Category: குடி அரசு 1926

சுயராஜ்யக் கக்ஷியும் மதுவிலக்கும்  தென்னாட்டு பிராமணர் சக்தி 0

சுயராஜ்யக் கக்ஷியும் மதுவிலக்கும் தென்னாட்டு பிராமணர் சக்தி

பிராமணக் கக்ஷியாகிய சுயராஜ்யக் கக்ஷி சட்டசபைகளில் மது விலக்கு செய்யும் ஆதலால் அவர்களுக்கு வோட்டுக் கொடுங்களென்று இன்னமும் ஸ்ரீமான் சி.ராஜகோபாலாச்சாரியார் பிரசாரம் செய்து வருவது பொது ஜனங்களுக்குத் தெரியும். ஆனால், மதுவிலக்குக்கும் சுயராஜ்ய கக்ஷிக் கும் எவ்வளவு பொருத்தமிருக்கிறது என்பதை ஓட்டர்கள் நினைத்துப் பார்க்கவேண்டும். 1. சுயராஜ்யக் கக்ஷித் தலைவர் பண்டிதர், வட இந்தியாவில் சாராயம் காய்ச்சும் ஒரு பெரிய கம்பெனியில் பங்குக்காரர் என்று கேள்விப் படுகிறோம். அல்லாமலும் மதுவருந்துவது குற்றமல்ல வென்று நினைத்து அளவாய்க் குடிக்கும் மேல் நாட்டு நாகரிகத்தில் ஈடுபட்டவர். 2. சுயராஜ்யக் கக்ஷித் தலைவரை நடத்துகிறவரும் சுயராஜ்யக் கக்ஷி யைத் தோற்றுவித்தவரும் காங்கிரஸ் காரியதரிசியுமான ஸ்ரீமான் ஏ. ரெங்க சாமி அய்யங்கார் ஒவ்வொரு வீட்டிலும் பிராந்தி என்னும் சாராயம் வைத்திருக்க வேண்டியது அவசியம் என்று விளம்பரம் செய்து சாராயம் விற்கிறவர். 3. ஸ்ரீமான் சீனிவாசய்யங்காரைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. 4. ஸ்ரீமான் சி.வி. வெங்கிட்டரமணய்யங்காரோ தன் தென்னை...

தொழிலாளர் இயக்கம் 0

தொழிலாளர் இயக்கம்

தற்கால நிலைமை தற்காலம் நமது நாட்டிலுள்ள தொழிலாளர் இயக்கங்கள் என்று சொல்லப்பட்டவைகள் எடுப்பார் கைக் குழந்தைகள் போல் தங்களுக்கென எவ்வித சக்தியும் இல்லாமலும், தங்களுக்கு தேவை இன்னதென்றுகூட அறிய முடியாமலும், தாங்களே தங்கள் சங்கத்தை நடத்திக்கொள்ள சக்தியற்றவர் களாகவும் இருந்து கொண்டிருப்பதுமல்லாமல் சுயநலத்துக்காகவும் வயிற்றுப் பிழைப்புக்காகவும் அரசியலில் சம்பந்தப்பட்டு அரசியல் பேரைச் சொல்லிக் கொண்டு வாழும் சில பொறுப்பற்றவர்கள் தொழிலாளர்களில் வாயாடிகளாக வும் செல்வாக்குற்றவர்களாகவும் இருப்பவர்களை பணங் கொடுத்தோ உதவி செய்தோ அவர்கள் மூலமாய்த் தங்களை தொழிலாளர்களுக்குத் தலைவர் களாகும்படிச் செய்து, அதன் மூலமாய் தலைமை பெற்ற சில சுயநலக்காரர் களை தங்களுக்குத் தலைவர்களாகவைத்துக் கொண்டு அவர்கள் சொல்லுகிற படி ஆடவும் ஒருவரை அடியென்றால் அடிக்கவும் திட்டும்படி சொன்னால் திட்டவும் இம்மாதிரியான காரியங்களைச் செய்து கொண்டு அவர்களின் கை ஆளுகள் போலிருந்து அந்நியரின் நன்மைக்காக தங்கள் சங்கங்களை விட்டுக்கொடுக்கும்படியான நிலைமையிலிருந்து வருகிறது. இவ்விதமான நிலைமையிலுள்ள சங்கங்கள் நாட்டிற்காவது தொழிலாளர்களுக்காவது என்ன நன்மையைக்...

காந்தீயம் 0

காந்தீயம்

காந்தீயம் என்பது மகாத்மா காந்தியை மூல புருஷராய் வைத்து அவரது சரித்திரத்தையும், கொள்கையையும், அதன் பலனையும் பற்றியது. எப்படி சைவம் என்பது சிவனை முதன்மையாகக் கொண்டதோ, வைணவம் என்பது விஷ்ணுவை முதன்மையாகக் கொண்டதோ, ராமாயணம் என்பது எப்படி ராமரை முதன்மையாகக் கொண்டதோ அதுபோல் காந்தீயம் என்பது காந்தியை முதன்மையாகக் கொண்டது. இவற்றில் மக்களுக்காக மகாத்மா காந்தி ஏற்படுத்திய கொள்கைகளும் அதற்காக அவரது சேவையும் அவரது தியாகமும் முதன்மையானது. அதனால் ஏற்பட்ட பலன்களும் நிகழ்ச்சிகளும் இரண்டாவதாகச் சொல்லலாம். நமது தேசத்தில் இவ்விருபதாம் நூற்றாண்டில் ராஜாக்களும், பிரபுக்களும், பெரும்பதவி அதிகாரமுடையவர்களும் எத்த னையோ பேர் பிறந்திருந்தாலும் மறைந்திருந்தாலும் 33 கோடி மக்களும் மதிக்கத் தகுந்த மாதிரி மகாத்மா காந்தியைப் போல் மற்றொருவரை சொல்ல முடியாமற் போனதற்குக் காரணம் என்ன? காந்தியை மாத்திரம் மகாத்மா என்று சொல்லக் காரணமென்ன? தங்கள் தங்கள் சுயநலத்துக்காக வாழ்கிறவர் கள் எவ்வளவு பெரியவர்களென்று சொல்லிக் கொண்டபோதிலும் அவர்கள் சாதாரண மனிதர்களாகத்தான்...

ஸ்ரீமான் தங்கப்பெருமாள் பிள்ளையின் ஞாபகச்சின்னம் 0

ஸ்ரீமான் தங்கப்பெருமாள் பிள்ளையின் ஞாபகச்சின்னம்

வெள்ளக்கிணற்றில் ஸ்ரீமான்.எஸ். இராமநாதனின் அக்ராசனத்தின் கீழ் நடைபெற்ற கோயமுத்தூர் தாலூக்கா மகாநாட்டில், அடியிற்கண்ட தீர்மானம் நிறைவேறிற்று. தமிழ்நாட்டு அருந்தவப் புதல்வரும் மாகாண காங்கிரஸ் கமிட்டியின் காரியதரிசியும், ஜில்லா காங்கிரஸ் கமிட்டியின் தலை வரும், கோவை தாலூக்கா மகாநாட்டின் அக்ராசனரும், மாகாண காங்கிரஸ் நிர்வாக சபையின் அங்கத்தினரும். கதர்போர்டின் காரியதரிசியும், ஆகிய இவைகளா யிருந்தவரும். உண்மைத் தியாக மூர்த்தியுமாகிய ஈரோடு ஸ்ரீமான். வா. மு. தங்கப்பெருமாள் பிள்ளையவர்கள் காலஞ்சென்றதைக் குறித்து இம் மகாநாடு ஆழ்ந்த துக்கத்தை அடைவதோடு, அவர் குடும்பத்தாருக்கு அநு தாபத்தைத் தெரிவித்துக்கொள்ளுகிறது. காலமான நம்நாட்டுப் பெருந்தேசாபிமானியும். நமது ஜில்லாவாசியு மான ஸ்ரீமான். தங்கப்பெருமாள் பிள்ளையின் ஞாபகச்சின்னமாகவும், அவரது போதனைகளைப் பரப்ப ஓர் சாதனமாகவும், இந்த ஜில்லாவில் ஓர் ஸ்தாபனம் ஏற்பாடு செய்ய வேண்டுமென்றும், அதற்காகப் பொருள் சேர்த்தல் முதலிய வேண்டுவன செய்ய, கீழ்க்கண்ட கனவான்களை ஓர் கமிட்டியாக நியமித்திருப்பதாய்த் தீர்மானித்திருக்கிறது. கமிட்டி அங்கத்தினர் ஸ்ரீமான்கள்.ஈ.வெ.இராமசாமி நாயக்கர், அக்ராசனர், எஸ். இராமநாதன்,...

சுரணையற்ற பொய் 0

சுரணையற்ற பொய்

நல்ல சமயத்தில் 2 வாரத்திற்குப் பத்திரிகை தாமதிக்க ஏற்பட்டதானது நமக்கு மிகுதியும் ஏமாற்றத்தைக் கொடுத்து விட்டதோடு வாசகர்களுக்கும் விளக்க முடியாத ஏமாற்றம் ஏற்பட்டிருக்கும் என்றே நினைக்கிறோம். இவ்வாரம் எழுத வேண்டிய விஷயங்கள் அநேகம். அவற்றில் பிராமணப் பத்திரிகைகளின் கொடுமையை எடுத்துக்காட்ட வேண்டியது மிகுதியும் அவசியமான சமயம். அவைகளை விளக்க இதில் இடமில்லை. கோவை தாலூக்கா மகாநாட்டைப் பற்றியும் கோவை பொது மீட்டிங்கைப் பற்றியும், சுதேசமித்திரன் சுரணையற்ற வெறும் பொய்யையே பிரசுரித்திருக்கின்றது. அவற்றுள் 100 – க்கு 90 பொய் என்பதை வாசகர் உணர வேண்டுகிறோம். குடி அரசு – அறிவிப்பு – 28.03.1926

இரண்டே வாரம் 0

இரண்டே வாரம்

நமது “குடி அரசு”ப் பத்திரிகை கொஞ்ச காலமாக கூலி அச்சுக் கூடத் தில் பதிப்பிக்கப்பட்டு வந்தது. ஆனால், அவ்வச்சுக் கூடத்தால் பல தடவை களில் எதிர்பாராத தாமதங்களுடன் காலந்தவறி பத்திரிகை வெளியாக வேண்டி ஏற்பட்டதினிமித்தம், சந்தாதாரர்களில் பலர் ஏமாற்றமடைய நேர்ந்த தால் தங்கள் மனவருத்தத்தையும் கோபத்தையும் தெரிவித்து வருகிறார்கள். “குடி அரசு” எத்தனை விதமான எதிரிகளின் சூக்ஷிக்கும், கொடுமைக்கும் தப்புவித்து நடந்து வருகிறது என்பதை அவர்கள் அறிவதில்லை. ஆதலின், பத்திரிகையை இரண்டொரு வாரத்திற்கு மட்டும் நிறுத்தி வேறு அச்சுக்கூடம் ஏற்பாடு செய்து, கூடியவரை காலந் தவறாது அனுப்பிவர ஏற்பாடு செய்ய சில யந்திரங்களும் எழுத்துக்களும் வந்திருக்கிறது. இனியும் சில சாமான்கள் வாங்க சென்னைக்கு ஆள் போகிறது. ஆதலால், அதுவரை வாசகர்களை மன்னிக்கும்படி வேண்டுகிறோம். குடி அரசு – தலையங்கம் – 28.03.1926

வருண பேத விளக்கம் 0

வருண பேத விளக்கம்

“வருணபேத விளக்கம்” என்னும் புத்தகம் காலஞ்சென்ற திரு. ம. மாசி லாமணி அவர்களால் எழுதப்பட்டு தென்னிந்திய பௌத்த சங்கத்தினா தரவில் ஸ்ரீ சித்தார்த்த புத்தக சாலையாரால் பதிப்பித்து பிரசுரிக்கப்பட்டது. இப்புத்தகம் வருணபேதத்தின் இரகசியங்களையும், ஆதிகாலத்திலிருந்தே, பிராமணர்களின் சூழ்ச்சிகளையும், தயவு தாக்ஷண்யமில்லாமல் தைரியமாய் விளக்குகிறது. இப்புத்தகத்தை வாங்கிப் படிப்பவர் இவ்விஷயங்களைப் பற்றி நமது “குடி அரசு” எழுதிவரும் விஷயங்கள் இப்புத்தகத்திலிருந்து எடுத் தெழுதப்பட்டதோ அல்லது குடி அரசிலிருந்து எடுத்து இப்புத்தகம் எழுதப்பட்டதோ என்று நினைக்கும்படி பெரும் பாகம் ஒத்திருக்கும். ஆத லால், சிற்சில விஷயங்களில் அபிப்பிராய பேதம் இருந்தபோதிலும் ஜாதி உயர்வு-தாழ்வு இரகசியம் அறிய ஆவல் கொண்டவர்கள் இதனை வாங்கி வாசிக்க சிபார்சு செய்கிறோம். இதன் விலை அணா 0-4-0. குடி அரசு – நூல் மதிப்புரை – 21.03.1926

