Author: admin

பெண் மருத்துவரின் நன்றி உணர்வு: பெரியார் தொண்டரின் உருக்கமான கடிதம்

பெண் மருத்துவரின் நன்றி உணர்வு: பெரியார் தொண்டரின் உருக்கமான கடிதம்

மேட்டுப்பாளையம் மூத்த பெரியார் தொண்டர் தி.வி.க. தோழர் பா. ராமச்சந்திரன் எழுதியுள்ள கடிதம். அன்புடையீர் வணக்கம், மேட்டுப்பாளையத்தில் பல் மருத்துவராக இருக்கும் டாக்டர் மனோன்மணி அவர்கள், என் வயது முதிர்வு காரணமாக கொள்கை உணர்வோடு உதவி வருகிறார். சிகிச்சைக்காக பல முறை கருப்புச் சட்டையுடன் செல்வேன். பெண் ஏன் அடிமையானாள்? பெண்களின் முன்னேற்றம் குறித்த சிறு சிறு பெரியார் எழுதிய நூல்களை வாசிக்கக் கொடுப்பேன் . அவர் ஆர்வமாக வாங்கிக் கொள்வார். கடந்த ஆண்டு நமது இயக்க காலண்டரைக் கொடுத்தேன் . பலரும் பார்க்கின்ற இடத்தில் வைத்தார். நான் பலமுறை பல் சிகிச்சைக்காக போகும்போது என்னிடம் பணம் வாங்குவதைத் தவிர்த்து விடுவார். கடைசியாக எனது கீழ் வரிசை பல்லை எடுத்து விட்டு புதியதாக பல் செட்டு வைக்க வேண்டிய நிலைமை வந்தது. அந்த சிகிச்சையும் சரி செய்து விட்டார். அதற்குரிய கட்டணத்தை வாங்க மறுத்து, உங்களைப் போன்ற மூத்த பெரியாரின் தொண்டருக்கு...

மருத்துவக் கட்டமைப்பில் ‘திராவிடன் மாடலு’க்குக் கிடைத்த மகத்தான வெற்றி

மருத்துவக் கட்டமைப்பில் ‘திராவிடன் மாடலு’க்குக் கிடைத்த மகத்தான வெற்றி

தமிழ்நாட்டில் சுகாதார கட்டமைப்பு வசதிகள், ஏனைய மாநிலங்களை விட வெற்றிகரமாக செயல்படுவதற்கான காரணங்கள் என்ன ? கடந்த பல ஆண்டுகளாக தமிழ்நாட்டில் பின்பற்றப்பட்டு வரும் “திராவிடன் மாடல்” அடிப்படையில் உருவாக்கப்பட்ட சமூகநீதிக் கொள்கைகளே இந்த வெற்றியை ஈட்டித் தந்திருக்கின்றன என்பதை விளக்கி, இந்து ஆங்கில நாளேட்டில்(ஜனவரி 27, 2022) சிறப்பான கட்டுரை ஒன்று வெளி வந்திருக்கிறது. சென்னை அரசு மருத்துவமனை யில் மருத்துவராகவும், மருத்துவக் கல்லூரியில் பேராசிரியர்களாகவும் பணியாற்றும் டாக்டர் சக்திராஜன் இராமநாதன் (சிறுநீரகத் துறை), டாக்டர் சுந்தரேசன் செல்லமுத்து (புற்றுநோய் கதிர்வீச்சுத் துறை) ஆகியோர் இணைந்து அக்கட்டுரையை எழுதியுள்ளனர். மருத்துவப் படிப்புக்கான அகில இந்திய ஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட் டோருக்கான 27 சதவீத ஒதுக்கீடு சட்டப்படி செல்லத்தக்கதே என்று கடந்த வாரம் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில் தகுதி குறித்து வெளியிட்டுள்ள கருத்துக்களின் வெளிச்சத்தில் இக்கட்டுரை எழுதப்பட்டு இருக்கிறது. திராவிடம் நாட்டையே கெடுத்துவிட்டது என்ற கூக்குரல்கள் அர்த்தமற்றது என்பதற்கான சான்றாதாரங்கள் அவ்வப்போது வெளி...

காந்தியாருக்கு நினைவுச் சின்னம்

காந்தியாருக்கு நினைவுச் சின்னம்

காந்தியாருக்கு ஞாபகச் சின்னம் ஏற்படுத்துவது அவசியம், அது நிரந்தரமான தாகவும், அதிசயமான பயனுள்ளதாகவும் இருக்க வேண்டும். அதற்கு என் தாழ்மையான யோசனை : *           இந்தியாவுக்கு, ‘ஹிந்துஸ்தான்’ என்கிற, பெயருக்குப் பதிலாக – ‘காந்தி தேசம்’ அல்லது ‘காந்திஸ்தான்’ என்று பெயரிடப்படலாம். *           இந்து மதம் என்பதற்குப் பதிலாக – ‘காந்தி மதம்’ அல்லது ‘காந்தினிசம்’ என்பதாக மாற்றப் படலாம். *           இந்துக்கள் என்பதற்குப் பதிலாக – ‘மெய்ஞ்ஞானிகள்’ அல்லது ‘சத்ஞானஜன்’ என்று பெயர் மாற்றப்படலாம். *           காந்தி மதக் கொள்கையாக இந்தியாவில் ஒரே பிரிவு மக்கள்தான் உண்டு ; வருணாசிரம தர்மமுறை அனுசரிக்கப்பட மாட்டாது. ஞானமும் (அறிவும்) பக்ஷமும் (அன்பும்) அடிப்படையாகக் கொண்டது; சத்து அதாவது சத்தியமே நித்தியானது என்பதான சன்மார்க்கங்களைக் கொண்டதாகும் என்பதாக ஏற்படுத்தி, கிறிஸ்து ஆண்டு என்பதற்குப் பதிலாக ‘காந்தி ஆண்டு’ என்று துவங்கலாம். இப்படிப்பட்ட காரியங்கள் செய்வதனால்தான், புத்தர், கிறிஸ்து,...

‘நீட்’ எதிர்ப்புப் போராட்டம்: கழகத் தோழர்கள் 12 பேர் மீதான வழக்கை இரத்து செய்தது உயர்நீதிமன்றம்

‘நீட்’ எதிர்ப்புப் போராட்டம்: கழகத் தோழர்கள் 12 பேர் மீதான வழக்கை இரத்து செய்தது உயர்நீதிமன்றம்

‘நீட்’ தேர்வில் வெற்றி பெறாத நிலையில் அனிதா உயிர்ப் பலி தந்ததைத் தொடர்ந்து ‘நீட்’ இரத்து கோரி திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் சென்னையில் பா.ஜ.க. தலைமை அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் 2017இல் நடந்தது. தலைமைக் கழகச் செயலாளர் தபசி குமரன், மாவட்டச் செயலாளர் உமாபதி உள்ளிட்ட 12 பேர் மீது காவல்துறை பொது அமைதியைக் குலைத்ததாக வழக்கைப் பதிவு செய்தது. போராட்டம் – சட்டம் வழங்கியுள்ள ஜனநாயக உரிமைப்படித்தான் நடந்தது; சட்டம் ஒழுங்கு சீர்குலைவோ, பொது மக்களுக்கு இடையூறோ ஏதும் நிகழவில்லை என்று கழக சார்பில் வழக்கறிஞர் திருமூர்த்தி வாதிட்டார். நீதிபதி சதீஸ்குமார், வழக்கறிஞர் வாதத்தை ஏற்று 12 தோழர்கள் மீது தொடரப்பட்ட வழக்கை இரத்து செய்தார். பெரியார் முழக்கம் 03022022 இதழ்

கட்டாய ‘நீட்’ திணிப்பும் கட்டாய ‘மதமாற்ற’க் கூப்பாடும்

கட்டாய ‘நீட்’ திணிப்பும் கட்டாய ‘மதமாற்ற’க் கூப்பாடும்

தமிழ்நாட்டில் கட்டாய மதமாற்றம் நடப்பதாக போலி கூக்குரலை எழுப்பிக்கொண்டு பாஜக அரசியல் நடத்தப் பார்க்கிறது. பாஜகவின் அந்த அரசியலுக்கு, தமிழ்நாட்டில் சீண்டுவதற்கு கூட ஆள் இல்லை. அவர்களது கூட்டணிக் கட்சியான அ.இ.அதிமுக கூட அவர்கள் பக்கம் நிக்கத் தயாராக இல்லை. கட்டாய மதமாற்றம் என்று கூறி, நடத்திய ஆர்ப்பாட்டத்தில் பாஜக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் அதிமுக வை சீண்டியிருக்கிறார். உடனே அதிமுகவே வெகுண்டெழுந்து பதிலடி கொடுத்து வருகிறது. பாஜக கூட்டணியே இந்த உள்ளாட்சித் தேர்தலுக்கு வேண்டாம் என்று கூறுகிற அளவிற்கு இவர்களுடைய மதமாற்ற பிரச்சாரம் பா.ஜ.க.வை நெருக்கடிக்கு கொண்டு போய் சேர்த்திருக்கிறது. இதனால், அ.தி.மு.க.விடம் மன்னிப்புக் கேட்கிறேன் என்று சொல்லக்கூடிய நிலைக்கும் அண்ணாமலை வந்துவிட்டார். கட்டாய நீட் திணிப்பு, கட்டாய இந்தி திணிப்பு, கட்டாய உரிமை பறிப்புகளை மட்டுமே தமிழ்நாடு ‘திராவிட மண்’ எதிர்க்கும். ஆனால் கட்டாய மதமாற்றம் என்ற போலி கூக்குரல்கள் எடுபடாது என்பதை பாஜக புரிந்து கொள்ள...

தலையங்கம் ‘கோட்சே’யின் வாரிசுகள்; எச்சரிக்கிறார் தமிழக முதல்வர்

தலையங்கம் ‘கோட்சே’யின் வாரிசுகள்; எச்சரிக்கிறார் தமிழக முதல்வர்

கோட்சேயின் வாரிசுகளுக்கு இந்திய மண்ணில் இடமில்லை என சூளுரைப்போம் – என்று காந்தி நினைவு நாளையொட்டி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கை – இன்றைய சூழலில் மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. சமூக நீதியால் பக்குவம் பெற்றுள்ள தமிழ் மண்ணில் மதவெறியை விதைக்கும் பா.ஜ.க.வின் சீரழிவு அரசியலை அம்பலப்படுத்துங்கள் என்று தி.மு.க. தோழர்களுக்கு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளதையும் இத்துடன் இணைத்துப் பார்க்க வேண்டும். போபால் நாடாளுமன்ற உறுப்பினரான பா.ஜ.க.வைச் சார்ந்த பிரக்யாசிங், நாடாளுமன்றத்தில் கோட்சே தேச பக்தர் என்று பேசியதோடு காந்தி நினைவு நாளில் அவரைப் போல் உருவ பொம்மை செய்து துப்பாக்கியால் சுட்டு மகிழ்ந்தது, சமூக வலை தளங்களில் வைரலாகப் பரவியது. கடந்த ஜன. 30ஆம் தேதி இராஜஸ்தான் குவாலியரில் ‘இந்து மகாசபை’ எனும் அமைப்பு, காந்தியாரைக் கொலை செய்த வழக்கில் தூக்குத் தண்டனை பெற்ற ‘கோட்சே – நாராயணன் ஆப்தே’ இருவர் படத்துக்கும் மலர் தூவி மரியாதை...

