சுரணையற்ற பொய்
நல்ல சமயத்தில் 2 வாரத்திற்குப் பத்திரிகை தாமதிக்க ஏற்பட்டதானது நமக்கு மிகுதியும் ஏமாற்றத்தைக் கொடுத்து விட்டதோடு வாசகர்களுக்கும் விளக்க முடியாத ஏமாற்றம் ஏற்பட்டிருக்கும் என்றே நினைக்கிறோம். இவ்வாரம் எழுத வேண்டிய விஷயங்கள் அநேகம். அவற்றில் பிராமணப் பத்திரிகைகளின் கொடுமையை எடுத்துக்காட்ட வேண்டியது மிகுதியும் அவசியமான சமயம். அவைகளை விளக்க இதில் இடமில்லை. கோவை தாலூக்கா மகாநாட்டைப் பற்றியும் கோவை பொது மீட்டிங்கைப் பற்றியும், சுதேசமித்திரன் சுரணையற்ற வெறும் பொய்யையே பிரசுரித்திருக்கின்றது. அவற்றுள் 100 – க்கு 90 பொய் என்பதை வாசகர் உணர வேண்டுகிறோம்.
குடி அரசு – அறிவிப்பு – 28.03.1926