ஹிந்து மஹாசபை 0

ஹிந்து மஹாசபை

ஹிந்து மஹாசபையைப் பற்றி நாம் பல தடவைகளில் அது வர்ணா சிரம சபை என்றும், இந்து முஸ்லீம் ஒற்றுமைக்கு விரோதமான சபை என்றும், பிராமணாதிக்கத்திற்காக உழைக்கும் சபை என்றும் எழுதி வந்தது வாசகர் களுக்கு ஞாபகமிருக்கலாம். சில நண்பர்களுக்கு இவ்வாறு எழுதியதைப் பற்றி மனவருத்தம் ஏற்பட்டிருந்தாலும் இருக்கலாம். ஆனால் இப்பொழுது வரவர அதன் யோக்கியதை நாம் எழுதியபடியே முழுவதும் வெளியாகி விட்டது. அதாவது, விதவா விவாகத் தீர்மானம் ஹிந்து மஹாசபை மஹா நாட்டின் விஷயாலோசனைக் கமிட்டியில் நிறைவேறினதும், அதன் அக்கிரா சனராகிய பண்டித மாளவியா மஹாநாட்டுப் பந்தல் பக்கம் கூட எட்டிப் பார்க்கமாட்டேன் என்று அத்தீர்மானத்திற்கு ஆதாரமாயிருந்தவர்களை விரட்டித் தீர்மானத்தையே மஹாநாட்டிற்கும் கொண்டு வரவிடாமல் நசுக்கி விட்டார். பின்னர் தீண்டாமையைப் பற்றின தீர்மானம் மஹாநாட்டில் நிறை வேறினவுடன் சபையில் உள்ளவர்களெல்லாம் எழுந்து ஓடிப்போய் விட்டார்களாம் . ஆதலால் தலைவர்கள் எழுந்து போனவர்களை அழைத்து வந்து இத்தீர்மானத்தின் ரகசியத்தை எடுத்துரைத்து, அதாவது இத்தீர்மா...

பி. வரதராஜலு நாயுடு –                               பிராமணர்களின் கொடுமையும் குறும்புத்தனமும் 		-சித்திரபுத்திரன் 0

பி. வரதராஜலு நாயுடு – பிராமணர்களின் கொடுமையும் குறும்புத்தனமும் -சித்திரபுத்திரன்

மாயவரம் முனிசிபாலிட்டியில் ஸ்ரீமான் வரதராஜலு நாயுடுவுக்கு ஒரு வரவேற்புப் பத்திரம் வாசித்துக் கொடுக்க வேண்டுமென்று ஒரு தீர்மானம் வந்தபொழுது, சில பிராமணர்கள் அதை எதிர்த்தார்கள். இவர்கள் எதிர்ப்பை அலட்சியம் செய்து மற்ற கவுன்சிலர்கள் ஒரேயடியாய் நிறைவேற்றி விட்டார் கள். தங்கள் ஆnக்ஷபனை பலிக்கவில்லை என்று நினைத்த ³ பிராமணர்கள் அதோடு சும்மாயிராமல் அரசாங்கத்தாருக்கு அடியிற் கண்டபடி தந்தி கொடுத்தார்கள். அதாவது “மாயவரம் முனிசிபாலிட்டியார் டாக்டர் வரதராஜலு நாயுடுவுக்கு உபசாரப் பத்திரம் வாசித்துக் கொடுத்தால் மாயவரத்தில் சமாதானத்திற்கு மிகவும் பங்கம் வரும். ஆதலால், அரசாங் கத்தார் இத்தீர்மானத்தை நிராகரித்து விடவேண்டும்” என்று கண்டிருந்ததாம். இது எவ்வளவு அயோக்கியத்தனமான காரியம் என்பதை வாசகர்கள்தான் முடிவு செய்யவேண்டும். ஸ்ரீமான்கள் சீனிவாசய்யங்கார், கலியாணசுந்தர முதலியார், ராஜகோபாலாச்சாரியார் முதலியவர்களுக்கு வாசித்துக் கொடுக் கும் உபசாரப் பத்திரங்கள் சமாதானத்தை விளைவிக்கும்; டாக்டர் நாயுடுவுக்கு வாசித்துக் கொடுக்கும் உபசாரப் பத்திரம் சமாதான பங்கம் விளைவிக்கும் என்றால், அய்யங்கார், ஆச்சாரியார், முதலியார் முதலானவர்களிடம்...

இதுவா வீரம்? இதுவா வீர மொழி? 0

இதுவா வீரம்? இதுவா வீர மொழி?

நமது நாட்டுப் பத்திரிகைகளில் ஒன்றுகூடத் தவறாமல் அதாவது பிராமணப் பத்திரிகைகள், பிராமணரல்லாத பத்திரிகைகள், மகமதியப் பத்திரிகைகள் ஆகிய அனைத்தும் சுயராஜ்யக் கட்சியினர் சட்டசபைகளை விட்டு வெளியேறினதை மெச்சியும், ஆதரித்தும் வெளியேறினதற்கு பண்டிதநேரு சொல்லிய காரணங்களை “பண்டிதரின் வீர மொழிகள்” என மகுடமிட்டும் பிரசுரிக்கின்றன. பிராமணப் பத்திரிகைகளைப் பற்றியோ, அவர்களால் ஆட்கொள்ளப்பட்ட பத்திரிகைகளைப் பற்றியோ கவலைப் படாது தள்ளிவிடினும் மற்றைய சுயேச்சை பத்திரிகைகளுக்காவது ஆத்மா உண்டா? இல்லையா? என்பதும் உண்மையை அறிய ஆற்றலுண்டா? இல்லையா? என்பதும் அல்லது எல்லாமிருந்தும் தன் காலில் நிற்கச் சக்தி யற்று கூட்டத்தில் கோவிந்தா போட்டுக் கொண்டுகாலங்கடத்துகிறார்களா வென்பதும், அல்லது முரட்டு வெள்ளத்தில் நாம் எப்படி எதிர் நீச்சல் நீந்துவது என்று பயந்து பொறுப்பு இழந்து வாழ்க்கையை நடத்திக்கொண்டு வருகிறார் களாவென்பதும், அல்லது ராஜதந்திரம் என்றால் சிலர் எதுவேண்டுமானாலும், என்ன வேண்டுமென்றாலும் செய்யலாம் என்று நினைத்துக் கொண்டிருக் கிறார்களே, அதுபோல நினைத்து அதைப் பின்பற்றுகிறார்களாவென்பதும், அல்லது நிர்வாண தேசத்தில்...

கொங்கு வேளாளர்                          மஹாநாட்டின் தீர்மானத்தின் பலன் 0

கொங்கு வேளாளர் மஹாநாட்டின் தீர்மானத்தின் பலன்

ஈரோடு தாலூக்கா வாயப்பாடி சாராயக்கடை 1-3-26 தேதி ஏலம் போடப்பட்டது. அவ்வூர் பிரபல மிராசுதாரரும் கொங்கு வேளாள குலத் தினருமான ஸ்ரீமான் ரத்தினசாமிக் கவுண்டர் குமாரர் முத்துசாமிக் கவுண்டர் ஏலமாகுமிடத்துக்கு விஜயம் செய்து வேளாள குலத்தினர் யாரும் வாயப்பாடி சாராயக்கடையை எடுக்கக்கூடாதென்று கேட்டுக்கொண்டார். அவர் கேட்டுக் கொண்டதற்கிணங்கி, ஏலம் கூற வந்திருந்த வேளாள குலத்தினர் ஏலம் கூறா மல் நின்றுவிட்டனர். வேளாள குலத்தினர் நின்றுவிடவே மற்றெவரும் ஏலம் கூறவில்லை. அதிகாரிகள் என்ன முயற்சித்தும் ஒருவரும் கடை எடுக்க வில்லையென்று கேட்டு சந்தோஷிக்கிறோம். குடி அரசு – செய்தி விளக்கம் – 21.03.1926

டிப்டி கலெக்டர் உத்தியோகம் 0

டிப்டி கலெக்டர் உத்தியோகம்

இவ்வுத்தியோகமானது நமது நாட்டின் ராஜ்ய பாரத்திற்குக் கடுகளவு உபயோகமும் இல்லாமல் – வெறும் தபாலாபீசைப் போல் காகிதம் வாங்கி மேலாபீசுக்கு அனுப்புவதும் – அரசாங்க ஜாதியாரின் சுய நன்மைக்காகவே இருந்து நமது பணத்தின் ஒரு முக்கிய பாகத்தைச் செலவு செய்து கொண்டும் வருகிறது. சுமார் 30 வருடங்களுக்கு முன்பாக ஒரு ஜில்லாவை 4-4 தாலூக் காக்கள் கொண்ட 2 டிவிஷன் அல்லது மூன்று டிவிஷன்களாகப் பிரித்து சப் கலெக்டர் என்பவருக்கு ஒரு டிவிஷனும் ஹெட் அஸிஸ்டெண்டு கலெக்டர் என்பவருக்கு ஒரு டிவிஷனும், அஸிஸ்டெண்டு கலெக்டர் என்பவரை ஜில்லாக் கலெக்டர் என்பவர் தன்னிடம் வைத்துக்கொண்டு அவருக்கு ஒரு சின்ன டிவிஷனுமாய் கொடுத்து வந்தார்கள். அப்படியிருந்தாலும் அவர் களுக்குப் பலவேலைகள் இருக்கும். அதாவது கிரிமினல் கேசு விசாரணை கள், கிரிமினல் அப்பீல்கள், ரிவின்யூž வேலைகள் முனிசிபாலிட்டி மேற் பார்வை, தாலூகா போர்டு மேற்பார்வை, இன்கம்டாக்ஸ் போடும் விஷயம், நீர்க்கூலி விதிப்பது, சிவாஜிநாமா உத்திரவு முதலியவைகள்...

கோயமுத்தூரில் காங்கிரஸ் பிரசாரத்தின் யோக்கியதை ! 0

கோயமுத்தூரில் காங்கிரஸ் பிரசாரத்தின் யோக்கியதை !

சில தினங்களுக்குமுன் கோயமுத்தூர் சேர்மெனின் சில பிராமண விரோதிகளும், அவர்கள் வாலைப்பிடித்துக்கொண்டு வயிறு வளர்க்கும் சில பிராமணரல்லாதாரும் சேர்ந்து காங்கிரஸ் மீட்டிங்கு என்பதாக பெயர் வைத்து காங்கிரஸ் கொடியுடன் டவுன்ஹாலில், ஒரு கூட்டம் கூடினார்கள். அக்கூட்டத்தில் ஒரு பிராமணர் அக்ராசனம் வகிக்கவும், மற்றொரு பிராம ணர் பேசவும் சில பிராமணர்கள் உட்கார்ந்து கொண்டு சிரிக்கவுமாய் இருந் தது. இந்நிலைமையில் பேசிய பிராமணர், சேர்மெனையும், மற்றும் சில பிராமணரல்லாத கவுன்சிலர்களையும், வைதுகொண்டே வரும் போது, மற்ற பிராமணர்கள் சிரிக்கும் ஆனந்தத்தில் மூழ்கியிருக்க உபந்யாசகர் முனிசிபல் கவுன்சில்களில் சேர்மெனுக்கு அனுகூலமாயிருக்கும் கவுன்சிலர் களெல்லாம் கைதூக்கும் கழுதைகள் என்று சொன்னார். கூட்டத்திலிருந்த ஒருவர், உடனே அடங்காக் கோபப்பட்டு, உபந்யாசகரை அவமானப்படுத்தவும், துன்புறுத்த வும் பிரயத்தனப்பட்டார். அவர் பக்கத்திலிருந்த ஒருவர், அதை தடுத்துப் பக்கத்தில் தேசியக் கொடியும் மகாத்மாகாந்தியின் படமும் இருக்கிறது போலிருக்கிறது, உபந்யாசகர் மேல்படுவதினால் நமக்குக் கவலையொன்று மில்லை; தேசீயக்கொடியின் மீது விழுந்தால் பெரிய தோசமல்லவா,...

