சேலம் மாவட்ட சமஸ்கிருத எதிர்ப்பு போராட்டம் 08072016
8-7-2016 வெள்ளியன்று காலை 11-00 மணியளவில், மத்திய அரசு பள்ளி, உயர்கல்வி நிலையங்களில் சமஸ்கிருதத்தைத் திணிக்க மேற்கொள்ளும் முயற்சிகளைக் கண்டித்தும், மக்களின் பேச்சு மொழியாய் இல்லாத செத்த மொழியான சமஸ்கிருதத்தை அரசியல் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் அலுவல் மொழியாக சேர்த்திருப்பதை நீக்கக் கோரியும், சேலம் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் ஒருங்கிணைப்பில், சேலம் தலைமை அஞ்சல் அலுவலகத்தின் முன்னர் கண்டன ஆர்ப்பாட்டம், திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் நடைபெற்றது. கண்டன ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு அமைப்புகளின் பொறுப்பாளர்களும் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்ட முழக்கங்களுக்கு இடையிடையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மண்டல செயலாளர் இரா.நாவரசன், ம.தி.மு.க. மாநகர செயலாளர் வழக்குரைஞர் ஆனந்தராஜ், அருந்ததிய மக்கள் இயக்க நிறுவுநர் வழக்குரைஞர் பிரதாபன், த.மு.மு.க. மாவட்ட செயலாளர் பி.சுல்தான், மக்கள் உரிமை பாதுகாப்பு மைய மாவட்ட செயலாளர் வழக்குரைஞர் மாயன், கம்யூனிஸ்ட் கட்சி (மா.லெ) மக்கள்விடுதலை தோழர் மணிமாறன், பகுஜன் சமாஜ் கட்சி மாவட்ட...