Author: admin

போராட்டம், மாநாடுகளில் பெண்களுக்கு முன்னுரிமை தந்த சுயமரியாதை இயக்கம் – முனைவர் ச. ஆனந்தி

சுயமரியாதை இயக்கத்தின் முக்கிய அம்சம் – அந்த இயக்கம் நடத்திய மாநாடுகளாகும். மாநில அளவிலும் – மாவட்ட அளவிலும் இத்தகைய மாநாடுகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வந்துள்ளன, கொள்கை முழக்கங்களோடு ஊர்வலம் – சுயமரியாதைஇயக்கத்தின்கொள்கைளை விளக்கிடும் நீண்ட பேருரைகள் – பல்வேறு அரசியல் சமூக நிகழ்வுகள் குறித்த விரிவான தீர்மானங்கள் ஆகியவை இந்த மாநாடுகளின் தனிச்சிறப்புகள். பெண்களின் பிரச்சனைகளைத் தொடர்ந்து பிரச்சாரம் செய்யவும், பெண்களை பொதுவாழ்வில் பங்கெடுக்க ஊக்கப்படுத்தவும் இந்த மாநாடுளை சுயமரியாதை இயக்கம் தொடர்ந்து பயன்படுத்தி வந்திருக்கிறது. முதல் சுயமரியாதை இயக்க மாநில மாநாடு 1929 இல் சென்னை அருகே செங்கல்பட்டில் நடந்தது மாநாட்டில் சைமன் கமிஷன் சாதிய ஒடுக்குமுறை, மத நிறுவனங்களின் சுரண்டல் பற்றி பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதோடு திருமணம் மற்றும் மதச்சடங்குகள் பற்றி விசேட கவனம் செலுத்தி இந்த மாநாடு பரிசீலித்தது. அது தொடர்பாக பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன ஆணுக்கும் பெண்ணுக்கும் சொத்தில் சம உரிமை வேண்டும் என்பது...

பெரியாரின் விடுதலைப் பெண்ணியம்

தாராளப் பெண்ணியம் சமதர்மப் பெண்ணியம். தீவிரப் பெண்ணியம் என்னும் வகைகளையெல்லாம் மீறிப் பெரியாரியப் பெண்ணியம் அமைந்துள்ளது. மகளிர் பற்றிய பெரியாரின் கருத்ததுக்களும் இலட்சியங்களும் சீர்திருத்தக் கருத்துக்கள், கொள்கைகள்என்னும்அளவில்குறுக்கிநிறுத்திவிட முடியாதவை. உரிமை கேட்டுப் போராடும் பெண்களே திகைக்கக்கூடிய சிந்தனைதான் பெரியாருடையது. அதாவது பெண்ணியத்திலும் பெரியார் அழிவு வேலைக்காரரே! பெண்ணைத் திருத்துவதன்று –மாறாகப் பெண்ணை மாற்றவது பெண்களைப் புதுமையாக்குவதுதான்பெரியாரின்இலட்சியம். சம்பிரதாயப் பெண்ணை (அடிமைப் பெண்) அழித்து உரிமைப் பெண்ணை வளர்த்து புது உலக விடுதலைப் பெண்ணை உருவாக்குவதே பெரியாரின் முயற்சி. பெண்ணே! உன்னை மூடி இருக்கும் திரையை நீக்கு! உன்னைத் தடுத்து நிறுத்தும் தடைச் சுவரினை உடைத்து எறி! உன்னைப் பூட்டியிருக்கும் விலங்கினை நொறுக்கித் தூள் தூளாக்கு! உன் மூளையில் படிந்திருக்கும் பாசியை வழித்தெறி! என் நெஞ்சத்தில் கால மெல்லாம் ஏற்றி வைக்கப்பட்டு உறைந்து போய் கிடக்கின்ற உணர்வுகளையெல்லாம் பொசுக்கு! உன்னைச் சுற்றி ஆயிரமாயிரம் ஆண்டுகளாக இருப்பன அனைத்தையும் சுக்கு நூறாக்கு! அழி! அனைத்தையும்...

சங்க இலக்கியங்களில் வைதீக எதிர்ப்பு – மயிலை பாலு

அவைதிகம் என்பதற்கு வைதிகம் அல்லாதது என்று பொருள், வைதிகம் என்றால் வேதங்கள் மற்றும் அவற்றின் பக்கவிளைவுகளான உப நிடதங்கள். புராணங்கள், மந்திர தந்திரங்கள் உள்ளிட்ட மூடநம்பிக்கைகள், பழக்கவழக்கங்கள் உண்மை என சாதிப்பது. அவைதிகம் என்பது இவற்றை யெல்லாம் நிராகரிப்பது. சுருங்கச் சொன்னால் நாத்திகம் என்பதே அவைதிகம் எனப்படும். இதற்கு சான்றாகச் சிலர் அளித்துள்ள விளக்கங் களைக் காணலாம். தத்துவ ஆய்வறிஞர் தேவிபிரசாத் சட்டோ பாத்யாயா “இந்திய நாத்திகம்” என்ற நூலில் இவ்வாறு விளக்கம் தருகிறார், “உலகாயதம்” துவேகம் ஆகியவற்றின் பொருண்மைநாத்திகவாதமேஆகும்.இவற்றோடு சாங்கியம், புத்தம். சமணம். மீமாம்சம். நியாய வைசேசிகம் ஆகியவையும் கீழ்காண்பவற்றை மையக் கருத்துக்களாக கொண்டிருந்தன. வேத வேள்விகளையும் வருணா சிரமங் களையும் பல கடவுள் வழிபாட்டையும் மறுத்தன. உபநிடதங்கள் உரைக்கும் ஒரு கடவுளுண்மை வாதத்தையும் உடன் படவில்லை. வேதங்கள் விளம்பும் இயற்கைச் சக்தி களுக்கும் உபநிடதங்கள் உரைக்கும் பரம்பொருளுக்கும் பதிலாக அண்ட அமைப்பியல் நியதிகளை வரை யறுத்தன. இயற்கை இறந்த...

ஆன்மீகமா? வணிகமா? ஈஷா மய்யத்தில் என்ன நடக்கிறது?

ஜக்கி வாசுதேவ் போன்ற சாமியார்கள் இந்த சமூகத்திலிருந்து அழித்து ஒழிக்கப்பட வேண்டிய தீய சக்திகள் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது. இவர்கள் ஏன் தீய சக்திகள் தெரியுமா ? பாஸ் வாங்கி, அதை கழுத்தில் மாட்டிக் கொண்டால்தான் உள்ளே செல்ல முடியும். உள்ளே சென்றால் இருபது அடிக்கு ஒரு முறை பாஸை பார்த்து செக் பண்ணுவார்கள். உள்ளே சென்றால், கண்ணை மூடிக்கொண்டு மொட்டை அடித்துக் கொண்டு, ஆழ்ந்த தியானத்தில் பல இடங்களில் அமர்ந்திருப்பார்கள். பாதாள அறை போல இருக்கும் ஒரு அறைக்குள் லிங்கம் ஒன்று அமைக்கப்பட்டிருக்கும். அந்த லிங்கத்தை தியானலிங்கம் என்று கூறுகிறார்கள். அந்த தியானலிங்கத்தை சுற்றி பலர் அமர்ந்து தியானம் செய்து கொண்டிருப்பார்கள். அந்த தியானலிங்கத்தின் அருகில் சென்றாலே தியானம் செய்தது போல மன அமைதி கிடைக்கும் என்று கூறுகிறார் ஜக்கி வாசுதேவ். அதன் உள்ளே சென்று ஜக்கி சொன்னது போல 20 நிமிடம் அமர்ந்திருந்தும் எந்த...

தேசபக்தி எனும் ஆயுதம்

கருத்துரிமையை எதிர்ப்பவர்களின் பதுங்கு குழியாகிவிட்டது ‘தேசபக்தி’ ‘தேசம்’ சூறையாடப்படுவதை எதிர்த்தாலோ, தேசத்தின் மக்கள் தங்களுக்கான உரிமை அடையாளங்களை வலியுறுத்தினாலோ -தேசத்துக்கு போர் வேண்டாம் என்று பேசினாலே) ‘தேசவிரோதிகள்’ என்ற முத்திரை குத்தப்பட்டு விடுகிறது. டெல்லி பல்கலைக்கழக வளாகங்களில் -மதவெறியை எதிர்த்தாலே ‘தேசவிரோதிகள்’ என்று அகில பாரதிய வித்யார்ந்தி பரிஷத் மாணவர் அமைப்பு வன்முறைகளில் இறங்கி வருகிறது. டெல்லி ராம்ஜஸ் கல்லூரியில் கலாச்சார மாற்றம் என்ற கருத்தரங்கில் பேச அழைக்கப்பட்டிருந்தார் ஜவஹர்லால் பல்கலைக்கழக மாணவர் அமைப்பை சார்ந்த உமர்காபீத், அநீதியாக தூக்கிலிடப்பட்ட அப்சல் குருவுக்கு அவரது நினைவு நாளில் இரங்கல் தெரிவித்ததற்காக -அதே பல்கலைக்கழக மாணவர் பேரவைத் தலைவர் கன்யாகுமாருடன் சேர்த்து – தேசவிரோத சட்டத்தில் கைது செய்யப்பட்டவர், இப்போது பிணையில் வெளிவந்திருக்கிறார். இந்தியாவில் எத்தனையோ பேர் மீது தேசவிரோத சட்டம் பாய்ந்திருக்கிறது, அதற்காக அவர்கள் பேச்சுரிமையையே தடைப் படுத்த வேண்டும் என்பது தான் தேசப்பக்தியின் அடையாளமா? ஆர். எஸ். எஸ் மாணவர்...

