பெரியாரின் விடுதலைப் பெண்ணியம்

தாராளப் பெண்ணியம் சமதர்மப் பெண்ணியம். தீவிரப் பெண்ணியம் என்னும் வகைகளையெல்லாம் மீறிப் பெரியாரியப் பெண்ணியம் அமைந்துள்ளது. மகளிர் பற்றிய பெரியாரின் கருத்ததுக்களும் இலட்சியங்களும் சீர்திருத்தக் கருத்துக்கள், கொள்கைகள்என்னும்அளவில்குறுக்கிநிறுத்திவிட முடியாதவை.

உரிமை கேட்டுப் போராடும் பெண்களே திகைக்கக்கூடிய சிந்தனைதான் பெரியாருடையது. அதாவது பெண்ணியத்திலும் பெரியார் அழிவு வேலைக்காரரே! பெண்ணைத் திருத்துவதன்று –மாறாகப் பெண்ணை மாற்றவது பெண்களைப் புதுமையாக்குவதுதான்பெரியாரின்இலட்சியம். சம்பிரதாயப் பெண்ணை (அடிமைப் பெண்) அழித்து உரிமைப் பெண்ணை வளர்த்து புது உலக விடுதலைப் பெண்ணை உருவாக்குவதே பெரியாரின் முயற்சி.

பெண்ணே! உன்னை மூடி இருக்கும் திரையை நீக்கு! உன்னைத் தடுத்து நிறுத்தும் தடைச் சுவரினை உடைத்து எறி! உன்னைப் பூட்டியிருக்கும் விலங்கினை நொறுக்கித் தூள் தூளாக்கு! உன் மூளையில் படிந்திருக்கும் பாசியை வழித்தெறி! என் நெஞ்சத்தில் கால மெல்லாம் ஏற்றி வைக்கப்பட்டு உறைந்து போய் கிடக்கின்ற உணர்வுகளையெல்லாம் பொசுக்கு! உன்னைச் சுற்றி ஆயிரமாயிரம் ஆண்டுகளாக இருப்பன அனைத்தையும் சுக்கு நூறாக்கு! அழி! அனைத்தையும் அழி! முழுவிடுதலை பெற்ற பெண்ணாக நீ வருவாய்! இப்படித் தான் பெரியார் சிந்தனையில் தாக்கம் பெண்களுக்கு இருந்திருக்க வேண்டும்.

“பெண்ஏன்அடிமையானள்?” என்னும் நூல் 120 பக்கங்களைக் கொண்டது பெரியரின் சீரிய அப்பட்டமான கருத்துக்களையும் ஆய்வுகளையும் இந்நூலில் காணலாம் முகவுரை யிலேயே பெரியார் பெண்ணடிமைக்குக் காரணங் களாக உள்ளனவற்றைத் தெற்றென எடுத்து வைக்கிறார்.

“இதில் கண்ட விஷயங்கள் இதுவரை மக்களிடையே இருந்து வருகின்ற உணர்ச்சி களுக்கும் ஆதாரங்களுக்கும் மனித சமூகக் கட்டுப் பாட்டு. ஒழுக்கம், ஆசாரம், மதக்கொள்கை, பெரியாரின் விடுதலைப் பெண்ணியம் சாஸ்திர விதி என்பவனவற்றிற்கும் பெரிதும் முரணாகவும். புரட்சித் தன்மைபோன்ற தலைகீழ் மாறுபாடான அபிப்பிராயங்கள் கொண்டதாகவும் சாதாரண மக்களுக்குக் காணப்படும்.” ஒரு சொல்லாராய்ச்சிக்காரராக இருந்து பெரியார் “கற்பு” எனும் சொல்லை ஆய்கிறார் அச்சொல்லைப் பகுபதமாகவும் பகாப் பத மாகவும் வைத்துப் பார்த்து அதற்குத் தரப்பகின்ற பொருள், விளக்கம் முதலான வற்றையும் வைத்துப்பார்த்துப் பெரியர் எடுத்த முடிவு தான் இது. “கற்பு என்பது பெண்களுக்கு மாத்திரம் சம்பந்தப்பட்டது என்பதற்குத் தக்க ஆதாரம் கிடைக்காவிட்டாலும் அழிவில்லாதது, உறுதியுடையது என்கிற பொருள்களே காணக் கிடக்கின்றன.”

