Category: குடி அரசு 1931

சுயமரியாதை உதயம்                                  பெண்கள் சுதந்திரம் 0

சுயமரியாதை உதயம்                                  பெண்கள் சுதந்திரம்

  சொத்துரிமை மைசூர் சமஸ்தானத்தில் பெண் மக்களுக்கு சொத்து உரிமை அதாவது தகப்பன் சொத்தில் பெண்களும் பங்கு பெறவும் சொத்துக்களை வைத்து சுதந்திரமாய் அனுபவிக்கவும் உரிமை பெற்று விட்டார்கள். கல்யாண ரத்து பரோடா சமஸ்தானத்தில் ஆணும், பெண்ணும் கல்யாண ரத்து, செய்து விலகிக் கொள்ள சட்டம் கொண்டுவர அனுமதிக்கப்பட்டாய் விட்டது. அதாவது, தம்பதிகளில் ஆணோ, பெண்ணோ 7-வருஷகாலம் இருக்குமிடம் தெரியாமல் பிரிந்து இருந்தாலும், வேறு மதத்தைத் தழுவிக் கொள்வதால் இஷ்டமில்லா விட்டாலும், சன்னியாசியாகி விட்டாலும், 3-வருஷ­ காலம், ஒற்றுமையின்றி சதா குடும்பத்தில் கண்டிப்பாயிருந்தாலும், வேண்டாம் என்று பிரிந்து போய்விட்டாலோ, குடியில் மூழ்கினவர்களா யிருந்தாலோ, சதா பிறர் மீது காதலுள்ளவர்களாக இருந்தாலோ, ஆகிய காரணங்களால் துன்பப்படும் புருஷனோ, மனைவியோ தங்கள் விவாகங் களை சட்ட மூலம் ரத்து செய்து கொள்ளலாம். மற்றும் கல்யாணமாகும் சமயத்தில் தம்பதிகளில் யாராவது செவிடு, ஊமை, வியாதி, குருடு, பைத்தியம் ஆகியவைகள் இருந்ததாகவோ அல்லது மைனராக இருந்ததாகவோ தெரிய...

திரு. காந்தியின் உண்மைத் தோற்றம் 0

திரு. காந்தியின் உண்மைத் தோற்றம்

தொழிலாளர்களுக்கு எச்சரிக்கை உயர்திரு. காந்தியவர்கள் மக்கள் கள்ளு, சாராயம் குடிக்கப்பட வேண்டியதின் உண்மையான அவசியத்தைப் பற்றியும், அதை எப்படி, எப்போது நிறுத்த முடியுமென்பதைப் பற்றியும், மற்றும் தான் கேட்கும் சுயராஜியத்தின் தத்துவத்தைப் பற்றியும் தமது அபிப்பிராயத்தை விளக்க மாக வெளியிட்டிருக்கிறார். இந்த அபிப்பிராயங்களை அவர் பரோடா சமஸ்தானத்திற்கு இம் மாதம் 12 – ந் தேதி திருவாளர்கள் வல்லபாய் பட்டேல், அப்துல் கபூர்கான் ஆகியவர்களுடன் சென்ற பொழுது அங்குள்ள மக்கள் அளித்த வரவேற்புக் குப் பதில் சொன்ன முறையில் வெளியிடப்பட்டதாகும்.  அதாவது, “கதரில்லாமல் வெறும் மது விலக்கு ஒரு நாளும் வெற்றி பெறாது. கள்ளு,சாராயக்கடைகளை மூடிவிடுவது நம்முடைய வேலை யல்ல. குடிகாரர்கள் தாங்கள் குடிக்கும் பழக்கத்தை அவர்களாகவே விட்டுவிட்டாலொழிய, திருட்டுத்தனமாய் கள், சாராயம் உற்பத்தி செய்து, எப்படியாவது குடித்துத்தான் தீருவார்கள். கள்ளு, சாராயக் கடைகள் மூடப்பட்டுவிட்டாலும், இப்பொழு திருப்பது போலவே திருட்டுத்தனமாய் கள்ளு, சாராயம் விற்பனை யாகிக் கொண்டு தானிருக்கும். குடி...

கும்பகோணம் சாக்கோட்டையில் சுயமரியாதைத் திருமணம் 0

கும்பகோணம் சாக்கோட்டையில் சுயமரியாதைத் திருமணம்

சகோதரிகளே! சகோதரர்களே! இன்று இங்கு நடக்கும் திருமணம் சுயமரியாதைத் திருமணம் என்று சொல்லப்படுகின்றது.  இதை நான் முழு சுயமரியாதைத் திருமணம் என்று ஒப்புக்கொள்ளமுடியாது.  பார்ப்பான் வரவில்லை என்பதையும், அர்த்தமற்ற சடங்குகள் அநேகமாயில்லை என்பதையும், வீண்மெனக்கேடான காரியமும் வீண் செலவுமான காரியமும் இல்லையென்பதையும் ஒப்புக் கொள்ளுகிறேன்.  ஆனால் தாலி கட்டத் தயாராயிருப்பதாகத் தெரிகிறேன்.  பெண் உட்கார்ந்திருக்கும் மாதிரியைப் பார்த்தால் பெண்ணும் மாப்பிள்ளையும் இதற்கு முன் அறிமுகம் கூட ஆன தில்லை போல் காணப்படுகின்றது.  சுயமரியாதைக் கல்யாணத்தின் முறைகள் இன்னின்னது என்று இப்போது வரையறுப்பது என்பது காதால் கேட்பதற்கே முடியாத காரியமாயிருக்கும்.  கல்யாணம் என்பதே வேண்டிய தில்லை என்று சொல்லக்கூடிய திட்டம் சுயமரியாதை இயக்கக் கொள்கை யில் ஒரு காலத்தில் வரக்கூடும்.  எந்தப்பெண்ணும் எந்த மாப்பிள்ளையும் புருஷன் பெண் ஜாதிகளாகப் போகிறார்கள் என்று பெற்றோர்களுக்குக் கூடத் தெரிய முடியாத நிலைமை ஏற்படும்.  இந்த மாப்பிள்ளைக்கு இதற்கு முன் எத்தனை பெண் கல்யாணமாயிற்று? இந்தப் பெண்ணுக்கு...