புல்பூண்டுக்கு ‘ஆன்மா’ உண்டா? – பெரியார்

ஆத்மா என்பதில்…. மனித ஆத்மா மாத்திரம்தான் மத சம்பந்தங்களுக்கு- அதாவது கடவுளுக்கும் ஆத்மாவுக்குமுள்ள சம்பந்தத்திற்காக ஏற்பட்ட மதங்களுக்குச் சேர்ந்ததா? அல்லது புல், பூண்டு, அμ, ஜந்து, ஊர்வன, பறப்பன, நகர்வன , நீர் வாழ்வன முதலிய ஜந்துக்களின் ஆத்மாக்கள் என்பவைகளும் அதில் சேர்ந்தவைகளா? இந்தப்படி மனித ஆத்மாவுக்கும் மற்றைய ஆத்மாக்களுக்கும் வித்தியாசங்கள் உண்டா? அல்லது எல்லாம் ஒரே தன்மையானதுதானா? மனித ஆத்மா, மனித சரீரத்தில் இருக்கும் போது அது செய்த வினைக்கு ஏற்ற பலனை, சரீரத்தை விட்டுப் பிரிந்தபிறகு அனுபவிக்கின்றது என்பது போலவே மற்ற புல், பூண்டு, ஊர்வன, பறப்பன , நகர்வன, நீர் வாழ்வன, அனு ஜந்துக்கள் முதலியவைகளின் ஆத்மாக்களும் சரீரத்தை விட்டு விலகிய பிறகு அவைகளின் வினைக்குத் தகுந்த பலனை அனுபவிக்கின்றனவா? இந்த ஆத்மாக்களில், மேற்கண்ட ஜந்துக்கள் ஒவ்வொன்றுக்கும் சிறிது சிறிது வித்தியாசங்கள் குணங்கள் தன்மைகள் முதலியவைகள் – அதாவது புலன் வித்தியாசங்கள் அறிவு வித்தியாசங்கள் உள்ளது போலவே,...

நிமிர் ஜனவரி 2017 இதழ் வாசகர் கடிதங்கள்

அரசு தந்த வீட்டை வாங்க மறுத்த விந்தன்! ‘நிமிர்வோம்’ இதழ் கண்டு மகிழ்ந்தேன்;  ஆழமான கட்டுரைகள் இதழை அலங்கரிக்கின்றன.  நமக்கு இலக்கியம் உண்டா என்ற பெரியாரின் கேள்வி-சிந்திக்க வைக்கிறது. வ.கீதா,ஜெயராணி இருவரின் பொதுவுடைமை -ஜாதி ஒழிப்பு குறித்த கட்டுரைகள். பெரியார் அம்பேத்கர் இயக்கங்கள் மீது விமர் சனங்களை முன்வைக்கின்றன. சுய விமர்சனங்களுக்கு ‘நிமிர்வோம்’ இட மளிப்பது வரவேற்கத்தக்க அணுகுமுறை. ‘நிமிர்வோம்’ மகிழ்வையும் நம்பிக்கைகளையும் ஊட்டுகிறது. -சி.அம்புரோசு, மாவட்டத்தலைவர், தி.வி.க. தூத்துக்குடி.   படைப்பாளி விந்தன் குறித்து பேராசிரியர் வீ.அரசு கட்டுரை, இளைய தலைமுறைக்கு மறைக்கப்பட்ட சிறந்த படைப்பாளியை அறிமுகப்படுத்தும் சிறந்த கட்டுரை. நடிகவேள் எம்.ஆர்.ராதா சிறையிலிருந்தபோது உரையாடி – அவரது வரலாற்றை நூலாக்கிய பெருமையும் அவருக்குண்டு. ‘கூண்டுக்கிளி’ திரைப்படத்தில் காதல் செய்த குற்றம் கண்கள் செய்த குற்றமானால், கண்களைப் படைத்த கடவுள் செய்கை சரியா, தப்பா’ என்று பாடல் எழுதியவர் மக்கள் செல்வாக்குடன் திகழ்ந்த நடிகர் எம்.கே. தியாகராஜ பாகவதரைப் பார்ப்பன...

இறந்தவனின் மக்காச் சோள வயல் – வே.ராமசாமி

இரைத்துப் பாய்ச்சிவிட கிணற்றுப் பால் கசியவில்லை   தோகை உச்சியில் கால்வைத்து விளையாட மழையும் வரவில்லை   அடித்தூரில் வாய்வைய்க்க அருங் குளத்து நீரில்லை   இறந்தவனின்  மக்காச் சோள வயல் ஒரு முழத்திற்கு மேல் வளரவில்லை   அறுத்து மாட்டுக்குப் போட யாரும் முன்வரவில்லை   ஆடு பத்திவிட ஆட்டுக்காரர்கள் துணியவில்லை   பட்டுப்போன பயிரென்றால் பத்திவிட்டு விடலாம் எப்படி மேய்ப்பது இறந்தவனின் புஞ்சையை   வெம்பரப்பு பூமியில் பிணத்தின் வாசனை பரவப் பரவ அடைபட்ட காட்டில் ஆநிரைகள் விக்கி நிற்கின்றன   இறந்தவனின் மக்காச்சோள வயல் ஒரு முழத்திற்கு மேல் வளரவில்லை   காட்டு முயல்கள் காலெடுத்து ஒடித்து ஒடித்து விளையாடுகின்றன ஒன்றும் புரியாமல் நிமிர் பிப்ரவரி 2017 இதழ்

மகனைப் போலவே நானும் மனுதர்மத்துக்கு தலைவணங்க மாட்டேன் – ராதிகா வெமுலா

அய்தராபாத் பலகலைக்கழகத்தின் தலித் மாணவர் ரோகித் வெமுலா-விசுவ இந்து பரிஷத் மதவாதத்தை எதிர்த்த காரணத்தால் பல்கலைக்கழக நிர்வாகத்தால் பழிவாங்கப்பட்ட தற்கொலைசெய்து கொண்டார். அவரது முதலாம் ஆண்டு நினைவு நாளையட்டி ரோகித்தின் தாயார் ராதிகா வெமுலா அளித்த பேட்டியிலிருந்து… ‘‘ரோஹித் இறந்து இரண்டு நாட்களுக்குப் பிறகு ஒருநாள் இரவு பத்துமணி அளவில் உப்பாலில் நாங்கள் வசிக்கும் இடத்துக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் அப்பாராவ் வந்தார். போலீஸ் அதிகாரிகள் சிலரும் ஓரிரு பேராசிரியர்களும் ‘வி.சி.வெளியே காத்திருக்கிறார். அவர் உங்களோடு பேச விரும்புகிறார்’ என்று சொன் னார்கள். அவருக்கு எங்களுடன் ஏதாவது பேச வேண்டுமென்றால் அதைப் பொது இடத்தில் பேசட்டும் என்று நாங்கள் சொல்லிவிட்டோம். அவர் அதற்குப் பின்னர் இரண்டு மாதத்துக்கும் மேலே வெளிநாட்டில் இருந்தார். துணைவேந்தர் பதவிக்கே அருகதையில்லாதவர். ஓர் ஆசிரியராக இருக்கக் கூடத் தகுதி இல்லாதவர். அவருக்குப் பைத்தியம். தலித் மாணவர்களைப் பார்க்கும் போதெல்லாம் அந்தப் பைத்தியம் முற்றிவிடும் அவரை நீக்க வேண்டும். தண்டிக்க...

பஞ்சாங்கம் அறிவியலா?

உலகம் போற்றும் வானியல் விஞ்ஞானி மேக்நாட்சாகா இந்தியாவில் வாழ்ந்து மறைந்தார். என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? ‘அயனியாக்கக் கோட்பாடு சமன்பாடு’ எனற அவரது கண்டுபிடிப்புதான் பேரண்டம் தொடர்பான அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு அடிப்படையாக அமைந்தது. 1893இல் வங்கதேசத்தில் உள்ள  டாக்கா எனும் கிராமத்தில் பிறந்து 60 ஆண்டு காலம் வாழ்ந்தவர். ‘சாகா’ எனும் தீண்டப்படாத சமூகத்தில் பிறந்த குற்றத்துக்காக இருட்டடிக்கப்பட்டவர். பிரதமர் நேரு – இவரின் அறிவியல் கருத் துகளால் ஈர்க்கப்பட்டார். வங்காள மொழியில் இந்துக் கடவுளைக் குறிக்கும் மேக்நாத் என்ற பெயரைத்தான் அவரது தாயார் சூட்டினார். அதை விரும்பாமல் இராமர்-இலட்சுமணர்களை எதிர்த்து தீரமுடன் போரிட்ட இந்திரஜித் (மேகநாதன்) என்பதன் குறியீடாக தனது பெயரை மேக்நாட் என்று மாற்றிக் கொண்டார். மேக்நாட் சாகா-பார்ப்பன-இந்துமத எதிர்ப்பாளர்; பகுத்தறிவாளர்; 1951ம் ஆண்டு நடந்த முதல் நாடாளுமன்றத் தேர்தலில் – புரட்சிகர சோசலிச கட்சியின் சார்பில் சுயேச்சை வேட்பாளராக கல்கத்தாவில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்து காலண்டரான...

