பார்ப்பனரல்லாத இடது சக்திகளின் சாதனைகள் – ஆர்.முத்துக்குமார்

கல்லடி விழும் காய்த்த மரம் என்று நீதிக் கட்சியைச் சொல்லிவிடலாம். எத்தனை யெத்தனை விமரிசனங்கள் அந்தக் கட்சியின் மீது. நூற்றாண்டைக் கொண்டாடும் வேளையிலும் அதன்மீதான சொல்லடிகள் நின்றபாடில்லை. வேடிக்கை என்ன வென்றால், ஒவ்வொரு விமரிசனத்துக்கும் உரிய முறையில் பதில் தரப்பட்டிருக்கிறது. ஆனாலும் அவற்றையெல்லாம் மறந்துவிட்டு அல்லது மறைத்துவிட்டு, வலுக்கட்டாயமாக விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன.

பெண்களுக்கு அதிகாரம் பற்றி இன்றைக்கு அறிவுஜீவிகள் அதிகம் பேசிக் கொண்டிருக்கிறார்கள். சாதி ரீதியாக ஒடுக்கப்பட்டவர்கள் பட்டியல் சாதி மக்கள் என்றால், எல்லா மட்டத்திலும் ஒடுக்கப்பட்டவர்களாக இருப்பவர்கள் பெண்கள். மேல்தட்டு, நடுத்தட்டு, கீழ்த்தட்டு என்று எந்த வித்தியாசமும் பெண்கள் விஷயத்தில் பார்க்கப் படுவதில்லை.

வெள்ளையனுக்கு வால் பிடித்த கட்சி, சுதந்தரத்துக்கு எதிரான கட்சி, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதுவும் செய்யவில்லை, பெண்களை இழிவாக நினைக்கும் கட்சி என்பன போன்ற புளித்துப்போன புரட்டுகளுக்குப் பதிலளிப்பதைக் காட்டிலும் நீதிக்கட்சி இங்கே ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் குறித்துப் பேசுவது சரியாக இருக்கும். குறிப்பாக, இது நீதிக்கட்சியால் அமலுக்கு வந்த திட்டங்களையும் செயல்களையும் அனுபவித்துக்கொண்டே, அந்தக் கட்சியின் மீது தெரிந்தும் தெரியாமலும் விமரிசனம் வைத்துக்கொண்டிருக்கும் இளைய தலைமுறைக்குச் சில முக்கியமான குறிப்புகளைப் பதிவுசெய்யவேண்டியது அவசியம் மட்டுமல்ல, அத்தியாவசியத் தேவையும்கூட.

பெண்களுக்கு அதிகாரம்(Empowering Women) பற்றிஇன்றைக்கு அறிவுஜீவிகள் அதிகம் பேசிக்கொண்டிருக்கிறார்கள். சாதி ரீதியாக ஒடுக்கப்பட்டவர்கள் பட்டியல் சாதி மக்கள் என்றால், எல்லா மட்டத்திலும் ஒடுக்கப்பட்டவர்களாக இருப்பவர்கள் பெண்கள். மேல்தட்டு, நடுத்தட்டு, கீழ்த்தட்டு என்று எந்த வித்தியாசமும் பெண்கள் விஷயத்தில் பார்க்கப் படுவதில்லை. எல்லோருமே அடக்குமுறைக்கு உள்ளாகிறார்கள். அந்த நிலையில் இருக்கும் பெண்களுக்கு முதலில் வாக்குரிமை என்ற அடிப்படை உரிமையைக் கொடுத்தது நீதிக்கட்சி அரசு. இந்த உத்தரவைப் பின்பற்றித்தான் பிரிட்டிஷ் இந்தியாவின் இதர மாகாணங்கள் பெண்களுக்கு வாக்குரிமை கொடுத்தன.

வெறுமனே வாக்குரிமை வழங்கிவிட்டு, அவர்களைப் பார்வையாளராக மட்டுமே வைத்திராமல், பெண்களைச் சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கவும் நியமனம் செய்யவும் சட்டரீதியிலான உரிமை வழங்கியதும் நீதிக்கட்சிதான். இன்று இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவைத் தலைவராக ஒரு பெண்மணி இருக்கிறார். ஆனால் இவற்றுக்கெல்லாம் முன்னோடியாக இருந்தது நீதிக்கட்சி. சட்டமன்றத்தை வழிநடத்தும் பொறுப்பை டாக்டர் முத்துலட்சுமிக்கு வழங்கியது நீதிக்கட்சி. பெண்களுக்கான அதிகாரம் என்பதெல்லாம் இப்படியான முற்போக்கான நகர்வுகளின் வழியாகவே சாத்தியமாகிக்கொண்டிருக்கிறது.