‘சமூக நீதிக் கூட்டமைப்பு’க் காலத்தின் கட்டாயம்

‘சமூக நீதிக் கூட்டமைப்பு’க் காலத்தின் கட்டாயம்

தமிழ்நாடு முதலமைச்சர் அகில இந்திய அளவில் சமூக நீதிக்கான கூட்டமைப்பை உருவாக்கும் முயற்சிகளில் இறங்கப் போவதாக அறிவித்திருக்கிறார். இது உண்மையிலேயே பாராட்டி வரவேற்கப்பட வேண்டிய ஒன்றாகும். அனைத்து மாநிலங்களிலும் உள்ள ஒடுக்கப்பட்ட பிரிவுகளின் தலைவர்களை உள்ளடக்கி இந்த அமைப்பு உருவாக்கப்படும் என்றும் முதலமைச்சர் கூறியிருக்கிறார். அகில இந்திய கோட்டாவில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீதம் இட ஒதுக்கீடு கிடைப்பதற்கு, சட்டப் போராட்டம் நடத்தி இந்திய ஒன்றிய அளவில் 4000 இடங்கள் கிடைப்பதற்கு கதவுகளை திறந்து விட்டது தமிழ்நாடு அரசும், தமிழ்நாடு முதலமைச்சரும் தான். இதை ஆந்திரா, மகராஷ்டிரா, பீகார், உ.பி, மேற்குவங்கத்தைச் சேர்ந்த சமூக நீதித் தலைவர்கள் காணொலி வழியாக கடந்த 26.01.2022 அன்று நடந்த, மு.க ஸ்டாலினுக்கு பாராட்டு விழா மற்றும் சமூக நீதி இயக்கத்துக்கான ஒருங்கிணைந்த தேசிய திட்டம் கருத்தரங்கில் பாராட்டி வரவேற்று இருக்கிறார்கள். இந்தியா என்பது தற்போது ஒற்றை ஆட்சியை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது. அதுவும் இந்துக்களின் நாடாக...

அமெரிக்காவில் ஜாதி எதிர்ப்பு இயக்கம்: உ.பி.-பீகாரில் இந்துத்துவா மாயை விலகுகிறது

அமெரிக்காவில் ஜாதி எதிர்ப்பு இயக்கம்: உ.பி.-பீகாரில் இந்துத்துவா மாயை விலகுகிறது

கடந்த வாரம் வெளி வந்த சில முக்கிய செய்திகள் குறித்து ஒரு பார்வை அமெரிக்க பல்கலைக்கழகங்களிலும் இந்து பார்ப்பனியத்தின் ஜாதியப் பாகுபாடு நுழைந்து விட்டது. இதனைத் தொடர்ந்து பாகுபாடு எதிர்ப்புக்கான பல்கலைக்கழகக் கொள்கையில் ஜாதியையும் கலிபோர்னியா பல்கலைக்கழகம் சட்டப்பூர்வமாக அண்மையில் சேர்த்திருக்கிறது. பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் அமைப்பு, ஜாதி – ஒரு பாகுபாடு என்றும், பல்கலை வளாகத்துக்குள் இது தடை செய்யப்பட வேண்டும் என்றும் தனது கொள்கையாக ஏற்கனவே அறிவித்திருந்தது. பேராசிரியர்கள் கோரிக்கையை இப்போது கலிபோர்னியா பல்கலைக்கழகமும் ஏற்று தனது சட்டப்பூர்வ விதியாக்கியுள்ளது. பல்கலைக் கழகத்தின் இந்த நடவடிக்கைக்கு அமெரிக்கன் இந்து சம்மேளனம் என்ற மதவாத அமைப்பு எதிர்ப்பு தெரிவித்திருப்பதோடு ஜாதி என்று தனியாக பெயர் குறிப்பிட்டு சட்டத்தில் குறிப்பிட வேண்டிய அவசியமில்லை என்று கூறியிருக்கிறது. தலித் மற்றும் மைனாரிட்டி மக்களுக்கான உரிமைகளுக்குப் போராடும் அமைப்பு, அமெரிக்கப் பல்கலைக் கழகங்களில் ஜாதி அடிப்படையில் பாகுபாடு காட்டப்படுவதை ஆதாரங்களுடன் எடுத்துக்காட்டி பாகுபாட்டுக்கான தடைகளில் ஜாதியையும்...

கழகத் தலைவர் கொளத்தூர் மணி விளக்கம் (2) சர்ச்சில் – மெக்காலேவை பார்ப்பனர்கள் எதிரிகளாக சித்தரித்தது ஏன்?

கழகத் தலைவர் கொளத்தூர் மணி விளக்கம் (2) சர்ச்சில் – மெக்காலேவை பார்ப்பனர்கள் எதிரிகளாக சித்தரித்தது ஏன்?

சென்ற இதழ் தொடர்ச்சி   ஆப்பிரிக்க நாடுகளுக்கு சுதந்திரம் தரலாம்; ஆனால் இந்தியாஹவக்கு தருகிற சுதந்திரம் அந்நாட்டு 65 மில்லியன் தாழ்த்தப்பட்ட மக்களை பார்ப்பனர்களுக்குஅடிமைகளாகவே பயன்படும் என்று சர்ச்சில் பேசினார். “வைக்கம் போராட்ட வெற்றி விழா நடக்கிறது. பெரியார் 23.11.1925இல் காங்கிரசில் இருந்து வெளியேறுகிறார். 27ஆம் தேதி வெற்றி விழா நடைபெறுகிறது. அதில் பெரியார் தான் தலைமை தாங்குகிறார். அந்த மாநாட்டிற்கு வெளியில் இருந்து வந்து கலந்து கொண்டது பெரியார் ஒருவர்தான். வைக்கத்திற்காக இரண்டு முறை சிறை சென்றவரும் பெரியார் தான். கிரிமினல் வழக்கில் கைதானவரும் பெரியார் தான். மற்றவர்களெல்லாம் சிவில் வழக்கில் தான் கைதானார்கள். பெரியாரை விலங்கு போட்டு வைத்திருந்தார்கள். இதை பற்றி பழ.அதியமான் ஆய்வு செய்து எழுதியிருக்கிறார். அதன் தொடர்ச்சியாக நடந்த பரப்புரை தான் மதமாற்றத்தில் கொண்டு வந்து விட்டது பெரியாரை. இஸ்லாமிற்கு மாறலாம் என்று இரண்டு நிகழ்வுகளில் கூறுகிறார். ஒன்று கண்ணனூரில் நடைபெற்ற கூட்டம். மற்றொரு மாநாட்டிலும்...

‘ராஜாஜி’ பார்ப்பனராக இருந்தாலும் தென்னாட்டுக்காரர் என்று பார்த்தார், பெரியார்

‘ராஜாஜி’ பார்ப்பனராக இருந்தாலும் தென்னாட்டுக்காரர் என்று பார்த்தார், பெரியார்

டெல்லி குடியரசு தின அணிவகுப்பில் மறுக்கப்பட்ட தமிழக அரசின் ஊர்திகள், சென்னையில் நடைபெறுகிற தமிழக அரசின் குடியரசு நாள் விழாவில் அலங்கரித்து ஊர்வலமாக கொண்டு வரப்படும் என்ற சரியான பதிலடியை தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்திருக்கிறார். அதுமட்டுமின்றி தமிழ்நாட்டின் முக்கிய ஊர்கள் தோறும், இந்த தமிழ்நாட்டு போராட்ட வீரர்களின் ஊர்திகள் அணிவகுத்து மக்கள் பார்வைக்கு வைக்கப்படும் என்ற அறிவிப்பையும் வெளியிட்டு இருக்கிறார். குடியரசு நாளை கொண்டாடுகிற டெல்லி, தமிழ்நாட்டை ஓரங்கட்டி, புறக்கணிக்க நினைத்தாலும் தமிழ்நாடு தனக்குள்ள இறையாண்மை அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்தியநாட்டுக் குடியரசில் தமிழகத்தில் போராடிய தலைவர்களுக்கு உரிய மரியாதை தரப்படும் என்ற செய்தியை நாட்டிற்கு முதலமைச்சரின் இந்த அறிவிப்பு வெளிப்படுத்துகிறது. இந்த சூழ்நிலையில் பெரியாரின் கருத்து ஒன்றை சுட்டிக்காட்டுவது பொருத்தமாக இருக்கும் என்று கருதுகிறோம். ஜனவரி 26ஆம் நாள் குடியரசு நாள் அமுலுக்கு வந்த நாளை பெரியார் அதைத் துக்க நாள் என்று கூறியதோடு மற்றொரு கருத்தையும் வெளியிட்டார். “புதிய குடியரசுத்...

கோ.இளவரசன்  நினைவேந்தல் மற்றும் படத்திறப்பு !

கோ.இளவரசன் நினைவேந்தல் மற்றும் படத்திறப்பு !

கடந்த 05.01.2022 அன்று மறைந்த கழகத் தோழர் கோ. இளவரசன்  நினைவேந்தல் மற்றும் படத்திறப்பு நிகழ்வு, 20.01.2022 அன்று சென்னை சேத்துப்பட்டு கோ. இளவரசன் இல்லத்தில் மாலை 6 மணியளவில் நடைபெற்றது. கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் படத்தை திறந்து வைத்து, நினைவேந்தல் உரையாற்றினார். விடுதலை சிறுத்தைகள், இந்திய குடியரசுக் கட்சி, மக்கள் அதிகாரம் போன்ற அமைப்புகளின் நிர்வாகிகளும் கலந்து கொண்டு கோ. இளவரசனின் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டனர். இளவரசன் தனது மரணத்தின்போது எந்த சடங்குகளும் இடம் பெறக் கூடாது என்று தமது துணைவியாரிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். 54 வயதில் துணைவரை இழந்த அவரது இணையர், உறவினர் எதிர்ப்புகளைப் புறந்தள்ளி எவ்வித சடங்குகளும் இன்றி இறுதி நிகழ்வுகளை கழகத் தோழர்களின் ஆதரவுடன் நடத்திக் காட்டினார். மறைவுச் செய்தி அறிந்த சென்னை மாவட்டக் கழகத் தோழர் களுடன் விரைந்து சென்று அனைத்து ஏற்பாடுகளையும் செய்தனர். துணைவர் படத் திறப்பு நிகழ்விலும்...

