சமஸ்கிருத திணிப்பு துண்டறிக்கைக்கான செய்திகள்

மத்திய அரசின் சமஸ்கிருத திணிப்பை கண்டித்து திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் 08.07.2016 அன்று மாவட்ட தலை நகரில் நடைபெற உள்ள ஆர்ப்பாட்டத்திற்கான துண்டறிக்கை வாசகங்கள்.
———————————————————-
மத்திய அரசே !
சமஸ்கிருதத்தை திணிக்காதே !
அலுவல் மொழிகள் பட்டியலில் இருந்து சமஸ்கிருதத்தை நீக்கு !

• மத்திய மனித வளத் துறை அமைச்சகம் விஞ்ஞான கருத்துகள் ஏராளம் இருப்பதாக கூறி அய் .அய் .டி.களிலும் மத்திய பாடத்திட்டத்தில் இயங்கும் சி.பி.எஸ்.ஈ. பள்ளிகளிலும் சமஸ்கிருதத்தை கட்டாயமாகத் திணித்து வருகிறது.

• சமஸ்கிருதம் வழியாக இந்து, பார்ப்பனப்பண்பாட்டைத் திணிப்பதே இவர்களின் உண்மையான நோக்கமாகும்.

• அதன் காரணமாகவே ஆர்.எஸ்.எஸ்.சமஸ்கிருதமே இந்தியாவின் தேசிய
மொழியாக வேண்டும் என்று கொள்கையாகஅறிவித்திருக்கிறது.

• ஆர்.எஸ்.எஸ். தனது கிளை அமைப்புகள் அனைத்துக்கும் சமஸ்கிருதத்திலேயே பெயர் சூட்டி இருக்கிறது.

• இந்தியாவில் எந்த ஒரு மாநிலமும் சமஸ்கிருதம் பேசும் மக்களைக் கொண்ட மாநிலமாக இல்லை.

• அது பேச்சு மொழியாகவும் இல்லை.

• எந்த ஒரு அறிவியல் கண்டுபிடிப்பும் சமஸ்கிருத நூல்களின் அடிப்படையில் கண்டு பிடிக்கப்பட்டதாக எந்த ஒரு விஞ்ஞானியும் இதுவரை கூறவும் இல்லை.

• கண்டுபிடிப்புகள் வந்த பிறகு சமஸ்கிருத நூல்களிலேயே இருக்கிறதே என்று கூறுவது ஒரு வழக்கமாகி விட்டது.

• சமஸ்கிருத மொழியில் இந்தியாவில் ஒரு பத்திரிக்கை கூட வெளிவரவுமில்லை.

• சில ஆயிரம் பேர் மட்டுமே அறிந்திருப்பதாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் பதிவு செய்யப்பட்டுள்ள மொழி சமஸ்கிருதம்.

• எனவே அரசியல் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் அதிகாரப்பூர்வ மொழியாக வைத்திருப்பதையே மறுபரிசீலனை செய்து சமஸ்கிருதத்துக்கு வழங்கப்பட்டுள்ள அங்கீகாரத்தை நீக்க வேண்டும் என்று திராவிடர் விடுதலைக்கழகம் வலியுறுத்துகிறது.

——————————————————————————-

தேவைப்படின் கீழ் உள்ள செய்திகளையும் இணைத்துக்கொள்ளலாம்.

அறிஞர்களின் வடமொழி எதிர்ப்பு
சமஸ்கிருதப் பண்பாடு – தமிழ் மொழிக்கு எதிரானது என்பதை விளக்கிடும் அறிஞர்கள் கருத்து.

