Category: குடி அரசு 1935

மதம் மாறுதல்

மதம் மாறுதல்

மதம் மாறுதல் தோழர் அம்பத்கார் அவர்கள் இந்து மதத்திலிருந்து மாறிவிடுவதாகச் செய்து கொண்ட முடிவையும் நாசிக் மகாநாட்டில் அவரது தலைமையின் கீழ் செய்யப்பட்ட தீர்மானமான ஆதி இந்துக்கள் மதம் மாற வேண்டுமாய்த் தீர்மானித்ததையும், தோழர் ஈ.வெ. ராமசாமி அவர்கள் ஆதரித்ததையும், குடி அரசில் ஆதரித்தெழுதியதையும் பற்றி சிலர் குறைகூறித் திரிவதாய் தெரிகிறதுடன், ஒரு தோழர் அதை விளக்க வேண்டுமென்று கேட்கும் முறையில் கண்டித்து ஒரு கடிதம் எழுதி ஒரு அணா ஸ்டாம்பும் அனுப்பி இருக்கிறார். இதை மதித்து இதற்கு சமாதானம் எழுத வேண்டியது அவ்வளவு அவசியமில்லை என்று தோன்றினாலும், அதன் பேரில் விஷமப் பிரசாரம் செய்ய சில விஷமிகளுக்கு இடம் இல்லாமல் போகட்டும் என்பதாகக் கருதி நமது அபிப்பிராயத்தை எழுதுகிறோம். முதலாவது சுயமரியாதை இயக்கத்தில் எப்படிப்பட்ட தீர்மானங்கள் இருந்தாலும் அவைகள் சிபார்சு செய்யக் கூடியதை தவிர எல்லாத் தீர்மானங்களும் நிர்ப்பந்தமானதும் “”அவைகளை அனுசரிக்காதவர்கள் சுயமரியாதைக்காரர்கள் அல்ல. அதில் மெம்பர்களாகவே இருக்கத் தகுதியுடையவர்கள்...

அருஞ்சொல்  பொருள்

அருஞ்சொல்  பொருள்

  அந்தணாளன்                            பார்ப்பான் அசார்சமாய்                                அசட்டையாய் அரசிறை                        அரசாங்க  வரி அயனம்                          வரலாறு ஆகுதி                               பலி  (வேள்வித் தீயில்  இடுதல்) அந்தர்த்தானம்                         மறைவு,  மறைகை உச்சாஹம்                  உற்சாகம் ஏதேஸ்டமாக                           விருப்பமாக ஏகாலி                              வண்ணான் கடாக்ஷம்                      கடைக்கண்  பார்வை கண்டனை                    கண்டனம் காலாடிகள்                  தொழிலற்றுத்  திரிவோர்கள் கியாதி                              புகழ் கிஸ்து                              நிலவரி குதவைப்பத்திரம்                  அடமானப்  பத்திரம் குமரி  இருட்டு                          விடியற்கு  முன்  உள்ள  இருள் கொடிவழிப்பட்டி                    வம்ச  பரம்பரை  விவரம் சதிபதி                              கணவன் மனைவியர் சமேதரன்                      கூடியிருப்பவன் சரமக்கிரியை                            இறப்புச்  சடங்கு சலூன்  வண்டி                          உயர்நிலையில்  உள்ளவர்கள்  பயணம்  செய்வதற்கான  தனி  பெட்டி  (தொடர் வண்டியில்) சிங்காதனம்                                அரியணை சிஷ்ட  பரிபாலனம்                              நல்லவற்றைக்  காப்பாற்றுதல் சீஷர்கள்                         மாணவர்கள் சுமரும்படி                    சுமக்கும்படி சுவானம்                        நாய் தவக்கம்                         தாமதம் தனதானியாதி                          பணம்  தானியம்  போன்றவை துஷ்ட  நிக்கிரகம்                   தீயவற்றை  அழித்தல் தொண்ணை                               பாதுகாப்புக்கென  வைத்திருக்கும்  கனமான  தடி;  பெரிய  தடி நட்டத்தில்                    கோவணம் மட்டும் கட்டிக்கொண்டு...

காங்கிரஸ்  பிளவு

காங்கிரஸ்  பிளவு

  மூன்று  இடங்களில்  அலங்கோலம் வீரவாகு  பிள்ளையும்  பிரிந்தாராம் எங்கும்  காங்கிரசுக்கே  வெற்றியென்று  கூறப்பட்டாலும்  காங்கிரஸ்  வெற்றியின்  யோக்கியதை  இப்பொழுதுதான்  வெளிவரத்  தொடங்குகிறது.  திருநெல்வேலியில்  தோழர்கள்  கன்னியப்ப  நாடார்,  ஷண்முக  திரவிய  நாடார்,  என். சங்கரலிங்க  ரெட்டியார்,  என். சின்னக்கண்ணுப்  பிள்ளை  முதலியோர்  காங்கிரசிலிருந்து  விலகி  விட்டதைப்பற்றி  ஏற்கனவே  தெரிவிக்கப்பட்டிருக்கிறது.  வேறொரு  காங்கிரஸ்  மெம்பரான  தோழர் ஸ்ரீநிவாச  ரெட்டியார்  ராஜிநாமாச்  செய்யாமலே  ஜஸ்டிஸ்  கட்சியில்  சேர்ந்து  விட்டதாகத்  தெரிகிறது. ஜில்லா காங்கிரஸ் கமிட்டித் தலைவர் தூத்துக்குடித் தோழர் எம்.ஸி.வீரவாகு  பிள்ளையும்  தமது  பதவியை  ராஜிநாமாச்  செய்து விட்டாராம். மதுரை  நகரசபை  காங்கிரஸ்  கட்சிக்  காரியதரிசி  தோழர்  எஸ். ஜெகன்னாத  ஐயங்காரும்  தமது  பதவியை  உதறித்  தள்ளிவிட்டாராம். ஒழுங்கும்,  கட்டுப்பாடும்,  தேசபக்தியும்  தாண்டவமாடும்  காங்கிரஸ்  ஸ்தாபனங்களின்  அலங்கோலத்தைப்  பாருங்கள்!  ஜில்லாபோர்டு  நகரசபைகள்  வேலை  ஆரம்பமாகும்  முன்னமேயே.  இந்தக்  குழப்பத்தினால்  காங்கிரஸ்காரரின்  ஸ்தல  ஸ்தாபன  நிருவாகம்  எவ்வளவு  அழகாக  இருக்குமென்று  கூறவும்  வேண்டுமா? குடி...

விஜயராகவ  ஆச்சாரியார்க்கு

விஜயராகவ  ஆச்சாரியார்க்கு

பீஷ்மப்  பட்டம் தோழர் விஜயராகவ ஆச்சாரி அய்யங்காருக்கு பீஷ்ம பட்டம்  அளிப்பதற்கு  அய்யங்கார்கள்  ஒரு  பெரும்  கூட்டம்  கூட்டி  ஆடம்பரம்  செய்து  பீஷ்ம  பட்டாபிஷேகம்  செய்து  விட்டார்கள். இக்கூட்டத்திற்கு  வரவேற்புத்  தலைவர்  சி.ஆர். சீனிவாச  அய்யங்கார்.  அதற்கு  தலைமை  வகித்தவர்  எஸ். சீனிவாச  அய்யங்கார்.  கூட்டத்தில்  பிரசங்கம்  செய்தவர்  சி. ராஜகோபாலாச்சாரி  அய்யங்கார்.  வந்தனோபசாரம்  சொன்னவர்  வி.வி. சீனிவாச  அய்யங்கார்.  ஆகவே  ஆரம்பம்  முதல்  கடசிவரை  5  அய்யங்கார்கள்  முக்கியஸ்தராய்  கூடி  ஒரு  அய்யங்காருக்கு  பீஷ்மப்  பட்டம்  அளித்தார்கள்  என்றாலும்,  யாருக்கு  என்பதை  உணர்ந்தால்  அவர்களது  தேசாபிமான  சூட்சி  விளங்காமல்  போகாது. விஜயராகவாச்சாரியார்  ஒரு  வக்கீல்.  வேண்டுமானால்  கெட்டிக்கார  வக்கீல் என்று சொல்லலாம். 70  வயதுக்கு மேல்  கூட  வக்கீல்  வேலை  பார்க்கிறவர்.  வக்கீல்கள்  தங்கள்  தொழில்  விருத்திக்கு  தேசாபிமானத்  பேச்சு  பேசுவதும்,  தேசாபிமானச்  சடங்குகளில்  கலந்து கொள்வதும்  போல  கலந்து  கொண்டு  தேசாபிமானி  ஆனவரே  தவிர  தோழர்  ராஜகோபாலாச்சாரியார்  போல் ...

பொப்பிலி  ராஜா  அறிக்கை

பொப்பிலி  ராஜா  அறிக்கை

  1930ல்  உருப்பெற்ற, தற்காலச்  சென்னைச்  சட்டசபை,  சட்டப்படி  1932ல்  கலைக்கப்பட்டு  1933ல்  புதுச்  சட்டசபை  ஏற்பட்டிருக்க  வேண்டும்.  எனினும்  மூன்று  முறை  சட்டசபையின்  ஆயுள்  கவர்னரின்  விசேஷ  அதிகாரத்தினால்  நீட்டப்பட்டதனால்  1930ல்  தோன்றிய  சட்டசபை  இப்பொழுதும்  இயங்கிக்  கொண்டே  இருக்கிறது.  இது  சென்னை  மாகாணத்தில்  மட்டும்  காணப்படும்  புதுமையுமன்று.  இந்தியாவிலுள்ள  மாகாண  சட்டசபைகள்  எல்லாம்  ஆயுள்  நீடிக்கப்பட்டே  இருக்கின்றன.  இதற்கு  மாகாண  மந்திரிகளோ  அவர்களை  ஆதரிக்கும் கட்சியாரோ  மாகாண  கவர்னர்களோ,  வைஸ்ராயோ  ஜவாப்தாரிகளல்ல.  புதுச்  சீர்திருத்தம்  அமலுக்கு  வரும்வரை  “”மன்னர்  பெருமான்”  சர்க்கார்  எப்படியாவது  இயங்கிக்  கொண்டு  இருந்து ஆக  வேண்டும்.  பொதுத்  தேர்தல்  நடத்த  அரசியல்  சம்பந்தமான  தடைகள்  ஏற்பட்டால்,  சட்டசபைகளின்  ஆயுளை  நீட்ட  சீர்திருத்த  சட்டம்,  மாகாண  கவர்னர்களுக்கு  அதிகாரமளிக்கிறது.  அந்த  அதிகாரத்தை  உபயோகித்தே  மாகாண  சட்டசபைகளின்  ஆயுளை  அதிகாரிகள்  நீட்டியிருக்கிறார்கள். ஆயுள்  நீட்டக்  காரணம் மந்திரிகள்  மீதுள்ள  கருணையினாலோ,  மாகாணங்களில்  மந்திரிமாரை  ஆதரிக்கும்  கட்சியார்  மீதுள்ள ...

காங்கிரஸின் பிரசார வெற்றி

காங்கிரஸின் பிரசார வெற்றி

  “தினசரி’ அவசியம் இன்றைய அரசியல் கொள்கைகளின் மேன்மையும், கீழ்மையும், கட்சிகளின் பெருமையும் சிறுமையும் அவற்றின் வெற்றியும் தோல்வியும் எல்லாம் பிரசாரத்தின் பலத்தைப் பொறுத்திருக்கிறதே அல்லாமல் அதனதன் உண்மைத் தன்மையைப் பொறுத்ததாக இல்லை. இதைப் பற்றி இதற்கு முன் பல தடவை எடுத்துக் காட்டி வந்திருக்கிறோம். இன்று நம் தென்னாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் எனப்பட்ட காங்கிரஸ் கட்சியும், ஜஸ்டிஸ் கட்சியும் பெயரளவில்தான் அரசியல் கொள்கைகளை குறிக்கோளாகக் கொண்டிருக்கின்றன என்று சொல்லக் கூடியனவாயிருக்கின்றனவே தவிர காரியத்தில் அவை பெரிதும் சமூக முன்னேற்றமான கொள்கைகளையே குறிக்கோளாகக் கொண்டு இருந்து வருகின்றன. இதற்கு  ஆதாரம் வேண்டுமென்போர் அதிக தூரம் கஷ்டப்பட்டுத் தேடிப் பார்க்க வேண்டியதில்லை. சுலபத்திலேயே உணர்ந்து கொள்ளலாம். எப்படியெனில் இரண்டு கட்சிக்கும், அதாவது காங்கிரஸ்  ஜஸ்டிஸ் என்கின்ற இரண்டு கட்சிக்கும் அரசியல் கொள்கைகளில் உள்ள வித்தியாசம் என்ன என்பதைக் கவனித்தாலே தெரிய வரும். இன்று காங்கிரஸ்காரர்கள் கேட்கும் “”சுயராஜ்ய”த்திற்கும் ஜஸ்டிஸ்காரர் கேட்கும் “”சுயராஜ்ய”த்திற்கும்...

