மகாத்மாவுக்கு முதலியாரின் நற்சாக்ஷி பத்திரம்

ஸ்ரீமான் கல்யாணசுந்திர முதலியார் அவர்கள் மகாத்மா காந்திக்கு ஒரு நற்சாக்ஷி பத்திரம் வழங்கினார். அதாவது மகாத்மா தன்னைப் பற்றி ஞாபகம் வைத்திருக்கிறாராம். 5, 6´க்கு முன் தான் மகாத்மாவின் பிரசங் கத்தை மொழிபெயர்த்தது மகாத்மாவுக்கு இன்னம் ஞாபகத்திலிருக்கிறதாம். அதனாலேயே மகாத்மாவுக்கு நல்ல ஞாபகக் குறிப்பு இருக்கிறதாம்.

ஆனால் அதே மகாத்மா ஒருசமயம் சென்னைக்கு வந்த காலத்தில் ஸ்ரீமான் சர். தியாகராயர் வீட்டில் இறங்கி கொஞ்சநாள் தங்கியும் இருந்து விட்டு போனபிறகு ஒரு விஷயத்தில் சர். தியாகராயரைப் பற்றி மகாத்மாவை கேட்ட போது தமக்கு அவரைப் பற்றி தெரியாது என்று சொல்லி விட்டாராம், கொஞ்சநேரம் பிரசங்கம் மொழிபெயர்த்ததைப்பற்றி ஞாபகத்தில் வைத் திருந்த மகாத்மாவுக்கு தாம் இறங்கி கொஞ்சநாள் இருந்தவர் ஞாபகத்திற்கு வராமல் போனது என்ன காரணமோ என்பதை ஸ்ரீமான் முதலியார்தான் சொல்லவேண்டும், மகாத்மாவுக்கு ஞாபக சக்தி அதிகம் என்று தீர்மானிப் பதானால் பார்ப்பனரின் அடக்குமுறை சக்தி அதைவிட அதிகமென்றுதான் தீர்மானிக்கவேண்டும். இல்லாவிட்டால் ஸ்ரீமான் முதலியாரிடம் மாத்திரம் அதிக ஞாபகம் என்று சொல்ல வேண்டும்.

குடி அரசு – கட்டுரை – 18.09.1927

You may also like...

Leave a Reply