ஈரோடு முனிசிபாலிட்டி 0

ஈரோடு முனிசிபாலிட்டி

ஈரோடு முனிசிபாலிட்டியின் சேர்மன் நடத்தையைப் பற்றி கவுன்சிலர் கள் அடிக்கடி கோர்ட்டுகளுக்குப் போக ஏற்பட்டதைப் பற்றியும், அரசாங்கத் தாருக்கு அடிக்கடி புகார்கள் போய்க் கொண்டிருப்பது பற்றியும் இதற்கு முன் பல தடவைகளில் குறிப்பிட்டிருக்கின்றோம். இவற்றில் சிங்காரவன விஷயமாக நிறைவேறின ஓர் ஒழுங்கான தீர்மானத்தை விட்டு விட்டு, நிறை வேறாத ஓர் தீர்மானத்தை நிறைவேறியதாக கெட்ட எண்ணங் கொண்டு பொய்யாகவும் அக்கிரமமாகவும் நடவடிக்கைப் புத்தகத்தில் பதிந்து கொண்டார் என்கிற காரணம் கொண்டு ஸ்ரீமான்கள் கே.ஏ.ஷேக் தாவூத் சாயபு, மு.ச. முத்துக்கருப்பன் செட்டியார் முதலியவர்கள் இத்தீர்மானம் நிறைவேற்ற வொட்டாதபடி தற்கால தடை உத்திரவு பெற்றிருந்த விஷயம் நேயர்களறிந்திருக்கலாம். அதன் பிறகு இதே சேர்மன் ஸ்ரீமான் ஸ்ரீனிவாச முதலியார் முனிசிபல் பண விஷயங்களில் நாணயமாய் நடந்துக் கொள்ள வில்லை யென்பதாக பல புகார்கள் அதிகாரிகளுக்கு எட்டியிருப்பதன் பலனாய், சிவில் கோர்ட்டு விவகாரங்களை ராஜி செய்துகொள்ள வேண்டியது சேர்மனுக்கு அவசியமாய்ப் போய்விட்டது. அதை முன்னிட்டே தற்காலம் கோர்ட்டிலிருக்கும்...

பிராமணர்களுக்கு ஒரு கை ஒடிந்தது                   மந்திரிகளுக்கு ஒரு உபத்திரவம் ஒழிந்தது -சித்திரபுத்திரன் 0

பிராமணர்களுக்கு ஒரு கை ஒடிந்தது மந்திரிகளுக்கு ஒரு உபத்திரவம் ஒழிந்தது -சித்திரபுத்திரன்

சென்னை சட்டசபையில் கொழுத்த சம்பளம் பெறும் மந்திரிகளை பொறாமைக் கொண்டு வேண்டுமென்றே உபத்திரவப்படுத்த நமது பிராமணர் களுக்கு ஸ்ரீமான்கள் ஊ.ராமலிங்க ரெட்டியார் அவர்களும் ஹ.ராமலிங்க செட்டியார் அவர்களும் வலக்கை இடக்கை போல் கொஞ்சக் காலமாய் இருந்து வருகிறார்கள். இதில் ஸ்ரீமான் ரெட்டியாருக்கு மாதம் 2000 ரூபாய் சம்பளத்தில் ஒரு உத்தியோகம் கிடைத்துவிட்டது. இதனால் பிராமணர்க ளுக்கு ஒரு கை ஒடிந்ததென்றுதான் சொல்ல வேண்டும். மந்திரிகளுக்கும் ஒரு உபத்திரவம் குறைந்தது என்றுதான் சொல்லவேண்டும். இதுபோலவே நமது ஸ்ரீமான் செட்டியார் அவர்களுக்கும் ஒரு உத்தியோகம் ஏற்பட்டு விட் டால் பிராமணர்களின் மற்றொரு கையும் தற்கால சாந்தியாய் ஒடியும். மந்திரிகளின் முழு உபத்திரவமும் நீங்கிப் போகும். மந்திரிகளின் அறியாமை யினால் ஒரு நல்ல சந்தர்ப்பத்தை மந்திரிகள் நழுவ விட்டுவிட்டார்கள். அதாவது, சட்டசபை பிரசிடெண்டு உத்தியோகத்தை செட்டியாருக்கு கொடுக்கத் தவறிவிட்டதுதான். இதை மந்திரிகளின் மன்னிக்க முடியாத குற்ற மென்றுதான் சொல்வேன். இவ்விருவருக்கும் தயவுக்காக யாரும் உத்தி யோகம்...

ஓட்டர்களை ஏமாற்றும் தந்திரம் 0

ஓட்டர்களை ஏமாற்றும் தந்திரம்

இவ்வாரம் பத்திரிகைகளெல்லாம் ஒரே மூச்சாய் சுயராஜ்யக் கக்ஷியார் சட்டசபைகளை விட்டு வெளியேறி விட்டார்கள், வெளியேறி விட்டார்க ளென்று சுயராஜ்யக் கக்ஷியாருக்காக வஞ்சகப் பிரசாரங்கள் செய்து வருகின் றன. சுயராஜ்யக் கக்ஷியார் எப்பொழுது விலகினார்கள்? எதற்காக விலகினார் கள்? எவ்வளவு நாளைக்கு விலகியிருப்பார்கள்? விலகிய பின் இவர்களு டைய வேலை என்ன? இந்த நான்கு விஷயங்களையும் கவனித்துப் பார்த்தால் சுயராஜ்யக் கக்ஷியாரின் தந்திரம் பொது ஜனங்களுக்கு விளங்கா மற் போகாது. எப்போது விலகினார்கள்? இருக்கவேண்டிய நாளெல்லாம் இருந்து விட்டு அடைய வேண்டிய பெருமையையும், உத்தியோகத்தையும், பணத்தையும், தங்கள் பிள்ளைக ளுக்கு உத்தியோகத்தையும் சம்பாதித்துக் கொண்டு கடைசியாய் சட்டசபை வேலையெல்லாம் முடிந்து, காலாவதி முடிய ஒரு வாரமிருக்கும்போது விலகி விட்டோம்! விலகி விட்டோம்!! என்று ஆடம்பரம் செய்கிறார்கள். எதற்காக விலகினார்கள்? விலகி விட்டோமென்று பொதுஜனங்களை ஏமாற்றி மறுபடியும் தங்களுக்கே வோட்டுப் போடும்படி செய்து மறுபடியும் தாங்களே போய் முன்னிலும் பலமாய் உட்கார்ந்துக் கொள்ளுவதற்காக விலகினார்கள்....

சுயராஜ்ஜிய கக்ஷியின் தேர்தல் உறுதிமொழி நிறைவேற்றல்! 0

சுயராஜ்ஜிய கக்ஷியின் தேர்தல் உறுதிமொழி நிறைவேற்றல்!

சுயராஜ்ஜியக் கக்ஷித் தலைவரான ஸ்ரீமான் எஸ். சீனிவாஸய்யங்கார், செல்லுமிடங்களிலெல்லாம் ஜஸ்ட்டிஸ் கக்ஷியார் கவர்ன்மென்டு விருந்து களுக்குப் போகிறார்கள். கவர்னர் முதலிய கவர்ன்மென்டு உத்தியோகஸ் தர்களுக்கு விருந்து கொடுக்கிறார்கள். நாங்கள் விருந்துக்கும் போகோம்; விருந்தும் கொடுக்கமாட்டோம்; ஆதலால் நாங்கள் ஒத்துழையாமை வாசனைக்காரர் என்று உறுதிமொழி கூறி ஓட்டு கேட்கிறார். இவ்வுறுதிமொழிக்கு ஜாமீன் கொடுப்பது போல் ஸ்ரீமான் சி.ராஜ கோபாலாச்சாரியாரும் சுயராஜ்யா கக்ஷியார் உறுதிமொழிப்படி நடப்பார்கள் அதற்கு நான் ஜாமீன் என்று மேலொப்பமும் போடுகிறார். மேலொப்ப கையெ ழுத்து முடிவதற்குள்ளாகவே சுயராஜ்யக் கக்ஷி முக்கியஸ்தரான சென்னை கார்ப்பரேஷன் தலைவர் ஸ்ரீமான் சாமி வெங்கிடாசலம் செட்டியார் கவர்ன ருக்கும் சர்க்கார் உத்தியோகஸ்தருக்கும் விருந்து கொடுத்து வருகிறார். தேர்தல் பாக்கியிருக்கும்போதே இவ்வளவு நாணயமாய் நடப்பவர் கள் தேர்தல் முற்றும் நடந்த பிறகு என்ன செய்வார்கள் என்பதை ஜாமீன் தாரான ஸ்ரீமான் ஆச்சாரியாரையும் சாக்ஷிக் கையெழுத்து போடுபவரான ஸ்ரீமான் முதலியாரையும் நம்புபவர்கள் தான் பதில் சொல்லவேண்டும்.. குடி அரசு...

கதர் 0

கதர்

சபாநாயகரவர்களே, சபையோர்களே! இந்த மகாநாட்டில் எனக்கு முன் பேசிய கனவான்கள் ஒவ்வொரு வரும் முக்கியமாக கதர், மதுவிலக்கு, தீண்டாமை என மூன்று விஷயங் களைத்தான் சொல்லியிருக்கிறார்கள். நான் அதிகம் சொல்ல வேண்டிய தில்லை. ஏதோ என் மனதிலுள்ள சில விஷயங்களைச் சொல்ல அநுமதி கொடுத்ததால் சொல்லுகிறேன். கொங்குவேளாள குலத்தினர் இத்துடன் மூன்று மகாநாடு கூடியாகி விட்டது. சற்று உணர்ச்சியையும் கொடுத்திருக்கிறது. மகாநாட்டிற்கு வேளாள சமூகத்தினர் திருவிழாவுக்கு வருவதுபோல் எண்ணி வருகிறார்கள். காப்பியும் சாப்பாடும் சாப்பிட்டுவிட்டுப் போய்விடுகிறார்கள். இந்த சமூகத்தார்களிருக் கும் நிலைமைக்கு இச்சங்கம் இந்த வேலை செய்தது போதியதல்ல. இச்சமூகத்தின் கஷ்டந்தான் நாட்டின் கஷ்டமாகும். இச்சமூகத்தின் முன்னேற் றந்தான் நாட்டின் முன்னேற்றமாகும். கதரும், மதுவிலக்கும் உங்கள் சமூகத் தினர் செய்யாதது பெருங்குறை. உபசரணைக் கமிட்டித் தலைவர் ஸ்ரீமான் ஞ.ரத்தினசபாபதிக் கவுண்டர் கதரைப் பற்றித் தமது பிரசங்கத்தில் குறிப்பிட வில்லையென்று ஸ்ரீமான் ராஜகோபாலாச்சாரியாரவர்கள் குறிப்பிட்டார். அதன் காரணம் வேறொன்றுமில்லை; அவர் கதர் கட்டவில்லை;...

தங்கப்பெருமாள்  பாரதத் தாயின் துர்ப்பாக்கியம் 0

தங்கப்பெருமாள் பாரதத் தாயின் துர்ப்பாக்கியம்

தமிழ்நாட்டின் அருந்தவப்பயன், நமது ஆருயிர் நண்பர் ஸ்ரீமான் வா.மு. தங்கப்பெருமாள் பிள்ளை இம்மாதம் 6 – ந் தேதி காலை 4 மணிக்கு உயிர் நீத்தார் என்னும் சேதியை எழுதவே மெய் நடுங்குகிறது. அவருக்கு இன்னமும் ஆண்டு முப்பது கூட ஆகவில்லை. அவர் ஈரோடு முனிசிபல் எல்லைக்குள் கருங்கல் பாளையம் என்னும் கிராமத்தில் வாத்தியார் வீடு என்று சொல்லும்படியான புராதனமும் கண்ணியமும் வாய்ந்த ஒரு வைணவ வேளாள செல்வக் குடும்பத்திற்குச் செல்வமாய் பிறந்தவர். அவரது இளம் வயதிலே, அதாவது 12 – வது வயதிலேயே தந்தை இறந்து போனார். ஆயினும் சிறிய தந்தையார் ஆதரணையால் கல்வி கற்கப்பட்டு தனது 21 – வது வயதில் க்ஷ.ஹ பட்டம் பெற்று, 24 – வது வயதில் க்ஷ.டு.பட்டமும் பெற்று, ஈரோடு ஜில்லா முனிசிபு கோர்ட்டில் 1921 – ம் வருஷத்தில் வக்கீல் தொழிலை ஆரம் பித்தார். ஆரம்பித்த மாதமே 200 ரூபாய் வரும்படி...