கொள்ளைக்காரப் பார்ப்பனர்  ஏழை ஏழையென்று ஏமாற்றும் வித்தை  நம்மவர்கள் கண்மூடி தர்மம்   உண்மை  விளம்பி

கொள்ளைக்காரப் பார்ப்பனர் ஏழை ஏழையென்று ஏமாற்றும் வித்தை நம்மவர்கள் கண்மூடி தர்மம்  உண்மை  விளம்பி

  ஒருவன் செய்த தப்பிதத்திற்குத் தக்கபடி தண்டனை கொடுப்பது உலக தர்மம். ஆனால் தப்பிதம் செய்தவன் பிறந்த ஜாதிக்குத் தக்கபடி தண்டனை விதிப்பது இந்து தர்மம். மரியாதையும், தனிப்பட்ட நபரின் யோக்கியதையைப் பொறுத்து வருவதில்லை. அவனுடைய ஜாதியைப் பொறுத்தே நமது நாட்டில் மனிதர்களின் உயர்வும், மரியாதையும் கவனிக்கப்படுகின்றன. ஒரு குலத்துக்கொரு நீதி வழங்கிய மனுநீதி இன்று இல்லை. இங்கிலீஷ்கார ராஜ்யத்தில் கிரிமினல் குற்றங்களைப் பொறுத்த வரையில் சட்டம் எல்லா ஜாதிகளையும் சமமாகப் பாவித்து அமுல் செய்கிறது. ஆயினும் சமூக வாழ்வில் ஜாதி பற்றிய சலுகைகளும், கொடுமை களும் கொஞ்சமும் குறைந்தபாடில்லை. சட்ட மூலம் அரசாங்கத்தினிடம் பெற முடியாமற் போன விசேஷ உரிமைகளை, பொது ஜனங்களின் அனுதாப மூலமாகப் பெற்று அனுபவித்து வருகின்றனர் பார்ப்பனர். பாமர ஜனங்களை ஏமாற்றுவதற்கு அவர்கள் கையாளும் முறைகள் பல. அவற்றுள் ஒன்று “”பிராமணனும், பசுவும் ஒன்று. அவர்களால் நன்மையேயன்றித் தீமையில்லை.  பிராமணன் ஏழை! அவனை ஆதரிப்பது மற்றவர்...

காங்கிரசுக்கு  எதிர்ப்பு  அகில  இந்திய  முயற்சி  பிரபலஸ்தர்கள்  ஆதரவு

காங்கிரசுக்கு  எதிர்ப்பு அகில  இந்திய  முயற்சி பிரபலஸ்தர்கள்  ஆதரவு

  வரப்போகும் சீர்திருத்தத்தைக் கவிழ்ப்போம்; பிரதிநிதி சபை  அமைப்போம்; எதிர்கால அரசியலை வகுப்போம் என்று  அசம்பிளித்  தேர்தலுக்கு  முன்  கூச்சல்  போட்டு  பொதுஜனங்களை  ஏமாற்றி  ஓட்டுப்பறித்த  காங்கிரஸ்  வாலாக்கள்  மந்திரி  பதவிகளைக்  கைப்பற்ற  முயர்ச்சி  செய்து  வருகிறார்கள்.  இதிலும்  காங்கிரஸ்காரர்களுக்குள்  ஒற்றுமையான அபிப்பிராயம்  இல்லை.  சில  மாகாணங்கள்  ஆதரிக்கின்றன.  காங்கிரஸ்  நிர்வாகிகளோ  திட்டமாக  எதுவும்  கூறவில்லை.  பதவி  ஏற்கும்  பிரச்சினையை  லக்ஷ்மணபுரி  காங்கிரசில்  முடிவுசெய்து  கொள்ளலாமென்று  ஒத்திப்போட்டிருக்கிறார்கள்.  காங்கிரஸ்  முடிவை  எதிர்பாராமலே  தேச  நலத்துக்கான  முயற்சிகள்  செய்ய  பொறுப்புடைய  தேசத்  தலைவர்களுக்கு  உரிமையுண்டு. “”காங்கிரஸே  இந்தியா,  இந்தியாவே  காங்கிரஸ்”  என்று  காங்கிரஸ்  வாலாக்கள்  கூறிக்கொண்டாலும்  பொதுஜனங்கள்  அதை  ஆதரிக்கவில்லை.  வரப்போகும்  சீர்திருத்தம்  எவ்வளவு  குறைபாடுகள்  உடையதாயிருந்தாலும்  அதை  ஒப்புக்கொண்டு அதனால்  கிடைக்கக்கூடிய  சாத்தியமான  நன்மைகள்  எல்லாம்  தேச  மக்களுக்குக்  கிடைக்கும்படி  கடனாற்றுவதே  விவேகிகள்  கடமை.  அகில  இந்திய  மதிப்புப்  பெற்ற  பொறுப்புடைய  தலைவர்கள்  எல்லாம்  இவ்வாறே  அபிப்பிராயப்பட்டிருக்கிறார்கள்.  வரப்போகும்  சீர்திருத்தத்தை  ஏற்று ...

தேவகோட்டை  வக்கீல்  சங்கம்  பார்ப்பனீயத்  தாண்டவம்  ஒரு  விளக்கம்  தேவகோட்டை  121235

தேவகோட்டை  வக்கீல்  சங்கம் பார்ப்பனீயத்  தாண்டவம் ஒரு  விளக்கம் தேவகோட்டை  121235

  தோழர் எஸ். லக்ஷ்மீரதன்  பாரதி  அவர்கள்  எழுதுவதாவது: சென்ற  வாரத்தில்  “”குடி அரசு”  பத்திரிகையில்  “”தேவகோட்டையில்  பார்ப்பனீயத்  தாண்டவம்”  என்ற  தலைப்பின்  கீழ்  பிரசுரிக்கப்பட்ட  விவரங்களைப்  படித்தேன். அதில் கண்ட விவரங்கள்  சில சரியானதா யில்லாத  படியால்  பின்வரும்  குறிப்பை  அனுப்புகிறேன்.  அதைப்  பிரசுரிக்குமாறு  கேட்டுக்கொள்கிறேன். பிராமண  வக்கீல்  அங்கத்தினர்  பலர்  பிராமண  அங்கத்தினர் களுக்கு  மட்டும்  தனியாக  இரண்டு  தண்ணீர்ப்  பானைகள்  வக்கீல்  சங்கத்தில்  வைக்கவேண்டுமென்று  சங்கத்திற்கு  எழுதினார்கள்.  அதன்  பேரில்  சங்கத்தின்  நிர்வாகக்  கமிட்டியானது,  இதைப்  பொதுக்  கூட்டத்திலோ  நிர்வாகக்  கமிட்டிக் கூட்டத்திலோ  ஆலோசனை  செய்யாமல்  சுற்றறிக்கை  மூலமாகப்  பின்  வரும்  தீர்மானத்தை  நிறை வேற்றியது.  “”சிற்றுண்டி  சாப்பிடும்  இடமும்  அதில்  வைத்திருக்கும்  தண்ணீர்  பானைகளும்  பிராமண  அங்கத்தினர்களுக்குமட்டும்  தனியான  உபயோகத்திற்கு  அமைத்திருக்கிறது.” இத்தீர்மானத்தை  சங்கத்தின்  விளம்பரப்  பலகையிலும்  பிரசுரித்தார்கள். அத்தீர்மானத்தின் கீழ் காரியதரிசி, இதர அங்கத்தினருடைய  உபயோகத்திற்காக  டிபன்  ஷெட்டிற்கு  வெளியே தண்ணீர்ப்பானை  வைத்திருப்பதாக  எழுதியிருந்தார். ...

சபாஷ் பம்பாய்!

சபாஷ் பம்பாய்!

  பம்பாய் மாகாணம், காங்கிரஸ் உணர்ச்சி மிக்க பிரதேசம். பம்பாய் நகரமும் அப்படியே. உப்புப் போர் பம்பாய் மாகாணத்திலேயே ஆரம்பமாயிற்று. உலகப் பிரசித்திபெற்ற காந்தியாரின் தண்டியாத்திரை தமாஷ் மூலம், பகுத்தறிவற்ற பாமர ஜனங்களுக்கும், கிராம வாசிகளுக்கும் காங்கிரஸ் மீது ஒரு குருட்டு பக்தி ஏற்பட்டது. பாமர மக்களின் குருட்டு பக்தியை காங்கிரஸ் சார்பாக திருப்ப வேண்டுமென்ற அந்தரங்க நோக்கத்துடனேயே காந்தியார் சபர்மதியிலிருந்து தமது சத்தியாக்கிரக கோஷ்டியுடன் தண்டிக்குக் கால்நடையாகப் பிரயாணமானார். பத்திரிகை நிருபர்களும் அவரைப் பின் தொடர்ந்தார்கள். காந்தி கோஷ்டியாருக்கு வழிநெடுகக் கிடைத்த ராஜோபசாரங்களை ஒன்றுக்குப் பத்தாக வர்ணித்து அவர்கள் பத்தி பத்தியாய் பத்திரிகைகளில் எழுதினார்கள். ஒரு குக்கிராமத்திலே ஒரு நாவித மாது காந்தியாருக்கு öக்ஷளரம் செய்த அதிசயத்தைக்கூட பத்திரிகை நிருபர்கள் விட்டுவிடவில்லை.  öக்ஷளரக் கூலி கொடுக்க வேண்டிய காந்தியார் அந்த சாதுப் பெண்ணின் காதணியைக் காணிக்கையாகப் பெற்றதையுங்கூட பத்திரிகை நிருபர்கள் மறவாமல் பத்திரிகைகளுக்கு எழுதியனுப்பினார்கள். இத்தகைய விளம்பரங்களினால் பம்பாய் மாகாணத்துக்கு...

கல்கத்தா கலாட்டா

கல்கத்தா கலாட்டா

  சென்குப்தா கட்சியாருக்கும், சுபாஷ் போஸ் கட்சியாருக்கும் ஏற்பட்டிருந்த பிணக்கு மூலம் கல்கத்தா நகரசபை வெகுகாலம் சீரழிந்து கிடந்ததை அன்பர்கள் மறந்திருக்க மாட்டார்கள். கடைசியாக மாஜி மந்திரி தோழர் ஏ.கே. பஸ்லுல் ஹக் நகரசபை மேயர் ஆனது முதல் நகரசபைக் காரியங்கள் ஒருவாறு நடந்து கொண்டிருந்தன. நகரசபை கூடும்போ தெல்லாம் பெரும்பாலும் வாய்ச்சண்டை நடப்பது சகஜமாயிருந்து வந்தும் தமது சாதுரிய புத்தியினால் மேயர் ஒருவாறு சமாளித்துக் கொண்டிருந்தார். இப்பொழுதோ இந்திய ஸ்தல ஸ்தாபனங்களுக்கே மானக்கேட்டை யுண்டுபண்ணக்கூடிய  நிலைமை கல்கத்தா நகர சபையில் ஏற்பட்டிருக்கிறது. கார்ப்பொரேஷன் உத்தியோகங்களில் 100க்கு 25 விகிதம் முஸ்லீம்களை நியமிக்க வேண்டுமென்ற தீர்மானத்தைப் பற்றி ஆலோசிப்பதற்காக ஒரு விசேஷக் கூட்டம் கூட்ட வேண்டுமென்று 16 முஸ்லீம் அங்கத்தினர்கள் செய்துகொண்ட விண்ணப்பத்தின்படி சென்ற 13ந் தேதி ஒரு விசேஷக் கூட்டம் கூட்டப்பட்டது. அக்கூட்டத்தில் கல்கத்தாவில் வசிக்கும் முஸ்லீம் களுக்கும், இதர சமூகத்தினருக்கும் கார்ப்பொரேஷன் உத்தியோகங்களில் பிரதிநிதித்துவம் அளிப்பது பற்றிக் கார்பொரேஷன்...