முஸ்லீம் மகாநாடு 0

முஸ்லீம் மகாநாடு

தலைவரவர்களே! கனவான்களே!! இந்தப் பெரிய மகாநாட்டில் என்னை சில வார்த்தைகள் பேசும்படி அழைத்ததற்கு நன்றி செலுத்துகிறேன்.  இந்தச் சமயமானது அரசியல் சம்மந்தமான ஒரு நெருக்கடியான சமயம் என்பதை முஸ்லீம் சமூகமானது உணர்ந்து ஆங்காங்கு மகாநாடுகள் கூட்டி தங்கள் தங்கள் அபிப்பிராயங் களை தெரிவித்துக்கொண்டு வருகின்றன.  அபிப்பிராயங்களில் சற்று ஒருவருக்கொருவர் – மாறுபட்டவர்களாயிருக்கலாம்.  ஆனாலும், விஷயத் தின் நெருக்கடியை உணராதவர்கள் இல்லை.  இந்தச் சமயத்தில் எல்லா முஸ்லீம் மகாநாட்டிலும், சமீபத்தில் வருவதாயிருக்கும் அரசியல் சீர்திருத்த த்தில் முஸ்லீம்களின் நிலை என்ன என்பதே முக்கிய பிரச்சினையாய் இருக் கின்றது.  அதிலும் முக்கியமாய் இருப்பது அச்சீர்திருத்தங்களுக்கு முஸ்லீம் பிரதிநிதிகளாய் தேர்தலில் பிரதிநிதித்துவம் பெறுவதா? அல்லது இந்துக் களின் பிரதிநிதியாய் பிரதிநிதித்துவம் பெறுவதா? என்பதே முக்கிய பிரச்சினையாய் இருந்து வருகின்றது.  உண்மையை யோக்கியமாய்ப் பேச வேண்டுமானால் முஸ்லீம்கள் முஸ்லீம் பிரதிநிதிகளாய் முஸ்லீம்களின் ஓட்டைக் கொண்டே பிரதிநிதிகளாக அங்கம் பெறவேண்டும் என்பதாகவே இந்தியாவின் பெரும்பான்மையாகிய முஸ்லீம்கள் விரும்புகின்றார்கள் என்பதை...

“ஆனாலும் ஒருசமயம்” 0

“ஆனாலும் ஒருசமயம்”

“மகாத்மா” காந்தி வட்ட மேஜை மகாநாட்டுக்கு போகமாட்டார். ஒரு சமயம் போனாலும் போகக் கூடும். ஆனாலும் அது சந்தேகந்தான். அப்படி சந்தேகமில்லாமல் போவது ஒரு சமயம் உறுதியானாலும் அவர்தான் போவாரேயொழிய மற்றவர்கள் போகமாட்டார்கள். ஒரு சமயம் மற்றவர்கள் போனாலும் மகாத்மாதான் காங்கிரஸ் பிரதிநிதியாய் இருப்பார். “மகாத்மா” காங்கிரஸ் பிரதிநிதியாய் போனாலும் வட்ட மேஜை மகாநாட்டில் மாத்திரம் கலந்துகொள்ளமாட்டார். வட்ட மேஜை மகாநாட்டில் ஒரு சமயம் கலந்து கொண்டாலும் காங்கிரஸ் கக்ஷியை மாத்திரம் எடுத்துச்சொல்லிவிட்டு விவகா ரத்தில் கலந்துகொள்ளமாட்டார். விவகாரத்தில் ஒரு சமயம் கலந்து கொண் டாலும், பாதுகாப்பு விஷயத்தில் மாத்திரம் சிறிதும் விட்டுக்கொடுக்கமாட்டார். ஒரு சமயம் பாதுகாப்பில் விட்டுக்கொடுத்தாலும் இந்திய நன்மைக்கென்று தான் எதையும் விட்டுக்கொடுப்பாரேயொழிய பிரிட்டிஷ் நன்மைக்காக வென்று சிறிதும் விட்டுக்கொடுக்க மாட்டார். பிரிட்டிஷ் நன்மைக்காகவென்று ஒரு சமயம் எதாவது விட்டுக்கொடுத்தாலும் ‘ ஐயோ பாவம் ! அவர்களும் (பிரிட்டிஷார்களும்) நம்மைப்போல் மனிதர்கள் தானே ! பிழைத்துப் போகட் டும்’...