தாழ்த்தப்பட்ட மக்களுக்கான நெருக்கடிகள் இன்று இந்தியா முழுக்க இருக்கின்றன. ஒருபக்கம் அம்பேத்கரைச் செரித்துக்கொள்ளும் முயற்சிக ள் நடந்து கொண்டிருக்க, இன்னொரு பக்கம் தாழ்த்தப்பட்ட மக்கள் உளரீதியாகவும் உடல்ரீதியாகவும் தாக்கப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். அதற்கான எதிர்வினையை ஆற்றவேண்டியவர்களோ, தாழ்த்தப்பட்ட மக்களின் நேச சக்தியாக எப்போதும் விளங்கிவரும் நீதிக்கட்சிஉள்ளிட்ட திராவிட இயக்கத்தையே தங்களுக்கான எதிரி சக்தியாகப்பார்த்து,அவற்றின் மீதேவிமரிசனம் வைத்து,மெய்யானஎதிரிகளைவேண்டுமென்றே விட்டுவைக்கும் காரியத்தைச் செய்கின்றன.

இப்படிச் செய்பவர்கள் நீதிக்கட்சி தாழ்த்தப் பட்ட மக்களுக்காக ஆற்றிய பங்களிப்புகளை அறியாதவர்கள் அல்லர். ஏனையோரைவிட அதிகம்அறிந்தவர்கள்.ஆனாலும்அவர்களுடைய உள்ளக்கிடக்கை வேறாக இருப்பதால் அவர்கள் பல விஷயங்களை மூடி மறைக்கின்றனர். என்றாலும், அவர்களைப் பின்பற்றுவோர் புரிந்துகொள்ள சில செய்திகளைப் பதிவுசெய்யவேண்டிய அவசியம் இருக்கிறது.

பள்ளர், பறையர், பஞ்சமர் என்ற பெயர்களைக் கொண்டு தாங்கள் அழைக்கப்படுவதை அவமானமாகக் கருதிய தாழ்த்தப்பட்ட மக்களின் சுயமரியாதை உணர்வை முதலில் புரிந்துகொண்ட கட்சி நீதிக்கட்சி. அதனால்தான் அந்தப்பெயர்களைஎல்லாம்முற்றாகநீக்கிவிட்டு, ஆதிதிராவிடர் என்ற ஒற்றைப் பெயரில் அழைப்பதற்கு ஆணையிட்டது நீதிக்கட்சி அரசு. பஞ்சமர்கள் சாலையில் நடக்கக்கூடாது என்றிருந்த நிலையை அரசாணை வழியே அகற்றியது, பேருந்துகளில் தாழ்த்தப்பட்டோர் அனுமதிக்கப்படாத காலகட்டத்தில் அதை சட்டபூர்வமாக அடித்து நொறுக்கியது என்று நீதிக்கட்சியின் சுயமரியாதை சார்ந்த உத்தரவுகள் முக்கியமானவை. சுயமரியாதை என்பதைத் தாண்டி அவர்களுக்கான சமூகநீதியைப் பெற்றுத் தருவதிலும் காத்திரமான பங்களிப்பைச் செய்திருக்கிறது நீதிக்கட்சி. பொதுத்துறையில் இட ஒதுக்கீடு உருவாக்கிக் கொடுத்தது நீதிக்கட்சி அரசு. இன்று தாழ்த்தப்பட்ட மக்களுக்குச் செய்யப்பட்டிருக்கும் சமூகநீதி நடவடிக்கைகள்அனைத்துக்கும்ஆரம்பப்புள்ளி நீதிக்கட்சிதான்.

கல்விக்கண் திறந்தவர் காமராஜர். அவர் கொண்டுவந்த மதிய உணவுத் திட்டம்தான் ஏழை மாணவர்களைப் பள்ளிக்கூடத்துக்கு வரவழைத்தது என்கிறார்கள். உண்மைதான். தமிழகத்தின் கல்விகற்றோர் சதவிகிதம் கணிசமான உயர்ந்ததற்குக் காமராஜரின் மதிய உணவு, எம்.ஜி.ஆரின் சத்துணவுத் திட்டம் போன்றவை காத்திரமான பங்களிப்பைச் செய்திருக்கின்றன என்பதில் அய்யமில்லை. ஆனால் அதற்கான முன்னோடி நீதிக்கட்சி என்பதையும் இணைத்துப் பார்க்கும்போது நீதிக்கட்சித் தலைவர்களின் தொலைநோக்குப் பார்வையைப் புரிந்துகொள்ளமுடியும். ஆம், 1920 ஆம் ஆண்டில் நீதிக்கட்சி ஆட்சியில் இருந்தபோதுதான் “Mid Day Meals Scheme” என்ற பெயரில் மதிய உணவுத் திட்டம் முதன்முறையாகக் கொண்டுவரப்பட்டது.