“”ஜஸ்டிஸ்” கொள்கை வெற்றி

“”ஜஸ்டிஸ்” கொள்கை வெற்றி

  தேர்தல்களில் ஏற்படும் வெற்றி தோல்விகளினால் ஒரு தனி மனிதனுடையவோ கட்சியினுடையவோ யோக்கியதையை நிர்ணயம் செய்து விடுவது முழு முட்டாள்தனம் என்று நாம் பலமுறை வற்புறுத்தி யிருப்பதைத் தோழர்கள் மறந்திருக்க மாட்டார்கள். குதிரைப் பந்தயம், லாட்டரி, சீட்டாட்டம் மாதிரி தேர்தலும் ஒரு வகைச் சூதாட்டமே. யோக்கியதையுடையவர்கள் தோல்வியடைவதும், அநாமதேயப் பேர்வழிகள் வெற்றியடைவதும் சர்வ சாதாரணமாக இருந்து வருகிறது. தேச மக்களில் 100க்கு 94 பேர் எழுத்து வாஸனையில்லாத பாமர மக்களாய் இருக்கும் வரை தேர்தலில் மோசடிகளும், சூழ்ச்சிகளும், அயோக்கியத்தனங்களும் தாராளமாக நடைபெற்றுக் கொண்டே இருக்கும். தேர்தல்களுக்கு முன் வந்திருப்பவர்களின் யோக்கியதை, அவர்களோ, அவர்களது கட்சியோ இதுகாறும் நாட்டுக்குச் செய்துள்ள நன்மைகள், தேச மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி வைப்பதற்குள்ள ஆற்றல் தேர்தலுக்கு முன் வந்திருப்பவருக்கோ, அவரது கட்சிக்கோ உண்டா என்ற சிந்தனை அபேட்சகர்களின் அல்லது அவர்களது கட்சியின் பூர்வச் சரித்திரம் ஆகிய காரியங்களைப் பற்றிச் சிந்தனை செய்யாமல் காந்திக்காகவும், கதருக்காகவும் ஓட்டுக் கொடுக்கும்...

எச்சரிக்கை

எச்சரிக்கை

  சுயமரியாதை இயக்கத்தின் பேரைச் சொல்லிக் கொண்டு குப்புசாமி என்ற வாலிபர் ஒருவர் விழுப்புரம் நாகப்பட்டினம் முதலிய ஊர்களில் பண விஷயத்தில் மோசம் செய்துவிட்டுப் போய்விட்டதாக நமக்கு தகவல் வந்திருக்கிறது. அதுபோல் இன்னும் சிலர் இவ்வாறு செய்து வருவதாகவும் தகவல் வந்திருக்கிறது. ஆகையால் இம்மாதிரி இயக்கப் பெயர் கூறுபவர்களுக்கு சௌகரியம் செய்வதில் நமக்கு ஆட்சேபணை இல்லை. பண விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்கும்படி நமது இயக்கத் தோழர்களைக் கேட்டுக் கொள்கிறோம். (ப.ர்.) குடி அரசு  பத்திராதிபர் குறிப்பு  22.12.1935

ஒரு  விசேஷம்   வம்பளப்போன்

ஒரு  விசேஷம்  வம்பளப்போன்

  சென்னையில்  நடந்த  தலைவர் தெரிந்தெடுப்பு விருந்துக்கு  தோழர்  சத்தியமூர்த்தியை  அழைக்கவே  இல்லையாம்.  லக்ஷ்மிபதி  அம்மாளை  கூப்பிடவே  இல்லையாம்.  காங்கிரசின்  நன்றி  விசுவாசத்திற்கு  வேறு  என்ன  ருஜுவு  வேண்டும். சத்தியமூர்த்தியார்  லக்ஷிமிபதி  அம்மாளை  காரைக்குடி  மகாநாட்டுக்குத்  தலைவராகத்  தேர்ந்தெடுக்க  வேண்டுமென்று  ஜில்லா  சபைகளுக்கு  ரகசியக்  கடிதம்  எழுதினதினால் இருவரையும்  குற்றவாளியாக்கி  தலைமைப்  பதவியில்  இருந்து  தள்ளப்போகிறார்கள்  போலும்! குடி அரசு  செய்தி விமர்சனம்  15.12.1935

ஜாதிப்புத்தி  போகாதையா  ராஜகோபால  மாலே

ஜாதிப்புத்தி  போகாதையா ராஜகோபால  மாலே

  காரைக்குடியில்  நடக்கும்  காங்கிரஸ்  மாகாண  மகாநாட்டுக்கு  தலைவராக  தமிழ்  நாட்டில்  உள்ள  பார்ப்பனரல்லாதார்  உணர்ச்சியை  உத்தேசித்து  பல  ஜில்லா  காங்கிரஸ்  கமிட்டிகளும்  தோழர்  அவனாசிலிங்கம்  செட்டியாரையே  சிபார்சு  செய்ய  முடிவு  செய்து  கொண்டிருப்பதை  உணர்ந்த  தமிழ்நாடு  காங்கிரஸ்  கமிட்டி  தலைவர்  தோழர் சத்தியமூர்த்தி  சாஸ்திரியார்  தங்கள்  ஜாதியைச்  சேர்ந்த  தோழர் ருக்மணி  அம்மாளை  தலைவராகத்  தேர்ந்தெடுக்க  வேண்டும்  என்று  ஜில்லாக்  கமிட்டிக்கு  ரகசியமாகக்  கடிதம்  எழுதியிருக்கிறார்.  இதை அறிந்த  ஊழியன்  என்னும்  பார்ப்பனரல்லாத  பத்திரிக்கை  மூர்த்தியாரின்  நடத்தையைக்  கண்டித்து  எழுதி  இருக்கிறது.  இதற்குப்  பதில்  எழுதும்  முறையில்  ஜெயபாரதி  என்னும்  ஒரு பார்ப்பன  பத்திரிக்கை  டிசம்பர்  9ந்  தேதி  பத்திரிக்கையில்  சத்தியமூர்த்தியாரை  ஆதரித்து, “”தியாகமே  உருவாய்  விளங்கும்  ஸ்ரீமதி  ருக்குமணி  லட்சுமிபதியை  சிபார்சு  செய்து  கடிதம்  எழுதுவதில்  என்ன  தப்பு”  என்று  கேட்கின்றது. தோழர்  ருக்குமணியம்மாள்  தியாகமே  உருக்கொண்டவர்  என்றால்,  தோழர்  அவனாசிலிங்கம்  செட்டியார்  என்ன  உருக்கொண்டவர்  என்று அப்பத்திரிக்கை ...

தோழர்களே! உஷார்!

தோழர்களே! உஷார்!

  பாமர ஜனங்களை மயக்குவதில் மதத்தின் பெயரால், கடவுள் பெயரால், சுவர்க்கத்தின் பெயரால் பட்டப்பகலில் கொள்ளையடிப்பதில்  புதுப்புது மோசடி முறைகளை சிருஷ்டிப்பதில் பார்ப்பனர்களுக்கு இணையானவர்கள் இல்லவே இல்லை. அனாதிகாலமாக ஏமாற்று வித்தையினாலேயே அவர்கள் வயிறு வளர்த்து வருகிறார்கள். வேதங்கள், வேதாகமங்கள், கலைகள் முதலிய யாவும் பார்ப்பனப் புரட்டுப் பிழைப்புக்கு அழியா ஞாபகச் சின்னங்களாகும். மேனாட்டுக் கல்வி மூலம் மக்களின் பொது ஞானம் விருத்தியாகி, சீர்திருத்தக்காரர் முயற்சியினால் பகுத்தறிவு உணர்ச்சி வளர்ந்து அனாசாரங்களும் குருட்டு நம்பிக்கைகளும் ஒழியத் தொடங்கிவிட்டன. புராணக் குப்பைகளையும் தர்ப்பைப் புல்லையும் காட்டி மக்களை ஏமாற்ற முடியாதென்ற நிலைமையும் ஏற்பட்டுவிட்டது. பன்னூற்றாண்டு காலமாய் குறுக்கு வளைந்து வேலை செய்யாமல் மோசடி வித்தையினால் வயிறு வளர்த்து வந்த பார்ப்பனர்களுக்கு பிழைப்புக்கு வேறு வழி வேண்டாமா? ஆகவே காங்கிரசைப் பற்றுக் கோடாகப் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். காங்கிரஸே பார்ப்பனர்களின் உடலும் பொருளும் ஆவியும்; காங்கிரஸே பார்ப்பனர்; பார்ப்பனரே காங்கிரஸ். காங்கிரஸ் இன்றேல் பார்ப்பனர் இல்லை....

வேண்டுகோள்

வேண்டுகோள்

  காங்கிரசுக்கு பல பத்திரிகைகள் இருக்கின்றன. அவைகள் பெரிதும் பார்ப்பனர்களாலும் அவர்களது நிபந்தனை அற்ற அடிமைகளாலும் நடத்தப்படுகின்றன. பார்ப்பனர்கள் பணமும் காங்கிரஸ் பணமும் அவைகளுக்கு தாராளமாய் உதவப்பட்டு வருகிறது. ஆதலால் பார்ப்பனரின் வஞ்சம், சூழ்ச்சி, பொய் விஷமம் ஆகியவைகளை மனதார மறைத்து அவர்கள் திருப்திக்கும், கூலிக்கும் பார்ப்பனரல்லாதார் கட்சியையும், சமூகத்தையும், அவர்களுக்காக வேலை செய்யும் பத்திரிக்கைகளையும் வைதும், பழி கூறியும் விஷமப் பிரசாரம் செய்து வருகின்றன. ஜஸ்டிஸ் கட்சித் திட்டத்தைப் பற்றிப் பழி கூறுவதும், அவர்களால் ஏற்பட்ட நன்மைகளை திரித்துக்கூறுவதும், அவர்களுக்கு சம்மந்தமில்லாத காரியத்தைப் பற்றி பழி கூறுவதுமே தொழிலாய்க் கொண்டிருக்கின்றன. பாமர மக்கள் இதையெல்லாம் சுலபமாக நம்பி ஏமாந்து போகிறார்கள். ஜஸ்டிஸ் கட்சிக்கும், பார்ப்பனரல்லாதார் சமூக நலனுக்கும் இன்று தினசரிப் பத்திரிகை இல்லை. வாரப் பத்திரிக்கைகளும் வெகு சிலவே. ஆதலால் ஆங்காங்குள்ள பார்ப்பனரல்லாதார் “”குடி அரசு” “”விடுதலை” “”நகர தூதன்” முதலிய பத்திரிக்கைகளை ஜில்லாக்கள் தோறும் தாராளமாய்ப் பரவும்படி செய்ய...

காங்கிரஸ்  பொது  ஸ்தாபனமா?

காங்கிரஸ்  பொது  ஸ்தாபனமா?

  தங்களுடைய  சொந்த  யோக்கியதையினால்  பாமர  மக்களிடம்  செல்வாக்குப்  பெற  யோக்கியதை  இல்லாதவர்களும்,  மக்கள்  நம்பிக்கைக்கு  பாத்திரமாவதற்கு  தங்கள்  சொந்தப்  பொறுப்பில்  எவ்விதத்  தகுதியும்  இல்லாதவர்களும்  பாமர  மக்களை  ஏமாற்றுவதற்கு  ஆக  காங்கிரஸ்  என்றும்,  காந்தியென்றும்  சொல்லுவதோடு  அவர்களுக்குப்  புரியாத  விஷயங் களையும்,  கொள்கைகளையும்  சொல்லி  மோசம்  செய்கிறார்கள்.  காங்கிரசின்  யோக்கியதை  என்ன  காந்தியாரின்  நிலைமைதான்  என்ன  என்பவைகளை  பாமர  மக்களுக்கு  எடுத்துச்சொல்ல  ஆசைப்படுகிறோம். காங்கிரசு  என்பது  இந்திய  35  கோடி  மக்களுக்கும்,  இந்து  முஸ்லீம்  கிறிஸ்தவ  புத்த  முதலிய  எல்லா  மதக்காரர்களுக்கும்,  பார்ப்பனர்  முதல்  பறையன்  என்பவர்  வரை  சகல  ஜாதியாருக்கும்  பொதுவானதென்றும்,  பிரதிநிதித்துவம்  பொருந்தியதென்றும்  சொல்லுகிறார்கள். எடுத்ததற்கெல்லாம்  காங்கிரஸ்தான்  பெரிய  ஸ்தாபனம்  என்றும்,  காங்கிரஸ்தான் அகில இந்திய ஸ்தாபனம் என்றும், அதற்குத்தான்  பிரதிநிதித்துவத்  தன்மை  உண்டென்றும்,  மற்றவர்கள்  எல்லாம்  பொறுப்பற்றவர்கள்  என்றும்  சொல்லுகிறார்கள்.  அப்படியானால்  இந்திய  நாட்டில்  உள்ள  பல்வேறு  மதக்காரர்களிலும்  பல்வேறு  ஜாதி  வகுப்புக் காரர்களிலும்  காங்கிரசை ...