இந்து தேவஸ்தான சட்டம் 0

இந்து தேவஸ்தான சட்டம்

இந்து தேவஸ்தான சட்டத்தைப் பற்றி பாமர ஜனங்களை ஏமாற்ற தமிழ்நாட்டு தேசீய பிராமணர்களில் பெரும்பாலோர் செய்த கிளர்ச்சி, ஸ்ரீமான் கள் ஈ.வெ.ராமசாமி நாயக்கர், வரதராஜுலு நாயுடு முதலியவர்கள் போட்ட வெடி குண்டினால் நசுக்குண்டு போயிருந்தாலும், வேறு விதமான பல தந்திரங்கள் இன்னமும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அதாவது, வைசிராய் இதற்கு அநுமதி கொடுக்கச் செய்யாமலிருப்பதற்கு எவ்வளவோ பாடு பட்டார்கள். அதுவும் தோல்வியுற்றது. இந்தியா சட்டசபையில் எவ்வ ளவோ தந்திரம் செய்தார்கள். அதிலும் தோல்வியுற்றது. சீமைக்குப் போய் சக்கரவர்த்தியின் மூலம் இச்சட்டத்தை அழிக்கப் பார்த்தார்கள். அதிலும் தோல்வியுற்றது. கடைசியாக தங்கள் சட்ட ஞான தந்திரத்தைக் கொண்டு ஹைகோர்ட்டைப் பிடித்தார்கள். அங்கு ஏதோ கொஞ்சம் ஜயமடைகிறார்கள் போல் தோன்றுகிறது. அதாவது, பல மடாதிபதிகள் பேரால் அவர்களிடம் வக்காலத்து வாங்கி இச்சட்டமே சட்டப்படி செல்லாதென்றோ, இச்சட்டம் செய்ய சட்டசபைக்கு சட்டமில்லை என்றோ, வாதம் சொல்லி வழக்குத் தொடர்ந்திருக்கிறார்கள். வழக்கின் தன்மையைப் பற்றி இது சமயம் நாம்...

தெருவில் நடத்தலும்                              சர்க்காரின் மனப்பான்மையும் 0

தெருவில் நடத்தலும் சர்க்காரின் மனப்பான்மையும்

கோயமுத்தூர் ஜில்லா உடுமலைப்பேட்டை தாலூக்கா குமரலிங்கம் என்னும் கிராம அக்கிரஹாரத்தில் ஒரு சர்க்கார் பொது தபாலாபீஸ் இருந்து வந்தது. அவ்வூர் அக்கிரஹாரவாசிகளாகிய பிராமணர்கள் தாழ்ந்த வகுப்பார் என்று சொல்லப்படும் ஆதி திராவிடர்களை தீண்டாதார் என்னும் காரணத் தால் அந்தத் தபால் ஆபீஸுக்குச் செல்லவும் அவ்வீதியில் நடக்கவும் விடுவ தில்லை. அதைப்பற்றி ஸ்ரீமான் சு.வீரய்யன் சட்டசபையில் ஒரு கேள்வி கேட்டார். அதாவது, 1924 ´ செப்டம்பர் – µ 25- ² சகல பொதுத் தெருக்களிலும் சகல ஜாதி மனிதர்களும் நடக்கலாம் யாரும் ஆnக்ஷபிக்கக் கூடாது என்ற 2660 – ம் நெம்பர் அரசாங்க உத்தரவு குமரலிங்கம் பிராமணர் களுக்குத் தெரிந்திருந்தும், அவர்கள் ஆதிதிராவிடர்களை தெருவில் நடக்கவிடாமல் தடுக்கிறார்களே; இதைப்பற்றி கேள்வியில்லையா என்று கேட்டார். அதற்கு சர்க்கார் மெம்பர் பதிலளித் ததாவது:- இது விஷயத்தைப் பற்றி போஸ்ட் மாஸ்டர் ஜனரலுக்கு எழுதி யிருக்கிறது; அவரும் ³ தபாலா பீஸை வேறு வீதிக்கு “மாற்றி...

சக்கரை என் நண்பரல்ல ( நன்றி கெட்ட தன்மை ) 0

சக்கரை என் நண்பரல்ல ( நன்றி கெட்ட தன்மை )

சென்னை கார்பொரேஷன் தேர்தலின் போது சென்னை கார்பொரே ஷனை பிராமணக் கார்பொரேஷனாக்க ஸ்ரீமான்கள் சக்கரை செட்டியாரும், ஆதிகேசவ நாயக்கரும், பிராமணரல்லாதார் பலரும் அரும்பாடு பட்டார்கள்; தங்கள் வகுப்பாரை வைதார்கள்; தேசத் துரோகி என்றார்கள்; சமூகத் துரோகி என்றார்கள்; இன்னும் ஒரு மயிர்க்காலுக்கு ஒரு பொய்யும் சொல்லி பாமர ஜனங்களை ஏமாற்றி பிராமண கார்பொரேஷன் ஆக்கினார்கள். பிறகு, இவர்கள் கதி என்ன ஆயிற்று? ஸ்ரீமான் ஆதிகேசவ நாயக்கரைப்பற்றி எங்கு தேடிப் பார்த்தாலும் ஆசாமி இருக்கிற இடமே தெரியாமல் ஒழித்து விட்டார் கள். ஸ்ரீமான் சக்கரை செட்டியாரைப் பற்றியோவென்றால் நினைப்பதற்கே மயிர் கூச்சல் எடுக்கிறது. அதாவது, சென்ற வாரம் கார்பொரேஷன் மீட்டிங் கில் ஸ்ரீமான் சக்கரை செட்டியார் தனது அருகில் இருந்த ஒரு பிராமண நண்பரிடம் தனது நண்பர் என்கிற முறையில், ஏதோ சில வார்த்தைகள் பேசிக் கொண்டிருந்தாராம். அதை ஒண்டிக் கேட்டுக் கொண்டிருந்த மற்றொரு பிராமண மெம்பர் உடனே அதை கார்பொரேஷன் பிரசிடெண்ட்...

இந்து மகாசபையின் உண்மை நிறம்! 0

இந்து மகாசபையின் உண்மை நிறம்!

சிரத்தானந்தரே அறிந்து விலகிக் கொண்டார் நமது நாட்டில் இந்து மகாசபை என்னும் பேரால் ஒரு பிராமண வர்ணாஸ்ரம சபை ஏற்பட்டிருப்பதைப்பற்றி நாம் பல முறை – அது, இந்தியா வை அந்நியருக்கு காட்டிக் கொடுப்பதற்கு ஆதரவாயிருந்த – இருக்கிற பிராமண வர்ணாஸ்ரமத்தை நிலை நிறுத்தவும், இந்துக்களும், முஸ்லீம்களும் ஒன்றுபட முடியாதபடி மத்தியில் ஒரு தடைக்கல்லாயிருக்கவும் (ஏனென்றால் இந்துக்களும், முஸ்லீம்களும் ஒன்றாய் விட்டால் சர்க்காரை விட வர்ணாஸ் ரமிகளுக்கு பெரிய ஆபத்து ) ஏற்பட்டதென்றும்; பிராமண சூழ்ச்சிகள் பல வற்றில் இதொன்று எனவும் பேசியும், எழுதியும் வந்திருக்கிறோம். அதற்கு ஆதாரமாகவும் தமிழ் நாட்டிலுள்ள இந்து மகாசபைக்கு வடிகட்டின வர்ணாஸ் ரமியான ஸ்ரீமான் கூ.சு. ராமச்சந்திரய்யர் அக்கிராசனராயிருப்பதும்; ஒரு வேளை சாப்பாடு ஒரு பிராமணக் குழந்தை சாப்பிடுவதை ஒரு பிராமண ரல்லாத குழந்தை பார்த்து விட்டால் ஒரு மாதம் பட்டினிக் கிடப்பேன் என்று சொன்ன ஸ்ரீமான் ஆ.மு. ஆச்சாரியார் முதலியோர் முக்கியஸ்தர்களாகவும் இருப்பதோடல்லாமல், தமிழ்...

பாதிரிமார்களும் ஆச்சாரியார்களும் 0

பாதிரிமார்களும் ஆச்சாரியார்களும்

நம் நாட்டு இந்து ஜனங்களுக்கு பாதிரிமார்களென்றால் ஒரு வித பக்தியும் மரியாதையும் அவர்களிடம் ஏற்பட்டு இருக்கிறது. அவர்கள் இரகசி யத்தை நமது மக்கள் உணரவே முடியாமல் போய் விடுகிறது. பொதுவாக பாதிரிமார்கள் என்போர் ஆங்கில அரசாங்கத்திற்கு ஒரு நடுத் தூண் போன்ற வர்கள். சுருக்கமாய் ஒரு வார்த்தையில் சொல்லுவதானால் அரசாங்கத் திற்கும், இந்தியக் குடி மக்களுக்கும் இடையில் உள்ள ஒற்றர்கள் என்றுதான் அவர்களைச் சொல்லவேண்டும். அப்பாதிரிமார்களிலேயும் உண்மையாய் கிருஸ்துநாதருடைய கட்டளைப்படி நடக்கக் கூடியவர்களோ, நடக்க வேண் டும் என்கிற ஆசையுள்ளவர்களோ சிலர் இருக்கலாம். நாம் நமது கண்ணுக் குத் தென்பட்ட அளவுக்கு பெரும்பான்மையானவர்களைப் பற்றி நமது அபிப்ராயத்தை எழுதுவோம். ஒரு தேசத்தையோ ஒரு மதத்தையோ ஜெயித்துக் கைப்பற்ற வேண்டுமானால், எப்படி திருடன் ஒரு வீட்டில் திருடு வதானால் கன்னம் வைத்து துவாரம் செய்துகொண்டு முதலில் தன் காலை விட்டு பார்ப்பானோ அதுபோல் பாதிரிமார்களை, அதாவது மதக் குருக்கள் என்பவர்களை முதலில் அனுப்புவது...

தமிழிற்குத் துரோகமும்                        ஹிந்தி பாஷையின் இரகசியமும் 	– சித்திரபுத்திரன் 0

தமிழிற்குத் துரோகமும் ஹிந்தி பாஷையின் இரகசியமும் – சித்திரபுத்திரன்

நமது நாட்டின் nக்ஷமத்திற்காக என்று எந்தக் காரியம் ஆரம்பிக்கப் பட்டாலும், அவற்றை நம் நாட்டுப் பிராமணர்கள் கைப்பற்றிக் கொண்டு அதனால் தாங்கள் பிழைக்கும்படியாகவும், நமக்கு பெரிய ஆபத்து விளையும்படியாகவே செய்து விடுகிறார்கள். எதுபோலென்றால்; நமது சர்க்கார் நமக்குச் சுயராஜ்யம் கொடுப்பதாய் சொல்லி முதல் தடவை, இரண்டாந் தடவையாகக் கொடுக்கப்பட்டு வந்த சீர்திருத்தங்கள் என்பது, நமது நாட்டுக்கு அதிக வரி போடவும், ஜாதிச் சண்டைகளும், பொறாமையும் மேலிட்டு ஒருவரையொருவர் ஏமாற்றுவதன் மூலம் ஒற்றுமைக் குறைவு ஏற்படவும், கைத்தொழில்கள் அற்றுப் போய் நாளுக்கு நாம் மனச்சாக்ஷி யையும், கற்பையும் விற்று ஜீவிக்கும்படி ஏழைகள் அதிகமாகவும், அரசாங்கத் தார் உத்தேசம் நிறைவேறத்தக்க வண்ணம் நமது நாட்டுப் பணம் கொள்ளை போகவும், உபயோகப்படுவது போலவும், நமது மக்கள் படிக்க வேண்டும் என்கிற எண்ணத்தின் பேரில் சர்க்காரை பள்ளிக் கூடம் வைக்கும்படி நாம் கேட்டுக் கொள்வதினால் அந்தப்படிப்பு நம் நாட்டுக்குத் துரோகம் செய்யத் தக்க அளவுக்குச் சர்க்கார் ஆக்ஷிக்கு...