சென்னை மாநகராட்சி கவுன்சிலின் அனுமதியுடன் முதற்கட்டமாக சென்னை ஆயிரம்விளக்கில் உள்ள மாநகராட்சிப் பள்ளியில் இந்தத்திட்டம் அமல்படுத்தப்பட்டது. ஒரு மாணவனுக்கான உணவுச் செலவு ஒரு அணாவைத் தாண்டக்கூடாது என்ற நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது. ஒரப்பாளையம், மீர்சாகிப் பேட்டை, சேத்துப்பட்டு என்று மெல்ல மெல்ல விரிவுபடுத்தியது நீதிக்கட்சி அரசு. அதன் பலனாகப் பள்ளிக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்தது.

மதிய உணவுத் திட்டத்துக்கென திடீரென அதிகரித்த நிதிச்செலவு பிரிட்டிஷ் நிர்வாகத் தினரை யோசிக்க வைத்தது. விளைவு, மதிய உணவுத்திட்டத்துக்கு முட்டுக்கட்டை விழுந்தது. 1 ஏப்ரல் 1925 அன்று மதிய உணவுத் திட்டம் நிறுத்தப்பட்டது. அதன் எதிரொலி பலமாகக் கேட்டது. ஆம். பள்ளிக்கு வந்துகொண்டிருந்த மாணவர்களின் எண்ணிக்கையில் கணிசமான வீழ்ச்சி. திட்டத்தை நிறுத்தியது தொடர்பாக சென்னை மாநகராட்சியில் பிரச்னை எழுந்தது. எனினும், நீதிக்கட்சித் தலைவர்களின் தொடர் முயற்சிகளின் பலனாக அந்தத் திட்டத்துக்கு மீண்டும் உயிர் தரப்பட்டது. மீண்டும் ஏழைக் குழந்தைகளுக்குப் பள்ளியில்உணவுகிடைத்தது. நீதிக்கட்சி ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட இந்தத் திட்டத்தின் விரிவுபடுத்தப்பட்ட வடிவமே 1956 ஆம் ஆண்டில் காமராஜர் கொண்டுவந்த மதிய உணவுத் திட்டம். இன்று உயர்படிப்புகளைப் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு, தகுதித்தேர்வு என்றெல்லாம் மத்திய அரசு தன்னால் இயன்ற முட்டுக் கட்டைகளை எல்லாம் போட்டுக் கொண்டிருக்கிறது. ஆனால் மாணவர்களின் எதிர்காலக் கல்வி விஷயத்தில் அப்படியான முட்டுக்கட்டைகள் எதுவும் இருக்கக்கூடாது. அப்படியிருந்தால், அதுதகர்த் தெறியப் படவேண்டும் என்பது நீதிக்கட்சியின் நிலைப் பாடு. அதை செயல்வடிவத்திலும் காட்டியது நீதிக்கட்சி அரசு.

அன்றைய காலகட்டத்தில் ஒருவர் மருத்துவப் படிப்பில் சேரவேண்டும் என்றால், சமஸ்கிருதம் தெரிந்திருக்க வேண்டும் என்ற நடைமுறை இருந்தது. இது யாருக்குச் சாதகம், யாருக்குப் பாதகம் என்பது வெள்ளிடைமலை. ஆகவே, அந்த நடைமுறையைச் சட்டரீதியாக அகற்றியது நீதிக்கட்சி அரசு. அதன்மூலம் மருத்துவப்படிப்பு என்ற எட்டாக்கனி எல்லோருக்கும் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகின.இதில் கவனிக்கத்தக்க விஷயம், இந்த உத்தரவைப் பிறப்பித்த முதலமைச்சர் பனகல்அரசர் ராமராய நிங்கார் சமஸ்கிருதம் கற்றவர். வெறுமனே சமஸ்கிருத வெறுப்பின் அடிப்படையிலான உத்தரவு என்று சுருக்கமுயல்வோருக்கான தகவலாக இதைப் பதிவுசெய்வது அவசியம்.