அழிவில்லாதது அதாவது சுத்தம் கெடாதது மாசற்றது என்று கொண்டால் ஆங்கிலத்திலும் இக்கருத்துஇவ்வாறேஅமைந்திருக்கிறதுஎன்பதை விளக்கும் முகத்தான் பெரியர் குறிப்பிடுவது:

“சேஸ்ட்டிடி (Chastity) என்கிற ஆங்கில வார்த்தைப்படி பார்த்தால் வர்ஜினிட்டித் (virginity) என்பதே பொருள் ஆகும். அதை அந்தப் பொருளின்படிப் பார்த்தால் இது ஆணுக் கென்றோ பெண்ணுக்கு என்றோ சொல்லாமல் பொதுவாக மனித சமூகத்திற்கே, எவ்வித ஆண் பெண் புணர்ச்சி சம்பந்தமே சிறிதும் இல்லாதபரிசுத்தத்தன்மைகேஉபபோகப்படுத்தி இருக்கின்றது என்பதைக் காணலாம்.

பெரியாரின் முடிவு இதுதான்:-

“கற்பு என்பது பெண்களுக்கு மாத்திரம் சம்பந்தப்பட்டதன்று என்பதும் அதுவும் ஆணோ பெண்ணோ ஒரு தடவை கலந்தபிறகு எவ்வளவு சுத்தமாயிருந்தாலும் கற்பு போய்விடுகிறது என்கிற கருத்துக் கொள்ளக் கூடியதாயுமிருக்கின்றது”

கற்பு என்பது பெண்ணுக்கோ ஆணுக்கோ சொல்லப்பட்டதன்று என்பதும் பொதுவாக மனிதசமூகத்திற்கே சொல்லப்பட்டது என்பதும்

– ஆண் – பெண் புணர்ச்சி சம்பந்தமே இல்லாத தூய நிலைக்கே சொல்லப்பட்டது என்பதுமே திரண்ட கருத்தாகும்.

ஆரியக்கலாச்சார ஊடுறுவலுக்குப் பின்னர்தான் தமிழகத்தில் கற்பு என்னும் சொல்லுக்குப் பதிவிரதைத் தன்மை என்கிற பொருள் கொள்ளப்படுகிறது. இதை எடுத்துக் காட்டிவிட்டுப் பெரியார் தெள்ளத்தெளியப் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.

 

“இந்தஇடத்தில் தான் கற்பு என்கிற வார்த்தைக்கு அடிமைக்கருத்து நுழைக்கப்படுகின்றது என்பது எனது அபிப்பிராயம்’’ “கற்பு என்பதற்கு பதி-விரதம் என்று எழுதிவிட்டதன் பலனாலும் பெண்களை விட ஆண்கள் செல்வம் வருவாய். உடல் வலிவு கொண்டவர்களாக ஆக்கப்பட்டு விட்டதனாலும் பெண்கள் அடிமையாவற்கும் புருஷர்கள் மூர்க்கர்களாகிக் கற்பு என்பது தங்களுக்கு இல்லை என்று நினைப்பதற்கும்

அனுகூலம் ஏற்பபட்டதே தவிர வேறில்லை?” முடிவாக பின்வருமாறு எழுதுகிறார் பெரியார்.

“உண்மையாகப் பெண்கள் விடுதலை வேண்டுமானால் ஒரு பிறப்புக்கொரு நீதி வழங்கும் நிர்பந்தக் கற்புமுறை ஒழிந்தது. இருபிறப் பிற்கும் சமமான சுயேட்சைக் கற்புமுறை ஏற்பட வேண்டும்’’.

திருணம் எனபதே பெண்களை அடிமையாக்கி கொள்வதற்கு ஆண்கள் ஏற்படுத்திக் கொண்ட ஏற்பாடே என்று பெரியார் விவாதிக்கிறார். “நமதுகல்யாணத்தத்துவம் எல்லாம் சுருக்கமாய் பார்த்தால் பெண்களை ஆண்கள் அடிமையாகக் கொள்வது என்பதைத் தவிர வேறு ஒன்றுமே அதிலில்லை. அவ்வடிமைத் தனத்தை மறைத்துப் பெண்களைஏமாற்றுவதற்கேசடங்கு முதலியவைகள் செய்யப்படுவதோடு அவ்விதக் கல்யாணத்திற்குத் தெய்வீகக் கல்யாணம் என்பதாகஒருஅர்த்தமற்ற போலிப் பெயரையும் கொடுத்துப் பெண்களை வஞ்சிகின்றோம்“.

எப்படிக் கற்பு, கல்யாணமென்பனவெல்லாம் பெண்களை அடிமைப் படுத்த ஏற்பட்டனவோ, அப்படியே விபச்சாரம் என்பது பெண்ணை இழிவுபடுத்தவும், அடிமைப்படுத்தவும் ஏற்பட்ட அமைப்பே என்று பெரியார் சாடுகிறார்.