பிராமணப் பத்திரிகைகளின் பிரசாரம்            உஷார் ! உஷார்!! உஷார்!!! -சித்திரபுத்திரன் 0

பிராமணப் பத்திரிகைகளின் பிரசாரம் உஷார் ! உஷார்!! உஷார்!!! -சித்திரபுத்திரன்

பொது ஜனங்கள் தேசத்தின் உண்மை நிலையை உணருவதற்கு ஆதாரமாயிருப்பது வர்த்தமானப் பத்திரிகைகள் என்று சொல்லுவார்கள். ஆனால், அவை நமது நாட்டின் உண்மை நிலையை மறைத்துப் பொய்யைச் சொல்லி பாமர ஜனங்களை ஏமாற்றி, ஒருவரைக் கெடுத்து ஒருவர் பிழைப்ப தற்குத்தான் அவை முழுவதும் ஆதாரமாயிருந்து வருகிறது. நமது நாட்டைப் பொறுத்தவரையில், பெரும்பான்மையான மக்கள் தங்கள் முன்னோர்கள் எவ்வளவு பெருமை உடையவர்களாயும், இத் தேசத்தையே ஆண்டவர் களாயும், பராக்கிரமசாலிகளாகவும் இருந்து வந்திருந்த போதிலும் இன்றையத் தினம் “பிற்பட்டவர்”களாகவும், “சூத்திரர்”களாகவும் இருப்பது ஏன்? இதற்குப் பொறுப்பாளி யார் என்று பார்த்தால் அது நமது நாட்டுப் பத்திரிகை களேயாகும். தற்காலம் நமது நாட்டில் செல்வாக்குப் பெற்று பெரும்பாலோர் கையிலும் ஊசலாடுவது பிராமணப் பத்திரிகைகளே அல்லவா? அப்பத் திரிகைகளுக்கு அவ்வவ்விடங்களின் சமாச்சாரங்களை எழுதியனுப்பும் நிரூபர்களும் பிராமணர்களே அல்லவா? அப் பத்திரிகைகளுக்கு ஏஜெண்டு களாயிருந்து விற்றுக் கொடுப்பவர்களும் பெரும்பாலும் பிராமணர்களே அல்லவா? அப்படி இருந்தும் அதற்குப் பணம் கொடுத்து வாங்கிப்...

பிராமண உபாத்தியாயர்களின் பேரில் உள்ள சந்தேகங்களுக்கு ஆதாரம் 0

பிராமண உபாத்தியாயர்களின் பேரில் உள்ள சந்தேகங்களுக்கு ஆதாரம்

பிப்ரவரி மாதம் 19-ந் தேதி கோயமுத்தூரில் நடந்த ஜில்லாக் கல்விச் சபைக் கூட்டத்தில் சட்டசபை மெம்பரான ஸ்ரீமான் ஆர்.வீரய்யன் ஒரு தீர்மானம் கொண்டுவந்தார். அதாவது, “அழுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பிள்ளைகள் பள்ளிக்கூடத்தில் அதிகமாகப் படிப்பதற்காகப் பொதுப்பள்ளிக் கூடங்களுக்கு, தாலூகாபோர்டு, ஜில்லாபோர்டு, முனிசிபல் கவுன்சில் முதலிய வற்றின் தலைவர்கள் பிராமணரல்லாத உபாத்தியாயர்களையே நியமிக்க வேண்டும். இப்பொழுதுள்ள ஒரு பிராமண உபாத்தியாயர் வேறு பள்ளிக் கூடங்களுக்கு மாற்றி விட வேண்டும்” என்பதாகப் பிரேரேபித்தார். இதை ஜனாப் கலந்தர் சாயபு ஆமோதித்தார். இதை ஸ்ரீமான் சி.வி. வெங்கிட்ட ரமணய்யங்கார் இத்தீர்மானம் பிராமணர்களைக் குறைகூறுவதாயிருக்கிறது என்ற காரணத்தால் ஒழுங்குத் தவறென்ற ஆnக்ஷபனை கிளப்பியதில் தலைவர் இவ்வித தீர்மானம் கொண்டுவர யாருக்கும் அவகாசம் உண்டென் றும் ஒழுங்கானதுதான் என்பதாகவும் சொல்லி விட்டார். பிறகு இது வெளிப்படையாய் ஒரு வகுப்பாரைப் பாதிக்கிறது என்று சிலர் கருதியதால், கோயமுத்தூர் ஜில்லாபோர்டு பிரசிடெண்டும் – அந்நகர் முனிசிபல் சேர் மெனுமான ஸ்ரீமான் சி.எஸ்....

பிராமணர்களின் சங்கங்கள் 0

பிராமணர்களின் சங்கங்கள்

பிறவியில் உயர்வு தாழ்வு உண்டு என்பதையும், அவற்றில் பிராமணர் களாகிய தாங்கள்தான் உயர்ந்தவர்கள் என்பதையும் நிலை நிறுத்த இதுசமயம் நமது நாட்டில் ஆங்காங்கு பிராமண சங்கங்கள் இரகசியமாயும் வெளிப் படையாயும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. நமது தேசீய பிராமணர்கள் நம்மி டம் வரும்போது எல்லோரும் சமம் என்று சொல்லிக் கொண்டும், தீண்டாமை, உயர்வு – தாழ்வு இவைகளை ஒழிக்கப் போகிறோம் என்று சொல்லிக் கொண்டும் வோட்டுப் பெறுவதும், பிராமண சங்கங்களுக்குப் போய் தீண்டா மையையும் உயர்வு தாழ்வையும் நிலை நிறுத்த அவர்களுக்கு வழி சொல்லிக் கொடுப்பதும் அதற்கநுகூலமாய் நம்முடைய வோட்டு பலன்களை உபயோகப்படுத்துவதுமாக இருக்கிறார்கள். இவற்றை நம்மில் பலர் அறிந்தும் தங்கள் சுய நலத்தை முன்னிட்டு அறியாதவர்போல் நடித்து அவர்களுக்கு வோட்டு வாங்கிக் கொடுத்தும், பிராமண சங்கங்களை ஆதரித்தும் திரிகிறார் கள். இதை அறிய வோட்டர்களுக்கு இன்னமும் யோக்கியதை வரவில்லை என்றால் இந்த வோட்டர்களின் பிரதிநிதிகள் எப்படி நமது நாட்டுக்குப் பிரதிநிதிகளாவார்கள்? குடி...

வங்காளத்தில் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் 0

வங்காளத்தில் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம்

இம் மாதம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வங்காள சட்டசபையில் சுயராஜ்யக் கட்சியைச் சேர்ந்த ஒரு பிராமணரல்லாத அங்கத்தினர் வகுப்பு வாரிப் பிரதிநிதித்துவத்தைப் பற்றி ஒரு தீர்மானம் கொண்டு வந்தார். அதாவது:- “இம்மாகாணத்தில் பற்பல வகுப்பினருடைய ஜனத் தொகைக்குத் தக்கபடி இந்த சபைக்குப் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படுமாறு ஏற்பாடு செய்ய வேண்டும்” என்கிற தீர்மானத்தைப் பிரேரேபித்தார். குறைந்த எண்ணிக்கை உள்ளவர்களான ஆங்கிலோ-இந்தியர், ஐரோப்பியர், இந்திய கிருஸ்தவர் முதலியவர்கள் தங்களுக்கு ஒன்றுமில்லாமல் போய்விடுமோ எனப் பயந்து இதை ஆnக்ஷபிக்கத் தொடங்கினார்கள். ஸர். அப்துர் ரஹிம் இவ்வகுப்பார்களுக்கும் சரியான பிரதிநிதித்துவம் கிடைக்கும் படியாக ஒரு திருத்தம் அசல் தீர்மானத்தோடு சேர்த்தார். அதாவது:- “குறைந்த வகுப்பினர் முதலியவர்களுக்கும் போதுமான பிரதிநிதித் துவம் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்” என்ற திருத்தத்தை பிரேரேபித்தார். இதற்கு விரோதமாயிருந்த சிலர், காஞ்சீபுரத்தில் செய்த தந்திரத்தைப் போலவே சட்டம் ஒழுங்கு என்பதன் பேரால் இதை நசுக்கிவிடப் பார்த்தார் கள். ஆனால் அக்கூட்டத்தின் தலைவர் காஞ்சீபுரத் தலைவர் போல்...

ஏமாற்றுப் பிரசாரம் 0

ஏமாற்றுப் பிரசாரம்

ஸ்ரீமான்கள் சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் காந்தியின் பிரதிநிதி யென்கிற பேரைச்சொல்லிக் கொண்டும், திரு.வி. கலியாணசுந்தர முதலியார் பிராமணரல்லாதார் பிரதிநிதி என்கிற பெயரைச் சொல்லிக்கொண்டும், ஸ்ரீமான்கள் ஏ.ரெங்கசாமி ஐயங்கார், எஸ். சீனிவாசய்யங்கார், எஸ். சத்திய மூர்த்தி ஆகியவர்கள் சுயராஜ்யக் கட்சியின் பேரைச் சொல்லிக்கொண்டும் காங்கிரஸ் சார்பாக தேசத்திற்கு நன்மை செய்கிறவர்கள் போல் நடித்து, நமது நாட்டில் ஏமாற்றுப் பிரசாரம் செய்து வருகின்றார்கள். அப்படிச் செய்வதிலும், இவர்கள் சொல்லிவரும் விஷயங்கள் ஒன்றுக்கொன்று பொருத்தமில்லாத தாய், கொஞ்சம் புத்தியுள்ளவனும் இவர்களுடைய புரட்டுகளை அறிந்து கொள்ளக்கூடிய மாதிரியில் பேசி வருவது நமக்கே ஆச்சரியமாய் இருக் கின்றது. அதாவது:- பிராமணர்களின் கக்ஷியாகிய தமிழ்நாட்டு சுயராஜ்யக் கக்ஷிக்கு ஓட்டு வாங்கிக் கொடுக்கும் விஷயத்தில் “பிராமணரல்லாதார் பிரதிநிதியான” முதலியார் சுயராஜ்யக் கட்சியார் சட்டசபையில் ஒத்துழையாமை செய்வார் கள்; ஆதலால் அவர்களுக்கு வோட்டுக் கொடுங்களென்கிறார். ஸ்ரீமான் ஆச்சாரியாரோ சுயராஜ்யக் கட்சியார் சட்டசபையில் மதுவிலக்கு செய்வார் கள்; ஆதலால் அவர்களுக்கு வோட் செய்யுங்கள் என்கிறார். சுயராஜ்யக்...

மன்னிக்க வேண்டும் 0

மன்னிக்க வேண்டும்

அச்சு எந்திரம் ஒடிந்து போனதால் சென்ற வார பத்திரிகை அனுப்ப முடியாமல் போய்விட்டது பற்றி சந்தாதாரர்கள் மன்னிக்க வேண்டுமாய் பிரார்த்திக்கிறேன். – ஈ.வெ.ராமசாமி குடி அரசு – அறிவிப்பு – 28.02.1926

சுயராஜ்யக் கக்ஷியின் வேஷமும்                ஜஸ்டிஸ் கக்ஷியாரின் மனச்சாக்ஷியும் 0

சுயராஜ்யக் கக்ஷியின் வேஷமும் ஜஸ்டிஸ் கக்ஷியாரின் மனச்சாக்ஷியும்

சென்னை கார்பொரேஷனிலிருக்கும் சுயராஜ்யக் கட்சி அங்கத்தினர் கள் தங்களுக்கு நம்பிக்கையில்லாததும், தாங்கள் செய்யாததும், தாங்கள் எதிர்ப்பதுமான கதர் ராட்டினம் என்னும் விஷயங்களைக் கார்ப்பொ ரேஷனுக்குள் புகுத்தி, பிராமணரல்லாதார் பேரில் பழியையும் வெறுப்பையும் பொது ஜனங்களுக்கு உண்டாக்குவதற்காக பல தந்திரங்கள் செய்கின்றார்கள். அதாவது கார்பொரேஷன் சிப்பந்திகள் கட்டாயமாக கதர் உடுத்த வேண்டும் என்கிற ஓர் தீர்மானத்தையும், கார்பொரேஷன் பள்ளிக்கூடங்களில் படிக்கும் பிள்ளைகளெல்லாம் கைராட்டினம் சுற்ற வேண்டுமென்கிற தீர்மானத்தையும் நிறைவேற்றியிருக்கிறார்கள். இவ்விரு தீர்மானங்களையும் சுயராஜ்யக் கக்ஷியார் தங்கள் திட்டத்தில் ஒன்றாய் ஒப்புக் கொள்ளுவதுமில்லை; தாங்களும் நடவடிக்கையில் செய்வதில்லை. கதரைப்பற்றிக் கார்பொரேஷன் சபைக்கு வரும்போது மாத்திரமும், வோட்டுக் கேட்கும் போது மாத்திர மும்தான் கதர் கட்டிக் கொள்ளவேண்டுமென்று தீர்மானித்திருக்கிறார்கள். ராட்டினத்தைப் பற்றியோவென்றால், அது மகாத்மா பார்த்துக்கொள்ள வேண்டுமென்று விட்டு விட்டார்கள். இப்படி இருக்க இதை கார்பொரேஷன் சிப்பந்திகளுக்கு கட்டாயப்படுத்த சுயராஜ்யக் கக்ஷியாருக்கு யோக்கியதை ஏது? அப்படி இவர்கள் ஏதாவது தீர்மானம் கொண்டு வருவதாயிருந்தாலும், சம்பளம் வாங்கும்போது...