சத்தியமூர்த்திக்கு  சனியன் பிடித்தது  சேச்சே இல்லை

சத்தியமூர்த்திக்கு சனியன் பிடித்தது சேச்சே இல்லை

  சித்திரபுத்திரன் தோழர் சத்தியமூர்த்தியார் காங்கிரஸ் தலைவரானது முதல் தமிழ்நாட்டில் காங்கிரசின் யோக்கியதை மணல் வீடு சரிவதுபோல் சரிந்து வருவது ஒருபுறமிருக்க, சில புது மதமாற்றக்காரர்கள் அதாவது புதிதாய் காங்கிரசில் இருந்து வருபவர்கள் சத்தியமூர்த்தியாரைத் தலைவராய்க் கொள்ளவும், அவரைத் தலைவர் என்று வாயில் சொல்லவும் இஷ்டப் படாமல் தயங்குவதாலும், அய்யர், அய்யங்கார் ஜாதி உணர்ச்சியால், பல அய்யங்கார்கள் சத்தியமூர்த்தி அய்யர் தலைமை ஸ்தானத்தைப் பற்றி பொறாமைப்பட்டு முணுமுணுப்பதாலும், காங்கிரசில் ஏற்கனவே இருந்து வரும் தோழர்கள் சாமி வெங்கிடாசலம் செட்டியார், முத்துரங்க முதலியார், திரு.வி. கல்யாணசுந்திர முதலியார் போன்றவர்கள் சத்தியமூர்த்தியாரின் பெயரைச் சொல்லிக் கொண்டு வெளியில் தலைநீட்ட வெட்கப்படுவதாலும், தோழர் சத்தியமூர்த்தி அவர்களும் சிறிதும் அடக்கம் ஒடுக்கம் இல்லாமல் காங்கிரசின் உத்தியோக ஆசையையும், பதவி ஆசையையும் வெட்ட வெளிச்சமாய் வெளியில் காட்டி காங்கிரசின் கொள்கையை சந்தி சிரிக்க வைத்து விட்டதாலும், தான் மந்திரி பதவி வகிக்க வேண்டும் என்பதாலும் தானேதான் முதல் மந்திரி...

பொன் விழாப் புரட்டு

பொன் விழாப் புரட்டு

  காங்கிரஸ் லக்ஷ்யம் என்ன? கலப்பற்ற பூரண சுயராஜ்யம். அது வந்துவிட்டதா? இல்லை. நிழல்கூடக் காணப்படவில்லை. சுயராஜ்ய நிதிதான் கரைந்தது. ஆயின், பொன்விழாக் கொண்டாடுவதின் மர்மம் என்ன? தேச மக்களை மயக்கவே. காங்கிரஸ் மதிப்புக் குறைகிறது. பார்ப்பனச் சூழ்ச்சி வெட்டவெளிச்சமாகிறது. பார்ப்பன ஆதிக்கத்தை வளர்க்க வேண்டாமா? ஆகவே பொன்விழாக் கொண்டாடப் பார்ப்பனர் சூழ்ச்சி செய்கிறார்கள். தென்னாட்டுப் பெருங்குடி மக்களே! ஏமாந்து போக வேண்டாம். உஷார்! உஷார்!! உஷார்!!! குடி அரசு  பெட்டிச் செய்தி  15.12.1935

தென்னாற்காடு  ஜில்லா 

தென்னாற்காடு  ஜில்லா 

  படையாட்சிகள் சமீபத்தில்  நடக்கப்போகும்  தென்னாற்காடு  ஜில்லா  போர்டு  தேர்தல்களில்  காங்கிரஸ்  கட்சியைச்  சேர்ந்த  பெரியார்கள்,  மற்ற இடங்களில்  உண்மையை  மறைத்தும்,  உள்ளதைக்  குறைத்தும்  கூறிப்  பொய்ப்பிரசாரம்  செய்த  மாதிரி,  தங்களுடைய  ஒழுங்கீனமான  சுயநலப்  பிரசாரம்  செய்ய  முற்பட்டிருக்கிறார்கள்  என்று  தெரிகிறது.  அவர்கள்  செய்த  சூழ்ச்சிகளைக்  குறித்து  நமது  நிருபர்  எழுதிய  விவரங்களை  வேறொரு  பக்கத்தில்  பிரசுரித்திருக்கிறோம்.  அவற்றால்,  சுயநலக்  கூட்டத்தார்  ஜஸ்டிஸ்  கட்சியினரைத்  தோற்கடிக்க  எவ்வளவு  தூரம்  முயற்சி  செய்கிறார்களென்பது  விளங்கும்.  தம்முடைய  பிரசாரத்திற்காக,  எவ்வளவு  கேவலமான  முறைகளையும்  அனுசரிப்பார்களென்பது,  அவர்களுடைய  முழுப்  பொய்ப்பிரசாரத்தினால்  புலப்படுகின்றது.  சில  வாரங்களுக்கு  முன்,  படையாட்சி  வகுப்பினரைச்  சேர்ந்தவர்கள்  அனைவரையும்  குற்ற  பரம்பரைச்  சட்டத்தின்  கீழ்  கொண்டு  வரப்பட்ட  அரசாங்க  உத்தரவு  ரத்து  செய்யப்பட்டது.  க்ஷத்திரிய  வகுப்பைச்  சேர்ந்த  பழங்குடி  மக்களான  படையாட்சிகள்  ஏன்  குற்றஞ்  செய்யும்  வகுப்பினரோடு  சேர்க்கப்பட்டார்கள்?  அதற்குக்  காரணமென்ன?  காரணம்  சில பார்ப்பன  போலீஸ்  உத்தியோகஸ்தர்கள்.  அவர்களுடைய  “ரிப்போர்ட்டு’களில்  அவ்வகுப்பினரை ...

சத்தியமூர்த்தியும் கோவைப் பிரசங்கமும்

சத்தியமூர்த்தியும் கோவைப் பிரசங்கமும்

  இன்று தமிழ்நாட்டில் அரசியல் துறையில் தோழர் சத்தியமூர்த்தி சாஸ்திரிகளுடைய பெயர் அமிர்தாஞ்ஜனம் டப்பி போல் விளம்பரம் செய்யப்படுகின்றது. விளம்பரத்தின் பயனாய் அவரது பெயரும் ஒரு அளவுக்கு தினமும் தவறாமல் பத்திரிகைகளில் அடிபடுகிறது. அதோடு மாத்திரமல்லாமல் அவரும் தமிழ்நாட்டில் பல இடங்களில் அடிக்கடி உண்மையிலேயே அடிபடுகிறார். அவ்வளவோடு நிற்பதில்லை. “”ஊரார் வீட்டு நெய்யே  என் பெண்டாட்டி கையே” என்று ஆனந்தமடைந்த ஒரு நெய் வெறியர் போல் “”ஊரார் வீட்டுப் பணமே எனது சுற்றுப் பிரயாணமே” என்கின்ற மாதிரி இப்போது தினம் ஒரு ஊராகவும், ஏன்? தினம் 2, 3 ஊர்களாகவும், தான் மாத்திரமல்லாமல் தமது தர்ம பத்தினி சமேதராய் சஞ்சாரம் செய்த வண்ணமாய் இருக்கிறார். காங்கிரஸ் பணம் இருக்கிறது, எலும்பில்லாத கை இருக்கிறது, சரியாய் எழுதிக்கொள்ள வேண்டிய அவசியமில்லாத கணக்கு இருக்கிறது, யாராவது எந்த ஆடிட்டராவது கணக்கு தப்புக் கணக்காகவோ ஒழுங்கீனமான கணக்காகவோ இருக்கிறது என்று ஆதாரத்தோடு எடுத்துக் காட்டினால் அதை...

தேவகோட்டையில்  பார்ப்பனீய தாண்டவம்

தேவகோட்டையில் பார்ப்பனீய தாண்டவம்

  தேவகோட்டை நியாயஸ்தலத்தில் வக்கீல் சங்கத்தில் தாகத்துக்குத் தண்ணீர் சாப்பிடுவதற்காக வைத்திருக்கும் பாத்திரத்தையும், சிற்றுண்டி சாப்பிடுவதற்காக ஒதுக்கி வைத்திருக்கும் இடத்தையும் பார்ப்பனரல்லாத வக்கீல்கள் பயன்படுத்திக் கொள்ளக் கூடாது என்று வக்கீல் சங்கத்தில் பார்ப்பனர்கள் தங்கள் மெஜாரிட்டியைக் கொண்டு தீர்மானித்துக் கொண்டார்கள். பார்ப்பனரல்லாத வக்கீல்கள் மைனாரிட்டியார் மூன்றே பேர் ஆனதால் அதை ஆட்சேபித்து பலன்படாமல் தங்களுக்குள்ளாக செய்து கொண்ட ஒரு கண்டனத் தீர்மானத்தை நிர்வாக கமிட்டிக்கு அனுப்பி இருக்கிறார்களாம். இதை பார்ப்பன வக்கீல்கள் குப்பைத் தொட்டியில் போட்டுவிடுவார்கள் என்பதில் நமக்கு சந்தேகமில்லை. தேவகோட்டையிலுள்ள பார்ப்பனரல்லாத வக்கீல்களில் ஒருவர் தோழர் எஸ்.லட்சுமிரதன் பாரதியார், எம்.ஏ., பி.எல்., நமது நண்பர் ஆவார். இவர் காங்கிரஸ் தீண்டாமை விலக்கு கமிட்டி பிரசிடெண்டும் சுயமரியாதை இயக்கத்துக்கும் உற்ற நண்பரும் ஆவார். தேவகோட்டை வக்கீல் பார்ப்பனர்கள் பெரிதும் காங்கிரசுக்காரர்கள். இந்த நிலையில் இவருடைய கதியே இப்படி இருக்குமானால் காங்கிரசின் தீண்டாமை விலக்கு விஷயத்தின் யோக்கியதையைப் பற்றி நாம் எடுத்துக்காட்ட வேண்டியதில்லை....

வகுப்புப் போர்

வகுப்புப் போர்

  சுயமரியாதை இயக்கமும் ஜஸ்டிஸ் கட்சியும் வகுப்புப்போரை கிளப்புவதாக அரசியல் பிழைப்புக்காரர்கள் கூப்பாடு போடுகிறார்கள். அதனாலேயே ஜஸ்டிஸ் கட்சியை ஒழிக்க வேண்டும் என்கிறார்கள். “”அரசியல் காரணங்களுக்கு ஆக இன்று கவர்மெண்டாருடன் காங்கிரஸ்காரர்கள் போர் புரியப் போகிறார்கள். ஆதலால் ஜஸ்டிஸ்காரர்கள் தயவுசெய்து இதில் குறுக்கிடக் கூடாது” என்று காங்கிரஸ்காரர்கள் சொல்லி அசம்பிளி தேர்தலில் ஓட்டு கேட்டார்கள். தோழர் ராஜகோபாலாச்சாரியார் அவர்களும் ஒவ்வொரு தனி நபரிடத்திலும் இதைச் சொல்லியே கெஞ்சி ஓட்டுப் பெற்றார். ஆனால் வெற்றி பெற்ற உடன் ஜஸ்டிஸ் கட்சியை வெட்டிப் புதைப்பதே இவ்வெற்றியின் பயனாய் செய்ய வேண்டிய வேலை என்றும், இவ்வெற்றியினாலேயே ஜஸ்டிஸ் கட்சி மாண்டுவிட்டது என்பது ருஜுவாகிறது. ஆதலால் ஜஸ்டிஸ் மந்திரிகளைத் தள்ளிவிட்டு எங்களுக்கு அந்த மந்திரி ஸ்தானங்கள் அளிக்க வேண்டும் என்றும், அதே ராஜகோபாலாச்சாரியார் கவர்னரிடம் போய் மண்டி போட்டு கெஞ்சினார். எச்சிலைப் பத்திரிக்கைகளும் அதுபோலவே எழுதின. ஆகவே அசெம்பிளி தேர்தலில் காங்கிரஸ்காரர்கள் பிரவேசித்தது சர்க்காரோடு போர் புரிவதற்கு...

யார் திட்டத்தை யார் திருடியது?

யார் திட்டத்தை யார் திருடியது?

