அய்.அய்.டி.களில் ‘சனாதனம்’

அய்.அய்.டி., அய்.அய்.அய்.எம். பார்ப்பன கூடாரங்களாகி விட்டன. அங்கே சமஸ்கிருதம் வேதம் கற்பிக்கப்படுகிறது. அம்பேத்கர், பெரியார் படிப்பு வட்டம் தடை செய்யப்படுகிறது. பார்ப்பன வேத பிரச்சாரங்கள், உபதேசம் செய்கிறார்கள்.

மாட்டிறைச்சி சாப்பிட்டால் தாக்குதலுக்கு உள்ளாகிறார்கள். சைவம், அசைவம் என்று உணவுக் கூடத்தில் பாகுபாடு. தலித் மாணவர்கள், பேராசிரியர்களாக இருக்கும் பார்ப்பனர்கள் தரும் இடையூறுகள் அவமதிப்புகளால் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.

ட மும்பை அய்.அய்.டி.யைச் சார்ந்த தலித் மாணவர் தர்ஷன் சோலங்கி விடுதியின் 7ஆவது மாடியிலிருந்து குதித்து அண்மையில் தற்கொலை செய்து கொண்டார்.

2014இல் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு என்ன நிலை?

ட 2014 முதல் 2021 வரை அய்.அய்.டி., அய்.அய்.எம். மத்திய பல்கலைக் கழகங்களில் 122 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். மக்களவையில் இது அரசு தாக்கல் செய்த அறிக்கையில் ஒப்புக் கொள்ளப்பட்ட தகவல். 122 பேரில் 24 மாணவர்கள் பட்டியல் இனப் பிரிவினர். 41 பேர் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர். பழங்குடி மற்றும் சிறுபான்மை சமூகத்தைச் சார்ந்தவர்கள் 3 பேர். இவை அனைத்தும் நிறுவனக் கொலைகளே!

தடைக் கற்களைத் தாண்டி உயர் கல்வியை எட்டிப் பிடிக்கும் விளிம்பு நிலை மாணவர்களை சனாதனம், பார்ப்பனியம் தடுக்கிறது; தற்கொலைக்குத்  தூண்டுகிறது.

பெரியார் முழக்கம் 23032023 இதழ்

You may also like...