“விபச்சாரம்என்னும்வார்த்தையின்அனுபவத் தத்துவத்தை கூர்ந்து கவனித்துப் பார்த்தால் விபச்சாரம் என்பது பெண்கள் அடிமைகள் என்பதைக் காட்டும் குறிப்பு வார்த்தை என்றுதான் சொல்ல வேண்டுமேயழிய வேறன்று. ஏனெனில்விபச்சாரதோஷம்என்பதுவிபச்சாரம் செய்வதால்ஏற்படும் ஒழுக்கக் குறைவுஎன்பதும் இப்பொழுது வழக்கத்தில் பெண்களுக்கேதான் உண்டேயழிய ஆண்களுக்கு அந்த மாதிரி கிடையவே கிடையாது“.

“பெண்கள் சுதந்திரம். பெண்கள் விடுதலை என்பவைகளுக்காகநடைபெறும் காரியங்களில் “விபச்சாரம்“ என்னும் காரியம். வந்து முட்டுக் கட்டை போடுமானால் அதைத் தைரியமாய் எடுத்தெறிந்துவிட்டு முன்னோக்கிச் செல்ல வேண்டியது உண்மையான உழைப்பாளிகளின் கடமையாகும்’’. சொத்துரிமைக் கிளர்ச்சிகளுக்குப் பெண்களைத் தூண்டும் வகையில் பெரியார் எழுதினார். “பெண் அடிமை என்பதற்கு உள்ள காரணங்கள் பலவற்றுள் சொத்துரிமை இல்லாதது என்பதே மிகவும் முக்கியமான காரணம் என்பது நமது அபிப்பிராயம். ஆனால் பெண்கள் தாராளமாகவும் துணிவுடனும் முன் வந்து சொத்துரிமைக் கிளர்ச்சி செய்ய வேண்டியது மிகவும் அவசியமும் அவசரமுமான காரியமாகும்.’’ எல்லாவற்றிற்கும் மேலாகப் பெரியாரால் கடுமையாக விமரிசிக்கப்படிருப்பது பெண்களுக்கே உரிய கர்ப்பமாதல் எனும் நிலைதான். கர்ப்ப விடுதலையே பெண் விடுதலை என்பது தான் பெரியாரின் எல்லை மீறு கருத்தாகும்.

“பொதுவாகப் பெண்களின் விடுதலைக்கும் சுயேச்சைக்குமே கர்ப்பம் விரோதியாயிருப்பதால் சாதாரணமாய்ப் பெண்கள் பிள்ளைகளைப் பெறுவது என்பதையே அடியோடு நிறுத்திவிட வேண்டும்.” பெண் விடுதலைக்கு அவளுடைய கர்ப்பம் தடையாக இருக்கிறது என்றால் அத்தடையை நீக்கு என்பதே பெரியாரின் அணுகுமுறை!

பெரியான் சுயமரியாதைக் கொள்கைகள் பெண்விடுதலைக்கான சூழ்நிலையை உருவாக்கித் தருகிறது. சுயமரியாதைக் கோடரியை ஏந்தி நின்று சுயமரியாதைப் பெண்ணாகி,பெண்ணின விடுதலைப் போராளியாகப் பெண்கள் அணிவகுத்துச் செல்ல வேண்டும். தாராளப் பெண்ணியம் சமதர்மப் பெண்ணியம். தீவிரப் பெண்ணியம் என்னும் வகைகளையெல்லாம் மீறிப் பெரியாரியப் பெண்ணியம் அமைந்துள்ளது. கற்பு .காதல். விபச்சாரம். கர்ப்பந்தரித்தல். திருமணம், . குடும்பம், சொத்து போன்றவை தொடர்பான கருத்துக்களின் எல்லை மீறு தீவிரம் தான் பெரியாரியப்பெண்ணியத்தைமற்றபெண்ணிய வகைகளிலிருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது.. உலகப்பெண்ணியசிந்தனையாளர்கள்வரிசையில் பெரியார் இடம்பெறுவதோடு இவருடைய தீவிர பெண்ணியக் கருத்துக்களுக்கு ஒட்டி வரக்கூடிய பெண்ணியச்சிந்தனையாளர்கள்மிகக்குறைவே. எல்லாப் பெண்ணியக் கோட்பாடுகளும் உரிமைப் பெண்களை உண்டாக்கிவிடும். ஆனால் விடுதலைப் பெண்ணை ஆக்குகின்ற சக்தி பெரியாரியப் பெண்ணியத்திற்கே உண்டு என்று அழுத்ததாகக் கூறலாம்.

(பேரா.எம்.கே.சுப்ரமணியம் எழுதிய, பெரியார் திராவிடர் கழகம் வெளியிட்ட ‘பெரியாரின் விடுதலை பெண்’ நூலிலிருந்து)

நிமிர் மார்ச் 2017 இதழ்

You may also like...