அய்.நா. என்ன செய்யப் போகிறது? – பூங்குழலி போர்க்குற்ற விசாரணையிலிருந்து தப்பிக்க இலங்கையின் புதிய சதி

எதிர்வரும் மார்ச் மாதம் அய்.நா.வில் மீண்டும் ஈழத் தமிழர் பிரச்சனை விவாததக்கு வரவிருக்கிறது. இலங்கை அரங்கேற்றி வரும் சூழ்ச்சிகளையும், தமிழர்கள் நிகழ்த்த வேண்டிய எதிர்விளைவுகளையும் அலசுகிறது இந்த ஆய்வு. அண்மையில் தி இந்து ஆங்கில நாளேட்டில் ஒரு செய்திக் கட்டுரை வெளியானது. 28.1.2017 அன்று வெளியான அச்செய்திக் கட்டுரையில் கட்டுரையாளர் மீரா சீனிவாசன், இலங்கையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினரான சுமந்திரனை கொல்வதற்காக முன்னாள் போராளிகள் போட்டசதித் திட்டம் அம்பலமாகியிருப்பதாககூறுகிறார்.இதேநாளில் இதே செய்தி கொழும்பிலிருந்து வெளிவரும் டெய்லி மிரர் இதழிலிலும் கட்டுரையாக வெளிவருகிறது. ஏற்கெனவே இது தொடர்பில் 4 முன்னாள் போராளிகள் கைது செய்யப்பட்டும் உள்ளனர். திடீரென தமிழ்ச் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரின் உயிருக்கு ஆபத்து என்ற செய்தி வருவதும் அதற்காக உடனடியாக அரசு நடவடிக்கை எடுத்து நால்வரை கைது செய்திருப்பதும் பல கேள்விகளை எழுப்புகிறது. ஜோசப்பரராஜசிங்கத்தைஅவர்நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த போதே ஒரு கிறிஸ்துமஸ் நாளில் சர்ச்சுக்குள் வைத்தே...

எம்.ஜி.ஆர். – நிறையும் குறையும்

அடித்தட்டு மக்களின் செல்வாக்குப் பெற்ற தலைவராகத் திகழ்ந்தவர், மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆர். ‘மக்கள் திலகம்’ என்றும், ‘புரட்சித் தலைவர்’ என்றும் அழைக்கப்பட்ட அவரது ஆட்சிக் காலத்தில் சாதனைகளும் உண்டு; கொள்கைத் தடுமாற்றங்களும் உண்டு. பெரியார் நூற்றாண்டு விழா, அவரது ஆட்சிக் காலத்தில்தான் – அரசு விழாவாக தமிழக அரசால் கொண்டாடப்பட்டது. பெரியார் அறிமுகப்படுத்திய தமிழ் எழுத்து சீர்திருத்தத்தை அரசு அங்கீகரித்தது. பெரியார் பொன் மொழிகளை நூலாக வெளியிட்டு பரப்பியதோடு, தமிழகம் முழுதும் முக்கிய நகரங்களில் பெரியார் நினைவாக ‘பகுத்தறிவுச் சுடர்’ நிறுவப் பட்டது. பெரியார் வாழ்க்கைவரலாற்றை விளக்கிடும் கலைநிகழ்வுகள் பல நகரங்களில் நடத்தப்பட்டன. வீதிகளில் இருந்த ஜாதிப் பெயர்கள் நீக்கப்பட்டன.   பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை 50 சதவீதமாக உயர்த்தியதும் எம்.ஜி.ஆர். ஆட்சியின் மகத்தான சாதனை. ஆனால், இடஒதுக்கீடு குறித்த தெளிவான புரிதல்அவருக்கு இல்லாமல் போனதால் பார்ப்பனர்கள் எம்.ஜி.ஆரிடம் தங்களுக் கிருந்த செல்வாக்கைப் பயன் படுத்தி, பிற்படுத்தப்பட்டோரை நிர்ணயிக்க பொருளாதார வரம்பை அமுலாக்க...

உலகையே கூறுபோடும் அக்ரகாரங்கள் – சுப. உதயகுமாரன்

இன ஒதுக்கல் என்ற மனித விரோதக் கொள்கையின் குறியீடுகளே ‘அக்கிரகாரங்கள்’.  அந்த ‘அக்கிரகார’ சிந்தனை உலக நாடுகளையும் விட்டுவைக்கவில்லை. நாம் வாழும் உலகின் புறத்தோற்றத்தை மனக் கண்ணால் காண்பதும், அதன் உள்கட்டமைப்புக்கள், செயல்பாடுகள் பற்றி யெல்லாம் ஓர் அனுமானம் கொண்டிருப்பதும் ஒவ்வொரு சிந்திக்கும், செயல்படும் மனிதனுக்கும் அத்தியாவசியமானத் தேவையாக இருக்கிறது. தென் ஆப்பிரிக்கா நாட்டில் கடைபிடிக்கப்பட்ட “அபார்தைட்” எனும் இனவெறிக் கொள்கையை பயன்படுத்தி கெர்னாட் கோலர் என்கிற ஜெர்மானிய அறிஞர் 1978-ஆம் ஆண்டு ஒரு கட்டுரை எழுதினார். “அபார்தைட்” என்பது தென் ஆப்பிரிக்காவின் பெரும்பான்மை கறுப்பின மக்களை., சிறுபான்மை வெள்ளையர்கள் அடக்கி ஆண்ட ஆட்சி முறை. உலக அளவிலும் வெறும் 22 விழுக்காடு மக்களாக இருக்கும் வெள்ளையர்கள் 78 விழுக்காடு பிற இனங்களைச் சார்ந்த  பெரும்பான்மையினரை கட்டுக்குள் வைத்து, கசக்கிப் பிழிவதை “உலக அபார்தைட்” என்று அவர் விவரித்தார். வெள்ளையினத்தவரின் அடக்குமுறையையும், கறுப்பினத்தவரின் அடிமைத்தனத்தையும் உருவகப்படுத்தும் “உலக அபார்தைட்” உவமை இனவெறி...

டிரம்ப்பின் இந்துத்துவம்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தேர்தல் பரப்புரையின் போது ‘இந்துத்துவா’ கொள்கை தனக்கு பிடிக்கும் என்றார். தமிழ்நாட்டில் மதவாத பார்ப்பன சக்திகளும், அமெரிக்கா வாழ் ‘இந்துத்துவ’ சக்திகளும் தங்களின் மதவாத கொள்கைக்கு அமெரிக்காவின் ஆதரவு கிடைத்துவிட்டதில் ஆனந்தக் கூத்தாடின. எதிர்பார்த்ததுப் போலவே பதவிக்கு வந்தவுடன் தனது இஸ்லாமிய வெறுப்பு நஞ்சை கக்கத் தொடங்கிவிட்டார். இராக், சிரியா, லிபியா, ஏமன், சூடான் மற்றும் ஈரான் நாடுகளைச் சேர்ந்த (இஸ்லாமிய) அகதிகள், அமெரிக்காவுக்குள் நுழைய தடை விதித்தார்.இந்த ‘மதவெறி’‘வகுப்புவாத’செயல்பாட்டுக்கு அமெரிக்காவின் பெண் அரசு வழக்கறிஞர் சாலியேட்ஸ் எதிர்ப்பு தெரிவித்து, “இது சட்டப்பூர்வமான ஆணையல்ல” என்று துணி வுடன் கூறினார். இந்தியாவில் கொழுத்த ஊதியத்தில் உச்சநீதி மன்றத்தில் வாதாடும் நமது அரசு வழக்கறிஞர்களிடம் (பெரும் பாலும் பார்ப்பனர்கள்தான்) இப்படி நெஞ்சுரத்துடன் அரசை எதிர்க்கும் நேர்மையை கனவில்கூட கற்பனை செய்ய முடியாது. அதேபோல் குடியேற்றத் துறை இயக்குனர் டேனியல் ராக்ஸ்டேல் என்பவரும் எதிர்ப்பை துணிவுடன் வெளிப் படுத்தினார்....

பெரியார் கொள்கைகளை வளர்த்தெடுக்க வேண்டும்! பேராசிரியர் நன்னன் நேர்காணல்

70க்கும் மேற்பட்ட பெரியாரியல் நூல்களை எழுதிக் குவித்துள்ள பேராசிரியர் நன்னன் அவர்களுக்கு இப்போது வயது 93. “முதுமைக்கான தளர்வுகள் இருந்தாலும் மூளை மட்டும் 24 மணி நேரமும் பெரியார் மற்றும் தமிழ் குறித்து அசை போட்டுக் கொண்டே இருக்கிறது” என்கிறார். சில பெயர்களை உடனே நினைவுக்குக் கொண்டு வருவதில் மறதி குறுக்கிட்டாலும் ஊன்றி நிற்கும் கொள்கை உணர்வுகள் சொற்களாக வெடிக்கின்றன. சென்னையில் உள்ள அவரது ‘சிறுகுடில்’ இல்லத்தில் ‘நிமிர்வோம்’ பேட்டிக்காக சந்தித்தோம், “மய்யமான பிரச்சினைகளை விட்டு விலகி நான்பேசிக்கொண்டேஇருப்பேன். நீங்கள்தான் மீண்டும் தொடங்கிய இடத்துக்கு என்னை இழுத்து வரவேண்டும்” என்ற நிபந்தனையோடு உரையாடத் தொடங்கினார். உரையாடல் 3 மணி நேரம் வரை நீண்டது. உண்மை பெரியாரிஸ்டுகளுக்கே உரிய தன்னடக்கம், மிகைப்படக் கூறாமை, தெளிவான சிந்தனை என்ற தனித்துவத்தோடு அவர் நிகழ்த்திய உரையாடல்களின் தொகுப்பு: கேள்வி: திராவிடர் இயக்கம் நோக்கி ஈர்க்கப்பட்டது எப்படி? பதில்:அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நான் மாணவராக சேர்ந்தபோது எனக்கு திராவிட...

