பார்ப்பனரும் அரசியலும்
அரசியல் விஷயத்தில் நாம் பார்ப்பனர்களை நம்பக்கூடாது என்றும், அவர்களது அரசியல் நோக்கம் என்பதெல்லாம் பார்ப்பனரல்லாதாரை மிதித்து பார்ப்பனர்கள் எப்படியாவது அதிகாரத்திற்கும் பதவிக்கும் உத்தியோ கத்திற்கும் வர வேண்டும் என்பதைத்தவிர வேறில்லை என்றும், பார்ப்பனர் கள் தங்களுக்கு உத்தியோகம் பதவி முதலியவைகள் கிடைக்கக்கூடும் என்று எண்ணுகிற விஷயங்களில் அதற்கு விலையாக தேசத்தையோ மானத்தையோ நாணயத்தையோ கூட விடப் பின்வாங்க மாட்டார்கள் என்றும், இந்தப்படி செய்தே நமது நாட்டை ஆயிரக்கணக்கான வருஷங் களாய் அன்னிய ஆக்ஷிக்கு அதாவது மனிதத்தன்மை அற்ற ஆக்ஷிக்கு அடிமைப்படுத்தி நமது நாட்டிற்கு அடியோடு சுயமரியாதை இல்லாமற் செய்து விட்டார்களென்றும், இக்குணங்களான பார்ப்பனீயம் நமது நாட்டை விட்டு ஒழிந்தாலல்லது நமக்கு என்றென்றைக்கும் விடுதலையோ சுயமரியாதையோ ஏற்படாதென்றும் அனேக தடவைகளில் எழுதியும் பேசியும் வந்திருப் பதுடன் அதே வேலையிலேயே நமது வாழ்நாளைக் கடத்தியும் வருகிறோம். ஆனால் நம்மில் ஒருசாராருக்கே, அதாவது பார்ப்பனர்களை பின்பற்றினாலொழிய வாழ முடியாது என்கிற கூட்டத்தாருக்கு இந்த உண்மை கள்...