  ஜஸ்டிஸ் கட்சியார் தோழர் ஈ.வெ.ராமசாமியின் திட்டங்களைத் தங்களது வேலைத் திட்டங்களுடன் சேர்த்துக் கொண்ட நிமிடம் முதல் சென்னைப் பார்ப்பனர்கள் ஆண்பெண் அடங்கலுக்கும் பேதியும், வயிற்றுக் கடுப்பும் எடுத்து ஜன்னி கண்டவர்கள் போல் வாய்க்கு வந்தபடி உளரிக் கொட்டிய வண்ணமாய் இருந்து வருகிறார்கள். உதாரணமாய் அத் திட்டங்கள் கொஞ்ச நாளைக்கு முன் விருதுநகர் மகாநாட்டில் ஒப்புக் கொள்ளப்பட்ட வுடனேயே தோழர் ராஜகோபாலாச்சாரியார் அவர்கள் அதைப் பற்றி ஒரு ஸ்ரீமுகம் விடுத்தார். அதில் அவர் அத் தீர்மானங்களைப் பற்றி, “”ஜஸ்டிஸ் கட்சியாரால் ஜீரணிக்க முடியாத மருந்தை சாப்பிட்டு விட்டார்கள்” என்றும் “”அது அபேதவாத திட்டம்” என்றும், “”பொதுவுடமைத் திட்டம்” என்றும், “”ராமசாமியை சுவாதீனப்படுத்திக் கொள்வதற்கு ஆக விலை கொடுக்க ஏற்றுக் கொள்ளப்பட்டது” என்றும், “”அது ராஜபக்தி பொதுவுடமைத் தீர்மானம்” என்றும் இப்படியாகப் பலவிதமாய் ஒன்றுக்கொன்று முரணாய் உளரிக் கொட்டினார். காங்கிரஸ் பத்திரிகைகள் என்பவைகளும், மற்ற காங்கிரஸ்காரர்களும் ஈ.வெ.ரா. தீர்மானங்கள் கராச்சி தீர்மானங்களில் இருந்து...

குச்சிக்காரி புத்தி-II

குச்சிக்காரி புத்தி-II

  சென்ற வார குடி அரசில் திலகர் நிதியை காங்கிரஸ் கையாண்ட யோக்கியதையைப் பற்றி நாம் எழுதி இருந்தோம். அதற்கு காங்கிரஸ் பத்திரிகைகள் எதுவும் திருப்திகரமான சமாதானம் எழுதவில்லை. வாலை ஒடுக்கிக் கொண்டன. ஆனால், தோழர் ராஜகோபாலாச்சாரியார் பூசி மெழுகும் சமாதானம் எழுதியிருந்தார். அது சரியான சமாதானமா என்று பார்த்தால் எந்தத் தவறுதலை ஆதாரமாக வைத்து மராட்டா பத்திரிகை காங்கிரஸ்காரர்கள் திலகர் நிதியைக் கையாண்டதைப் பற்றி எழுதிற்றோ அத்தவறுதல்களைப் பெரிதும் ஒப்புக் கொள்ளப்பட்டு, பிறகு பூசி மெழுகப்பட்டிருக்கிறது. தோழர் ராஜகோபாலாச்சாரியார் சொல்லும் சமாதானங்கள் சில அய்ட்டங்களுக்கு கணக்கிலேயே இருந்திருக்க வேண்டியவைகளே ஒழிய, இப்பொழுது சமாதானம் சொல்லி மெய்ப்பிப்பதற்குத் தகுதியானவை அல்ல. அப்படிச் சொல்வதாய் இருந்தாலும் அது சந்தேகத்திற்கு இடமில்லாதது என்று சொல்லிவிட முடியவில்லை. ஏனெனில் பணப் புழக்கத்தில் குற்றமோ குறையோ, ஒழுங்கு தவறுதல்களையோ கண்டு பிடித்தவர்களை திருப்பிக் கண்டிக்கும் யோக்கியதையில் இருப்பவர்கள் தாங்கள் சிறிதும் சந்தேகத்துக்கு இடமில்லாத நிலையில் இருக்க வேண்டும்....

குச்சிக்காரி புத்தி   “”நீ மாத்திரம் வாழ்ரயோ?”  -I

குச்சிக்காரி புத்தி  “”நீ மாத்திரம் வாழ்ரயோ?” -I

  காங்கிரசின் அயோக்கியத்தனமும், அதில் வயிறு வளர்த்த பார்ப்பனர்களின் இழி தன்மையும், அவர்களுடைய கூலிகளின் கூட்டிக் கொடுக்கும் தனமும் இன்று அசல் குச்சிக்காரியின் தன்மைக்கே வந்துவிட்டது. காங்கிரஸ்காரர்கள் பொது மக்களை ஏமாற்றி வசூலித்த கோடிக் கணக்கான ரூபாய்களின் மோசத்தைக் குறித்து வெகுநாளாகவே பொது ஜனங்கள் பேசி வருகிறார்கள். காந்தியார் முதல் ஒவ்வொருவரையும் அனேகர் நேரில் கண்டு கேட்டும் வந்திருக்கிறார்கள். இதற்கெல்லாம் காங்கிரஸ்காரர் அவ்வப்போது மழுப்பிக் கொண்டே வந்திருக்கிறார்களே ஒழிய கேட்கப்பட்ட  கேள்விகளுக்கு நாளதுவரை சரியான சமாதானம் சொல்லப்படவில்லை. ஒரு கோடி ரூபாய் பித்தலாட்டம் அதாவது ஒரு கோடி ரூபாய் இன்ன காலத்துக்குள் சேர்ந்துவிட்டால் ஒரு வருஷத்தில் சுயராஜ்ஜியம் வாங்கிக் கொடுக்கிறேன் என்று காந்தியார் முதல் காங்கிரஸ்காரர்கள் எல்லோரும் பொது ஜனங்களை ஏமாற்றி ஒரு கோடி ரூபாய்க்கு அதிகமாகவே வசூலித்தார்கள். ஒரு வருஷத்தில் சுயராஜ்ஜியம் வந்ததா? இதோ சுயராஜ்யம் வந்துவிட்டது. அதோ சுயராஜ்யம் வந்து விட்டது என்று சொன்னதோடு சுயராஜ்யத்தின் நிழல் தெரிகின்றது...

   விதண்டாவாதம்

  விதண்டாவாதம்

  குறும்புச் சந்தேகி மதத்துக்கு அரசாங்கம் பாதுகாப்பாயிருக்கிறதா? அல்லது அரசாங்கத்துக்கு மதம் பாதுகாப்பாயிருக்கிறதா? *  *  * கடவுளுக்கு பணக்காரன் பாதுகாப்பா?  அல்லது பணக்காரனுக்கு கடவுள் பாதுகாப்பாயிருக்கிறதா? *  *  * மதத்தைப் பணக்காரன் காக்கின்றானா அல்லது பணக்காரனை மதம் காக்கின்றதா? *  *  * கடவுள் இல்லாமல் பணக்காரன் வாழமுடியுமா? அல்லது பணக்காரன் இல்லாமல் கடவுள் வாழ முடியுமா? *  *  * பார்ப்பானை கடவுள் உண்டாக்கினாரா?  அல்லது கடவுளை பார்ப்பான் உண்டாக்கினானா? *  *  * கடவுள் இல்லாமல் மனிதன் வாழ முடியாதா?  அல்லது மனிதன் இல்லாமல் கடவுள் வாழமுடியாதா? *  *  * மனிதனுக்காக மதம் இருக்கிறதா? அல்லது மதத்துக்காக மனிதன் இருக்கிறானா? *  *  * மதம் மக்களை மாற்றிக்கொள்ளுகிறதா?  அல்லது மக்கள் மதத்தை மாற்றிக்கொள்ளுகிறார்களா? *  *  * மனிதனுக்கு மதம் “”ஜாதியைப் போல்” பிரவியில் ஏற்பட்டதா? அல்லது மனிதன் பிறந்தபின் மதம் வந்து...

காந்தியும் ஜாதிப்பாகுபாடும்

காந்தியும் ஜாதிப்பாகுபாடும்

  தோழர் அம்பத்கார் அவர்கள் இந்து மதத்தை விட்டுவிட வேண்டும் என்று சொன்னவுடன்,  காந்தியார் உள்பட பல இந்துமத பிரசாரகர்களுக்கு ஆத்திரம் பொங்கிவிட்டது.  ஆனால், ஜாதி வித்தியாசம் தீண்டாமை ஆகிய விஷயங்களில் காந்தியார் அபிப்பிராயத்தைப்பற்றி பிரபல சீர்திருத்தவாதியும், தேசீயவாதியும், காங்கிரஸ் மகாநாட்டுக்குத் தலைமை வகித்த காங்கிரஸ் தலைவருமான சர்.சி. சங்கரநாயர் சொல்லி இருப்பதைக் கவனித்துப் பாருங்கள்.  (அவர் சுயமரியாதைக்காரர் அல்ல) “”தோழர் காந்தியார் எல்லாப் பொது மக்களுக்கும் கல்வி புகட்டப் படவேண்டியதில்லையென்றும், அதிலும் ஆங்கிலக்கல்வி அறவே ஒழிக்கப்படவேண்டும் என்றும் விரும்புகிறார். ஏன் அவர் அவ்வாறு கருதுகிறார் என்று பார்த்தால்,  கல்வி கற்றுவிடுவதினால் பொது மக்கள் தாங்கள் இருந்துவரும் வாழ்வில் அதிருப்தியடைந்து விடுவார்கள் என்பது ஒன்றேயாகும். இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டுமானால்,  அந்தந்த வகுப்பார் தங்கள் தங்களுக்கு ஏற்பட்டிருக்கும் தற்கால நிலைமையோடு திருப்தி யடைந்திருக்க வேண்டும்  அதாவது அடிமை எப்பொழுதும் அடிமையாகவே இருக்க வேண்டும் என்பதாகும்.  அவர் அந்த முடிவிற்கு வந்ததற்குக் காரணம்,...

திருடியது காங்கிரஸ்காரர்கள்தான்

திருடியது காங்கிரஸ்காரர்கள்தான்

சென்ற திங்கட்கிழமை (18.11.35) இதழில் “”தினமணி” என்ற சுயநலக் கூட்டத்தாரின் பத்திரிகை, திலகர் சுயராஜ்ய நிதியைத் திருடிய காங்கிரஸ்காரரின் படலத்தைப் பாராயணம் செய்ததற்காக, கடுங்கோபங் கொண்டு கண்டபடி எழுதியிருக்கிறது. கோபத்தால் அறிவு அந்தர்த்தானமாகிறது என்ற விஷயத்தை அப்பத்திரிகை தன் தலையங்கத்தில் நன்றாகத் தெரியப்படுத்தியிருக்கிறது. “”திருடியது யார்?” என்ற தலைப்பிட்டு எழுதியதற்குப் பதில் “”திருடியது காங்கிரஸ்காரர்கள்தான்” என்று எடுத்துக்காட்ட விரும்புகிறோம். திலகருடைய பெயரையும், இந்தியத் தாயினுடைய பெயரையும் கூறி, வழிபறிக் கொள்ளைக்காரர்களைப் போல, பெண் மக்கள் அணிந்திருந்த நகைகளையும்கூடத் திலகர் நிதிக்காகக் கொண்டு, மலை போலிருந்த ஒரு கோடி ரூபாய்களைக் கரைத்து, பெரும்பாலும் சுயநலத்திற்கு உபயோகப்படுத்திக் கொண்டவர்களைத் “”திருடர்கள்” என்று கூறாமல் “”தேசபக்தர்கள்” என்று கூறுவதெங்ஙனம்? ஆனால், “”காங்கிரசைத் திட்டுவதையே தொழிலாய்க் கொண்டிருக்கும்” பூனா “”மராட்டா” பத்திரிகையில் விஷயங்கள் வெளி வந்த காரணத்தால், அவைகளை நம்பக் கூடாதென்று “”தினமணி” கூறுகிறது. சென்ற ஞாயிற்றுக்கிழமை (17.11.35ல்) வெளிவந்த “”மராட்டா”வில், பிராமணரல்லாதார் காங்கிரசுடன் ஒத்துழைக்க வேண்டும்...

காங்கிரசைப் புதையுங்கள்

காங்கிரசைப் புதையுங்கள்

காங்கிரசுக்காரர்கள் பொதுமக்களிடம் ஓட்டுப் பெறுவதற்காகப் பிரசாரம் செய்த காலையில் பல மேடைகளில் தோழர்கள் ராஜகோபாலாச்சாரியார், சத்தியமூர்த்தி உள்பட எல்லாக் காங்கிரஸ்காரர்களும் இப்போது எங்களுக்கும், சர்க்காருக்கும் தான் யுத்தம் என்றும், ஜஸ்டிஸ் காங்கிரஸ் பிரிவு இதில் காட்டக் கூடாது என்றும் சொல்லி ஓட்டுப் பெற்றபின், இப்போது மந்திரி பதவி பெறுவதும், சர்க்காரை நடத்திக் கொடுப்பது மூலம் சர்க்காரோடு யுத்தம் செய்கிறோம் என்று சொல்லிக் கொள்வதோடு ஜஸ்டிஸ் கட்சியை ஒழிப்பதுதான் எங்கள் வேலை ஆதலால் சர்க்காரிடம் எங்களுக்குப் போர் இல்லை என்பதாக அதாவது நேற்று கும்பகோணத்தில் தோழர் சத்தியமூர்த்தி கோர்ட்டில் காங்கிரசார் செய்ததாக ஏற்பட்ட காலித்தனக் கேசில் சாட்சி சொல்லும் போது “”ஜஸ்டிஸ் கட்சியை ஒழிப்பது தான் எங்கள் வேலை” என்று சாட்சிப் பெட்டி மேல் இருந்து கொண்டு தைரியமாய் சொன்னது, காங்கிரஸ்காரர்களின் மனப்பான்மையை நன்றே விளக்கிக் காட்டக்கூடியதாகும். ஆனால் இவர்கள் இப்படி வாயினால் சொல்லிக் கொண்டிருக்கலாம். காரியத்தில் இந்தியா முழுவதிலுமே எல்லாப்  பாகங்களிலிருந்தும்,...