சுதேசி 0

சுதேசி

தலைவர் அவர்களே! சகோதரர்களே!! நான் எதிர்பாராமல் திடீரென்று கூப்பிடப்பட்டுவிட்டேன். இங்குபேச வேண்டிய அவசியமிருக்குமென நான் கருதவேயில்லை.  தங்கள் அழைப்பிற்கிணங்கியும் எனது நண்பரும் சகோதரவாஞ்சையும் உள்ள திரு. நடேச முதலியார் அவர்கள் தலைமை வகித்து நடத்தும் விழாவுக்கு நான் அவசியம் வரவேண்டுமென்றும் ஆசைப்பட்டு வந்தேன். ஆனால் திடுக்கிடும்படியாக அழைக்கப்பட்டு விட்டேன்.  மற்ற இடங்களில் பேசுவதற்கு எனக்கு எவ்வளவு உற்சாகமும் ஆசையும் இருக்குமோ அவ்வளவு உற்சாகமும் ஆசையும் இங்கே பேச எனக்கு உண்டாகவில்லை. மற்றும் என் மனதிற்கு வருத்தமாகவே இருக்கின்றது. ஏனெனில் இந்த சங்கமானது எந்தத் திட்டத்தில் நடைபெற இருக் கின்றதோ அத்திட்டங்களுக்கு நேர்மாறான அபிப்பிராய முடையவனாகிய நான் இன்று இந்த கொண்டாட்டமான தினத்தில் அதற்கு நேர் விரோதமாக பேசுவ தென்றால் அது யாருக்கும் கஷ்டமாகவே இருக்குமல்லவா? ஆனாலும் தலைவர் அவர்கள் இவ்விஷயத்தில், எனது அபிப்பிராயத்தையும் யோசனையையும் சொல்ல வேண்டுமெனக் கேட்டதாலும் என்னைக் கேட் காமலே, பேசவேண்டுமாய் கூப்பிட்டு விட்டதாலும் நான் இவ்விஷயத்தில் எனது...

மதிப்புரைகள் 0

மதிப்புரைகள்

“பகுத்தறிவே விடுதலை – அல்லது ஜீவாத்மா இல்லை” என்னும் இந்தப் புத்தகம் நமது நண்பர் உடுமலைப்பேட்டை உயர்திரு. எம்.எஸ். கனகராஜன் அவர்களால் எழுதப்பட்டு நமது பார்வைக்கு வந்ததைப் பார்த் தோம். இப்புத்தகமானது நாம் பார்த்தவரையில் பகுத்தறிவையே பிரதானமாய் வைத்து மிகுந்த மன ஆராய்ச்சி செய்து எழுதிய ஒரு அருமை யான கருத்துக்களடங்கிய புஸ்தகமாகும் என்பது நமது அபிப்பிராயம்.  இதில் அநேக சொந்தப் புதிய அபிப்பிராயங்களும், யாவரும் ஆச்சரியப்படும் படியாகவும், எவரும் எளிதில் உணர்ந்து கொள்ளும்படியாகவும் பல மேற்கோள்களுடன் எழுதப்பட்டிருக்கின்றது. பொதுவாகவே மக்களுடைய மூட நம்பிக்கைக்கு முக்கிய ஆதாரமாய் இருந்துவரும் ஜீவாத்மா, மதம், கர்மம், முன்பின் ஜன்மம் ஆகியவைகளைப் பற்றியும் மற்றும் கடவுள் வணக்கம்,  விக்கிரக ஆராதனை, பிரார்த்தனை அவைகளுடையவும், மற்றும் மத சம்பந்தமானதுமான சடங்குகள், இவைகளுக்காகச் செய்யப்படும் செலவுகள் முதலியவைகளைப் பற்றியும் தக்க ஆதாரங்களுடன் கண்டித்து எழுதப் பட்டிருக்கின்றது.  மேலும் இவை மாத்திரமல்லாமல் மக்களுக்குள் பிறவி, ஜாதி வித்தியாசம், வருணாசிரமதர்மம் முதலிய...

தமிழ் மாகாண மகாநாடென்பது மறுபடியும் பார்ப்பன பிரசாரமேயாகும் 0

தமிழ் மாகாண மகாநாடென்பது மறுபடியும் பார்ப்பன பிரசாரமேயாகும்

சென்ற ஒரு வருஷ­காலமாய் இந்திய நாட்டில் நடைபெற்ற ஒருவித “அரசியல் கிளர்ச்சி” நாடகத்தின் பயனாய் தமிழ்நாட்டில் பழையபடி பார்ப்பன பிரசாரம் தைரியமாயும் வெளிப்படையாயும் துவக்கப்பட்டு விட்டது.  இதை நன்றாய் உணரவேண்டும் என்பவர்கள் இம்மாதம் 6, 7 தேதிகளில் மதுரையில் தமிழ் நாட்டு மக்கள் பேரால் நடைபெற்ற “ஏமாற்றுந் திருவிழா”(தமிழ் மாகாண மகாநாட்டு) நடவடிக்கைகளைக் கவனித்துப் பார்த்தவர்கள் உணரக்கூடும். முதலாவது இந்த ஏமாற்றுத் திருவிழாவானது தமிழ்நாட்டு 13 ஜில்லாக்களின் சுமார் 2 1/2 கோடி ஜனங்களின் பிரதிநிதித்துவமாக நடத்தப் படுவதாக எவ்வளவோ விளம்பரப்படுத்தியும் அதற்குத் தெரிந்தெடுக்கப் பட்டு கிடைத்தத் தலைவர் யார் என்பது ஒரு முக்கிய விஷயமாகும். திரு. ளு. சத்தியமூர்த்தி அய்யர் தமிழ் நாட்டு 21/2 கோடி மக்களின் முன்னேற்றத்திற்கு தலைவரென்ற காரணத்தாலேயே அந்தத் திருவிழாவுக்கு ஆள்பட்ட பார்ப்பனரல்லாதாரின் பரிதாப நிலைமைக்கு வேறு அத்தாக்ஷி வேண்டியதில்லை.  அவரைத் தவிர வேறுயாரும் தெரிந்தெடுக்க கிடைக்க வுமில்லை, முடியவுமில்லை.  எனவே இந்த ஸ்தானம் தமிழ்நாட்டு...