குடியாத்தத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி பேச்சு பெரியாருக்கும் பவுத்தத்துக்கும் உள்ள உறவு

குடியாத்தத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி பேச்சு பெரியாருக்கும் பவுத்தத்துக்கும் உள்ள உறவு

7.11.2021 அன்று குடியாத்தத்தில் ‘நான் இந்துவாக இறக்கப் போவதில்லை’ என்ற தலைப்பில் பெரியார் உரைகளின் தொகுப்பு குறித்து திறனாய்வுக் கூட்டம் நடந்தது. ‘தலித் முரசு – காட்டாறு’ இணைந்து வெளியிட்ட நூல் இது. இதில் பங்கேற்று கழகத் தலைவர் கொளத்தூர் மணி நிகழ்த்திய உரையிலிருந்து. “நான் இந்துவாக இறக்கப் போவதில்லை” என்ற தலைப்பின் மேல் சிலருக்கு முரண்பட்ட கருத்து உண்டு. வேறு தலைப்பை வைத்திருக்க லாமே என்று. “இந்து மதத்தை வேரறுப்போம்” என்று வைத்திருக்கலாமே என்றும் கூறினார்கள். புத்தகத்தில், “நான் இந்துவாக இறக்கப் போவ தில்லை” என்று 1926இல் கூறியதாகவும், அம்பேத்கர் 1935இல் கூறியதாகவும் குறிப்பிடப் பட்டிருக்கிறது. இதில் பெரியார் போகிற போக்கில் கூறிய கருத்து. ஆனால், அம்பேத்கர் திட்டவட்டமாக மாற வேண்டும் என்று அறிவித்த கருத்து. இரண்டையும் இணைத்துப் பார்ப்பதில் தான் எனக்கு கொஞ்சம் நெருடலாக இருக்கிறது. இருவரையும் இணைத்து பார்ப்பதற்கு என்றே சேர்த்ததாக தெரிந்தது. சேஷாசலமாக பிறந்து, தமிழ்...

தகுதி, திறமை என்ற சொல்லே அரசாங்க அகராதியில் இருந்து எடுக்க வேண்டும்

தகுதி, திறமை என்ற சொல்லே அரசாங்க அகராதியில் இருந்து எடுக்க வேண்டும்

பாஸ் செய்த பின்பு ‘தகுதி, திறமை, தரம்’ எதற்காகப் பார்க்கப்படு கின்றது ? அது எதற்காக வேண்டும் ? அதன் அர்த்தம் என்ன ? அதன் பலன் என்ன? மந்திரிசபையில் பெரிய பதவியில் அதிகாரத்தில் தரமுள்ளவர் களால், திறமை உள்ளவர்களால்’ ஏற்பட்ட நன்மை, பெருமை என்ன ? தகுதி, திறமை, தரம் அற்றவர்களால் ஏற்பட்ட கெடுதி என்ன ? அதிகாரம், உத்தியோகங்களிலும் வகுப்பு, உள்வகுப்பு, உட்பிரிவு, சாதி வகுப்புரிமை வேண்டும். சர்க்காருக்கு 50 கோடி ரூபாய், மது இலாகா மூலம் வருவாய் கிடைத்திருக்கிறது. இது யார், எந்த வகுப்பார் தந்த பணம், இந்த வருவாய் கொடுத்தவர்களை வடிகட்டுவதுதான் பலனா ? இதைக் கவனிக்க வேண்டும். கண்டிப்பாய் அரசாங்க அகராதியில் தகுதி, திறமை, தரம் என்ற சொற்களை எடுத்துவிட வேண்டும். இது என் சொந்த கருத்து. விடுதலை 18.07.1972 பெரியார் முழக்கம் 27012022 இதழ்

உ.பி. பாஜகவுக்கு ஆப்பு வைக்கிறது திராவிடன் மாடல்

உ.பி. பாஜகவுக்கு ஆப்பு வைக்கிறது திராவிடன் மாடல்

ஜனவரி 19,2022 அன்று வெளிவந்த ‘இந்து’ ஆங்கில நாளேட்டில், உர்மினிஷ் என்ற பத்திரிக்கையாளரின் கட்டுரை தமிழ்நாட்டின் ‘திராவிடன் மாடல்’ உ.பி.யில் பாஜக வின் இந்துத்துவ அரசியலுக்கு கடும் நெருக்கடிகளை உருவாக்கி இருப்பதை படம் பிடித்துக் காட்டியிருக்கிறது. கட்டுரையாளர் மாநிலங்களவை தொலைக்காட்சியின் நிர்வாக இயக்குனராகவும் பணியாற்றியவர். அடுத்த பிரதமர் பதவிக்கு ஆர்.எஸ்.எஸ். தயார் செய்யும் ஆதித்யநாத் உபி முதல்வராக படுதோல்வியை சந்தித்திருக்கிறார் என்றும் இஸ்லாமியர்களை எதிரிகளாக்கி இந்துக்களை அணி திரட்டும் இந்துத்துவா வலையில் வீழ்வதற்கு தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட தலைவர்களும் குறிப்பாக இளைஞர்களும் தயாராக இல்லை. அவர்கள் சமூக நீதி கோட்பாட்டை பேசத் தொடங்கி விட்டார்கள் என்றும் அவர் கட்டுரையில் பதிவு செய்திருக்கிறார். உபி மாநிலம் சட்ட மன்றத் தேர்தலை எதிர் கொள்ளும் நிலையில் அமைச்சரவையில் இருந்து பிற்படுத்தப்பட்ட அமைச்சர்கள் சட்ட மன்ற உறுப்பினர்கள் விலகி வருகிறார்கள். மண்டல் சமூக அரசியலிலிருந்து ‘கமண்டல்’ என்ற இந்துத்துவ அரசியலுக்கு உபியை மாற்ற முயன்றது பாஜகவும் ஆர்.எஸ்.எஸ்ஸும்...

சமூக வலைதளங்களில் பரவி வரும் பார்ப்பனிய பயங்கரவாதம்

சமூக வலைதளங்களில் பரவி வரும் பார்ப்பனிய பயங்கரவாதம்

இணையத்தில் இயங்கிவரும் Tride மற்றும் Raytas பற்றித் தெரியுமா? இந்தியாவில் தற்போது வலதுசாரி சிந்தனையுடன் தொடர்புடைய இரண்டு பெரிய குழுக்கள் ஆன்லைனில் இயங்கிவருகின்றன. ஒன்று ‘ட்ரைட்ஸ்’ மற்றொன்று ‘ராய்தா’. ‘ட்ரைட்ஸ்’ என்பது ‘Traditionalist’ (பாரம்பரியவாதி) என்பதன் சுருக்கமான வடிவம். அதாவது அவர்கள் இந்தியாவின் பழைய மரபுகளின்படி வாழ்வதே சரி என்று கருதுபவர்கள். சதி, குழந்தைத் திருமணம், முக்காடு போன்றவற்றை சரி என்று கருதுகிறார்கள். சாதி அமைப்பில் பிராமணர்கள் முதலிடத்தில் இருப்பதே சரி என்பவர்கள் இவர்கள். பெண்கள் வேலை செய்யாமல் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்பார்கள். அவர்கள் நரேந்திர மோதியின் ஆதரவாளராகவோ, பா.ஜ.கவினராகவோ இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. இவர்கள் ஒன்றிரண்டு பேர் அல்ல. 20-23 வயதுக்குட்பட்ட இவர்கள், பெரும் எண்ணிக்கையில் இருக்கிறார்கள். மத்தியில் ஒரு இரக்கமற்ற தலைவர் இருக்க வேண்டும் என்று இவர்கள் கருதுகின்றனர். சாதி அமைப்பை நம்புவதோடு, ஆணவக் கொலைகளையும் போற்றுகிறார்கள். இந்தியாவில முஸ்லிம்களாகவோ, கிறிஸ்தவர்களாகவோ யாரும் இருக்கக்கூடாது என்பார்கள்....

இடஒதுக்கீடு வரலாற்றில் புதிய மைல்கல் தகுதி, திறமை, புரட்டு வாதங்களைத் தகர்த்து எறிந்தது உச்சநீதிமன்றம்

இடஒதுக்கீடு வரலாற்றில் புதிய மைல்கல் தகுதி, திறமை, புரட்டு வாதங்களைத் தகர்த்து எறிந்தது உச்சநீதிமன்றம்

மருத்துவப் படிப்பு – உயர்மட்டப் படிப்புகளில் பிற்படுத்தப்பட்டோருக்கான 27 சதவீத இடஒதுக்கீடு அரசியல் சட்டப்படி செல்லத்தக்கதே என்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பை உச்சநீதிமன்ற நீதிபதிகள் டி.ஒய். சந்திரசூட் மற்றும் ஏ.எஸ். போபண்ணா கடந்த ஜன.20, 2022இல் வழங்கி யுள்ளனர். இது வரை வழங்கப்பட்டுள்ள இடஒதுக்கீட்டுக்கான தீர்ப்புகளைவிட இது முக்கியத்துவம் பெறுவதோடு இடஒதுக்கீடுக்கு எதிராக முன் வைக்கப் பட்டு வந்த வாதங்களை தகர்த்தெறிந் திருக்கிறது. தீர்ப்பின் முக்கிய பகுதி: பொதுத் தேர்வுகள் பங்கேற்கும் விண்ணப்பதாரர்கள் அனைவரும் போட்டி யிடுவதற்கான சம வாய்ப்புகளை உருவாக்கு கிறது என்றாலும் இதில் இடஒதுக்கீடு வழங்கப்படுவதன் வழியாக வாய்ப்புகள் பகிர்ந்தளிக்கப்படுவது உறுதி செய்யப்படு கிறது. எப்படி என்றால், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் இந்த வாய்ப்புகளின் வழியாகவே பயனடைய முடிகிறது. இந்தப் பயன் பிற்படுத்தப்பட்டோருக்குக் கிடைத்து விடாமல் ஏமாற்றப்பட்டு வந்திருக்கின்றனர். அதற்கு அடிப்படையான காரணம், சமூகத் தடைகள்; அதாவது நமது சமூகக் கட்டமைப்பு இந்தப் பயன்களை கிடைக்க விடாமல் தடுத்து...

வாசகர்களுக்கு…

வாசகர்களுக்கு…

வரும் வாரத்திலிருந்து ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ இதழ் சந்தாவைப் புதுப்பித்தவர்களுக்கு மட்டும் அனுப்பப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.                                  – நிர்வாகி, ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ பெரியார் முழக்கம் 20012022 இதழ்

இந்திய பணக்காரர்கள் 10 பேரின் சொத்தை வைத்து 25 ஆண்டுகளுக்கு இலவசக் கல்வி தரலாம்

இந்திய பணக்காரர்கள் 10 பேரின் சொத்தை வைத்து 25 ஆண்டுகளுக்கு இலவசக் கல்வி தரலாம்

இந்தியாவிலுள்ள வெறும் 10 பெரும்பணக்காரர்களின் சொத்து மதிப்பை வைத்து, அடுத்த 25 ஆண்டுகளுக்கு நாட்டில் அனைத்துக் குழந்தைகளுக்கும் பள்ளிக் கல்வி மற்றும் உயர்கல்வியை இலவசமாக வழங்கலாம் என்று ‘ஆக்ஸ்பாம் இந்தியா’ அமைப்பு தெரிவித்துள்ளது. ஸ்காட்லாந்தில் உள்ள டாவோஸ் நகரில் உலகப் பொருளாதார மாநாடு ஞாயிறன்று தொடங்கிய நிலையில் இந்தியாவில் அதி கரித்து வரும் சமத்துவமற்ற சமூகம் குறித்த அறிக்கையை ‘ஆக்ஸ்பாம் இந்தியா’ வெளி யிட்டுள்ளது. அதில் இதேபோல மேலும் பல விவரங்களை ஆக்ஸ்பாம் அளித்துள்ளது. கொரோனா பெருந்தொற்று காலத்தில் இந்தியாவில் பெரும்பணக்காரர்களின் எண்ணிக்கை 39 சதவிகிதம் அதிகரித்து 142 ஆக உயர்ந்துள்ளது. பலரின் சொத்து இரு மடங்காக உயர்ந்துள்ளது.  இந்தியாவில் உள்ள பெரும்பணக்காரர் களில் 10 சதவிகிதம் பேருக்கு வெறும் ஒரு  சதவிதம் கூடுதல் வரி விதித்தால் கூட கொரோனா பெருந்தொற்று காலத்தில் கூடுதலாக  17.7 லட்சம் ஆக்சிஜன் சிலிண்டர்கள் வாங்க முடியும். 98 சதவிகித பெரும்பணக்கார குடும்பங்களுக்கு சொத்துவரி விதித்தால்,...

