கடலூர் மற்றும் அரியலூர் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் கருவேப்பிலங்குறிச்சி 08012019
08.01.2019 *திராவிடர் விடுதலைக் கழகம்* சார்பாக கடலூர் மற்றும் அரியலூர் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வட்டம் கருவேப்பிலங்குறிச்சி வசந்தா திருமண நிலையத்தில் நடைபெற்றது நிகழ்வுக்கு கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி தலைமை ஏற்றார் முதல் நிகழ்ச்சியாக கழகத்தின் பொருளாளர் திருப்பூர் துரைசாமி அவர்களால் கழகத்தின் கொடி ஏற்றப்பட்டது!!! அதனைத் தொடர்ந்து திராவிடர் விடுதலைக் கழக பெரியார் சிந்தனை பலகை தலைவர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது கடவுள் மறுப்பு தோழர் மதன்குமார் கூற, தோழர் அறிவழகன் வரவேற்புரையாற்றினார்!!! துவக்க உரையாக தோழர் ஈரோடு இரத்தினசாமி திராவிடர் விடுதலை கழகத்தின் செயல்பாடுகள் குறித்தும் பெரியாரியல் குறித்தும் பேசினார்!!! தமிழ்நாடு மாணவர் கழக மாநில செயலாளர் தோழர் பாரி சிவக்குமார் கருத்துரையாற்றினார்!!! அதனை தொடர்ந்து கழகத்தின் பொருளாளர் திருப்பூர் துரைசாமி உரையாற்றினார்!!! பின் தோழர் சூலூர் பன்னீர்செல்வம், தோழர் அய்யனார், தோழர் பழனிவேல் ஆசிரியர், தோழர் முத்துகிருஷ்ணன், அரியலூர் மாவட்ட அமைப்பாளர் தோழர் கோபால் ராவணன், தோழர் நட பாபு அம்பேத்கர், தோழர்...