“குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்புப் பேரணியில் பங்கேற்போம்” – கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அறிவிப்பு.
“குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்புப் பேரணியில் பங்கேற்போம்” – கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அறிவிப்பு.
டிச.23 திங்கள் அன்று அனைத்துக் கட்சி சார்பில் சென்னையில் நடைபெற உள்ள
‘குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்புப் பேரணி’யில் திராவிடர் விடுதலைக் கழகம் பங்கேற்கிறது. – கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அறிவிப்பு.
இந்தியாவை இந்து ராஷ்டிரமாக மாற்றும் RSS ன் திட்டப்படி மத்திய பாஜக அரசால் கொண்டு வரப்பட்டுள்ள சட்டம் தான் புதிய குடியுரிமை திருத்த சட்டம் .
பாஜக அரசின் இந்த புதிய குடியுரிமை திருத்த சட்டம் இந்த அரசியல் சட்ட சாசனம் உறுதியளிக்கும் மதசார்பற்ற தன்மை எனும் அடிப்படையே தகர்க்கிறது.
நாட்டு மக்களை மதத்தின் அடிப்படையில் பிளவு படுத்தி ஒரு மதம், ஒரு மொழி,ஒரு கலாச்சாரம் என்கிற ஆபத்தான ஜனநாயகத்திற்கு எதிரான, பன்முகத்தன்மைக்கும்,அடிப்படை மனித உரிமைகளுக்கும் எதிரான இந்த புதிய குடியுரிமை திருத்த சட்டம் RSS ன் பார்ப்பன சர்வாதிகார அரசை நிருவும் முயற்சியே ஆகும்.
இதில் இசுலாமியர்கள்,ஈழத் தமிழர்கள் என ஒடுக்கப்பட்ட பாதிக்கப்பட்ட மக்களுக்கான அடிப்படை மனித உரிமைகள் மறுக்கபட்டிருப்பது சர்வதேச சட்டங்களுக்கும் எதிரானது ஆகும்.
ஆகவே இந்த சட்டத்தை மத்திய அரசு திரும்ப பெரும் வகையில் போராட்டங்களை முன்னெடுப்பது தற்போதைய சூழலில் மிக மிக அவசியமாக உள்ளது .
அந்த வகையில் நேற்று 18.12.2019 அன்று சென்னையில் தி.மு.க. தலைமையில் கூடிய அனைத்துக் கட்சி கூட்டத்தில் 23.12.2019 அன்று காலை 10.00 மணிக்கு சென்னையில் ‘குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்புப் பேரணி’ நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பேரணியில் மாணவர்கள்,பொதுமக்கள் என அனைவரும் பேரணியில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஜனநாயகத்தின் குரல்வளை காவி பயங்கரவாதிகளால் நசுக்கப்பட்டும் இந்த ஆபத்தான சூழலில் ஜனநாயக சக்திகள் அனைவரும் ஒற்றுமையுடன் இணைந்து காவி பயங்கரவாதத்தை வீழ்த்த வேண்டியது நம் அனைவரின் கடமை ஆகும். ஆகவே வரும் டிச.23 சென்னையில் நடைபெற உள்ள ‘குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்புப் பேரணி’யில் பங்கேற்று பேரணியை வலுப்படுத்துவோம்.
காவி பார்ப்பன பயங்கரவாதத்திற்கு எதிராக அணிதிரள்வோம்.
அடிப்படையான மத சார்பற்ற தன்மையை பாதுகாப்போம்.
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு நம் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்வோம்.
கழகத் தோழர்கள் திரளாய் இப்பேரணியில் பங்கேற்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்.
கொளத்தூர் மணி,
தலைவர்,
திராவிடர் விடுதலைக் கழகம்
19.12.2019.