சூரங்குடியில் கழகக் கலந்துரையாடல் கூட்டம்

சூரங்குடியில் கழகக் கலந்துரையாடல் கூட்டம்

தூத்துக்குடி மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் சந்திப்பு மற்றும் கலந்துரையாடல் கூட்டம் 01.01.2022 சனிக்கிழமை மாலை 06.00 மணியளவில் தூத்துக்குடி மாவட்டம் சூரங்குடியில் நடைபெற்றது. கலந்துரையாடல் கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் கழக இதழான ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ வார இதழுக்கு சந்தா சேர்க்கவும் இம்மாதம் முழுவதும் ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ இதழை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பிரச்சார இயக்கமாக நடத்திட வேண்டும் என்றும் கொரானா தொற்று தற்போது பெருகி வருவதால் தொற்று குறைந்ததும் சூரங்குடியில் கொள்கை விளக்க பிரச்சாரப் பொதுக்கூட்டம் நடத்திடவும், தீர்மானிக்கப்பட்டது. நிகழ்வில் கலந்து கொண்ட கழகப் பொருளாளர் திருப்பூர் சு.துரைசாமி, கழக பரப்புரைச் செயலாளர் பால்.பிரபாகரன், தலைமைக் குழு உறுப்பினர் சூலூர் பன்னீர் செல்வம் ஆகியோர் தோழர்களுக்கு இதழ் சந்தா சேர்ப்பு அவசியம் மற்றும் நடைமுறை சிக்கல்களை எப்படி கையாள்வது பற்றியும் பெரியார் இயக்க கொள்கைகளை விளக்கியும் உரையாற்றினர். நிகழ்வை தூத்துக்குடி மாவட்ட துணைச் செயலாளர் சூரங்குடி...

சுயமரியாதை இணையேற்பு நிகழ்வு

சுயமரியாதை இணையேற்பு நிகழ்வு

கோமதி -ஆனந் பாபு ஆகியோரின் இணையேற்பு விழா 10.01.2022 அன்று  திருப்பூர் மாவட்ட கழகத் தலைவர் முகில் ராசு தலைமையில் நடைபெற்றது. கழக மாநகர தலைவர் தனபால். மாநகர அமைப்பாளர் முத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாரிமுத்து, திலகவதி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.  திவிக சார்பில் கழகத் தோழர்கள்  நிகழ்வில் கலந்துகொண்டனர். இணையர்கள் பெரியார் முழக்க வளர்ச்சி நிதியாக ரூபாய் 3000/- வழங்கினர். மதியம் மாட்டுக்கறி உணவு அனைவருக்கும் வழங்கப்பட்டது. பெண் வீட்டார் சார்பாக அம்மா கர்ப்பகவள்ளி, தாத்தா முருகன், மாமா நல்லமுத்து, தம்பி லிங்கேசுவரன் நண்பர் சங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர். பெரியார் முழக்கம் 20012022 இதழ்

அமெரிக்க ஏட்டில் ‘பார்ப்பனர்’ கூக்குரல்! ஆதாரங்களுடன் மறுக்கிறார், அமைச்சர் பி.டி.ஆர்.

அமெரிக்க ஏட்டில் ‘பார்ப்பனர்’ கூக்குரல்! ஆதாரங்களுடன் மறுக்கிறார், அமைச்சர் பி.டி.ஆர்.

திராவிட இயக்கம் மற்றும் சோஷலிசக் கொள்கை களால் தமிழ்நாட்டிலிருந்து ‘பிராமணர்கள்’ துரத்தப் பட்டார்கள் என்று ‘வால்ஸ்ட்ரீட் ஜெர்னல்’ ஏட்டில் துமா என்ற பார்ப்பனர் எழுதிய கட்டுரையை மறுத்து தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் எழுதிய கட்டுரையின் சுருக்கமான தமிழ் வடிவம். சமூக நீதி இயக்கம், அனைவரையும் உள்ளடக் கியது. அதன் பயன்களை இன்றைக்குத் தமிழ்நாடு அடைந்துள்ளது. மக்களுடைய அனுபவங்களால் மட்டுமல்லாது, அசைக்க முடியாத தரவுகளின் அடிப் படையிலும் இது இன்று நிரூபிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், தமிழ்நாட்டுக்கு வெளியே தமிழ்நாட்டைப் பற்றி வேறொரு சித்திரமும் தீட்டப்படுகிறது. சமூக நீதி இயக்கமான திராவிட இயக்கத்தால் தமிழ்ப் பிராமணர்கள் துரத்தப்பட்டார்கள் என்ற பொய் பிரச்சாரமே அது! அமெரிக்காவின் மூன்று பெரும் பத்திரிகைகளில் ஒன்றான ‘வால் ஸ்ட்ரீட் ஜர்னல்’ அப்படி ஒரு கட்டுரையை வெளியிட்டிருந்தது. ‘கமலா ஹாரிஸ் தனது தாயின் பின்னணியைப் பற்றிச் சொல்லாதது ஏன்?’ என்ற தலைப்பில் துமே என்பவர் எழுதியதே இப்படி ஒரு கட்டுரையை...

உனக்கு ஞாபகமிருக்கட்டும்!

உனக்கு ஞாபகமிருக்கட்டும்!

நான் சொல்கிறேன், இந்த அரசியல் சட்டத்தை நாங்கள் ஏற்க மாட்டோம். இந்த அரசியல் சட்டம் எங்களுக்குத் தீங்கிழைப்பதாகும்; இது எங்கள் பிரதிநிதிகளால் செய்யப்பட்டதல்ல; நெருப்பில் போட்டுப் பொசுக்குவோம் என்று. இந்த அரசியல் சட்டத்தை, யார் சம்மதத்தின் பேரில் யாரைக் கொண்டு செய்தாய்? வெள்ளைக்காரன் காலத்திலே அவன் நலனுக்காக, அவன் வகுத்த தேர்தல் விதிகளின்படி, படித்தவனுக்கும், பணக்காரனுக்கும் ஓட்டு என்கிற அடிப்படையில் நடத்திய தேர்தலில் வந்தவர்களை வைத்துக் கொண்டு, அரசியல் சட்டத்தை நிறைவேற்றி விட்டாய். வெள்ளையன் இந்தப் பிரதிநிதிகளைக் கொண்டு செய்த சட்டத்தை எதிர்த்து, நீயே சட்ட மறுப்புச் செய்திருக்கிறாய் என்பது, வடவனே உனக்கு ஞாபகமிருக்கட்டும் !                                        ‘விடுதலை’ 07.08.1952   பெரியார் முழக்கம் 20012022 இதழ்

‘இரயில் நிலைய மேம்பாட்டுக் கட்டணம்’ என்ற புதிய கொள்ளை!

‘இரயில் நிலைய மேம்பாட்டுக் கட்டணம்’ என்ற புதிய கொள்ளை!

இரயில்வே துறையை தனியார்மய மாக்குவதற்கு முன்னோட்டமாக இரயில் நிலையங்களை தனியார்மய மாக்குவது, ஒன்றிய அரசின் திட்டங்க ளில் ஒன்றாகும். அதாவது, விமான நிலையங் களை 50 ஆண்டுகளுக்கு அதானிக்கு குத்தகை விட்டதுபோல, இந்தியாவின் முக்கியமான இரயில் நிலையங்களை தனியார் முதலாளிகளுக்கு குத்தகைக்கு விடும் வேலையாகும். நாட்டிலேயே முதன்முதலாக போபால் அருகில் உள்ள ஹபீப்கஞ்ச் நகர இரயில் நிலையம் இவ்வாறு தனியாருக்கு கொடுக்கப்பட்டது. இந்த இரயில் நிலையத்தை சர்வதேச தரத்துக்கு மாற்ற பன்சால் குழுமத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து, நாடு முழுவதும் 50 ரயில் நிலையங்கள் அரசு – தனியார் கூட்டுத் திட்டத் தின் (ஞஞஞ) அடிப்படையில் மேம்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இவ்வாறு இரயில் நிலையங்களை குத்தகைக்கு எடுக்கும் தனியார் நிறுவனங்கள், அந்த இரயில் நிலையங்களை உலகத் தரத்திற்கு மேம்படுத்துகிறோம் என்ற பெயரில், இரயில் நிலையங்களிலேயே ஷாப்பிங் மால், உணவகங்கள், பார்க்கிங், சோலார் எனர்ஜி உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்துவார்கள்; இதற்கு செலவிட்ட...

தேர்தல் நிதி திரட்டவே பொதுத்துறைகள் தனியார் மயம்

தேர்தல் நிதி திரட்டவே பொதுத்துறைகள் தனியார் மயம்

ரூ.1 லட்சம் கோடிக்கான சொத்து வெறும் ரூ. 800 கோடிக்கு குத்தகை ஒன்றிய அரசின் தனியார் மயமாக்கல் மூலம் தரமான, திறமையான, செயல்பாடு கொண்ட சண்டிகரின் லாபம் தரும் நிறுவனம், கொல்கத்தாவில் உள்ள தனியார் நிறுவனத்துக்கு, ரூ.800 கோடிக்கு விற்கப்பட உள்ளது. அதுவும் 90 ஆண்டுகளுக்கு! குத்தகைக்குத்தான் தருகிறோம் என்று கூறினாலும், உண்மையில் இது விற்பனை செய்வதற்கு சமமான ஒன்று. இந்த சொத் துக்களின் மதிப்பு குறைந்தபட்சம் ரூ.1 லட்சம் கோடி என்று நிபுணர்கள் கூறுகின்றனர். அவ்வாறு இருக்கையில், இவ்வளவு பெரிய சொத்திற்கு, ரூ.800 கோடி கொடுப்பதில் அந்த தனியார் நிறுவனத்துக்கு என்ன சிரமம் இருக்கப் போகிறது? இந்த 800 கோடி ரூபாய் முதலீடு நான்கு ஆண்டுகளில் அந்த புதிய தனியார் நிறுவனத்திற்கு கிடைத்துவிடும்.  இவ்வளவும் தெரிந்தும் எதற்காக பொதுத் துறை மின் நிறுவனங்களை விற்க வேண்டும்? ஒன்றிய அரசின் பட்ஜெட்டுக்கு நிதி திரட்டு வதற்காகவா? இல்லை. பட்ஜெட்டுக்கு பணம் திரட்டுவது...