தற்கால நிலைமை 0

தற்கால நிலைமை

பாலக்காட்டில் சொற்பொழிவு நமது நாட்டின் தற்கால நிலைமையைப் பற்றி பேசுவதென்றால் நினைக்கும் போதே வேதனையாகவும் துக்கமாயும் இருக்கிறது. எவ்வளவோ பெருமையாக இருந்ததாகச் சொல்லப்படும் நமது நாடு இன்று இருக்கும் நிலை, அந்நிய ஆக்ஷிக்கு அடிமையாகி- அந்நிய ஆக்ஷி என்றால் மனிதத் தன்மைக்கு அந்நிய – அதாவது, மனிதனுக்கு மனிதன் பிடித்து தின்னும் மாதிரியில் வலியவனுக்கு எளியவன் ஆகாரமாய் நடைபெற்று வருகின்றது. நமது நாட்டின் மதக் கொள்கைகளின் பலன்களில் இவ்வந்நிய ஆட்சி ஒன் றென்றும், மதத்தின் பேரால் நம் தேசத்துக்கு ஏற்பட்ட கெடுதியின் பலனாய் நமது நாடு இக்கெதியை அடைந்தது, ஆதலால் வெறும் ராஜீய சீர்திருத் தத்தைப் பேசிக் கொண்டிருப்பதில் பிரயோஜனமில்லை, நமது மதத்தின் பேரால் ஏற்பட்ட ஜாதி வித்தியாசங்களில் மனிதர்கள் பிறவியிலேயே பிராம ணன் உயர்ந்த ஜாதியான் என்பதும், பஞ்சமன் தாழ்ந்த ஜாதியானென்பதும் நமது நாட்டை விட்டு ஒழிந்தாலல்லாது நமது நாடு சுதந்திரமும், சுயமரியா தையும், சுய ஆட்சியும் பெற்று வாழ...

பிரசாரக் கூட்டங்களில் குழப்பம் 0

பிரசாரக் கூட்டங்களில் குழப்பம்

தற்காலம் சுயராஜ்யக் கக்ஷிப் பிரசாரத்திற்காக ஸ்ரீமான்கள் சீனிவாசய் யங்கார், கலியாணசுந்தர முதலியார் முதலியோர் ஆங்காங்கு செல்லுவதும் சட்டசபை அபேக்ஷகர்களைத் தங்கள் கக்ஷிக்கு இழுப்பதுமான பிரசாரங்கள் நடந்து வருவதைப் பத்திரிகை வாயிலாக அறிகிறோம். அதோடு கூடவே ஒவ்வொரு கூட்டங்களிலும் குழப்பங்களும் கூச்சல்களும் நடப்பதும் பார்க்கிறோம். உதாரணமாக, மதுரையில் மீட்டிங்கு நடக்கவிடாமற் செய்ததும் கும்ப கோணத்தில் போலீஸ் உதவியினால் தலைவர்கள் என்போர் வீடு போய்ச் சேர்ந்ததும், காஞ்சீபுரத்தில் கேள்விகளும் குழப்பங்களும் நடந்ததும் பத்திரி கைகள் மூலமாகவும் நிருபர்கள் மூலமாகவும் தெரிய வருகிறது. இம்மா திரியான காரியங்களை நாம் மனப்பூர்த்தியாக வெறுக்கிறோம். பிரசாரகர்கள் என்ன கருத்தோடு வந்த போதிலும் அவர்கள் சொல்லுவது முழுமையும் பொறுமையாய்க் கேட்டுவிட்டு மறுப்பு ஏதாவது இருந்தால் பேசுவதற்கு அவகாசம் கேட்க வேண்டியது, அக்கூட்டத்தார் அதை மறுப்பார்களானால் பேசாமலிருந்து விட்டு அடுத்தநாள் ஒரு கூட்டத்தைக் கூட்டி நமது அபிப்பி ராயத்தைச் சொல்ல வேண்டுமேயல்லாமல், குழப்பம் செய்வதோ, பேச முடியாமற் தடுப்பதோ போலீஸ் தயவைக்...

ஓட்டர்களை ஏமாற்றுதல் 0

ஓட்டர்களை ஏமாற்றுதல்

ஸ்ரீமான் சி. இராஜகோபாலாச்சாரியார் முதலிய பிராமணர்களின் தந்திரம் சென்ற சில காலமாக பிராமணரல்லாதார் பெரும்பாலும் சட்ட சபைகளிலும், தாலூகா , ஜில்லா போர்டு, முனிசிபாலிடி முதலிய ஸ்தல ஸ்தாப னங்களிலும் மெஜாரிட்டியாராக ஏற்பட்டு, பிராமணரல்லாதாரின் முன்னேற் றத்தைக் கவனித்துக் கொண்டு வருவதில் தென்னாட்டுப் பிராமணர்கள் மனம் பொறாதவராகி பொறாமையுங் கெட்ட எண்ணமுங் கொண்டு, எப்படியாவது பிராமணரல்லாதாரைச் சட்டசபைகளிலிருந்தும், ஸ்தல ஸ்தாபனங்களிலி ருந்தும் விரட்டியடித்து, முன்போலவே தங்கள் ஆதிக்கத்தைப் பலப்படுத்திக் கொள்ள வேண்டும் என்கிற எண்ணத்தின் பேரில் சகல பிரயத்தனங்களையும் செய்து வருகிறார்கள். பிராமணரல்லாதாரில் சில ராஜீயவாதிகளென்போர் இவற்றை நன்றாய் அறிந்திருந்தும், தங்கள் வயிற்றுப் பிழைப்புக்கும், வாழ்க்கை நலனுக்கும், கீர்த்திக்கும் ஆசைப்பட்டுக் கொண்டு பிராமணர்களின் வாலைப் பிடித்துக் கொண்டு திரிவதோடல்லாமல், பிராமணரல்லாத சமூகத்தாருக்கே கேடு சூழும்படி வாழ்ந்து வருகிறார்கள். அல்லாமலும், பிராமணரல்லாத தேசீயப் பத்திரிகைகள் என்று சொல்லப்படும் பல பத்திரிகைகளும் தங்களுக்கென ஒரு கொள்கையில்லாமலும், மனிதத் தன்மையும், ஆண்மைத் தனமும் இல்லாமலும் பத்திரிகை...

குறள் 0

குறள்

நல்லாண்மை யென்பது ஒருவருக்குத் தான் பிறந்த இல் ஆண்மை ஆக்கிக்கொளல். நாயனார் அவர்கள் குறளில், நல்ல ஆண்மை என்பது ஒருவருக்குத் தான் பிறந்த இல்லாண்மை ஆக்கிக்கொளல் என உரைத்திருக்கின்றதையும், அதன் கருத்து ஒருவனுக்கு ஆண்மை என்று சொல்லப்படுவது தன் குடியை உயர்த்திக் கொள்வது என்பதையும் அனைவரும் உணர்ந்திருப்பார்கள். ஆனால், நமது நாட்டில் ஆண்மைக்காகப் பாடுபடுகின்றோமென்று சொல்லிக் கொள்ளுகிறவர்கள் நல்லாண்மை ஏற்பட வேண்டுமானால் வகுப்பு நலனையும் குல நலனையும் மறந்துவிட வேண்டும்; தேசத்தையே பெரிதாக நினைக்க வேண்டும் என்று மனதார அர்த்தமில்லாத மாய வார்த்தைகளைச் சொல்லி, பாமர ஜனங்களாகிய தம் குலத்தாருக்கே துரோகம் செய்து, அவர் களைக் காட்டிக் கொடுத்து, அந்நிய குலத்தாருக்கு ஒற்றர்களாகி, அவர் பின் னால் திரிந்து வயிறு வளர்ப்பதையும், தத்தமக்கு ஆக்கந்தேடிக் கொள்ளு வதையும் நாம் பார்க்கும் போது நமது குலம் எவ்வளவு இழிவான நிலைமை யில் இருக்கிறது என்பதும் விளங்கும். தற்கால ராஜீய உலகத்தில் எவனாவது ஒருவன்...

மதிமோச விளக்கம் 0

மதிமோச விளக்கம்

ஸ்ரீமான். தூசி ராஜகோபால பூபதியவர்களால் இயற்றியதும், சென்னை, பெரம்பூர் பாரக்ஸ், செல்வபதி செட்டி கம்பெனியாரால் அச்சிடப் பட்டதுமான “மதிமோச விளக்கம்” என்னும் புத்தகம் நமது பார்வைக்கு வந்தது. அப்புத்தகத்தில் பொது ஜனங்களை ஏமாற்றிப் பிழைக்கக்கூடிய வேஷக்காரர்களும், தந்திரக்காரர்களும், பொய்யர்களும், பித்தலாட்டக்காரர் களும் எப்படி தங்களுடைய தந்திரம், புரட்டு, பொய், பித்தலாட்டம் முதலிய வைகளை எப்படி ஜனங்களிடம் உபயோகப்படுத்தி வஞ்சிக்கிறார்கள் என்ப தைப் பாமர ஜனங்களும் சுலபத்தில் அறியும்படியாக சுமார் 130 அத்தி யாயங்களாகப் பிரித்து, அவற்றில் 130 விதத் தந்திரங்களை உதாரணமாக எடுத்துக்காட்டி, பெரிய ஸைசில் 225 பக்கங்களாகவும், ³ புரட்டுகளுக்கேற்ற பல சித்திரங்களையும் கொண்டு எளிய நடையில் தெளிவாய்ப் பிரசுரித்து வெளியிடப்பட்டிருக்கிறது. இதை வாங்கிப் படித்தால், ஒவ்வொருவரும் உலகத்திலுள்ள சகல ஏமாற்றங்களையும் சுலபமாய் அறியலாம். இப்புத்தகத் தின் விலை புத்தகத்தின் அளவுக்கும் விஷயத்திற்கும் மிகக் குறைந்ததென்று சொல்லத்தகுந்த ஒரு ரூபாய்தான். ஆகையால், ஒவ்வொருவரும் இப்புத்த கத்தை வாங்கி வாசித்து புத்திசாலிகளாக...

“தருமத்தின் மேல் தருமம்” 0

“தருமத்தின் மேல் தருமம்”

கோவை ஸ்ரீமான் சி.வி.வெங்கிட்டரமண அய்யங்கார் மகாத்மா காந்திக்கு பணமனுப்பியதாகவும், மகாத்மா பெற்றுக் கொண்டு வந்தனமனுப் பியதாகவும் பல பத்திரிகைகளில் வெளியாயிருந்தும், பொது ஜனங்கள் அது ஒரு பெரிய துகையாய் அதாவது நாலு ஐந்து ஆறு ஸ்தானங்கள் கொண்ட தாயிருக்கலாம் என்று நினைத்ததும் ஞாபகமிருக்கலாம். ஆனால், இப்போது சரியான இடத்திலிருந்து வந்துள்ள தகவல்படி அத்தொகை மிகச்சிறிய தொகையென்றும் மூன்று ஸ்தானங்கள் கொண்டதுதான் என்றும் தெரிய வருகிறது. ஆயிரக்கணக்காய் கொடுத்த கனவான்களின் பெயரெல்லாம் மூடிவைக்கப்பட்டு நூற்றுக்கணக்காய் கொடுத்த கனவான்கள் பெயர் சந்து பொந்துகளிலெல்லாம் அடிபடும்படியாயிருப்பதும், அதுவும் உண்மைக்கு விரோதமாய் ஜனங்கள் நினைத்து ஏமாறும்படி இருப்பதும், பிராமணப் பத்திரிகைகளின் விளம்பரமும், எலெக்ஷன் தந்திரமும்தானே அல்லாமல் வேறு என்னவென்று சொல்லுவது. இதுபோலவே ஸ்ரீமான் சி.வி. வெங்கிட்டரமண ஐயங்காரின் மற்றொரு தர்மம், அதாவது 2 லக்ஷ ரூபாய் தர்மம்; அதற்குக் காலும் இல்லை தலையும் இல்லை. ஆனால், அத்தர்மத்தை துவக்க ஸ்ரீமதி சரோஜினி வருகிறார்; ஸ்ரீமான் நேரு வருகிறார்...