இளைஞர்களின் எழுச்சி…

வெகுமக்களின் பீறிட்ட எழுச்சியாக நடந்து முடிந்திருக்கிறது இளைஞர்களின் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டம்! ‘ஜல்லிக்கட்டு’க்கு அப்பால், தொடர்ந்து பறிக்கப்பட்டு வந்த தமிழர்களின் உரிமைகள் பற்றிய குமுறல் இந்த எழுச்சியை உந்தித் தள்ளியது என்பதே உண்மை. மோடிக்கும், இந்திய அரசுக்கும் எதிரான உணர்வுஅலைகளேபோராட்டக்களங்களில் மையம்கொண்டிருந்தது. “எங்கள் உரிமைகளை ஓர் அன்னிய ஆட்சி எத்தனை காலத்திற்கு மறுத்துக் கொண்டிருக்கும்? “ என்ற கேள்விதான் இந்த உணர்வுகளின் அடித்தளம். அதிகார மையங்களை பணிய வைத்திருக்கிறது இந்த போராட்ட சக்தி. உண்மைதான் ; ஜல்லிக்கட்டு ஜாதிய விளையாட்டாகத்தான் இருக்கிறது. அந்த கண்ணோட்டத்திலேயே நாமும் அதை எதிர்த்தோம். இப்போது ஜாதியற்ற ஜல்லிக்கட்டு வேண்டுமென்ற கருத்து உருவாகி வருகிறது. ஜாதி, மதம், பாலின பேதங்களைக் கடந்து இளைஞர்கள் திரண்டனர். இஸ்லாமிய எதிர்ப்பு அரசியலில் குளிர்காய துடித்தவர்களுக்கு சரியான பாடத்தை புகட்டினர். பெண்களின் பங்கேற்போ ஏராளம். இரவு பகல் பாராமல் தோழமையோடு இணைந்து நின்றார்கள். தமிழகம் இதுவரை பார்க்காத அதிசயம் இது. வெகுமக்கள்...

‘தோழர்’

1932 ஆம் ஆண்டு பெரியார் ஓராண்டுகாலம் வெளிநாட்டு பயணத்தை முடித்து தமிழ் நாடு வந்தவுடன் வெளியிட்ட முதல் அறிக்கை தோழர்கள் என்று அழையுங்கள் என்பதுதான். பெரியாரின் அறிக்கை: “இயக்கத் தோழர்களும், இயக்க அபிமானத் தோழர்களும் இனி ஒருவருக்கொருவர்அழைத்துக் கொள்வதிலும், பெயருக்கு முன்னால், பின்னால் மரியாதை வார்த்தை சேர்ப்பது என்பதிலும் ஒரே மாதிரியாக, “தோழர்” என்கிற பதத்தையே உபயோகிக்க வேண்டும் என்றும்,  மகா-ள-ஸ்ரீ, திருவாளர், திரு, தலைவர், பெரியார், திருமதி, ஸ்ரீஜத் என்பது போன்ற வார்த்தைகளை சேர்த்துப் பேசவோ, எழுதவோ கூடாது என்றும் வணக்கமாய் வேண்டிக் கொள்கிறேன். ‘குடிஅரசி’லும் அடுத்த வாரம் முதல் அந்தப்படியே செய்ய வேண்டும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்”. -ஈ.வெ.ரா. (குடிஅரசு 13.11.1932) நிமிர் பிப்ரவரி 2017 இதழ்

மனித வாழ்வு இலட்சியமற்றது!

என்னைப் பொறுத்தவரை நான் கூறுவேனாகில், மனிதப் பிறவியானது ஒரு இலட்சியமற்ற பிறவி என்றே கூறுவேன். மனிதன் பிறக்கிறான்; பற்பல எண்ணங்களை எண்ணுகிறான்; பலவகைகளை இச்சிக்கிறான்; எவ்வளவோ காரியங்களில் விருப்பம் கொண்டு அவைகளை நிறைவேற்ற முற்படுகிறான்; ஒரு சிலவற்றில் ஆசை நிறைவேறுகிறது; மற்றவைகளில் ஏமாற்றம் அடைகிறான்; இறுதியில் செத்துப்போகிறான். மனிதன் பிறந்தது முதல் செத்துப்போகும்வரை இடையில் நடைபெறுகிறவைகள் எல்லாம் அவனின் சுற்றுச்சார்பு, பழக்கவழக்கம் இவைகளைப் பொறுத்து நடக்கின்றன. எனவே, மனித வாழ்வு இலட்சியமற்ற வாழ்வு என்பது என் கருத்து. சமுதாயத்துக்குப் பயன்தரும் வாழ்க்கையே சிறந்த இலட்சியம். மனிதன் பிறந்து இறக்கும்வரை இடையில் உள்ள காலத்தில் ஏது£வது பயனுள்ள காரியம் செய்யவேண்டும். அவன் வாழ்க்கை மற்றவர்களின் நலனுக்கும், சமுதாயத்தின் சுகத்திற்கும் பயனுள்ளதாக இருக்கவேண்டும். ஒருவன் வாழ்வதென்பது அவனுடைய வாழ்க்கையால் பிறர் நன்மையடைந்தார்கள், மற்றவர்கள் சுகம் கண்டார்கள் என்று அமையவேண்டும். இது முக்கியமானதாகும். இதுவே அவசியமும் பொருத்தமும் ஆனதுமன்றி மனித வாழ்க்கை என்பதன் தகுதியான இலட்சியம்...

தோழர் ஃபாரூக் குடும்ப நிதி – இனமுரசு சத்தியராஜ் ரூபாய் ஒரு லட்சம் வழங்கினார்

இனமுரசு சத்தியராஜ் அவர்கள் தோழர் ஃபரூக் குடும்ப நிதியாக ௹பாய் ஒரு லட்சம் வழங்கினார். இனமுரசு சத்தியராஜ் அவர்கள், பகுத்தறிவு கருத்துக்களை பேசிய காரணத்தினால் இசுலாமிய அடிப்படைவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட தோழர் ஃபாருக் குடும்ப நிதியாக Rs 1,00,000/= (ரூபாய் ஒரு லட்சம்) வழங்கினார். அப்போது திராவிடர் விடுதலைக் கழக தலைமை நிலையச் செயலாளர் தோழர் தபசிகுமரன், மாவட்டச் செயலாளர் தோழர் உமாபதி, மாவட்டத் தலைவர் வேழவேந்தன், கழகத் தோழர் செந்தில் Fdl ஆகியோர் இருந்தனர்.

சென்னை மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்…

ஞாயிறு 02042017 மாலை 5 மணியளவில் சென்னை மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் தலைமை அலுவலகத்தில் சென்னை மாவட்ட செயலாளர் தோழர். உமாபதி தலைமையில் நடைபெறவிருக்கிறது டாக்டர்.அம்பேத்கர் பிறந்தநாள் விழா… புரட்சி பெரியார் முழக்கம் வார ஏடு சந்தா … நிமிர்வோம் மாத இதழ் சந்தா… என பல்வேறு விசயங்களில் நமது அடுத்தக்கட்ட செயல்பாடுகள் குறித்து கலந்தாலோசிக்க படவுள்ளது. ஆகையால், சென்னை மாவட்ட பகுதி பொறுப்பாளர்கள், சென்னை மாவட்ட இயக்க தோழர்கள், சென்னை மாவட்ட பகுதி தோழர்கள், அனைவரும் குறித்த நேரத்தில் தவறாமல் இதில் கலந்துக் கொள்ள கோருகிறோம். இடம் : திராவிடர் விடுதலைக் கழகம், தலைமை அலுவலகம், நடேசன் சாலை, டாக்டர் அம்பேத்கர் பாலம், மயிலாப்பூர், சென்னை- 600004 தொடர்புக்கு : 7299230363

மத்திய அரசுப் பணிகளில் தமிழர்களின் வேலை வாய்ப்பு உரிமை பறிப்பு – கு. அன்பு

“முஜே தமில் நஹி மாலும், இந்தி மே போலோ” (எனக்கு தமிழ் தெரியாது, இந்தியில் சொல்). இன்று தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள், ரயில்வேபயணச்சீட்டு பெறும் இடங்கள், வாழ்நாள் காப்பீடு, பொதுக்காப்பீடு மற்றும் பொதுத்துறை வங்கிகளில்பணியாற்றும் ஊழியர்களிடம் தமிழர்கள் இவ்வார்த்தைகளை எதிர்கொள்கிறார்கள். டெல்லி அரசுகளின் கயமைத்தனத்தினால், சூழ்ச்சியினால் கடந்த பத்தாண்டுகளாக தமிழகத்தில்இயங்கும்மத்தியஅரசுத்துறைகளில் தமிழர்களுக்கான வேலை வாய்ப்புரிமை தட்டிப்பறிக்கப்பட்டுள்ளது. இது சேவைத்துறைகளில் மட்டுமல்லாது தமிழகத்தில் செயல்படும் மத்திய அரசின் தொழிற்துறைகளான (Factories & Enterprises) என்.எல்.சி (NLC), பி.எச்.இ.எல் (BHEL), துப்பாக்கி தொழிற்சாலை, டாங்கி தொழிற் சாலை, இராணுவ உடை தயாரிப்பகம், (Defence Factories) இணைப்பு பெட்டி தொழிற்சாலை, கல்பாக்கம் அணுமின்நிலையம் ஆகிய தொழிற் சாலைகளில் இந்த நிலைதான். மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (Staff Selection Commission) மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் எனப்படும் Staff Selection Commission மத்திய அரசு நிறுவனங்களில் ஏற்படும் பணியிடங்களை நிரப்பும் இந்திய அரசின்...