விவேகானந்தர் எதிர்ப்பு :

“நான் என் ஆயுள் முழுவதும் சமஸ்கிருத மொழியைப் பயின்று கொண்டிருக்கின்றேன். எனினும் எனக்கே ஒவ்வொரு தடவையும் புதியதாகத்
தோன்றுகிறதெனில், சாதாரண மக்களுக்கு அவற்றைப் பயில்வது எவ்வளவு சிரமமாயிருக்கும். எனவே இவ்வெண்ணங்கள் பொது மக்களுடைய சொந்த மொழியில் மொழி பெயர்க்கப்பட வேண்டும்.”
(விவேகானந்தர் – இந்தியபிரசங்கங்கள் 183- 84)

வள்ளலார் எதிர்ப்பு :
வடலூர் இராமலிங்க அடிகளார் பின்வருமாறு சமஸ்கிருதத்தைப் பற்றி
எழுதியுள்ளார்.
“இடம்பத்தையும், ஆரவாரத்தையும், பொழுதுபோக்கையும் உண்டு பண்ணுகின்ற மொழி.”
(வள்ளலார் ஒருமைப்பாடு பக்கம் 284)

இப்படி எழுதிய வள்ளலார்,
“இத்தகைய ஆரிய மொழியாகிய சமஸ்கிருதத்தில் என் மனம் செல்லாமல், எளிய இனிய தமிழ் மொழியில் மனம் செல்லுமாறு பணித்தாயே” என்று மனமுருகி இறைவனைப் புகழ்கிறார்.

கால்டுவெல் எதிர்ப்பு :
வடமொழி, தமிழ் முதலான பல மொழிகளில் சிறந்த பயிற்சியும், புலமையும் உடைய டாக்டர் கால்டுவெல் தமிழ் மொழியின் சிறப்பைத் தம்முடைய ஆய்வு நூலில் பின்வருமாறு கூறுகின்றார்:

“தெலுங்கும், கன்னடமும், மலையாளமும், தத்தம் தனி நிலைகளை நிலைநாட்டுவது அறவே இயலாத அளவு, சமஸ்கிருதச் சொற்களை அளவிற்கு மீறிக் கடன் வாங்கியுள்ளன. அவற்றின் துணையை நோக்கி, எதிர்நோக்கிப் பழகி விட்டன. ஆதலின் தன்னுடைய சமஸ்கிருத கலவைகளைக் கைவிடுவது தெலுங்கு மொழிக்கு ப்பொழுது அரிதாம் என்பது உண்மை ன்னடத்திற்கு அதனினும் அரிதாம்.மலையாளத்திற்கு அவை எல்லாவற்றைக்
காட்டிலும் அரிதாம். திராவிட மொழிகள் அனைத்திலும் உயர் தனிச் செம்மொழி
யாய் நிலை பெற்று விளங்கும் தமிழ் தன்னிடையே இடம் பெற்றிருக்கும்
சமஸ்கிருத சொற்களை அறவே ஒழித்து விட்டு, உயிர் வாழ்வதோடு அவற்றின்
துணையை ஒரு சிறிதும் வேண்டாமல் வளம் பெற்று வளர்வதும் இயலும்.”
(கால்டுவெல் -ஒப்பிலக்கணம் நூலில்)

முனைவர் அகத்தியலிங்கம் எதிர்ப்பு :

உலகளாவிய தற்காலத்திய மொழியியல் துறையில் பெரும் புலமை சான்றவரும் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தருமான முனைவர் அகத்தியலிங்கம் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.

திராவிட மொழிகள் மிகப் பழமையான மொழிகள் என்பதும், மூவாயிரம் ஆண்டுகட்கு முன்னரே இந்திய நாட்டில் வழக்கிலிருந்து வந்துள்ளன என்பதும் இன்றைய மொழியியலாளர் கொள்கை. திராவிட மொழிகளில் தமிழ்மொழியைப் பேசும் மக்கள், மிகப் பன்னெடுங்காலமாகவே தங்களுக்கெனச் சிறந்ததொரு இலக்கியப் பாரம்பரியத்தை உருவாக்கி, அதனைக் கட்டிக்காத்து வந்துள்ளனர். மிகப் பழங்காலத்தே ஆரிய மொழியான சமஸ்கிருதத்துடன் தொடர்பு கொண்டிருந்த போதிலும் தனக்குரிய தனிப் பண்புகளைப் பேணி வந்திருத்தலை அன்று முதல் இன்று வரையில் காண முடியும்.

(5ஆவது உலகத் தமிழ் மாநாட்டு மலர்க் கட்டுரை – தமிழும் உலக மொழிகளும்)

You may also like...