தவறவிடக் கூடாத ஆய்வு நூல்கள் – தோழர் பழ.அதியமான்

”தவறவிடக் கூடாத ஆய்வு நூல்கள்” எனும் தலைப்பில் தோழர் பழ.அதியமான் அவர்கள் 30.05.2016 தமிழ் இந்து நாளிதழில் சிந்தனைக் களம் பகுதியில் பேட்டி அளித்துள்ளார்.

அந்த பேட்டியில் அவர் புத்தாயிரத்தில் வந்த சில முக்கிய நூல்கள் என குறிப்பிட்டுச் சொல்லியுள்ள புத்தகங்களில் கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்களை வெளியீட்டாளராக கொண்ட பெரியார் திராவிடர் கழக பதிப்பகம் சார்பில் வெளியிட்ட ”குடி அரசு 1925-1938 பெரியாரின் எழுத்தும் பேச்சும்” தொகுதிகள் குறித்து பதிவு செய்துள்ளார்.இவை இணையத்திலும் கிடைக்கின்றன என கூறியும் உள்ளார்.

இணையத்தில் இத்தொகுதிகளை படிக்க விரும்புவோர் கீழ்காணும் இணைப்பில் உள்ள கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று கழக வெளியீடுகள் எனும் தலைப்பின் கீழ் சென்று படிக்கலாம்.
http://dvkperiyar.com/?cat=76

13267863_1752482131702346_2790537937240821563_n

You may also like...