நன்நிலம் மகாநாடு  ஹிந்தி கண்டனம் 0

நன்நிலம் மகாநாடு ஹிந்தி கண்டனம்

  தஞ்சை ஜில்லா நன்நிலத்தில் இம்மாதம் 7-ந் தேதி கூடிய நன்னிலம் தாலூகா மகாநாட்டில் ஹிந்தி பாஷையைக் கண்டனம் செய்து ஒரு தீர்மானம் செய்யப்பட்டிருக்கின்றது.  அத்தீர்மானமாவது:- “பழைய புராணக் கதைகளைச் சொல்லுவதைத் தவிர வேறு அறிவு வளர்ச்சிக்கும் மற்ற பொது விஷயங்களுக்கும் உதவாத சமஸ்கிருதம், ஹிந்தி முதலிய பாஷைகளைத் தேசீயத்தின் பேரால் அரசியல் காரணங்களுக்காக வென்று படிக்கச் செய்வதானது பார்ப்பனீயத்திற்கு மறைமுகமாக ஆக்கம் தேடுவதாகுமென்று இம்மகாநாடு கருதுவதோடு, தற்கால விஞ்ஞான அறிவை நமது மக்களிடம் பரப்பவும், நவீனத்தொழில் முறைகளை நமது நாட்டில் ஏற்படுத்தவும், மற்ற தேசங்களில் எழும்பியிருக்கும் சீர்திருத்த முற்போக்கு உணர்ச்சிகளை நமது மக்களிடம் தோற்றுவிக்கவும், உலக பாஷையாக வழங்கிவரும் இங்கிலீஷ் பாஷையையே நமது வாலிபர்கள் கற்க வேண்டு மென்று இம்மகாநாடு தீர்மானிக்கிறது” என்ற தீர்மானமாகும்.  இதைபற்றி நாம் 1926 ம் வருஷத்திலேயே “குடி அரசு” பத்திரிகையில் “தமிழுக்குத் துரோக மும், ஹிந்தியின் இரகசியமும்” என்பதாக ஒரு வியாசம் எழுதி இருக்கின்...

திருவாரூரில் சுயமரியாதைப் பிரசாரம் 0

திருவாரூரில் சுயமரியாதைப் பிரசாரம்

தலைவரவர்களே! சகோதரிகளே!!  சகோதரர்களே!!! இன்று நான் பேச வேண்டுமென்று நீங்கள் எதிர்பார்க்கும் விஷயமான “கராச்சிக் காங்கிரசும், சுயமரியாதையும்” என்பது நோட்டீசில் பார்த்த பிறகுதான் எனக்குத் தெரிய வந்தது.  இதைப்பற்றி பல இடங்களில் பேசியும், எழுதியு மிருக்கின்றேனே யென்று சொல்லியும் கூட யாரோ சிலரால் “கராச்சிக் காங்கிரசுக்கும், காங்கிரஸ் தீர்மானங்களுக்கும், சுயமரியாதை இயக்கக் கொள்கைகளுக்கும் வித்தியாச மில்லையாதலால் சுயமரியாதை இயக்கம் வேண்டியதில்லை” யென்று சொல்லப்படுவதாகவும், அதை நம்பி சில வாலிபர்கள் காங்கிரசில் கலந்து கொள்ளஆசைப்படுவதாகவும் தெரியவருவதால், இரண்டுக்குமுள்ள சம்பந்தத்தைப்பற்றி எடுத்துச்சொல்ல வேண்டுமென்றே, இந்த விஷயத்தைப் பற்றி பேசவேண்டுமென்று குறிப்பிட்டதாகச் சொன்னார்கள்.  ஆகவே, இப்பொழுது நான் இதைப்பற்றி பேசுவேனென்பதாகக்கருதி, அதிலும் இது சம்பந்தமான எனதபிப் பிராயத்தை உள்ளபடி சிறிதும் ஒளிக்காமல் எனக்குப் பட்டதை சொல்லுவேனென்று யெண்ணி, நீங்களித்தனை பெயர்கள் இன்று இங்கு கூடியிருக்கிறீர்கள். ஆகவே நான் இந்தச் சமயத்தில் யாருக்காவது பயந்து கொண்டோ, யார் தாட்சன்னியத்திற்காவது மயங்கிக்கொண்டோ எனதபிப்பிராயத்தை உள்ளபடி வெளியிடாமல் மறைத்துப் பேசுவேனே...

