தமிழை மதமாக்கி, தமிழரை ஆரியத்துக்குள் திணிக்கும் முயற்சியே காசி தமிழ்ச் சங்கமம் ம.கி.எட்வின் பிரபாகரன்
75ஆவது சுதந்திர தினத்தை நினைவு கூர்ந்து கொண்டாடுவதற்காக, “விடுதலையின் அமுதப் பெருவிழா” என்கிற பெயரில் தொடர் நிகழ்வுகளை ஒன்றிய அரசு ஒருங்கிணைத்து நடத்தி வருவது, நாம் அறிந்ததே! அதன் ஒரு பகுதியாக “ஒரே பாரதம் உன்னத பாரதம்” என்பதை வலியுறுத்தும் விதமாக, “காசி தமிழ் சங்கமம்” என்கிற பெயரில், ஒரு மாத தொடர் நிகழ்வுகளை ஒன்றிய அரசு 19/11/2022இல் இருந்து நடத்த ஆரம்பித்துள்ளது. இதன் நோக்கங்களும் தெளிவாக சென்னை அய்.அய்.டி. உருவாக்கிய இணையதளத்தில் விளக்கப்பட் டுள்ளன. வெளிப்படையாகக் கூற வேண்டும் எனில், புதிய கல்விக் கொள்கையை (2020) கலை வடிவத்தின் மூலமாக திணிப்பது முக்கிய நோக்கமாகும். இதை அவர்களே கூறி யிருக்கிறார்கள். வடஇந்தியாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் ஒரு ஆன்மீக தொடர்பை ஏற்படுத்தி, அதன் மூலம் சனாதன கொள்கைகளை தமிழ்நாட்டில் தீவிரமாக புகுத்துவது இன்னொரு நோக்கமாகும். “வாஸ்து சாஸ்திரத்தை நவீன அறிவியலோடு இணைப்பது” போன்ற பல நகைச் சுவையான நோக்கங்களும் கூறப்பட் டுள்ளன. சென்னை...