விஜயராகவாச்சாரியார்

விஜயராகவாச்சாரியார்

  சேலம் தோழர் விஜயராகவாச்சாரியார் அவர்களின் காங்கிரஸ் சேவையைப் பாராட்டி அவருக்குப் பகுமானம் அளிக்க சில பார்ப்பனர்கள் முயற்சித்துப் பலரிடம் கையெழுத்து வாங்கி வருகிறார்கள். அதில் பார்ப்பனர்கள் செய்யும் சூழ்ச்சி என்னவென்றால், காங்கிரசைக் கண்டிக்கும் ஜஸ்டிஸ் கட்சியாரிடமும் கையெழுத்து வாங்கி காங்கிரசை எல்லோரும் ஒப்புக் கொண்டது போல் உலகத்துக்குக் காட்டச் சூழ்ச்சி செய்து வருகிறார்கள் என்பதாகும். தோழர் விஜயராகவாச்சாரியார் பெரியவர். நல்ல கிரிமினல் வக்கீல். அரசியல் விஷயங்களைப் பற்றி விவகரிக்கத் தகுந்த நல்ல ஞானமுடையவர். அவரது பெயர் காங்கிரசிலும், பழய கால அரசியல் பிரதிநிதித்துவத்திலும் பல நாளாய் அடிபட்டு வருகிறது. சுமார் 50 வருஷத்துக்கு முன் சேலம் கலகத்தில் அவர் கைதியாக்கப் பட்டார்.இவைகள் அவருடைய யோக்கியதாம்சங்களாகும் என்பதில் யாருக்கும் எவ்வித ஆ÷க்ஷபணையும் இருக்காது. இவைகளைப் பொருத்தவரை பற்றுள்ளவர்கள் பாராட்டிக் கொள்ளலாம். ஆனால் இவைகளைப்பற்றி மாறுபாடான அபிப்பிராயமுள்ளவர்கள் இதை எப்படிப் பாராட்ட முடியும் என்பது நமக்கு விளங்கவில்லை. இன்றைய தினம் அவர் காங்கிரசுக்கு...

திருவாங்கூர் திவான்

திருவாங்கூர் திவான்

  சர். ஷண்முகம் ஒப்புக்கொள்ள மாட்டார் திருவாங்கூர் திவான் பதவி சமீப காலத்தில் காலி ஆகலாம் என்றும், அதற்கு சர். ஷண்முகம் அவர்கள் நியமிக்கப்படலாம் என்றும் பிரஸ்தாபம் இருந்து வந்தது. இப்போது அந்த ஸ்தானத்தை சர். ஷண்முகம் அவர்கள் விரும்பவில்லை என்றும், திருவாங்கூர் சமஸ்தானத்தில் தோழர் சர்.சி.பி. ராமசாமி அய்யரின் ஆதிக்கம் இருந்து வரக்கூடும் என்றும், அதனால் அங்குதான் N 4000 ரூ. சம்பளத்தை வாங்கிக் கொண்டு வெறும் கையெழுத்தைப் போட்டுக் கொண்டு இருப்பதைத் தவிர வேறு உருப்படியான காரியம் எதுவும் செய்வது கஷ்டமாக இருக்கும் என்றும் கருதி அதை மறுத்துவிட்டதாகத் தகுந்த நம்பக் கூடிய இடத்தில் இருந்து செய்தி கிடைத்திருக்கின்றது. இதை ஆதரிக்கத் தகுந்த மாதிரியாக மற்றொரு செய்தியும் வெளியாகி இருக்கிறது. அதாவது திருவாங்கூருக்கு சர்.சி.பி. ராமசாமி அய்யர் அவர்கள் சம்மந்தம் ஒழிந்துவிட்டது என்று நன்றாய் தெரியும் வரை ஒரு செல்வாக்குள்ள வெள்ளைக்கார ஐ.சி.எஸ். கலக்டரை திவானாகப் போடுவது என்று...

*தோழர் ஈ.வெ.ராமசாமி தீர்மானங்கள்

*தோழர் ஈ.வெ.ராமசாமி தீர்மானங்கள்

  ஜஸ்டிஸ் கட்சி ஒப்புக் கொண்டது விவசாயிகளை கடன் தொல்லையிலிருந்து விடுவிக்கவும் அவர்கள் மறுபடியும் கடன்காரராகி கஷ்டப்படாமல் இருக்கவும் வேண்டிய காரியங்களை கடனுக்காக கடன்காரர்களை பூமியைக் கைப்பற்ற முடியாமல் செய்வது முதலிய மார்க்கங்களைக் கொண்டு சட்ட மூலமாகவும் வேறு முறைகள் மூலமாகவும் கூடுமானதை எல்லாம் செய்ய வேண்டும். அனியாய வட்டி, லேவாதேவிக்காரர்களால் விவசாயிகள் அழிந்து போகாமல் இருக்கும்படி கூட்டுறவு நாணைய ஸ்தாபனங்களையும், நில அடமான பாங்குகளையும் தாராளமாகப் பெருக்க வேண்டும். நில அடமான பாங்கை மாகாணம் பூராவும் நல்ல அமைப்பில் ஏற்படுத்தி அதை ராஜாங்கத்தாரே நடத்த வேண்டும். சொத்து உரிமை சம்பந்தமாக விவகாரங்களை குறைப்பதற்காக சொத்து பாத்தியங்களை குறிப்பிடத்தகுந்த தெளிவான ஆதாரங்களை சர்க்கார் வைத்திருக்க வேண்டும். அன்றியும் நிமித்த மாத்திரமாகவும், மலரணையாகவும் எழுதி வைக்கப்பட்டது என்று எதிர் வழக்கு வாதாடும் (ஆஞுணச்ட்டி) முறையை இல்லாமல் செய்ய வேண்டியதோடு, அப்படிப்பட்ட வாதங்களை கோர்ட்டுகளில் ஒப்புக் கொள்ளாமல் இருக்கும்படியும் ஏற்பாடுகள் செய்துவிடவேண்டும். விவசாயக்காரர்கள் விளைவின்...

ஜஸ்டிஸ் கட்சி நிர்வாகக் கமிட்டி

ஜஸ்டிஸ் கட்சி நிர்வாகக் கமிட்டி

  ஈ.வெ.ராமசாமி திட்டம் ஒப்புக்கொள்ளப்பட்டது 14.11.35 தேதி மாலை 3 மணிக்கு சென்னை தியாகராயர் மண்டபத்தில் தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தின் (ஜஸ்டிஸ் கட்சியின்) நிர்வாக சபைக் கூட்டம் கூடிற்று. இக்கூட்டத்திற்குத் தோழர்கள் பொப்பிலி ராஜா, சர். மகமது உஸ்மான்,  பி.டி. ராஜன், திவான்  பகதூர்  குமாரசாமி  ரெட்டியார், பி.டி. குமாரசாமி செட்டியார், சர். எ.பி.பாத்ரோ, வெங்கிட்ட கிரி ராஜா, மீர்சாபூர் ராஜா, கள்ளிக்கோட்டா ராஜா, டாக்டர் சி. நடேச முதலியார், ஈ.வெ. ராமசாமி, சி.வி. ராமன், திவான்பகதூர் அப்பாதுரை பிள்ளை, சி. ஜயராம் நாயுடு, சி.டி. நாயகம், வி.வி. ராமசாமி, ஜம்புலிங்க முதலியார், பொன்னம்பலனார், கே.வி. அழகர்சாமி, ஏ.எஸ். அருணாசலம், கே.எம். பாலசுப்பிரமணியம், டி.எ.வி. நாதன், கி.ஆ.பெ. விஸ்வநாதம், டி.வி. சுப்பிரமணியம், வாசுதேவ், ஆரணி சுகந்த முதலியார், என்.ஆர். சாமியப்பா, சி.எல். நரசிம்ம ரெட்டி, சுந்தரராவ் நாயுடு, ஆர். மதனகோபால் நாயுடு, ரங்கராமானுஜன், டப்பள்யூ.எஸ். கிருஷ்ணசாமி நாயுடு, முத்துக்குமாரசாமி முதலியார்,...

வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம்

வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம்

  பார்ப்பனரல்லாதாருக்குத் தனித்தொகுதி வேண்டும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்திற்கு ஆகவே ஜஸ்டிஸ் கட்சி ஏற்பட்டது. ஜஸ்டிஸ் கட்சியானது இன்று எல்லோருடைய செல்வத்தையும், பலாத்காரத்தாலோ, சட்டபூர்வமாகவோ கைப்பற்றி எல்லா மக்களுக்கும் பங்கிட்டுக் கொடுக்கத் துணியாவிட்டாலும், அதைவிட முக்கியகாரியமான எல்லா மக்களுக்கும் பிரதிநிதித்துவத்தைச் சமமாய் அடையலாம் என்றும், எவ்வித சமத்துவத்துக்கும் சட்டத்தின் மூலமாய் மாத்திரம் தகுதி இல்லாமல் பிறவியின் மூலமாகவே தகுதி அற்றவர்கள் என்று ஏற்படுத்தியிருந்த சமூகக் கட்டுகளை உடைத்து சகல பிரஜைகளுக்கும் சம உரிமை கொடுக்கும் காரியத்தில் முயற்சித்து வெற்றி பெற்று வருகிறது. இன்று எல்லோரும் சமமாக மண், பெண், பொன் ஆகியவைகளை அனுபவிப்பவிக்கலாம் என்பதற்கும், கைப்பற்றலாம் என்பதற்கும் சில நிபந்தனைகள் இருந்தாலும் அனுபவிப்பது குற்றமல்ல என்கிறதும், அது நாஸ்திகமாகாது என்கிறதும் நம்நாட்டில் அனுபவத்தில் வந்து விட்டது. ஆதலால் முழு அமுலில் வர இன்னும் சில முறைகள் வகுக்கவும், திருத்தவும் தான் வேண்டியிருக்கிறது. ஆனால் சகல மக்களும் சமூக வாழ்வில் ஒன்று என்பதும், சகல...

காங்கிரஸ் தலைவருக்கு

காங்கிரஸ் தலைவருக்கு

  தமிழ் நாடெங்கும் பகிஷ்காரம் காங்கிரஸ் தலைவர் தோழர் ராஜேந்திர பிரசாத் நல்லவர், மனிதர்களின் சராசரி குணங்களுக்கு ராஜேந்திர பிரசாத் மேலானவர் என்றே நாம் கருதியிருக்கிறோம். ஆனால் அவர் தப்பான வழியில் செல்லும்படியான நிலைமையை எப்படியோ அடைந்துவிட்டார். பொதுவாக தென்னாட்டில் சுமார் 20 வருஷ காலமாக வெளிப்படை யாகவே பார்ப்பனர், பார்ப்பனரல்லாதார் என்கின்ற உணர்ச்சியும் பிரிவும் அரசியலிலும் சமூக இயலிலும் இருந்து வருவதை எவரும் மறுக்க முடியாது. இந்த விஷயம் குறிப்பாகத் தோழர்கள் காந்தியார், மாளவியா, வல்லபாய் பட்டேல், சரோஜினியம்மாள், ஜமன்லால் பஜாஜ், சங்கர்லால் பாங்கர், ராஜேந்திரபிரசாத், ஜவர்லால் நேரு முதலிய காந்தி கோஷ்டியார்  காங்கிரஸ் பிரமுகர்கள் என்பவர்கள் அறியாததல்ல. மற்றும் சென்னை மாகாணத்தில் பார்ப்பனர்களுக்கு மதிப்பற்றுப் போன விஷயமும், சென்னை மாகாணப் பாமர மக்களை ஏமாற்றுவதற்காக அடிக்கடி வட நாட்டிலிருந்து யாரையாவது விளம்பரப்படுத்தி அவர்களைக் கூட்டி வந்து பிரசாரம் செய்வித்து பாமர மக்களை ஏமாற்றி வருவதும் பணம் சம்பாதிப்பதும் மேல்கண்ட...