இந்துமதம் 0

இந்துமதம்

இந்துமதம், இஸ்லாமானவர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் கொள்கை யில் எவ்வளவு கெடுதியோ அதைவிடப் பல மடங்கான கெடுதிகளை இந்துமதம் பார்ப்பனரல்லாத மக்களுக்கு  காரியத்தில் விளைவிக்கின்றது.  அதைவிடப் பன்மடங்கே தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் விளைவிக்கின்றது.  இஸ்லாமானவர்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும், இந்து மதத்தால் யாதொரு கெடுதியும் இல்லை என்று கூடச் சொல்லலாம்.   இஸ்லாமியரையும் கிறிஸ்த வரையும். இந்துக்கள் வேறாகக் கருதுகின்றார்கள்.  தங்கள் சமூகத்திற்கு எதிறாய் கருதுகின்றார்கள் என்பதைத் தவிர வேறில்லை.  பிரிட்டீஷ் அரசாங் கத்தின் பயனாய் அவர்கள் பார்ப்பனரொழிந்த இந்துக்களைவிட சற்று அதிகமான நிலையில் லாபமே அடைந்திருக்கிறார்கள்.  ஆனால் இந்துமதம் காரணமாக பார்ப்பனரல்லாதாரும் “தீண்டாதாரும்” இழிவாய் நடத்தப்படுவது டன் சுயமரியாதை இல்லாத முறையிலும் சுதந்திரமில்லாமலும் நடத்தப்படு கிறார்கள். மேலும் இவர்களைப் பார்ப்பனர்கள் அடிமையாக்கிக் கொண்டும் இவர்களது கஷ்டத்தின் பயன்களை அனுபவித்துக் கொண்டும் இவர்களை (பார்ப்பனரல்லாதாரையும், தீண்டாதாரையும்) தலையெடுக்கச் செய்யாமலும் செய்து வருகிறார்கள்.  இந்துமதம் என்பதாக ஒன்று இருப்பது இஸ்லாமானவர் களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் மற்றொருவிதத்தில் லாபகரமான தென்றே சொல்லலாம். எப்படியெனில் மேற்கண்ட...

ஜவஹர்லால் 0

ஜவஹர்லால்

உயர்திரு. ஜவஹர்லால் நேரு உடல் சுகத்திற்கென்று தென்னிந்தி யாவிற்கு வந்து ஒரு சரியான நாடகமாடி விட்டு ஊருக்குத் திரும்பினார்.  எப்படித் திரும்பினார்? சமதர்மக் கொள்கைகளையும் பொதுவுடைமைக் கொள்கைகளையும் பல்லவியாக வைத்துக் கொண்டார். “யோக்கியர்களுக்கு அரசியல் உலகம் வெறுப்பைக்கொடுக்கின்றது.  சீக்கிரம் அதை விட்டு விலகிக்கொள்ளுவேன்” என்றார்.  ஆனால் தான் கடைசிவரை அரசியல் பிரசாரமே அதுவும் அரசியல்காரர்கள் முறையைப் பின்பற்றியே செய்தார்.  சமூக இயல் விஷயத்தில் தீண்டாமையைப்பற்றி உண்மையைத் தைரியமாய் பேசுவதற்கு ஒவ்வொரு நிமிஷமும் நடுங்கினார்.  ஏதாவது ஒரு சமயத்தில் தீண்டாமை யொழியவேண்டுமென்று பேச நேர்ந் தாலும் உடனே அதற்கு பந்தோபஸ்தாக எந்த ஜாதியாரின் உரிமை களையும் பாதிக்க விடமாட்டேன் என்றும் ஒருகரணம் அடித்துக் கொண்டே பார்ப்பனர் களின் கோபத்திலிருந்தும் தப்பித்துக்கொண்டார். காங்கிரசிலும் தீண்டாமையைப்பற்றி ஏற்பாடு செய்திருப்பதாகச் சொன்னார்.  ஆனால் இப்போது செய்ய வேண்டிய வேலை அதுவல்ல.  கள்ளுக்கடை, ஜவுளிக்கடை மறியல் தான் என்று ஒரு பல்டி அடித்துத் தப்பித்துக் கொண்டார். ஆகவே அவர்...

மதுவிலக்கு நாடகம் 0

மதுவிலக்கு நாடகம்

தேசியத்தின் பேரால் ஏதாவது ஒரு நாடகம் நாட்டில் நடந்து கொண்டி ருக்கா விட்டால் மக்கள் காங்கிரசையும், காந்தியையும் அடியோடு மறந்து விடுகின்றார்கள். ஆதலால் தேசீய தொழில்காரர்களுக்கு ஏதாவது ஒரு வேலை நடத்திக் கொண்டிருக்கவேண்டிய அவசியமேற்பட்டிருக்கின்றது.  அதற்கு ஏற்றாப்போல் காங்கிரஸ் பக்தர்களுக்கும் பொதுஜனங்களின் காணிக்கைப் பணம் தாராளமாய் இருக்கின்றது.  அதற்கேற்றாப்போல் வேலையில்லாத் தொந்திரவால் கஷ்டப்படும் வாலிபர்களும் நாட்டில் ஏராளமாய் இருக்கின் றார்கள்.  ஆகவே இவ்விரண்டும் சேர்ந்தால் பெட்றோல் எண்ணைக்கும், நெருப்புக்கும் உள்ள சம்மந்தம் போல் ஒன்றுக்கொன்று வெகு சுலபமான சம்மந்தம் ஏற்பட்டு விடுகின்றது. ஆகையால் இவை இரண்டையும் வைத்துக்கொண்டு என்ன வேலை செய்யலாம் என்று பார்த்தால் பொது ஜனங்கள் சீக்கிரம் ஏமாறுவதற்கு அனுகூலமாக கள்ளுக்கடை மறியல்கள் தான் தென்படுகின்றது.  ஆகவே இதன் மீது தலைவர்கள் என்பவர்கள் வாலிபர்களை ஏவி விடுவதால் ஏதாவது ஒரு கலகம் ஏற்படுகின்றது. அக்கலகத்தை பிரமாதப்படுத்தி விளம்பரம் செய்வதே பெரிய தேசீயப் பிரசாரமாகக் கருதப்பட்டு விடுகின்றது.  இந்த முறையிலேயே மதுவிலக்கு...