தலையங்கம் இந்திய ‘குடியரசில்’ தமிழ்நாடு இல்லையா?

தலையங்கம் இந்திய ‘குடியரசில்’ தமிழ்நாடு இல்லையா?

‘சுதந்திரம் பெற்ற நாளை மட்டுமல்ல, குடியரசு நாளையும் தமிழருக்கு துக்க நாள் தான் என்று பெரியார் அறிவித்தார். இந்திய அரசியலமைப்பு மாநிலங்களின் கூட்டமைப்பே ‘இந்தியா’ என்று கூறினாலும் நடைமுறையில் அப்படி ஏதும் இல்லை. குடியரசு நாள் அணி வகுப்பில் நாட்டின் ஆயுத பலத்தை பிற நாடுகளுக்கு உணர்த்தும் நவீன ஆயுதங்களின் அணி வகுப்பு நடக்கிறது. ஆனால், ‘குடியரசு’ சட்டம் அங்கீகரித்துள்ள இறையாண்மை கொண்ட மாநிலங்கள் அவமதிக்கப் படுகின்றன. ‘இந்தியா’வின் சுதந்திரப்  போராட்டம் – 75’ என்ற தலைப்பில்  சுதந்திர இந்தியாவின் ‘சாதனைகளை’ முன் வைத்து பேரணி நடத்த முடிவு செய்தது ஒன்றிய ஆட்சி. தமிழ்நாடு அரசு குடியரசு நாள் பேரணிக்காக தமிழ்நாட்டில் கிழக்கிந்திய கம்பெனி மற்றும் பிரிட்டிஷ் அரசை எதிர்த்துப் போராடியவர்களை அடையாளப் படுத்தும் ஊர்தியை வடிவமைத்தது. ஒன்றிய பாதுகாப்புத் துறை அமைச்சகத்தைச் சார்ந்த வரலாறு தெரியாத நிபுணர்கள் குழு இதை பரிசீலித்தது.  அப்படித்தான் கூற வேண்டியிருக்கிறது. கடந்த செப்டம்பரில் இருந்து...

ஜாதி ஒழிப்புக்கான ஓர் உரையாடல் விடுதலை இராசேந்திரன்

ஜாதி ஒழிப்புக்கான ஓர் உரையாடல் விடுதலை இராசேந்திரன்

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பில்  வெளிவரும் ‘அணையா வெண்மணி’ காலாண்டிதழில் வெளியிடப்பட்ட கட்டுரை. உற்பத்தி உறவுகளில் மாற்றங்கள்; வாழ்வியல் மாற்றங்கள்; அறிவியல் சாதனைகளைப் பயன்படுத்துவதில் பாய்ச்சல்; வேகமான கல்வி வளர்ச்சி; அதிகார மிக்க பதவிகள்; அரசியல் அதிகாரங்கள் – இவ்வளவையும் கட்டுடைத்து, ஜாதி அடுக்கு இப்போதும் தன்னை தகவமைத்துக் கொண்டே இருக்கிறது. புதிய புதிய உருமாற்றங்களை எடுத்து மனித சமூகத்தைக் ‘கவ்வி’ நிற்கிறது. ஜாதியக் கட்டமைப்புக்கான சமூக வேர்கள் குறித்து தமிழ்நாட்டில் பேசப்பட்ட அளவுக்கு வேறு எங்கும் பேசப்பட்டதே இல்லை. பிரிட்டிஷ் காலனி ஆட்சியிலேயே இது குறித்த விவாதங்களும் போராட்டங்களும் தொடங்கிவிட்டன. ‘சுயராஜ்யம்’ பேசுகிறவர்கள், சுயமரியாதையை மறுக்கும் ஜாதியத்தை பார்ப்பனியத்தை ஏன் எதிர்க்கவில்லை என்ற கேள்விகள் அன்றைக்கே பெரியாரும் – அம்பேத்கரும் கேட்டனர். அயோத்திதாசரும் அவர்களுக்கு முன்பு இதே கேள்வியைத் தான் கேட்டார். வேத காலத்தில் உருவாக்கப்பட்டது. வர்ணாஸ்ரமம், அதுகூட அப்போது பிறப்பின் அடிப்படையில் இல்லை என்று அம்பேத்கர் உள்ளிட்ட...

சமூக நீதித் தத்துவத்தின் முன் இந்துத்துவா அரசியல் தோற்கிறது உ.பி. தேர்தல் களம்: நடப்பது என்ன?

சமூக நீதித் தத்துவத்தின் முன் இந்துத்துவா அரசியல் தோற்கிறது உ.பி. தேர்தல் களம்: நடப்பது என்ன?

உ.பி. தேர்தல் களத்தில் இந்துத்துவா அரசியலை ஆளும் பா.ஜ.க.வும் எதிர்கட்சிகளும் பின்னுக்குத் தள்ளி விட்டு  ‘சமூகநீதி’ அரசியலையே முன்னிறுத்தி வருகின்றன. இந்துத்துவா அரசியலின் ‘சோதனைக் களமாக’ செயல்பட்டது உ.பி.யில் ஆதித்யநாத் தலைமை யிலான பா.ஜ.க. ஆட்சி. ஆனால் படுதோல்வியை சந்தித்து வருகிறது -‘இந்துத்துவா’ அரசியல். இந்துக்களை மதத்தின் அடிப்படையில் ஓரணியில் திரட்ட இஸ்லாமியர்களை எதிரிகளாகக் கட்டமைக்க வேண்டும் என்பதே ஆர்.எஸ்.எஸ். தத்துவம். விரைவில் சட்டமன்றத் தேர்தலை சந்திக்க விருக்கும் மாநிலம் உ.பி. இஸ்லாமிய வெறுப்பை ஊதி விட்டாலும் இந்துக்களை அணி திரட்ட முடியாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறது. ஆதித்ய நாத் ஆட்சி தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு எதிராக செயல்படுகிறது என்று குற்றம் சாட்டி, பா.ஜ.க.வி லிருந்து ஒவ்வொரு பிற்படுத்தப்பட்ட அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினர்களும் விலகி வருவது பா.ஜ.க.வையும் சங்பரிவாரங்களையும் அதிர்ச்சிக் குள்ளக்கியுள்ளது. ஆதித்யநாத் ஒரு பார்ப்பன ரல்லாத உயர்ஜாதியைச் சேர்ந்தவர். அம்மாநில பார்ப்பனர்களும் பா.ஜ.க. ஆட்சிக்கு எதிராகவே அணி திரண்டிருக்கின்றனர். கடந்த ஜனவரி...

திருப்பூரில்  பயிலரங்கம்: பரப்புரைச் செயலாளர் பால் பிரபாகரன் சிறப்புரை

திருப்பூரில் பயிலரங்கம்: பரப்புரைச் செயலாளர் பால் பிரபாகரன் சிறப்புரை

திருப்பூர் மாநகர திராவிடர் விடுதலைக் கழக அமைப்பாளர் முத்து – வசந்தி இணையரின் மகன் வெற்றிமாறனின் இரண்டாமாண்டு பிறந்த நாள் விழா 07.01.2021 வெள்ளிக்கிழமை திருப்பூர் பொங்கு பாளையம் முத்துவின் இல்லமான  பெரியார் இல்லத்தில் நடைபெற்றது. காலை 11.00 மணியளவில் பிறந்த நாள் வாழ்த்து பாடல் ஒலிக்க வெற்றிமாறன் தனது பெற்றோர் உறவினர்களுடன் கேக் வெட்டினார். வெற்றிமாறனுக்கு பெற்றோர் மற்றும் உறவினர்கள் கேக் ஊட்டி தனது வாழ்த்தை மகிழ்வை தெரிவித்தனர். அதனை தொடர்ந்து வெற்றிமாறனின் பிறந்த நாளில் தோழர்கள் மற்றும் உறவினர்களுக்கு கொள்கையை கொண்டு சேர்க்கும் வகையில்  ‘விடுதலை’யின் குறியீடுகள் ‘பெரியார் – அம்பேத்கர்’ எனும் தலைப்பில் பயிலரங்கம் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு மாவட்ட தலைவர் முகில்ராசு தலைமை வகித்தார். வருகை தந்தோரை முத்து வரவேற்று உரையாற்றினார். திருப்பூர் ராமசாமி மற்றும் தலைமைக் குழு உறுப்பினர் சூலூர் பன்னீர்செல்வம் ஆகியோர் வாழ்த்துரைக்கு பின் கழகப் பரப்புரைச் செயலாளர் பால்.பிரபாகரன் பயிலரங்கை நடத்தினார். நிறைவாக...

அர்த்தனாரி வாத்தியார் நூற்றாண்டு விழா மணிமண்டபம் அடிக்கல் நாட்டு விழா

அர்த்தனாரி வாத்தியார் நூற்றாண்டு விழா மணிமண்டபம் அடிக்கல் நாட்டு விழா

மறைந்த சேலம் மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளர் அர்த்தனாரி வாத்தியார் நூற்றாண்டு விழா, மணிமண்டபம் அடிக்கல் நாட்டு விழா மற்றும் 39ஆம் ஆண்டு நினைவுதின பொதுக்கூட்டம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் 05.01.2022 புதன் காலை 10.00 மணியளவில், நங்கவள்ளி ஒன்றியம் பெரியசோரகையில் நடைபெற்றது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி அடிக்கல் நாட்டும் நிகழ்சியில் பங்கேற்று நினைவு தின பொதுக் கூட்டத்தில் உரையாற்றினார். முன்னதாக, புதுகை பூபாலம் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி ராஜா,திருப்பூர் பாராளுமன்ற உறுப்பினர் கே சுப்பாராயன் அவர்கள் மற்றும் தோழமை அமைப்புகளின் தலைவர்கள் பங்கேற்றார்கள். நிகழ்ச்சியை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சேலம் மாவட்டம் ஒருங்கிணைத்திருந்தது. பெரியார் முழக்கம் 13012022 இதழ்

கழகத் தோழர் புதிய இல்லம்: சிற்பி ராஜன் திறந்து வைத்தார்

கழகத் தோழர் புதிய இல்லம்: சிற்பி ராஜன் திறந்து வைத்தார்

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி சாலை அனந்தபுரம் இராமநாதன் -சத்யா ஆகியோர் கட்டிய புதிய இல்லம் திறப்பு விழா 02-01-2022 அன்று காலை 9 மணியளவில் நடைபெற்றது. நிகழ்வுக்கு தி.வி.க தலைமைக் குழு உறுப்பினர் ந.அய்யனார் தலைமை வகித்தார். திராவிடன் அப்துல் மாலிக் வரவேற்புரையாற்றினார், விழுப்புரம் மாவட்ட செயலாளர் பெரியார் சாக்ரட்டீஸ், கழக மாவட்ட தலைவர் பூஆ.இளையரசன், விடுதலைச் சிறுத்தைகள் மாவட்ட செயலாளர் சேரன், விடாது கருப்பு நாத்திகன் ஆகியோர் வாழ்த்துரைக்கு பின் கழகத் தலைமைக்குழு உறுப்பினர் ந.அய்யனார் உரையாற்றினார். தொடர்ந்து, சிற்பி இராசன் இல்லத்தை திறந்து வைத்து சாமியார் களின் மோசடிகளை அம்பலப்படுத்தும் மந்திரமா? தந்திராமா? நடத்தி சிறப்புரை யாற்றினார்கள் இறுதியில் இராமநாதன் நன்றி கூற நிகழ்ச்சி நிறைவுபெற்றது. இல்லத்திறப்பு நிழகழ்சியையொட்டி பெரியார் முழக்கம் வளர்ச்சி நிதியாக ரூ.1000 வழங்கினார்கள். நிகழ்ச்சியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி பரப்புரை செயலாளர் விஜி, எழுச்சி திராவிடர்கள் அமைப்பாளர் விஜயகுமார், அனந்தபுரம் திமுக நகர செயலாளர்...