ஸ்தல ஸ்தாபனம்

ஸ்தல ஸ்தாபனம்

  தலைவரவர்களே! தோழர்களே!! சுமார் 10 நாட்களுக்கு முன்பாகவே இவ்வூர் பஞ்சாயத்து போர்டு பிரசிடெண்ட் அவர்கள் இந்த பஞ்சாயத்து ஆபீசு கட்டடம் திறப்பு விழா கொண்டாட்டத்தின்போது பெரியதொரு கூட்டம் வரும் என்றும், அந்தச் சமயத்தில் ஒரு மணி நேரமாவது அக்கூட்டத்தின் கவனத்துக்கு வேலை இருக்கும்படியாக ஏதாவது ஒரு உபன்யாசம் செய்ய வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார். நானும் அதற்கு இணங்கி இந்த சமயத்தில் ஸ்தல ஸ்தாபனம் என்பது பற்றி பேசுவதாகவும் ஒப்புக் கொண்டேன். அதற் கேற்றாப்போல் இன்று ஸ்தல ஸ்தாபனத்தில் சம்பந்தப்பட்டவர்களும் அதன் நிர்வாகஸ்தர்களுமாகவே ஏராளமாகக் கூடி இருக்கிறீர்கள். கனம் வெள்ளியங்கிரி கவுண்டர் அவர்கள் தலைமையில் பேசுவதற்கு மிகுதியும் நான் மகிழ்ச்சி அடைகிறேன். ஸ்தல ஸ்தாபன சம்மந்தமான அனுபவம் எனக்கும் சிறிது உண்டு. ஆனால் அவற்றை நான் ஒரு விதமாய் உணர்ந்திருக்கிறேன். நீங்கள் ஒரு விதமாய் உணர்ந்திருக்கக் கூடும். என்னவென்றால் ஸ்தல ஸ்தாபன சுயாட்சி என்பதையே நாணயமில்லாத காரியம் என்று தான் கருதுகிறேன்....

காங்கிரஸ்  தியாகம்

காங்கிரஸ்  தியாகம்

  ஒரு  பழைய  கைதி காங்கிரஸ்  பிரசாரராகிய  தோழர்  தெய்வநாயகய்யா  தண்டிக்கப்பட்டு சிறைக்கு  அனுப்பப்பட்டார். அவர்  சிறை  சென்ற  நிமிட  முதல்,  இதுவரை  ஒவ்வொரு  நாளும்  தெய்வநாயகய்யாவுக்கு ஆகிளாஸ் படி கொடுக்கவேண்டுமென்று  காங்கிரஸ்காரர்கள்  கூப்பாடு  போட்ட  வண்ணமாய்  இருக்கிறார்கள். என்ன  மானங்கெட்ட  தனம்  இது? வீம்புக்கு ஜெயிலுக்குப்போக மக்களை  காங்கிரஸ்காரர்  தூண்டுவானேன்? இப்போது  ஆகிளாஸ்  ஆகிளாஸ்  என்று  கெஞ்சுவானேன். ஜெயிலில்  ஆகிளாஸ்  படி  கொடுக்கப்படுமானால்  இன்று  தமிழ்  நாட்டில்  மாத்திரம்  ஒரு  கோடி  பேர்கள்  ஜெயிலுக்குப்  போக  தாங்களாகவே  விண்ணப்பம்  போடத்  தயாராய்  இருப்பார்கள்.  ஆகிளாஸ்  என்றால்  சாதம்,  பருப்பு,  நெய்,  மாம்சம்,  ரொட்டி,  வெண்ணை,  காப்பி,  தயிர்,  பால்  ஆகியவைகள்  கிடைக்கும்.  இது  கிடைப்பதாய்  இருந்தால்  யார்  ஜெயிலுக்குப்  போகப்  பயப்படுவார்கள். இதில்  என்ன  பெரிய  தியாகம்  இருக்கிறது.  இது  கிடையாத  ஜனங்கள்  நமது  நாட்டில்  100க்கு  50  பேர்களுக்கு  மேலாகவே  இருக்கிறார்கள்  என்பது  யாருக்கும்  தெரியாதா? இந்த  நிலையில் ...

ராமகிருஷ்ணா மடம்

ராமகிருஷ்ணா மடம்

சென்னையில் உள்ள ராமகிருஷ்ணா மடம் என்பது சுவாமி விவேகானந்தருக்கு ஏற்பட்ட செல்வாக்கை ஒட்டி பார்ப்பனர்கள் உபயோகப்படுத்திக் கொள்ளும் சூழ்ச்சி முறையில் ஏற்படுத்தப்பட்ட மடம். இதற்குப் பச்சை வர்ணாச்சிரம பார்ப்பனர்களே காரியத்தில்  சர்வாதிகாரியாய் இருப்பது வழக்கம். இம் மடத்தில் இன்னும் பார்ப்பனருக்கு வேறு இடம், பார்ப்பனரல்லாதாருக்கு வேறு இடம் என்கின்ற பிரிவு பல காரியங்களில் இருந்து வருவதோடு பிள்ளைகளுடைய பிரார்த்தனை விஷயத்தில்கூட வ.வெ.சு. அய்யர் குருகுலத்தில் இருந்தது போலவே நடந்து வருகிறது. ஆனால் இதற்கு பணவருவாய் மாத்திரம் பெரிதும் ஏன் முக்கால் பாகத்துக்கு மேல் பார்ப்பனரல்லாதாரிடையே இருந்துதான் வருகிறது. சர்க்காரில் மிக செல்வாக்குள்ள உத்தியோகத்தில் இருக்கும் பல பார்ப்பனர்கள் தாங்கள் உத்தியோக செல்வாக்கை உபயோகித்து பாமர மக்களுடைய பணம் தங்களுக்கு வந்து சேரும்படி பல வித தந்திரங்கள் செய்து பணம் சேர்க்கிறார்கள். இது தவிர அரசாங்கத்தாரிடம் இருந்தும் பண வருவாய் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். ஒரு தடவை சட்டசபையில் இவ்விஷயத்தைப் பற்றி விவாதிக்க ஏற்பட்டதில்...

தேர்தல் தொல்லை

தேர்தல் தொல்லை

  காங்கிரஸ்காரர்கள் தேர்தலில் பிரவேசிக்க ஆரம்பித்த பின்பு சட்டம் சமாதானம் எல்லாம் பறந்து போகும்படி செய்து விட்டார்கள். அஹிம்சை என்றும் யோக்கியம் என்றும் பேச்சுக்களை வாயில் சொல்லிக் கொண்டு காரியத்தில் செய்யும் காலித்தனங்களுக்கும் கலகத்துக்கும் குழப்பங்களுக்கும் அளவே இல்லாமல் இருந்து வருகிறது. திருநெல்வேலி ஜில்லா போர்டு மெம்பர் தேர்தலில் தோழர் ஐ.ஈஸ்வரம்பிள்ளை வெற்றி பெற்றுவிட்டார் என்றாலும் இவருக்கு விரோதமாய் செய்த காலித்தனங்களுக்கு ஆதாரம் ஈஸ்வரம்பிள்ளை அவர்களுடைய மோட்டார் காரானது எரிக்கப்பட்டு சாம்பலாக்கப்பட்டு விட்டது என்பதைப் பார்த்தால் காங்கிரசின் பேரால் ஏற்பட்ட மற்ற தொல்லைகளுக்கும், விஷமங்களுக்கும் அளவு சொல்ல வேண்டுமா? ஆகவே பார்ப்பனர்கள் செய்யும் இம்மாதிரியான கிருத்திரமங்களால் பார்ப்பனரல்லாதார் முன்னிலும் அதிகமான விழிப்படையவும் ஒற்றுமை அடையவும் பார்ப்பனரை அடியோடு வெறுக்கவும் தான் ஏற்படுமே ஒழிய, மற்றப்படி பார்ப்பனர்களுக்கு இவற்றால் எல்லாம் ஒன்றும் லாபம் ஏற்பட்டுவிடப் போவதில்லை என்பது உறுதியான விஷயமாகும். இந்த 10, 20 வருஷ காலமாகவே பார்ப்பனர்கள் தங்கள் சமூக நலனுக்காகச்...

மதங்களின் சக்தி

மதங்களின் சக்தி

  இந்து இந்தியாவானது 33 கோடி தேவர்களைக் (33கோடி இந்துக்களைக்) கொண்டிருந்த காலத்திலும் இந்தியாவைக் காப்பாற்றிக் கொள்ள அதற்குச் சக்தி இல்லாமல் போனதோடு இந்து கோவில்கள், அதிலுள்ள இந்துக் கடவுள்கள் எல்லாம் அன்னிய மதக்காரர்களால் இடிக்கவும் உடைக்கவும் கொள்ளை இடவும் பட்டன. அவ்வளவு மாத்திரம் தானா? இந்து இந்தியா ஒழிந்த பிறகு இந்து முஸ்லீம் இந்தியாவாகி இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இந்தியா தாய்நாடாக ஆகி இந்துக்கள் கோவில்களும் முஸ்லீம்கள் கோவில்களும் பதினாயிரக்கணக்காக ஏற்பட்ட பிறகும் இந்தியாவைக் காப்பாற்ற இரண்டு மதத்திற்கும் சக்தியில்லாமல் போய், ஒரு சிறிய கிறிஸ்து மத சமூகத்தார் கைக்குப் போய்விட்டது.  இரு மத மக்களும் ஒரு சிறு மக்களைக்கொண்ட தேச மத கூட்டத்துக்கு “”அடிமைகளாய்” இருக்கிறார்கள். இது மாத்திரம் தானா? மதத்தலைவர் போன்ற கிலாபத்துத் தலைவர் ஆட்சியில் இருந்த துருக்கி தேசமானது உயிருக்கு ஊஞ்சலாடி மதத்துக்கும் அரசியலுக்கும் சம்பந்தமில்லை;  மதம் அவரவர் இஷ்டத்தைப் பொறுத்தது என்ற பகுத்தறிவு வாதியின் ஆதிக்கத்தாலேயே...

விதண்டாவாதம்

விதண்டாவாதம்

  ஒரு கிருஸ்தவன் இந்துவாகிவிட்டால் உடனே அவனது பெற்றோர் களுக்குத் திதி – திவசம்   சிரார்த்தம் செய்யவேண்டும் என்று இந்து புரோகிதர்கள் கூறுகிறார்கள்.  அப்படியானால் அந்த மதம் மாறியவனுடைய பெற்றோர்கள் உடனே இந்து பிதிர்லோகத்துக்கு வந்துவிடுவார்களா? அல்லது கிறிஸ்துவ பிதிர்லோகத்திலேயே இருப்பார்களா? இந்துக்கடவுள்கள் அவனை இந்து லிஸ்டில் தாக்கல் செய்து கொண்டு, அந்தப்படியான பாவ புண்ணியத்துக்கு ஏற்ற நரக மோக்ஷங்களில் இடம் ஒதுக்கிவிடுவார்களா? *  *  * ஒரு பெண் கொஞ்ச காலம் குடும்பத்தில் இருந்து விதவை ஆகிச் சாப்பாட்டிற்கு வேறு மார்க்கமில்லாமலும், பராமரிப்புக்கு ஆளில்லாமலும் போனதால் கடவுள் பக்தி அதிகமாகி கடவுளுக்கு ஆக பொட்டுக்கட்டிக் கொண்டு நல்ல தேவதாசியாக ஆகிவிட்டால், அவர்களுக்கு விபசார தோஷமுண்டா? *  *  * குடும்ப ஸ்திரீ விபசாரம் செய்தால் பாவம் ஏற்படலாம்.  தேவதாசி ஆஸ்திகர்களான தேவ பக்தர்களிடம் மாத்திரம் சம்பந்தம் வைத்துக் கொண்டால் பாவம் எப்படி வரும். *  *  * ஒரு பிறவி...