மோடியின் செல்லாத அறிவிப்பின் அரசியல் – ஜெயரஞ்சன்

தலைமை அமைச்சர் ரூபாய் 500, 1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்து இரு வாரங்கள் ஆன பின்பும் நிலைமை சீராகாமல் சாமானியர்கள் திண்டாடி தெருவில் நிற்கும் அவலம் தொடர்கிறது. இந்த நடவடிக்கையால் சாமானியர்கள் படும்பாடு வீணாகாதாம். அவர்களது தியாகங்களுக்கு பயன் இருக்குமாம். பெரும் நிலப் பிரபுக்களும் செல்வந்தர்களும் தலைமை அமைச்சர் மீது கோபமாகஇருக்கிறார்களாம்.நாட்டின்வளர்ச்சி பெருகுமாம். கள்ளப் பணம் / கறுப்புப் பணம் ஒழிவதால் ஏழைகள் வாழ்வு ஏற்றம் பெறுமாம். இவை யாவும் இந்த ‘செல்லாத’ அறிவிப்பினை வெளியிட்ட தலைமை அமைச்சரும் அவரது ஆதரவாளர்களும் முன்வைக்கும் விவாதங்கள். இந்த விவாதங்களில் உண்மை உள்ளதா? ஏழைகள் பயன் பெறுவார்களா? பெரும் செல்வந்தர்கள் துயரப்படுவார்களா? உண்மை நிலவரம் என்ன? இன்று வெளிவந்துள்ள ஒரு அறிக்கை இந்த வாதங்களின் அடிப்படையில்லா பொய்மையை நிறுவுகிறது. இந்தியாவில் பெரும் பணக்காரர்கள் ஒரு விழுக்காட்டினரிடம்தான் நாட்டின் 58.4% செல்வம் இருப்பதாக சமீபத்திய புள்ளி விவரங்கள் அடிப்படையில் ஆய்வு கண்டடைந்துள்ளது. சுவிட்சர்லாந்து நாட்டின்...

என் பெயர் மருதாயி – கவிஞர் இன்குலாப்

ஆன்ற தமிழ்ச் சான்றோரே தொல்காப்பியம் பத்துப்பாட்டு எட்டுத்தொகை சிலப்பதிகாரம் மணிமேகலை சீவகசிந்தாமணி வளையாபதி குண்டலகேசி கம்பராமாயணம் பெரிய புராணம் மறந்துவிட்டேன் திருக்குறள் எல்லாவற்றாலும் சுட்டப்பட்டவள் நான் தாய்மொழி -தமிழ் பெயர் -மருதாயி தொழில் பரத்தை என்னைக் கடமைகள் எனலாம் மதுரையைக் கொளுத்திய கற்பரசியே தலையாய கற்பினள் அல்லன் உங்கள் முத்தமிழ் அளவுகோலில் கற்புத் தோன்றிய அன்றே நானும் தோன்றி விட்டேன் ஐயா ஆன்ற தமிழ்ச் சான்றோரே என்னிடம் முதலில் வந்தவன் உங்கள் கொள்ளுப்பாட்டன் இப்போது வந்துபோனவன் கொள்ளுப் பேரன் என்றாலும் பாட்டன் எதிர்பார்த்தான் பாட்டியிடம் ‘பெய்யெனப் பெய்ய’ தன் சடலம் எரியும்போது உடல் வேக பாட்டி ஒருபோதும் பாட்டனிடம் கேட்கவில்லை     பெய்யெனச் சொல்க உடல் வேக இருக்கையிலே சில சமயங்களிலும் போகையிலே சிலசமயங்களிலும் பாட்டி தன் தங்கையைத் தாரமாக்குபவள் இல்லாவிடினும் இவன் மேய்வான் பத்தினியைப் பறிகொடுத்த பாட்டனுக்கு மச்சினியை கைப்பிடித்த ஆறுதல் இல்லத்தரசி இருக்க என்னிட ம்  ...

பார்ப்பனரல்லாத இடது சக்திகளின் சாதனைகள் – ஆர்.முத்துக்குமார்

கல்லடி விழும் காய்த்த மரம் என்று நீதிக் கட்சியைச் சொல்லிவிடலாம். எத்தனை யெத்தனை விமரிசனங்கள் அந்தக் கட்சியின் மீது. நூற்றாண்டைக் கொண்டாடும் வேளையிலும் அதன்மீதான சொல்லடிகள் நின்றபாடில்லை. வேடிக்கை என்ன வென்றால், ஒவ்வொரு விமரிசனத்துக்கும் உரிய முறையில் பதில் தரப்பட்டிருக்கிறது. ஆனாலும் அவற்றையெல்லாம் மறந்துவிட்டு அல்லது மறைத்துவிட்டு, வலுக்கட்டாயமாக விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன. பெண்களுக்கு அதிகாரம் பற்றி இன்றைக்கு அறிவுஜீவிகள் அதிகம் பேசிக் கொண்டிருக்கிறார்கள். சாதி ரீதியாக ஒடுக்கப்பட்டவர்கள் பட்டியல் சாதி மக்கள் என்றால், எல்லா மட்டத்திலும் ஒடுக்கப்பட்டவர்களாக இருப்பவர்கள் பெண்கள். மேல்தட்டு, நடுத்தட்டு, கீழ்த்தட்டு என்று எந்த வித்தியாசமும் பெண்கள் விஷயத்தில் பார்க்கப் படுவதில்லை. வெள்ளையனுக்கு வால் பிடித்த கட்சி, சுதந்தரத்துக்கு எதிரான கட்சி, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதுவும் செய்யவில்லை, பெண்களை இழிவாக நினைக்கும் கட்சி என்பன போன்ற புளித்துப்போன புரட்டுகளுக்குப் பதிலளிப்பதைக் காட்டிலும் நீதிக்கட்சி இங்கே ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் குறித்துப் பேசுவது சரியாக இருக்கும். குறிப்பாக, இது நீதிக்கட்சியால் அமலுக்கு...

அம்பேத்கரியமும் பெரியாரியமும் உயிர்த்திருக்க, புத்தெழுச்சிப் பெறலாமா இந்துமதம்? – ஜெயராணி

மற்ற நாட்டில் மனிதனிடம்மனிதனுக்குப் பற்றும் அன்பும் உண்டாகவே  கடவுள் மதம் இருக்கின்றன. நமது நாட்டில் மனிதனுக்கு மனிதன் வெறுப்பும் வேற்றுமையும் உண்டாக்கவே கடவுள், மதம், சாதி இருக்கின்றன.  –பெரியார்   அந்தத் தேர் பின்னோக்கி இழுக்கப்படுகிறது. ஆதிக்கம், மூடத்தனம், வெறுப்புணர்வு, பகைமை, வன்மம் நிறைந்தவர்கள் அதற்காக தம் பலமனைத்தையும் திரட்டுகின்றனர். இப்போது வரை அந்த தேரை அசைக்க முடியவில்லை என்றாலும் அவர்களது முயற்சி மிகத் தீவிரமானதாகவும் தீவிரவாதத் தனமானதாகவும் இருக்கிறது. பாகுபாட்டையும் சக மனிதரை ஒடுக்குவதையும் மட்டுமே கொள்கையாகக் கொண்ட அவர்களது கிளைகள் எங்கும் பரவுவதைப் பார்க்கிறோம். அவர்களது வன்ம வேர்கள் இந்த ஜனநாயகப் பூமியைப் பதம் பார்க்கின்றன. இந்நாட்டின் ஜனநாயகம் முற்றிலுமாக வேரறுக்கப்படும் சேரிகள் தொடங்கி அதை நிலைநிறுத்தும் பேரதிகாரத்தைக் கொண்ட நாடாளுமன்றம் வரை எங்கும் அவர்கள் வியாபித்துவிட்டனர். சனாதன தர்மம் எனும் கதிர்வீச்சு ஒவ்வொரு மூளைக்குள்ளும் ஊடுருவிப் பாய்ச்சப்படுகிறது. இரண்டாயிரம் ஆண்டு அறச்சிதைவு வரலாறு கொண்ட இந்நாட்டை பண்படுத்தும்...

தந்தை பெரியார் கருத்துமரபை முன்னெடுத்த எழுத்தாளர் விந்தன்.. வீ.அரசு

இதழியல்வழி உருவாவதே குட்டிக்கதை எனும் வடிவம். பக்க வரையறைகள் இதழியலில் பல வடிவங்களை உருவாக்கியுள்ளது என்று கூற முடியும். சிறுகதையும்கூட அவ்வாறு உருவானதுதான். கல்கி இதழில் விந்தன் எழுதிய குட்டிக்கதைகள் நகைச்சுவை உணர்வு, எள்ளல் பாணி ஆகியவற்றைக் கொண்டவை. மரபான விழுமியங்களை நக்கல் செய்து, புதிய விழுமியங்களைக் குழந்தைகளுக்கு சொல்வதில் விந்தன் தனித்தவராக அமைகிறார். இருபதாம் நூற்றாண்டின் முதல் பாதியில் வாழ்ந்த அ.மாதவையா(1872-1925), வ.ரா. (18891951), புதுமைப்பித்தன் (1906-1948) ஆகியோர் கரடுதட்டிப்போன சமூகக் கொடுமைகளைத் தம் எழுத்துக்களில், தோலுரித்தவர்களில் குறிப்பிட்டுச்சொல்ல வேண்டியவர்கள். சாதியக் கொடுமை, பெண்ணடிமை போன்றவற்றைத் தமது ஆக்கங்களில் பதிவு செய்தவர்கள். இந்த காலங்களில் சமூகத்தில் நிலவிய மூட நம்பிக்கைகள் குறித்து தம் ஆக்கங்களில் பதிவு செய்த எழுத்தாளர்கள் என்று குறிப்பிட்டுச் சொல்லமுடியுமா?என்பது விவாதத்திற்குரியது. ஆனால் இருபதாம் நூற்றாண்டின் இடைப் பகுதியில் மூடநம்பிக்கைக்கு எதிரான பல படைப்பாளிகள் தமிழில் உருவாகிவிட்டனர். அவர்களில் தற் போது நூற் றாண் டு நிறைவெய்தியிருக்கும்...