தினசரி                                             சுயமரியாதை இயக்கத்திற்கு ஒரு தமிழ்  பத்திரிக்கை 0

தினசரி                                             சுயமரியாதை இயக்கத்திற்கு ஒரு தமிழ்  பத்திரிக்கை

லாலுகுடி தாலூகா சுயமரியாதை மகாநாட்டுக்கு வந்திருந்த சுயமரியாதை இயக்கப் பிரமுகர்கள் சுயமரியாதை இயக்கத்திற்கு ஒரு தினசரி பத்திரிகை வேண்டி இருக்கின்ற அவசியத்தைப்பற்றி நெடுநேரம் பேசினார்கள். திரு.ஈ.வெ. இராமசாமி, தினசரி அவசியமில்லை என்றும் தன்னால் அதை நிர்வகிக்க முடியாதென்றும் சொல்லியும் மற்றவர்கள் கண்டிப் பாக ஒரு பத்திரிகை இருந்துதான் ஆகவேண்டுமென்றும் நீங்கள் முன் வந்து நடத்தாவிட்டாலும் மற்றவர்கள் நடத்த முன்வருவதை தடுக்காமலாவது இருந்து பத்திரிகை கொள்கைக்கு மாத்திரம் பொறுப்பாளியாய் இருந்தால் போதுமென திரு. இராமசாமிக்குச் சொன்னதின் பேரில் அப்படியானால் அந்த விஷயத்தில் தனக்கு ஆnக்ஷபணையில்லை யென்றும் சொன்னார்.  அதன் பிறகு 500 ரூ. வீதம் கொண்ட50 பங்குகள் ஏற்பாடு செய்து திருச்சியிலேயே தினசரி பத்திரிகை நடத்துவது என்ற முடிவுக்கு வரப்பட்டது.  பத்திரிகையின் நிர்வாகத்திற்கு திரு.சொ. முருகப்பா பொறுப்பாளியாய் இருக்க வேண்டும் என்றும் பேசப்பட்டது.  மற்றும் இரண்டொரு தனவணிக கனவான்கள் ஆதர வளிக்க முன் வந்தார்கள்.  சிலருக்கு தினசரி திருச்சியில் நடத்த முடியுமா என்கிற...

சுயமரியாதை இயக்கமும் காங்கிரசும் 0

சுயமரியாதை இயக்கமும் காங்கிரசும்

சுயமரியாதை இயக்கமானது இப்போது நடைமுறையில் இருக்கும் காங்கிரசுக் கொள்கைகளைக் கொண்ட தேசீயத்திற்கும் திரு. காந்தியவர் களின் தத்துவமாகிய காந்தீயத்திற்கும் நேர்மாற்றமானது என்பதை நாம் மறைக்க முயலவில்லை. எப்படியெனில் இன்றைய காங்கிரசு திட்டங்கள் காகிதத்தில் என்ன இருந்தபோதிலும் தேசீயத்தின் பேரால் நடைமுறை திட்டங்கள் என்பவை களாக, கதர் ஹிந்தி கள்ளுக்கடை ஜவுளிக்கடை மறியல் என்பவைகளேயாகும். மேற்கண்ட இந்த மூன்று திட்டங்களிலும் சுயமரியாதை இயக்கம் மாறுபட்டேயிருக்கின்றது என்கின்ற விபரம் ஏற்கனவே குடி அரசு வாசகர் கள் உணர்ந்ததுவேயாகும். கதர் விஷயத்தில் 1928ம் வருஷத்திற்கு முன்னிருந்தே அதாவது திரு. காந்தியவர்கள் தென்னாட்டிற்கு கதர் பண்டு வசூலுக்கு வந்த காலத்திலேயே கதரின் தத்துவத்தைக் கண்டித்து வந்திருக்கின்றோம்.  அதையே குடி அரசிலும் திராவிடனிலும் பல தடவை எழுதி வந்திருப்பதோடு அனேக மேடைகளிலும் கதர் கொள்கையைக் கண்டித்துப்பேசியும் வந்திருக் கிறோம். ஆதலால் கதரைப்பற்றிய நமது அபிப்பிராயம் என்பது இப்போது புதிதாக ஒன்றும் ஏற்பட்டதல்ல.  இதை அனுசரித்தேதான் இவ்வாரம் லால்குடியில் நடந்த...

