இராஜராஜசோழன் நடத்திய பார்ப்பனிய ஆட்சி
இராஜ இராஜ சோழன் பதவிக்கு வருவதற்கு முன்பே நடந்த சம்பவங்கள் தான் ‘பொன்னியின் செல்வன்’ கதைக்களமாக இருந்தாலும் சோழ மன்னர்கள் அனைவருமே பார்ப்பனர்களின் அடிமை ஆட்சியைத் தான் நடத்தி வந்திருக்கிறார்கள் என்பதே உண்மையான வரலாறு. “தமிழ்த் தேசியத்திற்கு முன்னோடி”, “தமிழர்களின் பொற்காலம்” என்று வர்ணிக்கப்படுற இராஜ ராஜனைப் பற்றிய கல்வெட்டு ஆராய்ச்சி மற்றும் வரலாற்று அறிஞர்களின் நூல்களைப் பார்க்கும் பொழுது இராஜராஜசோழன் ஆட்சி தமிழர்களின் பொற்கால ஆட்சியாக இருக்கவில்லை பார்ப்பனர்களுக்கே அது பொற்காலமாக விளங்கியிருக்கிறது என்பது தெளிவாகிறது! பார்ப்பனர்களை சேனாதிபதிகளாகவும், அவைத் தலைவர்களாகவும், அரியணை யேற்றி அழகு பார்த்தவன் இராஜராஜன்! களப்பிரர்கள் காலத்தில் காயடிக்கப்பட்ட பார்ப்பன மேலாதிக்கம், மீண்டும் தலை விரித்தாடியது இராஜராஜன் காலத்தில். அருண்மொழித் தேவன் என்ற தமிழ்ப் பெயரை இராஜராஜசோழன் என்று வடமொழிக்கு மாற்றிக் கொண்டவன்! அடிமைகள் சோழர் காலத்தில் அடிமை முறை இருந்ததை பல்வேறு கல்வெட்டுகள் சுட்டிக் காட்டுகின்றன. தாசியின் மக்கள், பெற்றோரால் விற்கப்பட்டவர் போன்ற பலவகையான...
