தீட்சதர்களை சட்டங்கள் கட்டுப்படுத்தாதாம்; ‘தினமலர்’ திமிர்

“குழந்தைத் திருமணத் தடைச் சட்டம், தீட்சதர்களைக் கட்டுப்படுத்தாது. அது அவர்களின் இயல்பான வாழ்க்கை முறை. அவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் தில்லை நடராஜன் கோபத்துக்கு உள்ளாக நேரிடும். தீட்சதர்கள் பிடிவாத குணம் கொண்டவர்கள். அவர்களுக்கு எஜமான் நடராஜன் மட்டுமே” என்று ‘தினமலர்’ ஆசிரியருக்கு கடிதம் வழியாக மிரட்டுகிறது.

2022ஆம் ஆண்டிலும் இப்படித் ‘திமிர்’ பிடித்து அலைகிறது ‘தினமலர்’ கும்பல்.

தமிழர்களால் பேரறிஞர் என்று போற்றப்படும் அண்ணாவை ‘இடியட்’ என்று பதிவு போடுகிறார் கிழக்குப் பதிப்பகம் நடத்தும் பத்ரிசேஷாத்ரி எனும் பார்ப்பனர். மாநிலங்களவையில் ‘இந்தி’ பற்றி ஏதும் தெரியாமலேயே அண்ணா பேசினாராம். இந்தப் பேர்வழிக்கு தமிழ் இணையக் கல்விக் கழக ஆலோசனைக் குழுவில் பதவி தந்தது எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி. இப்போது பதிவிட்ட அடுத்த சில மணி நேரங்களிலேயே தி.மு.க. ஆட்சி அப்பதவியிலிருந்து அவரை நீக்கியிருக்கிறது. அண்ணாவின் பெயரிலே கட்சி வைத்திருக்கும் குழுக்கள்,  அண்ணாவை இழிவுபடுத்திய பார்ப்பனரைக் கண்டித்து ஒரு வார்த்தைகூட பேசவில்லை. பார்ப்பன கொத்தடிமைகளிடமிருந்து இதை எப்படி எதிர்பார்க்க முடியும்?

பூணூல்கள் இப்போது ஒன்றிய ஆட்சி ஆதரவு இருக்கிறது என்பதால் தமிழர்களின் உணர்வுகளுக்கு சவால் விட்டு வருகின்றன.

இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும்.  பார்ப்பனரல்லா ‘சூத்திர’ மக்கள் பார்ப்பனர்கள் ஆதிக்கத் திமிரை புரிந்து கொள்ள வேண்டும்.

பெரியார் முழக்கம் 27102022 இதழ்

You may also like...