பெரியார் கண்ட ரஷ்யாவும் சாதிய இந்தியாவும் – வ.கீதா

ரஷ்யப் புரட்சி நடந்து ஒரு நூற்றாண்டாகிறது. புரட்சிக் காலகட்டத்தில் பெரியாரும், அதுகுறித்த விரிவாக நடத்திய விவாதங்களை முன்வைக்கிறது இக்கட்டுரை, பெரியார் விட்டுச சென்ற நுட்பமான சமூகப் புரிதலை சமகாலத்தில் முன்னெடுப்பதில் தவறிவிட்டோம் என்ற விமர்சனத்தையும் கட்டுரை பதிவு செய்கிறது. போல்ஷெவிக் புரட்சியின் 100ஆவது ஆண்ட விழாவை அடுத்தாண்டு நாம் அனுசரிக்க இருக்கும் வேளையில் அப்புரட்சி மரபு ஈன்ற முக்கியமான அரசியல் ஆளுமைகளில் ஒருவரான ஃபிடல் காஸ்டிரோவை நினைவு கோராமல் இருக்க முடியாது. காரணம், போல்ஷெவிக் புரட்சியாளர்களான லெனின், ட்ராட்ஸ்கி ஆகியோரை போல அவருமே சோசலிசத்தை கட்டியெழுப்பும் பணியை புதிய மானுடத்தை உருவாக்க முனையும் பணியுடன் அடையாளப்படுத்தினார். அவரின் சக புரட்சியாளரான செ குவேரா, உற்பத்தி உறவுகளை மாற்றியமைப்பது எத்தனை அவசியமோ, புதிய மனிதனை உருவாக்கும் செயல்பாடும் அத்தனை அவசியமானது என்று வாதிட்டார். இத்தகைய உருவாக்கத்தை கட்டளைகள் மூலமோ புரட்சி நடந்து முடிந்த மாத்திரத்திலோ சாதிக்க முடியும் என்று அவர் நினைக்கவில்லை. கல்வி,...

உங்கள் கரங்களில்

உங்கள் கரங்களில்

திராவிடர் விடுதலைக் கழகத்துக்கு ஓர் மாத இதழின் தேவையை தோழர்களும் ஆதரவாளர் களும் நீண்டகாலமாக வற்புறுத்தி வந்தார்கள், அவர்களின் விருப்பம். இப்போது செயல் வடிவ மாகியுள்ளது. ‘நிமிர்வோம்’வந்துவிட்டது.இதுஒருஇயக்கத்தின் ஏடு என்றாலும் ‘நிமிர்வோம்’ பெரியாரியம் குறித்த விரிவான விவாதத்துக்கும் -உரையாடல்களுக்கும் தனது பக்கங்களைத் திறந்த வைத்திருக்கும் என்று உறுதி கூறுகிறோம். இந்துத்துவா சக்திகளின் நவீன அவதாரங்கள், உலகமயமாக்கலை உருவாக்கி வரும புதிய பண்பாட்டு நெருக்கடிகள், ஜாதி படிநிலைக் கட்டமைப்பில் உருவாகி வரும் மாற்றங்கள், மூடநம்பிக்கைகளுக்கு அறிவியல் மூலாம் பூசும் முயற்சிகள், பெண்ணியம் குறித்த நவீன சிந்தனைகள் உள்ளிட்ட கருத்துகளைப்பரிமாறும் களமாக ‘நிமிர்வோம்’ நிற்கும். தமிழ்நாட்டில் சமூக-பொருளாதார மாற்றங் களை கோரி நிற்கும் -சமூக சக்திகளின் -தோழர்களின்ஆதரவுத்தளத்தைவிரிவாக்க, ‘நிமிர் வோம்’ தொடர்ந்து செயலாற்றும். நிமிர் ஜனவரி 2017 இதழ்

நமக்கு இலக்கியம் உண்டா

நமக்கு இலக்கியம் உண்டா

பழங்காலத்தில் ஏதோ சிறிது படித்தாலும் பெரும் புலவனாகி விடுவான். அக்காலத்தில் வசனம் இல்லை. பெரிதும் பாட்டுத்தான். அந்தப் பாட்டும் எதுகை, மோனையை அவசியமாகக் கொண்டவையாக இருக்கும். அதைத் தெரிந்தவன் ஒன்று பிச்சைக்குப் பாடுவான். அல்லது பக்திக்குப் பாடுவான்! பக்திக்குப் பாட ஆரம்பித்தால் சுவாமிகள், அடிகள், நாயன்மார், ஆழ்வார் ஆகிவிடுவார்கள். அவர்கள் அதிகமாகப் பிச்சை எடுத்துக் கொண்டு திரிந்து பக்கத்தில் உள்ள கடவுள்களைப் பற்றிப் பாடிய பாட்டுக்கள் பிரபந்தங்கள் ஆகிவிடுகின்றன. அக்கோவில்கள்பாடல்பெற்றகோவில்‘ஸ்தலங்கள்’ஆகிவிடுகின்றன. பாட்டு ‘தேவ ஆரங்கள்’ ஆகிவிடுகின்றன. யாரோ ஒரு சில புலவர்கள் வள்ளுவர், அவ்வை, கபிலர் போன்றவர்கள் நீதிநூல், நீதி மஞ்சுரி, கொன்றை வேந்தன், இன்னா நாற்பது, இனியவை நாற்பது, சதகம், நாலடி முதலிய பல நீதிகளைப் பற்றியும் ஒழுக்கம் பற்றியும் கூறப்பட்டுள்ள இலக்கியங்கள் பலவற்றைப் பாடியிருக்கிறார்கள். 60, 70 ஆண்டுகளுக்கு முன் நான் திண்ணைப் பள்ளிகளில் படிக்கும்பொழுது இவையே தலைசிறந்து விளங்கின. இப்போது அவை குப்பைமேட்டிற்கு போகச் செய்யப்பட்டு விட்டன....

தோழர் ஃபாரூக் தந்தை ஹமீது அவர்கள்  BBC தமிழோசைக்கு அளித்துள்ள பேட்டி

தோழர் ஃபாரூக் தந்தை ஹமீது அவர்கள் BBC தமிழோசைக்கு அளித்துள்ள பேட்டி

ஃபாரூக் தந்தை ஹமீது அவர்கள் BBC தமிழோசைக்கு அளித்துள்ள பேட்டி பாரூக் எப்படி கொல்லப்பட்டார்? கொலைக்கான காரணம் என்ன? கொலையாளிகள் யார்? தமது அடுத்த கட்ட நகர்வு என்ன? ஃபாரூக் விட்டுச் சென்ற பணியை தொடர்வேன் என கூறினாரா? பல்வேறு கேள்விகளுக்கு விடையளிக்கிறார். ( 28.03.2017 BBC TAMIL)

தோழர் ஃபாரூக் குடும்ப நிதி திருப்பூர் இயற்கைக் கழகம் வழங்கியது

திருப்பூர் இயற்கைக் கழகம் (NATURE SOCIETY OF TIRUPUR) அமைப்பு கழகத் தோழர் ஃபாரூக் குடும்ப நிதி வழங்கியது. இசுலாமிய மத அடிப்படைவாதிகளால் பகுத்தறிவு கருத்துக்களை பேசிய காரணத்தினால் கொடூரமாக வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட கழகத்தோழர் ஃபாரூக் அவர்கள் குடும்பத்திற்கு கழகம் நிதியை திரட்டி வருகிறது. அவ்வகையில் ஃபாரூக் குடும்பத்திற்கு நிதியாக திருப்பூர் இயற்கைக் கழகம் (NATURE SOCIETY OF TIRUPUR) அமைப்பின் தோழர்கள் 29.03.2016 அன்று மாலை Rs40,500/= (ரூபாய் நாற்பதினாயிரத்து ஐநூறு)ஐ கழக பொருளாளர் தோழர் துரைசாமி அவர்களிடம் வழங்கினார்கள். அப்போது திராவிடர் விடுதலைக் கழகத்தின் திருப்பூர் மாவட்டத்தலைவர் தோழர் முகில்ராசு,கழகத்தோழர் பரிமளராசன் ஆகியோர் உடனிருந்தனர்

தோழர் ஃபாரூக் படுகொலையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நங்கவள்ளி 29032017

தோழர் ஃபாரூக் படுகொலையை கண்டித்து சேலம் மாவட்டம் நங்கவள்ளியில் கண்டன ஆர்ப்பாட்டம் 29032017 அன்று மாலை 5 மணிக்கு நடைபெற்றது. 50 மேற்பட்ட தோழர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு மதவெறிக்கு எதிராய் முழக்கங்களை எழுப்பினர் செய்தி வைரவேல்

மதத்தை மறுக்கும் ‘இஸ்லாமிய’ நாத்திகர்கள் கடும் கண்டனம்

மதத்தை மறுக்கும் ‘இஸ்லாமிய’ நாத்திகர்கள் கடும் கண்டனம்

இஸ்லாமிய மதத்தை மறுத்து நாத்திகர் பண்பாட்டுக் கழகம் என்ற பெயரில் இயங்கும் அமைப்பு சார்பாக சென்னை பாரூக் நினைவு கூட்டத்தில் அலாவுதீன் பதிவு செய்த கண்டனம்: பாரூக் பிறந்த சமூகம் சார்ந்த இஸ்லாம் சமயத்திலிருந்து வெளியேறி எம்மில் பெரும்பாலான நண்பர்களைப் போலவே தன்னையும் மதமற்றவராக இஸ்லாமிலிருந்து வெளியேறியவர் என்று அறிவித்துக் கொண்டார். அதோடு அல்லாமல் இஸ்லாம் என்பது அர்த்தமற்ற – அபத்தமானது. விமர்சனங்களுக்கும், விசாரணைகளுக்கும் அப்பாற்பட்டது அல்ல என்ற கருத்துகளையும் வலிமையாக வலியுறுத்தி வந்தார். பாபர் மசூதி இடிப்பிற்குப் பின்னர் இந்து மதவெறியர்களுக்கு இணையாக இஸ்லாமிய அடிப்படைவாதிகள், பாமர இஸ்லாமிய மக்களை திட்டமிட்டு அரணாக்கிக் கொண்டு, தங்களது சொந்த இலாபத்திற்காக மதத்தின் பெயரால் மக்கள் அனைவரையும் பிளவுபடுத்தும் ஆபத்தான செயலில் ஈடுபடுவதையும் தொடர்ந்து விமர்சித்து வந்தார். தந்தை பெரியார் உள்ளிட்ட பகுத்தறிவாளர்களின் அறிவார்ந்த கருத்துக்களை கேட்க, படிக்கக் கூடாத மக்களாக முஸ்லிம்களை கையாளும் இஸ்லாமிய அடிப்படை வாதிகளையும் பயங்கரவாதிகளையும் அம்பலப்படுத்தி தனிமைப்படுத்துவ...