கழக ஏட்டுக்கு சந்தா சேர்க்க தீவிரம்: தென்காசி-நெல்லை மாவட்ட கலந்துரையாடல்

கழக ஏட்டுக்கு சந்தா சேர்க்க தீவிரம்: தென்காசி-நெல்லை மாவட்ட கலந்துரையாடல்

கீழப்பாவூரில் நடைபெற்ற தென்காசி, நெல்லை (ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டம் ) மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் கலந்துரையாடல் கூட்டம் 02.01.2022 ஞாயிறு காலை 10.30 மணியளவில் தென்காசி மாவட்டம் கீழப்பாவூரில் நடைபெற்றது. இக்கலந்துரையாடல் கூட்டத்தில் கழகப் பொருளாளர் திருப்பூர்  சு.துரைசாமி தலைமை வகித்தார் நெல்லை மாவட்டத் தலைவர் பா.பால்வண்ணன் தென்காசி மாவட்டத் தலைவர் அ.மாசிலாமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமைக் குழு உறுப்பினர் சூலூர் பன்னீர்செல்வம் தோழர்கள் சந்திப்பு மற்றும் கலந்துரையாடல் கூட்டத்தின்நோக்கத்தை விளக்கிப் பேசினார். தோழர்கள் கழக இதழான ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ வார இதழுக்கு சந்தா சேர்ப்பது குறித்தும் மாவட்டம் முழுவதும் இயக்கத்தைக் கொண்டு செல்ல பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர். இம்மாதம் முழுவதும் ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ இதழுக்கு சந்தா சேகரிப்பு பணியாற்றுவது என்றும்  கொரானா தொற்று தற்போது பெருகி வருவதால் தொற்று குறைந்ததும்  கொள்கை விளக்கத் தெருமுனை பிரச்சாரக் கூட்டம் நடத் திடவும், குடும்ப விழா...

கழகத் தலைவர் கொளத்தூர் மணி பேச்சு (2) பெண்கள் இடஒதுக்கீடு; திருமண வயது உயர்வு பிரச்சினைகளில் கழகம் பெரியாரியப் பார்வையில் எடுத்த தனித்துவ நிலைப்பாடுகள்

கழகத் தலைவர் கொளத்தூர் மணி பேச்சு (2) பெண்கள் இடஒதுக்கீடு; திருமண வயது உயர்வு பிரச்சினைகளில் கழகம் பெரியாரியப் பார்வையில் எடுத்த தனித்துவ நிலைப்பாடுகள்

‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ ஏட்டின் தலையங்கத் தொகுப்பு வெளியீட்டு நிகழ்வில் டிசம். 24, 2021 அன்று கழகத் தலைவர் கொளத்தூர் மணி நிகழ்த்திய தலைமை உரையின் கடந்த இதழ் தொடர்ச்சி. அனைத்து மதத்தினருக்குமான பொதுவான பண்டிகையாக இருந்தும்கூட அரசு அலுவலகங் களில் கொண்டாட வேண்டாம்  என்ற  கேரளா  அரசு ஆணையை வரவேற்று எழுதுகிற போது பல செய்திகள் ‘புரட்சிப் பெரியார் முழக்க’த் தலையங்கத்தில் பகிரப்படுகிறது. குஜராத்தில் ஒரு வழக்கிற்காக 2006இல் ஒரு தீர்ப்பு வருகிறது. பொது இடங்களில் இருக்கின்ற கோவில்களை பற்றிய தீர்ப்பு அது. இதுவரை கட்டியிருக்கும் கோவில்கள் இருக்கட்டும் இனிமேல் புதிய கோவில்கள் கட்டக் கூடாது. திரும்பவும் அதற்கு 2013இல் ஒரு தீர்ப்பு, 2018இல் ஒரு தீர்ப்பு என்று தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறது. ஒரு கட்டத்தில் கோபால கவுடா என்று ஒரு உச்சநீதிமன்ற நீதிபதி கொஞ்சம் முற்போக்காக சிந்திக்கின்ற ஒரு நீதிபதியாக இருந்தார். அவரோடு அருண் மிஸ்ரா இருவரும்...

தமிழர் விழா

தமிழர் விழா

தமிழர் விழா (பண்டிகை) என்பதாக நான் எதைச் சொல்ல முடியும்? ஏதாவது ஒன்று வேண்டுமே! அதை நாம் கற்பிப்பது என்பதும், எளிதில் ஆகக் கூடியது அல்லவே என்று கருதிப் பொங்கல் பண்டிகை என்பதைத் தமிழன் விழாவாகக் கொண்டாடலாம் என்று முப்பது ஆண்டுகளுக்கு முன் நான் கூறினேன். மற்றும் யாராவது கூறியும் இருக்கலாம். இந்தப் பண்டிகையும் அறுவடைத் திருவிழா (Harwest Festival) என்ற கருத்தில்தானேயொழிய சங்கராந்திப் பண்டிகை, போகிப் பண்டிகை, இந்திரவிழா என்ற சொல்லப்படும் கருத்தில் அல்ல. இந்தப் பொங்கல் பண்டிகையைத் தமிழர் எல்லோரும் கொண்டாட வேண்டும்”. ‘விடுதலை’ 30.01.1959 பெரியார் முழக்கம் 13012022 இதழ்

அனைத்து மாநிலங்களுக்கும் தமிழக அரசு பெற்றுத் தந்த 27 சதவீத ஒதுக்கீடு

அனைத்து மாநிலங்களுக்கும் தமிழக அரசு பெற்றுத் தந்த 27 சதவீத ஒதுக்கீடு

டி.ஒய். சந்திர சூட், ஏ.எஸ். போபண்ணா ஆகியோரடங்கிய உச்சநீதிமன்ற இருவர் அமர்வு கடந்த 7ஆம் தேதி ஒரு முக்கிய தீர்ப்பை வழங்கியுள்ளது. மருத்துவம், மருத்துவ உயர் பட்டப் படிப்பில், பிற்படுத்தப்பட்டோருக்கான 27 விழுக்காடு இட ஒதுக்கீடு என்பது அரசியல் சட்டப்படி செல்லும் என்பது தான் அந்தத் தீர்ப்பாகும். அகில இந்திய கோட்டாவில் பிற்படுத்தப்பட்டோருக்கான இடங்களை நிரப்ப முடியாது என்று மறுத்து வந்தது மோடி தலைமையிலான ஒன்றிய ஆட்சி. திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பே உச்சநீதிமன்றத்திலே இதற்கு வழக்கு தொடர்ந்தது. உச்சநீதிமன்றம் 27 விழுக்காடு இட ஒதுக்கீட்டை வழங்கலாம் என்ற தீர்ப்பை வழங்கியது. கடந்த ஆண்டு மறுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்டோருக்கான 4000 இடங்கள் அகில இந்திய அளவில் அனைத்து மாநிலங்களுக்கும் கிடைத்துள்ளது. இது திமுக ஆட்சி – அனைத்து மாநிலங்களுக்கும் பெற்றுத் தந்த சமூக நீதியாகும். உயர்ஜாதிகளுக்கான 10ரூ இட ஒதுக்கீடு அவசரஅவசரமாக ஜனவரி 2019,  14ஆம் தேதி கொண்டு வந்து மூன்றே நாட்களில்...

தலையங்கம் சித்தராமய்யாவின் ஜாதி எதிர்ப்புக் குரல்

தலையங்கம் சித்தராமய்யாவின் ஜாதி எதிர்ப்புக் குரல்

‘சுயமரியாதை; ஜாதி ஒழிப்பு’ என்ற சொல்லாடல்கள் பல்வேறு திக்குகளிலிருந்து கேட்கத் தொடங்கி இருக்கின்றன. ‘நாட்டில் ஒவ்வொரு மனிதருக்கும் சுயமரியாதை முக்கியமானது; ஜாதிகள் இருக்கும் வரை நாம் மனிதராக வாழ முடியாது’ என்று கருநாடக முன்னாள் முதல்வர் சித்தராமைய்யா, பெங்களூரில் நூல் வெளியீட்டு நிகழ்வு ஒன்றில் பேசி யிருக்கிறார். ‘சவிதா’ என்ற சமூகத்தின் சார்பில் ‘நான் சுயமரியாதைக்காரன்’ என்ற நூல் வெளியீட்டு விழா வில் சித்தராமய்யா இவ்வாறு பேசியிருக்கிறார். 12ஆம் நூற்றாண்டில் கருநாடகத்தில் ஜாதி எதிர்ப்புக்காகப் போராடிய பசவண்ணாவை அவர் நினைவு கூர்ந்திருக் கிறார். “நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை செய்யும்போது, எந்த ஜாதியைச் சார்ந்தவர் இரத்தம் கொடுத்தார் என்று நாம் கேட்பது இல்லை. உயிர் பிழைத்து விட்டால் மீண்டும் ஜாதியைப் பேசத் தொடங்கி விடுகிறோம். ஜாதிகள் இருக்கும் வரை நாம் மனிதராக வாழ முடியாது. செய்யும் தொழிலையே ஜாதியாக மாற்றி மேல் ஜாதி – கீழ் ஜாதி என்று பிரிவை வைத்துள்ளனர். மூட...

நிதியமைச்சரின் வரவேற்கத்தக்க சட்டம் : இனி அரசு தேர்வாணையம் வழியாகவே அனைத்துப் பணி நியமனங்களும்!

நிதியமைச்சரின் வரவேற்கத்தக்க சட்டம் : இனி அரசு தேர்வாணையம் வழியாகவே அனைத்துப் பணி நியமனங்களும்!

குரூப் 4, வி.ஏ.ஓ போன்ற நான்காம் நிலை ஊழியர்கள் கிராம அதிகாரிகள் தேர்வுக்கு, பங்குபெறும் மாணவர்களுக்கு ஆங்கிலத் தேர்வு மிகப்பெரும் தடையாக இருந்து வருகிறது. ஆங்கிலத் தேர்வில் தேர்ச்சி பெற முடியாமல் கிராமங்களிலிருந்து வரக்கூடிய இளைஞர்கள் பின்னடைவை சந்திக்கின்ற சூழ்நிலையில் தமிழ்நாடு அரசுத் தேர்வாணையம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. வி.ஏ.ஓ குரூப் 4 தேர்வுகளுக்கு ஆங்கிலத் தேர்வு இரத்து செய்யப்பட்டது உண்மையிலேயே சமூக நீதிக்கு வழங்கப்பட்ட ஒரு கொடையாகும். தமிழ்த் தேசிய அமைப்புகள் இந்த அறிவிப்புப் பற்றி எந்தக் கருத்தும் கூறாமல் கள்ள மவுனம் சாதிக்கின்றன. அரசுக்கு சொந்தமான பொதுத் துறை நிறுவனங்கள், அரசுக் கழகங்கள் மற்றும் சட்ட பூர்வமான வாரியங்கள் மாநில அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வரும் வாரியங்களின் பணியிடங்கள் ஆகிய அனைத்திலும் பணி இடங்கள் தமிழ்நாடு தேர்வாணையத்தின் வழியாகவே நிரப்பப்படும் என்ற சட்டத்தை, தமிழ்நாடு நிதியமைச்சர் சட்டமன்றத்தில் கொண்டு வந்து நிறைவேற்றியிருக்கிறார். இதன் மூலம் பல...