இந்தியாவில் இட ஒதுக்கீடு, இடப்பங்கீடு, சமூக நீதி என்றெல்லாம் துணிச்சலாகப் பேசக்கூடிய மாநிலம் என்றால் அது தமிழ்நாடுதான். அதன்பிறகுதான் ஏனைய மாநிலங்கள். உண்மையில், அதற்கான வித்து நீதிக்கட்சி காலத்தில் இடப்பட்டது என்பது தொடர்ந்து கவனத்துக்குக் கொண்டுவரவேண்டிய செய்தி. ஏனென்றால், இன்று இட ஒதுக்கீட்டின் வழியாகவேபட்டம் பெற்று,அதன்வழியாகவே வேலை வாய்ப்பு பெற்று, அதன் வழியாகவே வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொண்டிருக்கும் இளைஞர்களில் அநேகர் இட ஒதுக்கீட்டை இழிவாகப் பார்க்கும் குணமுடையவர்களாக இருக்கிறார்கள்.இடஒதுக்கீடுஎதிர்ப்புஎன்பதை தங்களுக்கான பெருமித அடையாளமாகக் கட்டமைத்துக்கொள்கிறார்கள். இது அபாய கரமானஅறியாமை. அவர்களுக்கு உண்மையை உரத்துச் சொல்லவேண்டிய அவசியம் இருக்கிறது.

ஆம், கல்வியும் வேலைவாய்ப்பும் அங்கீகாரமும் முன்னேற்றமும் அந்தஸ்தும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினருக்கு மட்டுமே ஏகபோக உரிமை கொண்டது என்ற நிலை  இந்தியாவில் இட ஒதுக்கீடு, இடப்பங்கீடு, சமூக நீதி என்றெல்லாம் துணிச்சலாகப் பேசக்கூடிய மாநிலம் என்றால் அது தமிழ்நாடுதான். அதன்பிறகுதான் ஏனைய மாநிலங்கள். உண்மையில், அதற்கான வித்து நீதிக்கட்சி காலத்தில் இடப்பட்டது என்பது தொடர்ந்து கவனத்துக்குக் கொண்டுவரவேண்டிய செய்தி. ஏனென்றால், இன்று இட ஒதுக்கீட்டின் வழியாகவே பட்டம் பெற்று, அதன் வழியாகவே வேலை வாய்ப்பு பெற்று, அதன் வழியாகவே வாழ்க்கைத்தரத்தை உயர்த்திக்கொண்டிருக்கும் இளைஞர்களில் அநேகர் இட ஒதுக்கீட்டை இழிவாகப் பார்க்கும் குணமுடையவர்களாக இருக்கிறார்கள்.

ஒருகாலத்தில் இருந்தது. ஆம், பிராமணர்கள் மட்டுமே கல்வி கற்பதற்கும் அரசுவேலைக்கும் உரிமை கொண்டவர்கள் என்பது மட்டுமல்ல, தகுதி கொண்டவர்கள் என்ற நிலை இருந்தது. விளைவு, பிராமணர் அல்லாதார் எல்லாம் மேற்கண்ட வாய்ப்புகளில் இருந்து புறம் ஒதுக்கப்பட்டுக் கிடந்தார்கள்.

அவர்களுக்கெல்லாம் சமூகநீதியை வழங்க வேண்டும், அவர்களுக்கும் கல்வி, வேலை வாய்ப்புகள் கிடைக்கவேண்டும், அதன் வழியே தனிவாழ்க்கையில் வளர்ச்சி, சமூக வாழ்க் கையில் அங்கீகாரம் கிடைக்கவேண்டும் என்றெல்லாம் முதலில் சிந்தித்தது நீதிக்கட்சி. அதன் விளைவுதான் வகுப்புவாரி ஆணை. பள்ளத்தில்கிடந்தபலரையும்கைத்தூக்கிவிட்ட பெருமை நீதிக்கட்சி கொண்டுவந்தவகுப்புவாரி ஆணைக்கு உண்டு.

இப்படி, நூற்றாண்டு கொண்டாடும் நீதிக் கட்சியின் பங்களிப்பு குறித்துப் பேசவும் எழுதவும் ஏராளம் இருக்கின்றன. அவற்றை எல்லாம் இளைய தலைமுறையினர் படித்துப் புரிந்துகொள்வது அவர்களுக்கான பாதையைத் துலக்கமாக்கும்!

நிமிர் ஜனவரி 2017 இதழ்

 

 

You may also like...