பாரூக்கின் தந்தை அளித்த பேட்டி

கத்தியால் வெட்டிய போதும் கடவுள் இல்லை என்று கூறியிருக்கிறார் என் மகன். பாரூக்கின் தந்தை ‘தமிழ் இந்து’ நாளேட்டுக்கு அளித்த பேட்டி: கோவை உக்கடம் லாரிப்பேட்டைக்கு அருகில் உள்ள பிலால் எஸ்டேட் பகுதியில் உள்ளது, கடவுள் மறுப்பில் தீவிரம் காட்டியதால் கொல்லப்பட்ட ஃபாரூக்கின் சிறிய வீடு. ஃபாரூக்கின் மனைவி ரஷீதா(31) குர்ஆன் துவா செய்து கொண்டு இருந்தார். அவரைச் சுற்றிலும் கண்ணீருடன் உறவினர்கள். ‘‘நாங்கள் யாரும் எம் மார்க்கத்துக்கு விரோதிகள் அல்ல. தினமும் 5 வேளை நமாஸ் செய்பவர்கள். தவறாது நோன்பு மேற்கொள்பவர்கள். ஃபாரூக்கின் பிள்ளைகள் அப்ரீத்(13), ஹனபா(8) ஆகியோர் இஸ்லாமிக் அராபிக் பள்ளியில்தான் 1, 6-ம் வகுப்பு படிக்கிறார்கள். எந்த நிலையிலும் மார்க்கத்தைத் தாண்டி நடக்குமாறு ஃபாரூக் எங்களிடம் கூறியதில்லை. அதனால், அவரின் கடவுள் மறுப்புக் கொள்கைக்கும் நாங்கள் எதிராக நிற்கவில்லை. அதற்காக கொலைகூட செய்வார்களா? வேதத்தை முழுமையாகப் படித்து, புரிந்துகொள்ளாதவர்களாலேயே அவர் கொல்லப்பட்டுள்ளார். கடவுள் எதையும் மன்னிக்கக் கூடியவர்....

சகிப்பின்மையின் அப்பட்டமான வெளிப்பாடு ‘தமிழ் இந்து’ தலையங்கம்

‘தமிழ் இந்து’ நாளேடு மார்ச் 24ஆம் தேதி பாரூக் படுகொலைக் குறித்து எழுதிய தலையங்கம். கோவையில் நடந்திருக்கும் இளைஞர் ஃபாருக் கொலை அதிர்ச்சியைத் தருகிறது. இந்தக் கொலை, தமிழகத்தில் உருவாகிவரும் மோசமான சூழலின் வெளிப்பாடு என்பது அதிர்ச்சியைத் தாண்டி ஆழ்ந்த கவலையை உருவாக்கு கிறது. திராவிடர் விடுதலைக் கழகத்தில் இணைந்து செய லாற்றிவந்த ஃபாருக், சமூகத்தின் சாதி, மதப் பாகுபாடு களையும் மூடநம்பிக்கைகளையும் சாடிவந்தவர். தொடர்ந்து இறைமறுப்புக் கொள்கைகளைப் பேசிவந்தவர். அவருடைய செயல்பாட்டின் காரணமாகவே நடந்ததாகச் சொல்லப்படும் இந்தக் கொலை, தமிழகத்தில் உருவாகிவரும் சகிப்பின்மையின் அப்பட்டமான வெளிப்பாடு. தமிழகத்துக்கு நாத்திகப் பிரச்சாரம் புதிதல்ல. அதற்கென்று நீண்ட நெடிய மரபு இங்கு இருக்கிறது. குறிப்பாக, நவீன அரசியல் வரலாற்றில் சாதிக்கு எதிராக இங்கு பெரியார் தொடங்கிய கலகம் அதன் மையத்திலேயே கடவுளுக்கும் மதத்துக்கும் எதிரான குரலைத் தாங்கியது. ஆத்திகர்கள் இதற்குக் காலம் முழுவதும் கடுமையாக எதிர்வினையாற்றி வந்திருக்கிறார்கள். ஆனால், அது ஆகப் பெருமளவில்...

இதுவே கழகத்தின் நிலைப்பாடு “இனி தோழமையை முடிவு செய்ய வேண்டியது இஸ்லாமிய அமைப்புகள்தான்!”

பெரியார் இயக்கத்துடனான தோழமையை முடிவு செய்ய வேண்டியது, இஸ்லாமியர் அமைப்புகள்தான் – இதுவே கழகத்தின் நிலைப்பாடு என்று சென்னையில் பாரூக் படத்திறப்பு நிகழ்வில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி அறிவித்தார். இஸ்லாமிய மத அடிப்படைவாதிகளால் இறை மறுப்பாளராக இருந்த ஒரே காரணத்துக்காக படுகொலை செய்யப்பட்ட திராவிடர் விடுதலைக் கழகத் தோழர் மனித நேயப் போராளி பாரூக் படுகொலைக்கு கண்டனக் கூட்டம் கருத்தரங்கமாக சென்னையில் மார்ச் 26 மாலை இராயப்பேட்டை இலாயிட்ஸ் சாலையில் உள்ள விஜய் திருமண மண்டபத்தில் கழக சார்பில் நிகழ்ந்தது. ‘பாரூக் படுகொலையும் நமது நிலையும்’ என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கிற்கு மாவட்ட செயலாளர் உமாபதி தலைமை தாங்கினார். தலைமைக் குழு உறுப்பினர் கு. அன்பு தனசேகரன், ‘சேவ் தமிழ்’ செந்தில், திருமுருகன் காந்தி (மே 17) வழக்கறிஞர் திருமூர்த்தி, இஸ்லாமியராக பிறந்தாலும், இஸ்லாமிய மதக் கருத்தியலை மறுக்கும் தோழர்கள் நடத்தும் நாத்திகர் பண்பாட்டுக் கழகம் சார்பில் அலாவுதின் ஆகியோர்...

பாரூக் படுகொலை: இஸ்லாமிய எழுத்தாளர்கள் – ஜனநாயக சக்திகள் அதிர்ச்சி

தமிழ்நாட்டில் இஸ்லாமிய அடிப்படை வாதம் தலைதூக்குவது மோசமான விளைவுகளை உருவாக்கி விடும் என்று இஸ்லாமிய எழுத்தாளர்கள், ஜனநாயக சக்திகள் கவலையையும் கண்டனத்தையும் தெரிவித்துள்ளனர். திராவிடர் விடுதலைக் கழகத்தின் தோழர் பாரூக்கின் படுகொலை – பல இஸ்லாமிய சிந்தனை யாளர்கள், முற்போக்கு இஸ்லாமிய குழுவினரிடம் அதிர்ச்சியையும் அச்சத்தையும் உருவாக்கியிருப்ப தோடு, அரை நூற்றாண்டுக்கு மேலாக திராவிடர் இயக்கத்துக்கும் இஸ்லாமியர்களுக்கிடையே நிலவிய நட்பு உறவையும் சிக்கலாக்கி இருக்கிறது என்று ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ நாளேடு  (மார்ச் 24, 2017) எழுதியிருக்கிறது. கீரனூர் ஜாகிர் ராஜா, நாவல் சிறுகதைகளை எழுதி வரும் இலக்கியவாதி. தன்னுடைய நாவல்களில் பகுத்தறிவு, முற்போக்கு கருத்துகளை எழுதி வருகிறார். ‘மீன்காரத் தெரு’  என்ற அவரது நாவலில் திண்டுக்கல் கீரனூர் இஸ்லாமியர்களிடையே நிலவும் வர்க்க குழு பாகுபாடுகளை சித்தரித்திருந்தார். தொழில் வணிகத்தில் வசதியுடன் வாழும் ‘இராவுத்தர்’ பிரிவினர், மசூதிகளில் சேவை பணி செய்யும் வசதி யற்ற ‘லப்பை’ பிரிவினருடன் திருமண உறவுகளை தடை...

மதுரையில் இரயில் மறியல்

மதுரையில் இரயில் மறியல்

தமிழகத்தை சுடுகாடாக்கும் ஹைட்ரோ கார்பன் மற்றும் மீத்தேன் திட்டத்தை நிறுத்தக் கோரியும் சிங்கள அரசின் தமிழக மீனவர் படுகொலையைக் கண்டிக்கத் தவறிய மத்திய அரசைக் கண்டித்தும் இரயில் மறியல் போராட்டம் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் மதுரையில் நடைபெற்றது. மதுரை மாவட்டக் கழகச் செயலாளர் மா.பா. மணி கண்டன் போராட்டத்துக்கு தலைமை தாங்கினார். இதில் எஸ்.டி.பி.அய். மாவட்ட செயலாளர் அபுதாகிர், பெரியார் திராவிடர் கழக ஒருங்கிணைப் பாளர் காசு.நாகராசன், தந்தை பெரியார் திராவிடர் கழக மாவட்ட தலைவர் கிட்டு ராசா, ஆதித் தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் சிதம்பரம், கோபால் ராமகிருஷ்ணன் மற்றும் ஆதித்தமிழர் பேரவை உள்ளிட்ட தோழமை அமைப்புத் தோழர்களும் கலந்து கொண்டனர். பெரியார் நிலையத்திலிருந்து ஊர்வலமாகப் புறப்பட்டு ஆளும் மத்திய அரசை கண்டித்து முழக்கமிட்டவாறே இரயில் நிலையத்திற்குள் நுழைய முயன்ற 22 தோழர்கள் காவல் துறையினரால் தடுத்து கைது செய்யப்பட்டனர். மாலை தோழர்கள் விடுதலை செய்யப்பட்டனர். பெரியார் முழக்கம்...