திரிபு வாதங்களுக்கு ஆணித்தர மறுப்பு பெரியார் இஸ்லாமியர்களை எதிர்த்தாரா?

திரிபு வாதங்களுக்கு ஆணித்தர மறுப்பு பெரியார் இஸ்லாமியர்களை எதிர்த்தாரா?

கடந்த சில மாதங்களாக பெரியாரை இஸ்லாமியருக்கு எதிரானவராக சித்தரிக்கும் ஒரு பரப்புரையில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப் பாளர் சீமான் இறங்கியிருக்கிறார். தமிழ்நாட்டில் ‘அறிவு ஜீவி’யாக அறியப்படும் ஒருவர், 25 ஆண்டுகளுக்கு முன்பே இப்படி பெரியாருக்கு எதிரான ஒரு இயக்கத்தைத்  தொடங்கும் முயற்சியில் இறங்கி, பிறகு தோல்வி யடைந்து  தனது குரலை மாற்றிக் கொண்டார். வேடிக்கை என்னவென்றால் அண்மையில்தான் சீமான் இஸ்லாமியர்களுக்கு ‘நீலிக் கண்ணீர்’ வடிக்கிறார். பெரியார் பேசிய ‘திராவிடர்’ என்ற கோட்பாட்டுக்கு அடிப்படையே பார்ப்பனரால் வஞ்சிக்கப்பட்ட சூத்திரர், ஆதி சூத்திரர், இஸ்லாமியர், கிறிஸ்தவர்களை ஒரே அணியாக அடையாளப்படுத்தி பார்ப்பனர்களை தனிமைப்படுத்துவதுதான். சீமான் பேசும் ‘தமிழர்’ என்ற அடையாளத்துக்குள் தமிழ்  பேசும் பார்ப்பனர்களும் நாங்களும் தமிழர் என்று ஊடுறுவுகிறார்கள். பார்ப்பன வர்ணாஸ்ரமக் கொடுமையினால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்டெடுக்கும் சுயமரியாதை வர்ணாஸ்ரம எதிர்ப்புப் போரில் ‘பிராமணர்’களும் ஊடுறுவி விட்டால் போராட்டத்தின் நோக்கமே சிதைந்து ஒழிக்கப்படும் என்பதால் பெரியார் திராவிடர் அடையாளத்தைத் தேர்வு செய்தார்....

A Conversation for Caste Abolition – Viduthalai Rajendran

A Conversation for Caste Abolition – Viduthalai Rajendran

Article published in ‘Anaya Venmani’ quarterly magazine on behalf of Tamil Nadu Untouchability Abolition Front. Changes in production relations; Biological changes; Leap in the application of scientific achievements; Rapid educational development; Positions of power; Political Powers – With so much tied up, the caste stratum is still adapting itself. It ‘grabs’ human society by taking on new transformations. The social roots of caste structure have not been talked about anywhere else in Tamil Nadu. Debates and struggles over this began during the British colonial rule. During the past itself, Ambedkar and Ambedkar asked the question of why those who speak...

Heirs of ‘Kotse’; Tamil Nadu Chief Minister warns

Heirs of ‘Kotse’; Tamil Nadu Chief Minister warns

Let’s say that Godse’s heirs have no place in Indian soil – says Tamil Nadu Chief Minister M.K. Stalin’s statement on Death Anniversay of Gandhi is very important in today’s context. The DMK Party Chief has appealed to their Partymen for exposing the BJP’s degenerate politics of sowing sectarianism in Tamil soil matured by social justice. Pragya Singh, a BJP MP from Bhopal, who spoke in Parliament as Godse national devotee and enjoyed being shot with a effigy like Gandhi on his Memorial Day earlier, went viral on social networking sites. Last Jan 30th, an organization called ‘Hindu Mahasabha’ in...

Is Tamil Nadu not in the ‘Republic’ of India?

Is Tamil Nadu not in the ‘Republic’ of India?

Periyar declared that not only the day of independence but also the day of republic is a day of mourning for the Tamils. The Constitution of India states that the Federation of States is ‘India’ but in practice there is no such thing. The Republic Day parade takes place with a modern weapons processions that conveys the country’s armed strength to other countries. But sovereign states recognized by ‘Republic’ law are insulted. The Union Government decided to hold a rally titled ‘India’s Freedom Struggle – 75’ in front of the ‘Achievements’ of Independent India. The Government of Tamil Nadu designed...

Siddaramaiah’s anti-caste voice

Siddaramaiah’s anti-caste voice

The slogans of ‘Self-Respect’, ‘caste annihilation’ is being heard from various quarters. ”Self-Respect is important to every human being in the country; We cannot live as human beings as long as there are castes, ” said former Karnataka Chief Minister Siddaramaiah at a book launch in Bangalore. Siddaramaiah was speaking at the launch of the book ‘I am self-respecting’ by ‘Savita’ community. He remembers Basavana who fought against caste in Karnataka in the 12th century. “When patients are operated on, we do not ask which caste they donated blood to. If we survive we will start talking caste again. We...

Is this an Aryan nation?

Is this an Aryan nation?

‘IIT’ Higher education institutions are openly functioning as organizations that proclaim ‘Aryan Pride’. Is this the purpose of these companies which are swallowing up a large portion of the tax money of the people? The Gorakhpur IIT has embarked on an Aryan policy campaign through their Calender as ‘Aryans to be the indigenous people of this country’, ‘for exposing the secrets embedded in Sanskrit’, and for reviving the fundamental knowledge structure of Indian thought. The calendar may have been produced Gorakhpur IIT Director along with the Principal Adviser to the Union Finance Minister and the President of the Indian Technical...

‘நீட்’ எதிர்ப்பை மக்கள் இயக்கமாக்குவோம்!

‘நீட்’ எதிர்ப்பை மக்கள் இயக்கமாக்குவோம்!

தமிழ்நாட்டில் ‘நீட்’ தேர்வுகள் உருவாக்கும் ‘தாக்கம்’ குறித்து ஆராய தி.மு.க. ஆட்சி, முன்னாள் நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையில் குழுவை அமைத்து ஆராய்ந்து வருகிறது. குழுவின் அறிக்கை இன்னும் தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்படாத நிலையில் குழுவின் நியமனத்தை இரத்து செய்ய வேண்டும் என்று தமிழக பா.ஜ.க.வின் மாநிலப் பொறுப்பிலுள்ள கரு. நாகராஜன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். தேசிய மருத்துவ கவுன்சில் என்ற அமைப்பை தேசிய மருத்துவ ஆணையமாக மாற்றி 2020இல் ஒன்றிய ஆட்சி சட்டமாக்கி மருத்துவக் கல்வி தொடர்பான உரிமைகளை தன் வசமாக்கிக் கொண்டு விட்டது. மாநில அரசு உருவாக்கிய மருத்துவக் கல்லூரிகளையே தகுதி நீக்கம் செய்யும் அதிகாரம் மிக்க ஆணையமாக மாற்றியிருக்கிறது. இப்போது தமிழ்நாடு அரசு நியமித்திருக்கும் ஏ.கே. ராஜன் தலைமையிலான குழுவை நியமிப்பதற்குக்கூட இந்த ஆணையத்தை கலந்து ஆலோசிக்க வேண்டும் என்று இப்போது பா.ஜ.க. பொறுப்பாளர் தாக்கல் செய்த மனு கூறுகிறது. மக்களால்  தேர்ந் தெடுக்கப்பட்ட ஒரு...

மதம் மாறுதல்

மதம் மாறுதல்

மதம் மாறுதல் தோழர் அம்பத்கார் அவர்கள் இந்து மதத்திலிருந்து மாறிவிடுவதாகச் செய்து கொண்ட முடிவையும் நாசிக் மகாநாட்டில் அவரது தலைமையின் கீழ் செய்யப்பட்ட தீர்மானமான ஆதி இந்துக்கள் மதம் மாற வேண்டுமாய்த் தீர்மானித்ததையும், தோழர் ஈ.வெ. ராமசாமி அவர்கள் ஆதரித்ததையும், குடி அரசில் ஆதரித்தெழுதியதையும் பற்றி சிலர் குறைகூறித் திரிவதாய் தெரிகிறதுடன், ஒரு தோழர் அதை விளக்க வேண்டுமென்று கேட்கும் முறையில் கண்டித்து ஒரு கடிதம் எழுதி ஒரு அணா ஸ்டாம்பும் அனுப்பி இருக்கிறார். இதை மதித்து இதற்கு சமாதானம் எழுத வேண்டியது அவ்வளவு அவசியமில்லை என்று தோன்றினாலும், அதன் பேரில் விஷமப் பிரசாரம் செய்ய சில விஷமிகளுக்கு இடம் இல்லாமல் போகட்டும் என்பதாகக் கருதி நமது அபிப்பிராயத்தை எழுதுகிறோம். முதலாவது சுயமரியாதை இயக்கத்தில் எப்படிப்பட்ட தீர்மானங்கள் இருந்தாலும் அவைகள் சிபார்சு செய்யக் கூடியதை தவிர எல்லாத் தீர்மானங்களும் நிர்ப்பந்தமானதும் “”அவைகளை அனுசரிக்காதவர்கள் சுயமரியாதைக்காரர்கள் அல்ல. அதில் மெம்பர்களாகவே இருக்கத் தகுதியுடையவர்கள்...