பிரசார போதனாமுறை பள்ளிக்கூடம் 0

பிரசார போதனாமுறை பள்ளிக்கூடம்

சுயமரியாதை இயக்கத் தத்துவங்களை பிரசாரம் செய்ய ஈரோட்டில் போதனா முறை பாடசாலை ஒன்று ஏற்படுத்தி சிறிது காலத்திற்கு பயிற்சி கொடுப்பது என்பதாக ஏற்பாடு செய்து கொஞ்ச நாளைக்கு முன் அதற்காக ஒரு திறப்பு விழாவும் கொண்டாடப்பட்டது ஞாபகமிருக்கலாம்.  அந்தப்படி அவ்வப்போது தனித்தனியாக சிலர் வந்து பயிற்சி பெற்று போனார்கள் என்றாலும் ஒரு முறையாக வைத்து அப்போதனாமுறை பயிற்சி செய்யப் படவில்லை. ஆனால் இப்போது இந்த ஜூன் µ 15 தேதியில் இருந்து முறை யாகவே பள்ளிக்கூடப்பயிற்சி முறையில் ஒரு பயிற்சி சாலை ஏற்படுத்த நிச்சயித்திருப்பதால் அதில் சுமார் 20,  25 பேர்களையே சேர்த்துக் கொள்ளக் கூடும்.  ஆதலால் வர இஷ்டமுள்ளவர்கள் தயவு செய்து 8 ² க் குள் இவ் விடம் வந்து சேரும்படியாக விண்ணப்பம் அனுப்ப வேணுமாய்க் கோரப் படுகிறார்கள். விண்ணப்பம் எழுதுகின்றவர்கள் அந்தந்த ஜில்லாவிலுள்ள சுய மரியாதை இயக்கத்தில் பற்றுள்ள பிரமுகர்களின் மூலம் அறிமுகச் சீட்டு வாங்கி அனுப்பவேண்டும்....

தரங்கம்பாடி சமுத்திரக்கரையில் கூட்டம் 0

தரங்கம்பாடி சமுத்திரக்கரையில் கூட்டம்

சுயமரியாதை இயக்கம் தோன்றிய இந்த 5, 6 வருஷ­ காலத்தில் நாட்டில் ஏற்பட்டிருக்கிற உணர்ச்சிகள் என்ன என்பதைப் பற்றியும், அதனால் ஏற்பட்ட காரியங்கள் என்ன என்பதைப்பற்றியும், சுயமரியாதை இயக்கத்தின் பேரால் சொல்லப்பட்ட அபிப்பிராயங்களெல்லாம் முதலில் கேட்பவர்க ளுக்கு அதிசயமாகவும், தலைகீழ் புரட்சியாகவும் காணப்பட்ட போதிலும் சாதாரணமாக ஒவ்வொரு அபிப்பிராயங்களும் ஒரு வருஷம் அல்லது இரண்டு வருஷங்களுக்குள்ளாகவே செல்வாக்குப்பெற்று எல்லா ஜனங்களா லும் சகித்துக்கொண்டு வரப்படுகின்றதென்றும், பார்ப்பனர்களுடைய ஆதீக் கத்திலும், பார்ப்பனீய பிரசாரகரின் ஏக நாயகத் தன்மை யிலும் இருந்துவந்த காங்கிரசு முதலிய அரசியல் ஸ்தாபனங்களும் பல மத ஸ்தாபனங்களும் பல சமுதாய வகுப்பு ஸ்தாபனங்களும் இப்பொழுது இந்த அபிப்பிராயங்களையே சொல்லத்துடங்கிவிட்டதென்றும், இவைகளுக் கெல்லாம் காரணம் நாம் ஆரம்பித்த எடுப்பிலிருந்து ஒரு சிறிதும் எந்தக் கொள்கையிலும் பின் போகா மல் நாளுக்குநாள் முன்னேறிக் கொண்டு வந்ததோடு, யாருடைய பழிப்புக் கும், பகைமைக்கும் தாட்சன்னியத்திற்கும் பயப்படாமல்  உறுதியுடனிருந்த தோடு, யாரானாலும், எப்படிப்பட்டவர் களானாலும், நமது...

வருந்துகிறோம் 0

வருந்துகிறோம்

பச்சையப்பன் கலாசாலை தமிழ் புலவரும் “திராவிடன்” பத்திராதி பருமான உயர்திரு. மணி திருநாவுக்கரசு முதலியார் அவர்கள் திடீரென முடிவெய்திய செய்தி கேட்டு நாம் பெரிதும் வருந்துகின்றோம்.  இவர் ஓர் தமிழ் பண்டிதராய் விளங்கியதுடன், சமூதாயச் சீர்திருத்தத்தில் ஆர்வங் கொண்டு, சமூக முன்னேற்றத்திற்காக பல உபன்யாசத் தொண்டுகளும் புரிந் திருக்கிறார்.  பார்ப்பனரல்லாதார் இயக்கத்திற்கு பாடுபட்டவர்களில் ஒருவரா வார்.  பொதுவாக தமிழுலகமும், சிறப்பாக பிராமணரல்லாத உலக மும் ஓர் நண்பரை இழந்து விட்டார்களெனக்கூறுவது மிகையாகாது .  ஆகவே அவரது பிரிவுக்கு வருந்துவதோடு, நமது வருத்தத்தை அவருடைய குடும்பத் தாருக்கும் முக்கியமாக அவரது உடற்பிறந்த  பின்னோர் திருவாளர் மணி கோடீஸ்வர முதலியார் க்ஷ.ஹ.டு.கூ., அவர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம். குடி அரசு – இரங்கல் செய்தி – 31.05.1931

