்டோர்.
21.3.23 அன்று சேலம் மேற்கு மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் “இது தமிழ்நாடு இளம் தலைமுறையின் எச்சரிக்கை மாநாட்டு” வசூல் காலை 12 மணிக்கு தலைமைச் செயற்குழு உறுப்பினர் ஆர். சக்திவேல் தலைமையில் குஞ்சாண்டியூர் முதல் ராமன் நகர் வரை கடை வசூல் செய்யப்பட்டது. அந்தப் பகுதிகளில் இருக்கக்கூடிய பெரும் வணிகர் முதல் சிறு வியாபாரிகள் வரை பெட்டிக்கடை முதல் காய்கறி கடை வரை அதேபோல் அரசு அதிகாரிகள் முதல் மருத்துவர்கள் என அனைத்துப் பொது மக்களும் பெரும் உற்சாகத்தோடு மாநாட்டு நிதியை வழங்கி ஆதரவு கரம் நீட்டினர். மாநாட்டு வசூல் தொகை ரூ. 35,680/-.
சுவரெழுத்துகள் தீவிரம் : கடந்த 3 நாள்களாக மார்ச் 24, 25, 26 அஸ்தம்பட்டி, டால்மியா போர்டு, கொண்டலாம்பட்டி, ஜவஹர் மில் குரங்குச்சாவடி ஆகிய இடங்களில் சேலம் மாவட்டக் கழகத் தோழர்கள் சுவரெழுத்துப் பணிகளை மேற்கொண்டனர்.
இராசிபுரம், மயிலாடுதுறை, சூலூர், பல்லடம் ஆகிய பகுதிகளிலும் கழகத் தோழர்கள் சுவரெழுத்துப் பணிகளைச் செய்து முடித்துள்ளனர்.
கோவை : கோவை மாநகர் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் 25.3.2023 சனிக்கிழமை மாலை 5 மணி அளவில் இரயில் நிலையம் அருகே வழக்கறிஞர் கார்கி அலுவலகத்தில் மாவட்டத் தலைவர் பா.இராமச்சந்திரன் தலைமையில் மாநாட்டை வெற்றிகரமாக நடத்துவது சம்பந்தமாக கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.
கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட முடிவுகள்:
கோவையில் இருந்து தனியாக பேருந்து மூலம் செல்வது; கோவையைச் சுற்றி கிராமங்களுக்குச் செல்லும் நகரப் பேருந்துகளில் மாநகர் பகுதிகளில் துண்டறிக்கை வழங்கி மாநாட்டின் அவசியத்தை விளக்கி பிரச்சாரம் செய்வது; ஒவ்வொரு பணிக்கும் பொறுப்பாளர் அமைத்து செயல்படுவது; பெறப்படும் நன்கொடைகளை தலைமையிடம் ஒப்படைப்பது என முடிவெடுக்கப்பட்டது.
கலந்துரையாடலில் மேட்டுப்பாளையம் இராமச்சந்திரன்,
சூலூர் பன்னீர்செல்வம், நிர்மல் குமார், வெங்கட், கிருஷ்ணன் மாதவன், சிவராசு, புரட்சித்தமிழன், இயல் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தோழர்கள் கிருஷ்ணன் – இராஜாமணியின் இணையேற்பு நாளையொட்டி தோழர்கள் மகிழ்வைப் பகிர்ந்து கொண்டனர்.
கலந்துரையாடல் கூட்டம் நடத்துவதற்கு தன் அலுவலகத்தைக் கொடுத்து உதவிய வழக்கறிஞர் கார்கிக்கு நன்றி.
தகவல் : நிர்மல் குமார்
பெரியார் முழக்கம் 30032023 இதழ்