இடஒதுக்கீடு வரலாற்றில் புதிய மைல்கல் தகுதி, திறமை, புரட்டு வாதங்களைத் தகர்த்து எறிந்தது உச்சநீதிமன்றம்

இடஒதுக்கீடு வரலாற்றில் புதிய மைல்கல் தகுதி, திறமை, புரட்டு வாதங்களைத் தகர்த்து எறிந்தது உச்சநீதிமன்றம்

மருத்துவப் படிப்பு – உயர்மட்டப் படிப்புகளில் பிற்படுத்தப்பட்டோருக்கான 27 சதவீத இடஒதுக்கீடு அரசியல் சட்டப்படி செல்லத்தக்கதே என்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பை உச்சநீதிமன்ற நீதிபதிகள் டி.ஒய். சந்திரசூட் மற்றும் ஏ.எஸ். போபண்ணா கடந்த ஜன.20, 2022இல் வழங்கி யுள்ளனர். இது வரை வழங்கப்பட்டுள்ள இடஒதுக்கீட்டுக்கான தீர்ப்புகளைவிட இது முக்கியத்துவம் பெறுவதோடு இடஒதுக்கீடுக்கு எதிராக முன் வைக்கப் பட்டு வந்த வாதங்களை தகர்த்தெறிந் திருக்கிறது. தீர்ப்பின் முக்கிய பகுதி: பொதுத் தேர்வுகள் பங்கேற்கும் விண்ணப்பதாரர்கள் அனைவரும் போட்டி யிடுவதற்கான சம வாய்ப்புகளை உருவாக்கு கிறது என்றாலும் இதில் இடஒதுக்கீடு வழங்கப்படுவதன் வழியாக வாய்ப்புகள் பகிர்ந்தளிக்கப்படுவது உறுதி செய்யப்படு கிறது. எப்படி என்றால், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் இந்த வாய்ப்புகளின் வழியாகவே பயனடைய முடிகிறது. இந்தப் பயன் பிற்படுத்தப்பட்டோருக்குக் கிடைத்து விடாமல் ஏமாற்றப்பட்டு வந்திருக்கின்றனர். அதற்கு அடிப்படையான காரணம், சமூகத் தடைகள்; அதாவது நமது சமூகக் கட்டமைப்பு இந்தப் பயன்களை கிடைக்க விடாமல் தடுத்து...

கூடங்குளம் அணுஉலைக் கழிவுகளை தமிழ்நாட்டில் புதைக்காதே – எச்சரிக்கை ஆர்ப்பாட்டம் ஜனவரி 31 2022

கூடங்குளம் அணுஉலைக் கழிவுகளை தமிழ்நாட்டில் புதைக்காதே – எச்சரிக்கை ஆர்ப்பாட்டம் ஜனவரி 31 2022

#அணுசக்தி_எதிர்ப்பு_மக்கள்_கூட்டமைப்பு_தமிழ்நாடு_ஆலோசனைக்_கூட்டம்_11_01_2022 இணையவழியில் ஒருங்கிணைப்பாளர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. 2012 முதல் தோழர்கள் கொளத்தூர் மணி, கண.குறிஞ்சி, மீ.த.பாண்டியன், அரங்க. குணசேகரன், திருநாவுக்கரசு, பானுமதி, செந்தில்  ஆகியோர் ஒருங்கிணைக்கும் செயற்குழுவாக இயங்கி வந்தோம். தோழர்கள் சுப.உதயகுமார், தியாகு, கு.இராமகிருஷ்ணன், நெல்லை முபாரக், அப்துல்சமது, திருமுருகன், சுந்தர்ராஜன் ஆகிய தோழர்களையும் இணைத்து விரிவாக்கப்படுகிறது என்பது கூட்டத்தில் முன்வைக்கப்பட்டு ஏற்கப்பட்டது. பங்கேற்றவர்கள்: மதிமுக – மல்லை சத்தியா பச்சைத்தமிழகம் – சுப.உதயகுமார் தபெதிக – கு.இராமகிருஷ்ணன் சிபிஐ (எம்_எல்) – என்.கே.நடராசன், இரமேஷ். தமஜக – கே.எம்.சரீப் எஸ்.டி.பி.ஐ – அப்துல் ஹமீது பியூசிஎல் – கண.குறிஞ்சி ததேமமு – மீ.த.பாண்டியன் மே 17 – திருமுருகன் இளந்தமிழகம் – செந்தில் தமிழர் பாசறை – எழிலரசு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். #கூடங்குளம்_அணுஉலைக்_கழிவுகளை_தமிழ்நாட்டில்_புதைக்காதே! என இந்திய ஒன்றிய அரசை எச்சரித்து 31-01-2022 அன்று தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டத்...

நங்கவள்ளியில் கலை நிகழ்வுகளுடன் பெரியார் நினைவு நாள் பொதுக் கூட்டம்

நங்கவள்ளியில் கலை நிகழ்வுகளுடன் பெரியார் நினைவு நாள் பொதுக் கூட்டம்

நங்கவள்ளி நகரம் சார்பாக, 26.12.2021 ஞாயிறு மாலை 6 மணிக்கு தந்தை பெரியார் 48ஆவது நினைவு நாள் பொதுக்கூட்டம் நங்கவள்ளி பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது. கூட்டம் நங்கவள்ளி ஒன்றிய பொறுப்பாளர் கிருஷ்ணன் தலைமையில் தொடங்கியது. கூட்டத்தின் முதல் நிகழ்வாக மேட்டூர் டி.கே.ஆர் பகுத்தறிவு இசைக்குழுவின் இசை நிகழ்ச்சியும், அதனைத் தொடர்ந்து ஆனந்த் குழுவினருடன் வீதி நாடகமும் நடைபெற்றது. நங்கவள்ளி திராவிடர் விடுதலைக் கழகச் செயலாளர் பிரபாகரன் வரவேற்புரை நிகழ்த்தினார். கூட்டத்தில், சேலம் மாவட்ட அமைப்பாளர் நங்கவல்லி அன்பு, ஒன்றிய பொறுப்பாளர் ராஜேந்திரன், ஊஞஐ நங்கவள்ளி ஒன்றிய செயலாளர் கிருஷ்ணன், மனிதநேய மக்கள் கட்சியின் மேற்கு மாவட்டத் தலைவர் முகம்மது ரயீஸ், பகுஜன் சமாஜ் கட்சியின் மாவட்டத் தலைவர் பார்த்திபன் உரையாற்றினார்கள். இறுதியாக திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிறப்புரை நிகழ்த்தினார். இறுதியாக கண்ணன் நன்றி கூற கூட்டம் நிறைவுற்றது. கூட்டத்திற்கு மேட்டூர், மேட்டூர் சுளு, கொளத்தூர், காவலாண்டியூர்,...

கழகத் தலைவர் கொளத்தூர் மணி பேச்சு வரலாற்றுப் பதிவுகளை நினைவூட்டும் கழக ஏட்டின் தலையங்கங்கள்

கழகத் தலைவர் கொளத்தூர் மணி பேச்சு வரலாற்றுப் பதிவுகளை நினைவூட்டும் கழக ஏட்டின் தலையங்கங்கள்

‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ ஏட்டின் தலையங்கங்கள் வரலாற்று ரீதியான பதிவுகளையும் கழக நிலைப்பாடுகளையும் நினைவூட்டுகின்றன என்று கழகத் தலைவர் கொளத்தூர் மணி கூறினார். டிசம். 24, 2021 அன்று சென்னையில் ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ தலையங்கத் தொகுப்பு வெளியீட்டு நிகழ்வுக்கு தலைமையேற்று, கழகத் தலைவர் கொளத்தூர் மணி உரையாற்றினார். அவர் உரையில் குறிப்பிட்டதாவது: திராவிடர் கழகத்திலிருந்து வெளியேறியவர்கள், வெளியேற்றப்பட்டவர்கள் அனைவரும் இணைந்து, தந்தை பெரியார் திராவிடர் கழகம் கட்டியமைக்கப் பட்டது. அப்போது, ‘பெரியார் காலத்து தமிழ் நாட்டை உருவாக்குவோம்’ என்பதைத் தான் இலட்சியமாக வைத்து தொடங்கினோம். பகுத்தறிவை முதன்மையாகக் கொள்ளாமல், ஜாதி ஒழிப்பை முதன்மையாகக் கொண்டு, கலந்து பேசி இந்த இயக்கத்தைத் தொடங்கினோம். பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் முன்னுரையில் குறிப்பிட்டிருந்தார், பெரியாரின் சுயமரியாதை இயக்க காலத்து சிக்கல்கள் வேறு, தற்போது சமுதாயத்தில் நிலவும் சிக்கல்கள் வேறு’ என்று அதுபோல  பெரியார் காலத்தில் மரண தண்டனை சிக்கல்கள் இல்லை. சுற்றுச் சூழல்...

வளர்ச்சி நோக்கி மனிதப் பற்று

வளர்ச்சி நோக்கி மனிதப் பற்று

எனக்கு வளர்ச்சியே முக்கியம். எனக்கு வேறு எந்த அபிமானமும் கிடையாது. இந்த விசியத்தில் மானாபிமானமும் கிடையாது. மானாபிமானனான குடும்ப வாழ்க்கைக்காரனுக்கு அதாவது தனது சுயநலனுக்குத்தான் அது தேவை. மானம் போனால் எப்படி பிழைக்கிறது என்பவனுக்குத்தான் அது தேவை. எனக்கு, நான் பிழைக்க வேண்டுமே, என் வாழ்வு வளம்பெற வேண்டுமே, மக்களிடையில் எனக்கு மதிப்பு வேண்டுமே, என் அந்தஸ்து, எனது நிலை, எனது போக்கு வளம்பெற வேண்டுமே, என்னைப் பலர் மதிக்க வேண்டுமே, எனக்குப் பலரின் ஆதரவு வேண்டுமே என்பன போன்ற – என், எனக்கு என்கின்ற கவலையுள்ளவனுக்குத்தான் மானாபிமானம், அது போலவே தேசாபிமானம், மொழி அபிமானம், இலக்கிய அபிமானம், சமய அபிமானம், முதலிய அபிமானங்கள் வேண்டும். எனக்கு வெறும் மனிதாபிமானந்தான் ; அதிலும் வளர்ச்சி அபிமானந்தான் முக்கியம். ‘விடுதலை’ 15.10.1962 பெரியார் முழக்கம் 06012022 இதழ்

பெரியார் சாக்ரடீஸ் தந்தை நினைவு நாளில் கழக ஏட்டுக்கு நன்கொடை

பெரியார் சாக்ரடீஸ் தந்தை நினைவு நாளில் கழக ஏட்டுக்கு நன்கொடை

விழுப்புரம் மாவட்ட செயலாளர் பெரியார் சாக்ரடீஸ் தந்தை  கோவிந்தசாமி முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு 30.12.2021 அன்று, செஞ்சி அத்தியந்தல் சாக்ரடீஸ் இல்லத்தில் மாலை 5 மணியளவில் நடைபெற்றது. பெரியார் சாக்ரடீஸ் தனது தந்தையின் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டு நிகழ்விற்கு வரவேற்புரை யாற்றினார். நிகழ்விற்கு கழகத்தின் தலைமைக் குழு உறுப்பினர் ந. அய்யனார் தலைமை வகித்தார். அம்பேத்கர் மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் சு. மழைமேணி பாண்டியன் படத்தை திறந்து வைத்தார். நிகழ்வில், திமுக ஒன்றிய செயலாளர் கலா நாராயணமூர்த்தி, பகுத்தறிவு பாடகர் காத்தவராயன், பெரியார் சிந்தனையாளர் நா. இராசநாயகம், திராவிடர் விடுதலைக் கழக விழுப்புரம் மாவட்டத் தலைவர் பூ.அ இளையரசன், மருத்துவர் தன்மானம் ஆகியோரின் நினைவேந்தல் உரையைத் தொடர்ந்து, கழகத்தின் தலைமைக் குழு உறுப்பினர் விழுப்புரம் ந.அய்யனார் நிறைவுரையாற்றினார். கழகத் தோழர் பரிமளா நன்றி கூறினார். நினைவேந்தலில், பெரியார் முழக்க வளர்ச்சி நிதியாக, பெரியார் சாக்ரடீஸ் ரூ. 1000/-, அம்பேத்கர்...