பட்டப் பகல் ஏமாற்றுந் திருவிழா

பட்டப் பகல் ஏமாற்றுந் திருவிழா

  அ.ஐ.இ.இ. சென்னையில் அக்டோபர் N 17, 18ந் தேதிகளில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டம் கூடி “”பிரமாதமான” வேலை செய்துவிட்டது. அதாவது மந்திரி பதவிகளை ஏற்பதா இல்லையா என்கின்ற விஷயத்தில் ஒரு முடிவுக்கு வந்துவிட்டது. அம்முடிவு என்னவென்றால் பதவி ஏற்பதா இல்லையா என்பதைப் பற்றி இப்போது ஒரு முடிவுக்கும் வர முடியாது என்பது. ஆனாலிது விஷயத்தைப் பற்றி காங்கிரஸ்காரர்கள் தனிப்பட்ட முறையில் பிரசாரம் செய்வதில் எவ்வித ஆ÷க்ஷபணையுமில்லை என்றும் தீர்மானித்துக் கொண்டது. இதன் கருத்தென்னவென்று பார்த்தால் தேர்தல்களில் வெற்றி பெறுவதற்கு எப்படி எப்படி பேசினால் மக்கள் ஏமாந்து ஓட்டுச் செய்வார்களோ அந்த முறைகளைக் கையாள காங்கிரசின் பேரால் பயனனுபவிக்கக் கருதி இருக்கும் பதவி வேட்டைக்காரருக்கு அனுமதி கொடுத்திருக்கிறது என்பதுதான். இது காங்கிரசின் சூழ்ச்சிக்கு சரியான உதாரணமா அல்லவா என்று பாருங்கள். மற்றும் இந்தத் தீர்மானம் “”பயித்தியம் தெளிந்து போய்விட்டது உலக்கை எடுத்துக் கொடு கோவணம் கட்டிக் கொள்ள வேண்டும்”...

திருச்சி  சுயமரியாதை  மகாநாடு

திருச்சி  சுயமரியாதை  மகாநாடு

  இம்மாதம்  19ந்  தேதி  திருச்சியில்  கூடிய  திருச்சி  ஜில்லா  சுயமரியாதை  மகாநாடானது,  சுயமரியாதை இயக்கத்தின்  கொள்கைகளைப்பற்றி,  கண்டபடி  தெரிந்தோ  தெரியாமலோ  வேண்டுமென்றே  விஷமத்தன மாகவே  குறை  கூறிக்கொண்டு  திரிந்தவர்களுக்கு  வாயடைக்கும்படியான  அளவுக்கு  காரியம்  செய்திருக்கிறது. சிறப்பாக மகாநாட்டுத் தலைவர் தோழர் சௌந்திரபாண்டியன்  அவர்களது  தலைமைப்  பிரசாங்கமானது, ஜஸ்டிஸ்  கட்சியை சுயமரியாதை  இயக்கம்  ஏன்  ஆதரிக்க  வேண்டும்  என்பதற்கு  தகுந்த  காரணங்களை  நன்றாய்  விளக்கி  இருக்கிறதோடு  சுயமரியாதை  இயக்கம்  நாளுக்கு  நாள்  அதனுடைய  கொள்கைகளில்  விசால  நோக்கத்துடனும்  தீவிரமான  மேல்  நோக்கத்துடனும்  முன்னேறி  இருந்தாலும்,  அவற்றிலிருந்து  ஒரு  சிறிதும்  பின்  வாங்காமல்  இருக்க வேண்டும் என்பது ஒருபுறமிருந்தாலும் அதன் ஆரம்ப நோக்கத்தையே அலட்சியப்படுத்துவது சுயமரியாதை ஆகாது  என்பதை அறியும்படி செய்திருக்கிறது. அன்றியும்  திருச்சி  மகாநாட்டில்  நிறைவேற்றப்பட்ட  விருதுநகர்  மகாநாட்டுத்  தீர்மானத்தையும்,  ஈரோடு  வேலைத்திட்டக்  கூட்டத்தில்  நிறைவேற்றப்பட்ட  சமதர்மத்  திட்டத்  தீர்மானத்தையும்  படித்துப்  பார்ப்பவர்களுக்கு  எலக்ஷனில்  சம்மந்தம்  வைத்துக்  கொள்ளலாமா  வேண்டாமா  என்பதையும் ...

அம்பத்காரும் இந்து மதமும் -II

அம்பத்காரும் இந்து மதமும் -II

  இந்து மதத்தில் இருந்து அம்பத்காரும், தாழ்த்தப்பட்டவர்களும் மாத்திரமே அல்லாமல் இந்துக்கள் என்று சொல்லிக் கொள்ளுபவர்களில் தீண்டாதவர்கள் என்பவர்கள் நீங்கிய சுமார் 17 கோடி பேர்களும் கூட இந்து மதத்தை விட்டு விலக வேண்டியவர்களேயாவார்கள். இந்து மதம் என்று ஒன்று குறிப்பாக இல்லை என்று காந்தியாரே ஒப்புக் கொள்ளுகிறார். இந்தியாவுக்கு மகமதியர்கள் முதலிய அயல்நாட்டார்கள் வந்த காலத்தில் இந்தியாவில் உள்ள பல்வேறு தேச வகுப்பு மக்கள் நடந்து கொண்டு வந்த நடவடிக்கைகளுக்கும் பழக்க வழக்கங்களுக்கும் பல்வேறு சமூகத்தாருடைய சடங்கு, பிரார்த்தனை, வழிபடு கடவுள்கள் முதலியவை களுக்கும் சேர்த்து எல்லாவற்றிற்கும் ஒரே பெயராக இந்துமதம், அதாவது இந்தியர்களின் மதம் என்பதாகப் பெயரிட்டு விட்டார்கள். அக்காலத்தில் இருந்த திராவிடர்கள் பழக்க வழக்கங்களுக்கும் இந்துமதம் என்றும், ஆரியர் பழக்கவழக்கங்களுக்கும் இந்துமதம் என்றும், மலை நாட்டு மக்கள் பழக்க வழக்கங்களுக்கும் இந்துமதம் என்றும், ஆரிய சமாஜமும் இந்துமதம் என்றும், பிரம்மசமாஜமும் இந்து மதம் என்றும், வேதாந்தமும் இந்து...

திருச்சி மகாநாடு

திருச்சி மகாநாடு

  இயக்கம் ஆரம்பமானதேன்? சுயமரியாதை இயக்கம்  ஆரம்பித்தபோது அதன் காரணஸ்தர்கள் என்ன நோக்கத்துடன் இதனை ஆரம்பித்து வைத்தார்கள் என்பதை முதலில் நீங்கள் அறிய வேண்டும். ஜஸ்டிஸ் கட்சியின் வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை காங்கிரஸ் காரர்களிலேயே பலர் ஒப்புக் கொண்டு 191819ல் முதலில் வேலை செய்து பின்னர் காங்கிரசில் சேர்ந்து மேற்படி வகுப்புவாரி தீர்மானத்தை காங்கிரசின் கூட்டத்தில் கொண்டுவந்த காலத்தில் இத்தீர்மானம் லிஸ்டிலிருந்து ரத்து செய்யப்பட்ட காரணத்தால் காஞ்சீபுர மகாநாட்டில் நானும் மற்றும் சிலரும் அதற்காகவும், பார்ப்பன சூட்சியை வெளியாக்கி அவர்களது ஆதிக்கத்தை ஒழிப்பதற்காகவும் வேறொரு கட்சியை ஏற்படுத்துவதாகச் சொல்லி சபதங்கூறி வெளிவந்தோம். வகுப்புவாரி பிரதிநிதித்துவக் கொள்கையை அமுலுக்கு கொண்டுவர கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த ஜஸ்டிஸ் கட்சிக்கு நாம் ஆதரவு கொடுத்தோம் என்பதையும், பிராமணரல்லாதாருக்கு நன்மை செய்ய ஏற்பட்ட ஜஸ்டிஸ் கட்சியை ஒழிக்க முயற்சிக்கும் காங்கிரஸ் பார்ப்பனர்கள் ஆகியவர்கள் தொல்லையிலிருந்து மீட்க வேண்டும் என்பதற்காகவுமே நாம் இந்த இயக்கத்தைத் தோற்றுவித்தோம் என்பதையும் நீங்கள் ஞாபகத்தில் வைக்க...

ஈரோடு  முனிசிபாலிட்டியும்

ஈரோடு  முனிசிபாலிட்டியும்

  மின்சார  விளக்கும் ஈரோடு  முனிசிபாலிட்டியானது  எவ்வளவோ  மோசமான  நிலைமையில்  இருந்து,  அதாவது  எல்லாவிதமான  அக்கிரமங்களுக்கும்,  அயோக்கியத் தனங்களுக்கும்,  திருட்டு  புரட்டு  போர்ஜரி  முதலிய  கிரிமினல்  காரியங்களுக்கு  தாயகமாய்  இருந்து,  பொது  ஜனங்களும்  கவுன்சிலர்களும்  எவ்வளவோ  கூப்பாடு  போட்டும்  அரசாங்கத்தில்  சரியான  கேள்வி  கேப்பாடு  இல்லாமல்  இருந்து  கடைசியாக  மெஜார்ட்டி  கவுன்சிலர்கள்  13  பேர்கள்  ராஜினாமா  கொடுத்தும்  அரசாங்கத்தார்  லக்ஷியம்  பண்ணாமல்  இருந்து,  முனிசிபல்  பணங்களுக்கும்  மற்றும்  கல்வி  இலாக்காப்  பணம்  சுமார்  50  ஆயிரம்  ரூபாய்  வரையிலும்  வேறு ஏதேதோ  காரியங்களுக்கு  என்று  கொள்ளை  போயும்,  சுமார்  வருஷம்  3 லக்ஷ  ரூபாய்  வரும்படியுள்ள  முனிசிபாலிட்டியானது  ஆபீசு  சம்பளத்துக்குகூட  பணம்  இல்லாமல்  பாப்பராகியும்  கடைசியாக  தோழர்  கான்சாயபு,  ÷க்ஷக்தாவுத்  சாயபு  முதலிய  சிலரது  பெரு  முயற்சியால்  மறுபடியும்  கொஞ்சம்  கொஞ்சமாய்  தலையெடுத்து  சிறிது  சிறிதாக  யோக்கியமான  நிலைமைக்கு  வந்து,  இப்போது  பொது  ஜனங்களுடையவும்,  அரசாங்கத்தாருடையவும்  பாராட்டுதலுக்கு  பாத்தியமானதாக  ஆகி  இருக்கிறது ...

முடிவை மாற்ற வேண்டாம்

முடிவை மாற்ற வேண்டாம்

  டாக்டர் அம்பேத்காருக்கு ராமசாமி தந்தி தோழர் ஈ.வெ. ராமசாமி அவர்கள் டாக்டர் பி.ஆர். அம்பேத்கார் அவர்களுக்கு பின்வரும் தந்தி அடித்துள்ளார். தாங்கள் புத்திசாலித்தனமான முடிவுக்கு வந்தது பற்றி வாழ்த்துக் கூறுகின்றேன். தங்களது முடிவை எக்காரணத்தாலும் மாற்ற வேண்டாம். அவசரப்பட வேண்டாம். முதலில் குறைந்தது 10 லக்ஷம் பேரையாவது மதமாற்ற வேண்டும். பிறகே தாங்கள் மதம் மாறுவது பிரயோஜனமாகவிருக்கும். மலையாளம் உட்பட தென்னிந்தியா தங்களது முடிவுக்கு பலத்த ஆதரவு அளிக்கும். குடி அரசு  வேண்டுகோள்  20.10.1935

சபாஷ் அம்பத்கார்-I

சபாஷ் அம்பத்கார்-I

    தோழர் டாக்டர் அம்பத்கார் நாசிக்கில் கூடிய பம்பாய் மாகாண ஆதி இந்துக்கள் மகாநாட்டில் தலைமை வகித்துச் செய்த தலைமைப் பிரசங்கத்தில், “”மேல் ஜாதிக்காரர்கள் என்று சொல்லிக் கொள்ளுகின்றவர் களிடத்தில் நம் மீது கருணை ஏற்படும்படி நாம் செய்து வந்த முயற்சிகள் எல்லாம் வீணாய்ப் போய் விட்டன. இனி அவர்களிடத்தில் சமத்துவமாயும், ஒற்றுமையாயும் வாழ முயற்சித்து நம் சக்தியையும், உழைப்பையும், பணத்தையும் செலவழிப்பது வீண் வேலையாகும். நமது குறைகளும், இழிவுகளும் மேல் ஜாதிக்கார இந்துக்களால் தீர்க்கப்படும் என்று எதிர்பார்ப்பது ஏமாற்றத்தைத் தான் அளிக்கும். இனி நாம் செய்ய வேண்டியது என்ன என்கின்ற விஷயத்தில் நான் ஒரு முடிவுக்கு வந்து விட்டேன். அம் முடிவு என்னவென்றால், நாம் இந்து மதத்தை விட்டு அடியோடு விலகி விடுவது என்பதுதான். நமக்கு யார் சுதந்திரம் கொடுக்க மறுக்கிறார்களோ அவர்களை இனி நாம் கெஞ்சக் கூடாது. அவர்களது சம்மந்தத்தை இனி நாம் விலக்கிக் கொள்ள வேண்டும்....