தீபாவளி; கஷ்டம் – நஷ்டம்
தீபாவளிப் பண்டிகையென்று கஷ்டமும் – நஷ்டமும் கொடுக்கத்தக்க பண்டிகை யொன்று வந்து போகின்றது. அதிலும் ஏதாவது அறிவுடமை உண்டா என்று கேட்கின்றேன். தீபாவளிப் பண்டிகையின் கதையும் மிக்க ஆபாசமானதும், இழிவானதும், காட்டுமிராண்டித் தனமானதுமாகும். அதாவது, விஷ்ணு என்னும் கடவுள் பன்றி உருக்கொண்டு பூமியை புணர்ந்ததன் மூலம் பெறப்பட்டவனான் நரகாசுரன் என்பவன், வருணனுடைய குடையைப் பிடுங்கிக் கொண்டதால் விஷ்ணுக் கடவுள் நரகாசுரனைக் கொன்றாராம். இதைக் கொண்டாடப் படுவதற்காக தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படுகிறதாம்.
– ‘குடிஅரசு’ 20.10.1929
பெரியார் முழக்கம் 27102022 இதழ்