மகாத்மாவின் ஓய்வு 0

மகாத்மாவின் ஓய்வு

மகாத்மா ஓய்வு எடுத்துக் கொண்டார் என்பது உலகுக்கே தெரியும். ஆனால், அவர் ஓய்வெடுத்துக் கொண்டாலும் அவரின் பொல்லாத வேளை என்பது அவரை ஓயவிடுவதில்லை. அவரது நண்பர்கள் என்போர்கள் அவரை மறுபடியும் வழுக்கலில் சறுக்கி விட்டுக் கொண்டே வருகிறார்கள். சட்டசபையில் நம்பிக்கையில்லாததால் சுயராஜ்யக் கட்சியைத் தான் ஒப்புக் கொள்ளமுடியாது என்று சொல்லி ஓய்வெடுத்துக் கொண்டவரை மறுபடி மறுபடியும் தொந்தரவு செய்து அவர் காலைப்பிடித்து சாணியை மிதிக்க வைக்கிறார்கள். இருந்தாலும் மகாத்மா தடியும் முறியாமல் பாம்பும் சாகாமல் அடிக்கிறார். அதை விளம்பர சவுகரியக்காரர் தங்கள் சவுகரியத்திற்குத் தக்கபடி மாற்றி விளம்பரப்படுத்தி ஜனங்களை ஏமாற்றுகிறார்கள். மகாத்மா இவ்வாரம் “யங் இந்தியாவில்” சுயராஜ்யக் கட்சியார் மதுபானத்தை விலக்கு வதற்கு முயற்சி செய்வதைத் தங்களுடைய வேலைத்திட்டத்தில் சேர்த்துக் கொண்டது பற்றி ஏழைகளின் நண்பர்கள் பாராட்ட வேண்டும் என்றும், குடியினால் கெடுதி ஏழைகளுக்குத்தான் அதிகமென்றும், ஆனால் இதை சுயராஜ்யக் கட்சியாரே செய்யவேண்டு மென்பதில்லை; இதர கட்சியாரும் செய்ய வேண்டியது என்றும்...

பிராமணர்கள் அகந்தையும் சென்னை நகர பரிபாலன சபையும் 0

பிராமணர்கள் அகந்தையும் சென்னை நகர பரிபாலன சபையும்

காங்கிரசின் பெயரையும், காந்தியடிகள் பெயரையும், ஜெயிலுக்குப் போய் கஷ்டப்பட்ட தேசபக்தர்களின் பெயரையும், ஸ்ரீமான் சீனிவாசய்யங் கார் பணத்தையும், சில பிராமணரல்லாத வயிற்றுப் பிழைப்புத் தலைவர்களின் சமூகத் துரோகத்தையும், கஞ்சிக்கு வகையற்ற சில தொண்டர்களின் காலித் தனத்தையும் ஆதாரமாய் வைத்துக் கொண்டு சென்னை நகர பரிபாலன சபை யாகிய கார்பொரேஷனுக்குப் போன சுயராஜ்யக் கட்சி மெம்பர்களில் சில கனவான்கள், கார்பொரேஷனையே குட்டிச் சுவராக்குவதோடு இந்தியர்கள் சுய ஆட்சிக்கு கொஞ்சமும் அருகரல்லர் – மானமுடையவரல்லர்- விடுதலை அடையத் தகுதியற்றவர் என்பதை வைரக்கல்லில் பொன் எழுத்தால் எழுதப் பாடுபட்டு வருகிறார்கள். சுயராஜ்யக் கட்சியார் என்று சொல்லிக் கொண்டு கார்பொரேஷனுக்குச் சில பிராமணரல்லாத கனவான்கள் போயிருந்த போதிலும், அதற்குப் பிராம ணர்கள் பணமும் பிராமணப் பத்திரிகைகளின் பிரசாரமுமேதான் முக்கியமா யிருந்தபடியால், இவர்களும் அப்பிராமணர்கள் தாளத்திற்குத் தகுந்தபடி ஆட வேண்டியதாய்ப் போயிற்று. அதன் பலனாகவே கார்பொரேஷன் கமிஷ னரான ஸ்ரீமான் வெங்கிட்டநாராயண நாயுடு என்கிற பிராமணரல்லாத கார்பொரேஷன் கமிஷனர்...

காங்கிரஸில் இருக்க உரிமை உண்டா? 0

காங்கிரஸில் இருக்க உரிமை உண்டா?

சுயராஜ்யக் கட்சியின் கொள்கையை ஏற்றுக் கொள்ளாதவர்களும், ஜஸ்டிஸ் கட்சி, மிதவாத கட்சி, தேசீயக் கட்சி ஆகியவைகளைச் சேர்ந்தவர் களும், வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தை வலியுறுத்துபவர்களும், சுயராஜ்யக் கட்சி பிராமணக் கட்சி என்று முடிவு செய்துக் கொண்டிருக்கிறவர்களும், பழய ஒத்துழையாமைத் தத்துவத்திலேயே நம்பிக்கை இருக்கிறவர்களும், சுயராஜ்யக் கட்சி பிராமணரல்லாதாரை ஒடுக்க வந்த கட்சியென்று நினைத்து சுயராஜ்யக் கட்சியை பஹிஷ்கரிக்கவோ அதை ஒழிக்கவோ பிரசாரம் செய்ய வேண்டுமென்கிறவர்களும், நிர்மாணத் திட்டத்தில் நம்பிக்கை இல்லாதவர் களும் காங்கிரஸில் இருக்கலாமா? என்றும் இவர்களில் யாரையாவது காங்கிரஸை விட்டுப் போகச் சொல்ல யாருக்காவது உரிமை உண்டா? என்றும் இன்னும் பலர் பலவிதமாக நம்மை நேரிலும், எழுத்து மூலமாகவும் அடிக்கடி கேட்டு வருகிறார்கள். இந்தியா நீதியும் அமைதியுமான வழிகளில் சுயராஜ்யம் பெறவேண்டும் என்கிற தத்துவத்தை ஒப்புக்கொள்ளுபவர்களான எல்லோரும் காங்கிரஸிலிருக்க பாத்தியமுடைவர்கள். அதின் திட்டங்களில் அவநம்பிக்கையும் அபிப்பிராய பேதமும், எதிர்ப் பிரசாரம் செய்ய வேண்டிய அவசியமும் இருப்பதினாலேயே காங்கிரஸை விட்டுப் போய்விட வேண்டும்...

சட்டசபை தேர்தல் செலவுக்குப்                      பண வசூலும் நம் நாட்டின் தலை எழுத்தும் 0

சட்டசபை தேர்தல் செலவுக்குப் பண வசூலும் நம் நாட்டின் தலை எழுத்தும்

வரப்போகும் சட்டசபைக்குப் பிராமணர்களும் அவர்களுக்கடங்கின மற்ற வகுப்பாருமே சட்டசபையைக் கைப்பற்றத்தகுந்த மாதிரிக்குப் பிரசாரம் செய்ய நிதி வசூல் செய்ய வேண்டியதே காங்கிரஸ் தலைவர்கள் என்னும் நம் பிராமணத் தலைவர்களுக்கு முக்கிய வேலையாய்ப் போய்விட்டது. அதற் காகச் செய்யப்படும் பல தந்திரங்களில், மடாதிபதிகளை ஏய்த்துப் பணம் வாங்குவதும் முக்கிய சூழ்ச்சிகளில் ஒன்றாக இப்போது அமுலில் இருக் கிறதை வாசகர்கள் அறிந்ததே. அதற்கு ஆதாரமாகவே ஸ்ரீமான்கள் சி.வி. வெங்கிட்டரமணய்யங்காரும், சீனிவாசய்யங்காரும் அடிக்கடி மடாதிபதி களைப் போய் பார்ப்பதும் ஸ்ரீமான்கள் சத்தியமூர்த்தியும், சி.வி. வெங்கிட்ட ரமணய்யங்காரும் சட்டசபைகளில் பிரயோஜனமில்லாத தத்துவங்களைக் கொண்டு தேவஸ்தான மசோதாவைத் திருத்தவும் மாற்றவும் அடிக்கடி பிரேரேபனைகள் கொண்டு வருவதும், உபயோகமற்ற கேள்விகளைக் கேட்பதுமான காரியங்களைச் செய்தும் மடாதிபதிகளையும் மகந்துக்களை யும் ஏமாற்றப் பார்க்கிறதைக் கவனித்தாலே உண்மை விளங்கும். சட்டசபை யில் பிராமணரல்லாதாருக்குள்ளாகவே, மந்திரி கக்ஷியார் என்றும் அவர்க ளுக்கு விரோதமாக பொறாமையின் பேரிலோ அல்லது மந்திரிகளின் நடத்தைக் குறைவினாலோ பிரிந்திருக்கும் எதிர்க்கக்ஷியாரும்...

திரு. முதலியார் 0

திரு. முதலியார்

இதுகாறும் திரை மறைவிலிருந்து ஒப்பாரி வைத்த திரு. வி.கலியாணசுந்தர முதலியாரவர்கள் இப்பொழுது வெட்ட வெளிச்சத்தில் வந்துவிட்டார்கள். சென்னைக் கடற்கரையில் சமீபத்தில் கூடிய ஒரு கூட்டத் தில் வகுப்புவாரிப் பிரதிதிதித்துவத்துக்கு எதிர்ப்பிரசாரம் செய்யப்போவதாக விளம்பரம் செய்துவிட்டார். முதலியாரவர்களின் இவ்வுறுதி நிலையை மிகப்பாராட்டுகின்றோம். நெருக்கடியான சமயங்களில் ‘வழ வழ’ பாடுவதே திரு. முதலியாரவர்கள் இயல்பு. அந்நிலை மாறி தன் அபிப்பிராயத்தை முதலியாரவர்கள் ஒரு வழிப்படுத்தியது போற்றத்தக்கதே. ஆனால் இந் நிலையைக் காஞ்சி மகாநாட்டின் போது கொண்டிருக்கலாகாதா? உண்மை யாகவே வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தில் முதலியாரவர்களுக்கு நம்பிக்கையில்லாதிருந்திருந்தால், திரு நாயக்கரவர்களின் தீர்மானத்தை மகாநாட்டில் பிரேரேபனை செய்ய அனுமதி கொடுத்து, தன் முழுபலத்தோடு அதை எதிர்த்திருக்கலாம். ‘ வீரம் வீரம்’ என்னும் மொழிகளை, தன் அக்கிரா சனப் பிரசங்கம் முழுதும் அடுக்கி வைத்த திரு.முதலியாரவர்களுக்கு அவ் “வீரம் இல்லாதுபோயிற்று! குறுக்குவழியிலிறங்கி தன் குலத்துக்கு வினை தேடி, தமிழுலகத்தில் தான் பெற்றிருந்த மதிப்பையும் ஹோமஞ் செய்து விட்டார்கள். இப்பொழுது முதலியாரவர்கள்கூடப்...

பேடிப் போர் 0

பேடிப் போர்

நமது நாட்டில் பிராமணரல்லாதாருக்கு விரோதமாய் ஏற்பட்டிருக்கும் பல பத்திரிகைகளின் தலையெழுத்து உண்மையை எழுதி வீரப்போர் நடத்த யோக்கியதையின்றி பொய்யை எழுதி பேடிப் போர் நடத்தும்படியாக ஏற் பட்டுப் போய்விட்டது. உதாரணமாக, வட ஆற்காடு சட்டசபை உப தேர்த லைப் பற்றி ஸ்ரீமான் வெங்கிட்டரங்கம் நாயுடுவுக்கு விரோதமாகவும், ஸ்ரீமான் பத்மநாப முதலியாருக்கு அநுகூலமாகவும் நாம் பிரசாரம் செய்யப் போவதா கவும், அதற்குக் காரணம் “முன்னவர் சுயராஜ்யக் கக்ஷியாரென்றும் பின்ன வர் ஜஸ்டிஸ் கக்ஷியாரென்றும் சொல்லிக் கொள்ளுவதுதானென்றும்” எழுதி யிருக்கின்றன. இப்படியே இன்னும் அநேக பொய்யான விஷயங்களை எழுதியும், மெய்யான விஷயங்களை மறைத்தும் எழுதுவதை தமது தொழி லாகக் கொண்டிருக்கின்றன. சட்டசபைத் தத்துவத்தில், ஸ்ரீமான்கள் வெங்கிட் டரங்கம் நாயுடுவுக்கும் பத்மநாப முதலியாருக்கும் ஒரு வித்தியாசத்தையும் கற்பிக்க இடமிருப்பதாக நாம் கருதவில்லை. ஸ்ரீமான் வெங்கிட்டரங்கம் நாயுடு சட்டசபைக்குச் செல்வதினால் நமக்கு ஏதாவது ஆபத்து வந்து விடுமென்றோ, ஸ்ரீமான் பத்மநாப முதலியார் சட்டசபைக்குச் செல்லுவதில் பெரிய நன்மை...