பறிபோகிறது, தமிழர் வேலை வாய்ப்புகள் தபால் ஊழியர் பணிநியமனத்தில் இந்திக்காரர்களின் மோசடி

பறிபோகிறது, தமிழர் வேலை வாய்ப்புகள் தபால் ஊழியர் பணிநியமனத்தில் இந்திக்காரர்களின் மோசடி

தமிழ்நாட்டில் உள்ள தபால் நிலையங்களில் தபால்காரர் பதவிகளை நிரப்பக்கோரி கடந்த ஆண்டு 21.10.2016 அன்று தமிழ்நாடு  தபால் வட்டத்தின் சார்பில் அறிவிப்பாணை வெளியிடப்பட்டது. இப்பதவிக்கு தமிழகம் மட்டுமல்லாமல் இந்திய அளவில் இருந்து ஒரு லட்சத்திற்கு மேற்பட்டோர் விண்ணப்பித்து நுழைவுத்தேர்வும் எழுதினர். இத்தேர்வில் தமிழில் கட்டாயமாக 25 மதிப்பெண்களுக்கு தேர்வெழுதவேண்டும்.இதன் முடிவுகள் நான்கு நாட்களுக்கு முன்னர் இணையத் தில் வெளியிடப்பட்டது. தமிழில் வினாத்தாள் மிகவும் கடினமாக இருந்ததால் மற்ற தாள்களில் தேர்ச்சி பெற்றவர்கள் தமிழில் தோல்வி அடைந்து இருந்தனர். ஏதோ, தமிழ்ப் பேராசிரியர் பதவிக்கு தேர்வு நடப்பதுபோல் அவ்வளவு கடினமாக வினாத்தாள் தயாரிக்கப்பட்டிருந்தது. அதன் பிறகு, தமிழில் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சிபெற்றவர்களின் பட்டியலைப் பார்த்ததும் நம்மவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. இவர்கள் யாரும் தமிழ்நாட்டில் இல்லை, தமிழர்களும் இல்லை அனைவரும் அரியானா, மகாராஷ்டிரத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களை அலைபேசியில் தொடர்பு கொண்டபோது ஒருவருக்கும் தமிழ் தெரியவில்லை தொடர்பு கொண்ட சற்று நேரத்திற்கு பின் இவர்களின் அலைபேசிகள்...

தக்கலை – நீட் தேர்விலிருந்து விலக்குக் கோரி ஆர்ப்பாட்டம்

தக்கலை – நீட் தேர்விலிருந்து விலக்குக் கோரி ஆர்ப்பாட்டம்

தக்கலையில்  : குமரி மாவட்டத் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக  நீட் தேர்விலிருந்து விலக்குக் கோரி தக்கலை வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடைப் பெற்றது. கழக மாவட்டச் செயலாளர் தமிழ் மதி தலைமைத் தாங்கினார். நீதி அரசர் (தலைவர்.பெ.தொ.க) முன்னிலை வகித்தார். விஸ்ணு வரவேற்புரை நிகழ்த்தினார். பால் பிரபாகரன் (கழக பரப்புரைச் செயலாளர்) கண்டன உரை ஆற்றினார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி தோழர்கள் மேசியா (ப.நா.புரம் ச.ம.தொ.செயலாளர்,வி.சி.க,), போஸ் (சமூக ஆர்வலர்), முரளீதரன் (பொது பள்ளிகான மாநில மேடை செயலாளர்), இரமேஸ், இராஜேஸ் குமார், இராதாகிருஷ்ணன், (ஆஊருஞ(ஐ), ஜாண் மதி, சூசையப்பா, அனி ஆகியோர் உரையாற்றினர். மஞ்சு குமார் நன்றியுரையுடன் முடிந்தது. பெரியார் முழக்கம் 30032017 இதழ்

தமிழ்நாடு மாணவர் கழகம்  ஆளுநர் மாளிகை முற்றுகை: கைது

தமிழ்நாடு மாணவர் கழகம் ஆளுநர் மாளிகை முற்றுகை: கைது

உயர்கல்வி நிறுவனங்களில் தலித் மாணவர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளைக் கண்டித்தும், ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக ஆய்வு மாணவர் முத்து கிருட்டிணன் மரணத்துக்கு நீதி விசாரணை கோரியும், தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரி, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு நிரப்பக் கூடிய இடஒதுக்கீட்டுக்குரிய இடங்களில் நீட்  தேர்விலிருந்து விலக்கு அளிக்கக் கோரியும் தமிழ்நாடு மாணவர் கழகம் சார்பில் ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டம் மார்ச் 19 பகல் 12 மணியளவில் நடந்தது. மத்திய கைலாஷ் அருகே மாணவர்கள் திரண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன முழக்கமிட்டு ஆளுநர் மாளிகை நோக்கி புறப்பட்டபோது காவல்துறை கைது  செய்தது. பாரி சிவக்குமார் தலைமையில் ஜெயப்பிரகாஷ் முன்னிலையில் நடந்த இந்தப் போராட்டத்தில் 20 தோழர்கள் கைது செய்யப்பட்டனர். மாலையில் விடுவிக்கப்பட்டனர். பெரியார் முழக்கம் 30032017 இதழ்

பாரூக் கொலையைக் கண்டித்து இராசிபுரத்தில் ஆர்ப்பாட்டம்

பாரூக் கொலையைக் கண்டித்து இராசிபுரத்தில் ஆர்ப்பாட்டம்

இராசிபுரம் நகர திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக, கோவைத் தோழர் பாரூக், இஸ்லாமிய அடிப்படை வாதிகளால் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து  கண்டன ஆர்ப்பாட்டம் இராசிபுரம் புதிய பேருந்து நிலையம் அருகே நடைபெற்றது. கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு நகர அமைப்பாளர் இரா.பிடல்சேகுவேரா தலைமை ஏற்க, ம.தி.மு.க.நகரச் செயலாளர் நா.ஜோதிபாசு,   சி.பி.ஐ . எஸ். மணிமாறன், புரட்சிகர இளைஞர் முன்னணியின் பாலகிருஷ்னன் ஆகியோரது கண்டன உரையைத் தொடர்ந்து மாவட்ட செயலாளர் சரவணன், மாவட்ட அமைப்பாளர் வைரவேல்,  மாவட்ட பொருளாளர் அ.முத்துப்பாண்டி, ஈரோடு மாவட்ட செயவாளர் வேணுகோபால் மற்றும் கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி, அமைப்புச் செயலாளர் ப.இரத்தினசாமி வெளியீட்டுச் செயலாளர் இராம.இளங்கோவன் கண்டன உரையாற்றினர். திருப்பூர் தோழர் சங்கீதா நன்றியுரை கூற ஆர்ப்பாட்டம் நிறைவுபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் ஐம்பதுக்கும் மேற்பட்ட தோழர்கள் பங்கேற்றனர். பெரியார் முழக்கம் 30032017 இதழ்

பாரூக் படுகொலை: பெரம்பலூரில் கண்டன ஆர்ப்பாட்டம்

பாரூக் படுகொலை: பெரம்பலூரில் கண்டன ஆர்ப்பாட்டம்

கழகத் தோழர் பாரூக் படுகொலையைக் கண்டித்து மார்ச் 25 மாலை 5 மணியளவில் பெரம்பலூர் பேருந்து நிலையம் காந்தி சிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம், மாவட்ட தலைவர் தாமோதரன் தலைமையில் நடைபெற்றது. என். செல்லத்துரை (தீண்டாமை ஒழிப்பு முன்னணி), திருச்சி மாவட்ட பொறுப்பாளர்கள் தமிழ் முத்து, குணராசு, வீ. ஞான சேகரன் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி), கிருட்டிணசாமி (அம்பேத்கர் அறக்கட்டளை), அக்ரி. ஆறுமுகம் (தி.க.), சித்தார்த்தன் (தி.க.) ஆகியோர் கண்டன உரையாற்றினர். பாரூக் குடும்பத்துக்கு தோழர்கள் ரூ.13,000 நிதியை மாவட்ட தலைவர் தாமோதரனிடம் வழங்கினர். பெரியார் முழக்கம் 30032017 இதழ்

ஈரோடு மரவபாளையத்தில் இரங்கல் கூட்டம்

ஈரோடு மரவபாளையத்தில் இரங்கல் கூட்டம்

இஸ்லாம் அடிப்படைவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட கோவை தி.வி.க. தோழர்  பரூக் ,  ஈரோடு மாவட்டம் (தெற்கு) சார்பாக 19.03.2017 அன்று மாலை 7 மணிக்கு மரவபாளையத்தில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட அமைப்பாளர் ப.குமார் தலைமை ஏற்க, மறைந்த தோழருக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது. காவை இளவரசன், கோபி வேலுச்சாமி ஆகியோர் இரங்கலுரையாற்றினர். தோழர்கள் திரளாக கலந்துகொண்டனர். பெரியார் முழக்கம் 30032017 இதழ்