மக்கள் தொகை பதிவேடு-குடிமக்கள் பதிவேட்டுக்கான தொடக்கப் பணியே பா.ஜ.க. வாதங்களுக்கு ஆணித்தர மறுப்பு
குடியுரிமை சட்ட திருத்தம் (CAA)/தேசிய மக்கள்தொகை பதிவேடு (NPR)/ தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) ஆகிய மும்முனை தாக்குதலுக்கு எதிராக இயக்கங்கள் தொடர் கின்றன. எனினும் மோடி அரசாங்கம் தனது நிலையை மறுபரிசீலனை செய்ய மறுப்பது மட்டு மல்ல; தினமும் புதிய பொய்களை அள்ளி வீசுவதன் மூலம் போராடுபவர்களை தனிமைப்படுத்த எத்தனிக்கிறது. CAA காரணமாக முஸ்லீம்கள் உட்பட எந்த ஒரு இந்திய குடிமகனின் உரிமையும் பறிபோகாது என மோடி அர சாங்கம் கூறுகிறது. CAA என்பது தனியாக செயல்படப் போவது இல்லை. NPR மற்றும் NRC உடன் இணைந்து தான் CAA பயணிக்க ஆட்சி யாளர்கள் திட்டமிடுகின்றனர். NRCயை தேசம் முழுதும் அமலாக்கும் எண்ணம் தற்போதைக்கு இல்லை என மத்திய அமைச்சர்கள் கூறுகின்றனர். “தற்போதைக்கு” என்பதன் பொருள், பின்னால் இது வரும் என்பதுதானே! NPR மற்றும் NRCக்கு இடையே எவ்விதத் தொடர்பும் இல்லை என அடித்து சத்தியம் செய்கின்றனர். எனினும் NPRதான்...