சதியாலோசனை 0

சதியாலோசனை

தேசீய பிராமணர்களென்போரும், தேசீயப் பிராமணப் பத்திரிகை களென்பதுவும் பிராமணரல்லாதாரை எவ்விதத்தில் அடக்கியாள்வது என் னும் விஷயமாய் பெரிய சதியாலோசனைகள் செய்து, பிராமணரல்லாதார் செலவிலும், பிராமணரல்லாதார் உழைப்பிலும் தங்கள் காரியத்தை நடத்தி வருகிறது. பிராமணரல்லாதார்களில் பாமர ஜனங்களும் (தங்களது அறியாமை யினாலும்) சோற்றுப் பிரசாரகர்களும், இவர்களுக்கனுகூலமாயிருந்து தங்கள் சமூகத்தின் சுயமரியாதையையே பாழாக்கி வருகின்றார்கள். தன்னுடைய சாமர்த்தியத்தினால் பிராமணரல்லாதாரில் பெரும்பாலோர் தன்னை நம்பும்படி செய்து, அவர்களுக்குத் தலைவருமாகி அச்செல்வாக்கால் மகாத்மாவின் பிரதம சீடராகி ஒரு நிலையான நல்ல பெயரை ஏற்படுத்திக் கொண்ட ஸ்ரீமான் சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் இப்பொழுது தமது சுயரூபத்தைக் காட்டத் துணிந்து விட்டார். ஒவ்வொரு நாளும் சட்டசபைத் தேர்தலுக்கு சுய ராஜ்யக் கக்ஷியாருக்கே வோட் செய்யுங்கள்; மதுவிலக்குச் செய்ய அவர்கள் ஒப்புக் கொண்டார்கள் என்று விளம்பரம் போட்டு வருகிறார். சுயராஜ்யக் கக்ஷியாரால் எப்படி மது விலக்குச் செய்யக்கூடும் என்பதைப் பற்றி அநேக தடவைகளில் இவரே மறுத்துப் பேசியிருக்கிறார். சுயராஜ்யக் கக்ஷி காரிய தரிசியாகிய...

எலெக்ஷன் தந்திரம்  ( தேர்தல் வாக்குத்தத்தம் ) -சித்திரபுத்திரன் 0

எலெக்ஷன் தந்திரம் ( தேர்தல் வாக்குத்தத்தம் ) -சித்திரபுத்திரன்

தமிழ்நாட்டில் பிராமணாதிக்கம் வலுவடைவதற்காக, வரப்போகும் சட்டசபைத் தேர்தல்களில் பிராமணர்களும் மற்றும் பிராமணர்களின் பிராமணரல்லாத அடிமைகளும் பிராமணாதிக்கத்தின் சார்பாய் எப்படியாவது ஸ்தானம் பெற்று, இதுவரையிலும் பிராமணரல்லாதார் இயக்கங்களின் மூலமாகவும், மகாத்மாவின் ஒத்துழையாக் கொள்கையின் நிர்மாணத் திட்டங் கள் மூலமாகவும் ஒரு சிறிதளவு முன்னேறியிருக்கும் பிராமணரல்லாதார் முன்னேற்றத்தையும், தேச நலத்தையும், அடியோடழித்து ஆதிக்கம் பெற காங்கிரஸின் பெயரால் நமது நாட்டுப் பிராமணர்களின் சூழ்ச்சிக் கொடி வானமளாவப் பறக்கிறது. இக்கொடியை பிராமணரல்லாதாரிலேயே சில விபூஷணாழ்வார்கள் தாங்கித் திரிகின்றார்களெனச் சொல்ல வெட்கப்படுகின்றேனாயினும் உண்மையைச் சொல்ல அஞ்சுவது அதைவிட வெட்கக் கேடாதலின் சொல் லாமல் விடுவதற்கில்லை. 1. தற்காலம் இந்திய தேசிய காங்கிரஸ் என்று சொல்லும் விடுதலை இயக்கமானது பெரும்பாலும் பிராமணர்கள் கையில் சிக்கிக் கொண்ட தென்பதை யாவராலும் மறுக்க முடியாது. 2. காங்கிரஸின் தலைவர் ஸ்ரீமதி சரோஜனி தேவியாராவார். அந்த அம்மையார் பிராமணரல்லாதாருக்கு வாழ்க்கைப்பட்டிருந்தாலும் இவர் பிராமண ஸ்திரீ யென்பதில் எவருக்கும் சந்தேகமிருக்காது. 3. அதன் காரியதரிசிகளோ...

நன்றி பாராட்டுதல் 0

நன்றி பாராட்டுதல்

உண்மைச் சகோதரர்களே! “குடி அரசு” 34 -வது இதழ் (27-12-25) ஒன்பதாவது பக்கத்தில் “குடி அரசு”க்குப் புது ஆண்டு சன்மானம் என்பதாக ஒரு சிறு வேண்டுகோள் விடுத்திருந்தோம். அவ்வேண்டுகோளைச் சகோதரர்கள் மதித்துக் கனப் படுத்தியதற்கு அதாவது 1-1-26 – ந் தேதியிலிருந்து 31-1-26 – ந் தேதி முடிய ஜனவரி µத்தில் 307 சந்தாதாரர்கள் ³ வேண்டுகோளை உத்தேசித்துத் தாங்களாகவும், தங்கள் நண்பர்கள் மூலமாகவும் சந்தாதாரர்களாகச் சேர்ந்தும், இரண்டொருவர் சிறு தொகை உதவியும் கனப்படுத்தியதோடு கொழும்பு, மதுரை, திருச்சி, நாகை, கோவை முதலிய ஊர்களில் “குடி அரசி”ன் அபிமான ஏஜண்டுகள், தங்கள் சில்லரை விற்பனையை ஜனவரி மாதத்தில் ஒன்று இரண்டாய், மூன்றாய்ப் பெருக்கியும், “குடி அரசி”ன் முன்னேற்றத்தில் பொறுப்பு எடுத்துக் கொண்டதற்கும் குடிஅரசின் சார்பாகவும், பிராமண ரல்லாதார் பாமர மக்கள் – தீண்டப்படாத மக்கள் சார்பாகவும் நாம் நெஞ்சார நன்றி பாராட்டுகிறோம். “குடி அரசு” வாரம் இருமுறை – மும்முறை –...

மகாத்மாவின் நிலை 0

மகாத்மாவின் நிலை

காந்தி அடிகளின் திரேக நிலையும் மனப்பான்மை நிலையும் அசை வுற்றுப் போய்விட்டது என்பது அவருக்கு அடிக்கடி ஏற்படும் காயலா மூல மாகவும் அவர் அடிக்கடி வெளிப்படுத்தும் அபிப்ராயம் மூலமாகவும் நன்கு வெளியாகிறது. அவருக்கு மன உறுதியுள்ள காலத்தில் காயலாவே ஏற்படுவ தில்லை. ஏற்பட்டாலும் இயற்கை முறைகளிலேயே சவுக்கியப்படுத்திக் கொள்வார். இப்பொழுதோ அவருக்கு கொய்னாவும் இஞ்சக்ஷனும் தேவை யாய்ப் போய்விட்டது. ஆதலால் இயற்கை சிகிச்சையில் உள்ள உறுதி ஆட்டம் கொடுத்துவிட்டதென்றே சொல்ல வேண்டும். அதுபோலவே ராஜீய விஷயத்தில் இருந்த உறுதிகளும் ஆட்டம் கொடுத்து விட்டதாகவே கருத வேண்டியதாய் விட்டது. மகாத்மா ஜெயிலில் இருந்து வந்தவுடன் இருந்த மனநிலையும், ஸ்ரீமான்கள் தாஸ், நேரு இவர்கள் கேட்டுக்கொண்ட பின் ஏற்பட்ட மனநிலையும், கல்கத்தா ஒப்பந்த மனநிலையும், பாட்னா ஒப்பந்த மனநிலையும், தான் ஓய்வு எடுத்துக் கொண்ட மனநிலையும், தனக்கு நம்பிக்கையில்லாத திட்டத்திற்கு தான் தன்னால் கூடிய உதவி செய்வதாகச் சொல்லும் மனநிலையும் பார்த்தால் தயவு தாக்ஷண்ணியம்,...

தலைவர்களின் யோகம் 0

தலைவர்களின் யோகம்

சட்டசபை வோட்டுப் பிரசாரத்திற்கு µ 30 ரூபாய் சம்பளத்திலும் µ 30 ரூபாய் பத்தாவிலும் ஆக µ 60 ரூபாயில் பிரசாரகர்களை நியமிக்க தமிழ்நாடு காங்கிரஸ் நிர்வாகக் கமிட்டி அதன் அக்ராசனருக்குப் பூரண அதிகாரம் கொடுத்திருக்கிறது. இனி தேசியத் தொண்டர் என்போருக்கு இது கை முதலில்லாத வியா பாரமாய்ப் போய்விட்டது. ஒத்துழையாமை மும்மரமாக நடந்த காலத்தில் ஆவேசத்தின் காரணமாய் ஜெயிலுக்குப் போய்வந்து பட்டணங்களிலும், கிராமந்தரங்களிலும் செல்வாக்குப் பெற்று இப்போது கஞ்சிக்கில்லாமல் திருட வும், ஒருவரிடம் கூலி வாங்கிக் கொண்டு ஒருவரைத் திட்டவும், அடிக்கவும் செய்து கொண்டிருக்கும் தொண்டர்களுக்கு இப்படி ஒரு சந்தர்ப்பம் ஏற்பட்டது தொண்டர்களின் யோகம்தான். ஸ்ரீமான் சீனிவாசய்யங்கார் போன்ற தலைவர்கள், இப்படி ஒரு தீர்மான மில்லாமலிருக்கும் போதே இம்மாதிரியான தொண்டர்களைக் கொண்டு தலைவராகியிருக்க, காங்கிரஸிலே இம் மாதிரி ஓர் தீர்மானமும் அதன் அதிகா ரமும் அவர் கையிலே இருக்க ஏற்பட்டதானது, தொண்டர்களின் யோகத்தை விட தலைவர்களின் யோகமே பெரிதெனச் சொல்ல...

பிராமணப் பத்திரிகைகளும் அதன் பிரசாரங்களும் 0

பிராமணப் பத்திரிகைகளும் அதன் பிரசாரங்களும்

அடுத்துவரும் சட்டசபைத் தேர்தல்களில் பிராமணரல்லாதார் முன்னேற்றத்தில் கவலையுள்ள எந்த பிராமணரல்லாதாரும் ஜெயம் பெற முடியாதபடி விஷமப் பிரசாரங்கள் செய்து பிராமணர்களும் அவர்கள் தாளத் திற்குத் தகுந்தபடி ஆடும்படியான பிராமணரல்லாதார்களையுமே சட்டசபை யைக் கைப்பற்றும்படியான மாதிரிக்கு வேலைகள் செய்யப்பட்டு வருகிற தைப் பிராமணரல்லாத பாமர ஜனங்கள் இன்னமும் அறியாமல் ஏமாந்து போய்க்கொண்டே இருக்கிறார்கள். இதற்கு அநுகூலமாகவே சில பிராமண ரல்லாத பத்திரிகைகளும், தலைவர்கள் என்போர்களும், தொண்டர்கள் என்போர்களும் ஒத்துப் பாடிக்கொண்டே வருகிறார்கள். ஆனாலும் இப் பத்திரிகைகளும், தலைவர்களும், தொண்டர்களும் தற்காலம் செல்வாக்கும், பெருமையும், ஜீவனோபாய மார்க்கம் அடைந்து இருந்தபோதிலும், தேர்தல் கள் முடிந்து பிராமணர்கள் காரியம் முடிந்தவுடனே காதறுந்த ஊசிபோல கருதப்படுவார்கள் என்பதில் யாதொரு சந்தேகமும் இருக்காது. ஆனாலும், இப்பொழுது ஏன் பிராமணர்களும் அவர்கள் பத்திரிகைகளும் அதிகமான பிரயத்தனங்கள் எடுத்துக்கொண்டு இவ்வளவு பணங்கள் செலவு செய்து பிரசாரங்கள் செய்கிறார்கள் என்கிற விஷயத்தில் சிலருக்கு அதன் அவசியம் விளங்காமலேயிருக்கிறது. இப்பிரசாரங்களின் முக்கியக் காரணம் அடுத்தாற்...