‘தோழர்’
1932 ஆம் ஆண்டு பெரியார் ஓராண்டுகாலம் வெளிநாட்டு பயணத்தை முடித்து தமிழ் நாடு வந்தவுடன் வெளியிட்ட முதல் அறிக்கை தோழர்கள் என்று அழையுங்கள் என்பதுதான்.
பெரியாரின் அறிக்கை:
“இயக்கத் தோழர்களும்,
இயக்க அபிமானத் தோழர்களும்
இனி ஒருவருக்கொருவர்அழைத்துக் கொள்வதிலும், பெயருக்கு முன்னால்,
பின்னால் மரியாதை வார்த்தை சேர்ப்பது என்பதிலும் ஒரே மாதிரியாக, “தோழர்” என்கிற பதத்தையே உபயோகிக்க வேண்டும் என்றும், மகா-ள-ஸ்ரீ, திருவாளர், திரு, தலைவர், பெரியார், திருமதி, ஸ்ரீஜத் என்பது போன்ற வார்த்தைகளை சேர்த்துப் பேசவோ, எழுதவோ கூடாது என்றும் வணக்கமாய் வேண்டிக் கொள்கிறேன்.
‘குடிஅரசி’லும் அடுத்த வாரம் முதல் அந்தப்படியே செய்ய வேண்டும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்”.
-ஈ.வெ.ரா. (குடிஅரசு 13.11.1932)
நிமிர் பிப்ரவரி 2017 இதழ்