வருண பேத விளக்கம்
“வருணபேத விளக்கம்” என்னும் புத்தகம் காலஞ்சென்ற திரு. ம. மாசி லாமணி அவர்களால் எழுதப்பட்டு தென்னிந்திய பௌத்த சங்கத்தினா தரவில் ஸ்ரீ சித்தார்த்த புத்தக சாலையாரால் பதிப்பித்து பிரசுரிக்கப்பட்டது. இப்புத்தகம் வருணபேதத்தின் இரகசியங்களையும், ஆதிகாலத்திலிருந்தே, பிராமணர்களின் சூழ்ச்சிகளையும், தயவு தாக்ஷண்யமில்லாமல் தைரியமாய் விளக்குகிறது. இப்புத்தகத்தை வாங்கிப் படிப்பவர் இவ்விஷயங்களைப் பற்றி நமது “குடி அரசு” எழுதிவரும் விஷயங்கள் இப்புத்தகத்திலிருந்து எடுத் தெழுதப்பட்டதோ அல்லது குடி அரசிலிருந்து எடுத்து இப்புத்தகம் எழுதப்பட்டதோ என்று நினைக்கும்படி பெரும் பாகம் ஒத்திருக்கும். ஆத லால், சிற்சில விஷயங்களில் அபிப்பிராய பேதம் இருந்தபோதிலும் ஜாதி உயர்வு-தாழ்வு இரகசியம் அறிய ஆவல் கொண்டவர்கள் இதனை வாங்கி வாசிக்க சிபார்சு செய்கிறோம். இதன் விலை அணா 0-4-0.
குடி அரசு – நூல் மதிப்புரை – 21.03.1926