விருதுநகர் சுயமரியாதை மகாநாடு 0

விருதுநகர் சுயமரியாதை மகாநாடு

விருதுநகர் சுயமரியாதை மகாநாடு ஜூன் முதல் வாரத்திலாவது இரண்டாவது வாரத்திலாவது நடத்துவதாக உறுதி செய்யப்பட்டு வேண்டிய ஏற்பாடுகள் செய்து வந்ததில் மகாநாட்டுத் தலைவர் திரு. சர் ஹரிசிங்கவர் அவர்கள் நீலகிரியில் இருந்து உடல் நலமில்லாமல் திரும்பிப்போய் விட்ட தாலும் வெய்யில் கடுமையை உத்தேசித்து வேறுதக்க தலைவர் சமீபத்தில் கிடைப்பதற்கில்லாமல் இருப்பதால் மகாநாட்டை ஆகஸ்டு வாக்கில் நடத்து வதாக தள்ளிப்போட்டு விட்டதாய் விருதுநகர் மகாநாட்டு வரவேற்புக் கமிட்டி யார் தீர்மானம் செய்திருப்பதாக தெரிவித்துவிட்டார்கள்.  மகாநாட்டு விஷய மானது இந்தப்படி அடிக்கடி மக்கள் ஏமாற்றமடையும் படி நடந்து வருவது பலருக்கு மிகவும் வருத்தத்தைக் கொடுக்கக் கூடியதா யிருந்தாலும் அதற்கு அனுகூலமாக சம்பவங்கள் ஏற்பட்டு வருகின்றதை நாம் மறுப்பதற்கில்லை என்பதையும் ஒருவாறு தெரிவித்துக் கொள்ளு கின்றோம்.  இதை ஆதாரமாய் வைத்துக் கொண்டு நமது இயக்க எதிரிகள் விசமப்பிரசாரம் செய்யக்கூடும். ஆனாலும் வரவேற்புக் கமிட்டியார்  இதை உணராதவர்கள் என்று சொல்லி விட முடியாது.  இதற்காக அவர்கள் மகா...

தஞ்சை ஜில்லா சுயமரியாதை மகாநாட்டு தீர்மானங்கள் 0

தஞ்சை ஜில்லா சுயமரியாதை மகாநாட்டு தீர்மானங்கள்

இம்மாதம் 24, 25ம் தேதிகளில் பிறையாற்றில் நடந்த தஞ்சை ஜில்லா சுயமரியாதை மகாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மற்றொரு பக்கம் பிரசுரிக்கப்பட்டிருக்கின்றன.  அவற்றுள் முக்கியமாகக் கருதப் படுவதும், பலருக்கு திடுக்கிடும்படியான அளவுக்கு பிரமாதமாய் காணப்படு வதுமான தீர்மானங்கள் மூன்று. அதாவது, “மக்களுக்குள் இருந்துவரும் தீண்டாமையும், ஜாதி வித்தியாசமும் அடியோடு ஒழிக்கப்பட வேண்டுமானால் அதற்கு முட்டுக்கட்டையாக விருக்கும் ‘இந்து மதம்’ என்பது அழிக்கப்பட வேண்டியது மிக்க அவசிய மாகும்.” “மக்கள் உண்மையான சுதந்திரமும், சமதர்மமும், பொது வுடைமைத் தத்துவமும் அடைய வேண்டுமானால் அவற்றிற்கு இடை யூறாக விருக்கும் கடவுள் நம்பிக்கையும், எதற்கும் அதையே பொறுப் பாக்கும் உணர்ச்சியும் ஒழிக்கப்பட வேண்டியது அவசியமாகும்.” “பெண்கள் ஆண்களைப் போன்ற விடுதலையையும், சமதர்ம ஒழுக்கத்தையும், சுதந்திரத்தையும் அடைய வேண்டுமானால் அவற்றிற்கு தடையாயிருக்கும் பிள்ளைப்பேற்றை (கர்ப்பத்தை) அடக்கி ஆள வேண்டியது அவசியமாகும்” என்பவைகளாகும் ஆகவே இதன் கருத்து மத உணர்ச்சி, கடவுள் உணர்ச்சி ஆகியவை மக்கள் வாழ்க்கைக்குள் புகுந்து கொண்டு...

புதிய முறை சீர்திருத்த மணம்  பொன்னம்பலனார் – சுலோசனா 0

புதிய முறை சீர்திருத்த மணம் பொன்னம்பலனார் – சுலோசனா

  திருவாளர் அ. பொன்னம்பலனார் அவர்களது திருமணமானது 24ந் தேதி மாலை 5 மணிக்கு பிறையார் நாடார் ஹைஸ்கூல் ஆலில் உயர்திரு.  புரபசர் லக்ஷிமி நரசு அவர்கள் தலைமையில் நடைபெற்றது.  திருமண ஒப்பந்தம் நடைபெறுவதற்கு முன் திரு. ஈ. வெ. இராமசாமி எழுந்திருந்து சில வார்த்தைகள் சொன்னார். அதாவது சீர்திருத்த திருமணம் என்றும் சுயமரியாதைத் திருமணம் மென்றும் சொல்லப்படுபவைகளெல்லாம் எனது கருத்துப்படி பழைய முறையில் உள்ள அதாவது தெய்வீக சம்மந்தம், சடங்கு, இருவருக்கும் சம உரிமை இல்லாத கட்டுப்பாடு, நியாய வாழ்க்கைக்கு அவசியமில்லாத இயற்கை தத்துவத்திற்கு முரணான நிபந்தனைகள் ஆகியவைகளில் இருந்து விடுபட்டு நடைபெறும் திருமணங்களேயாகும்.  சுயமரியாதை இயக்கத் திற்குப் பின் இத்திருமண விஷயத்தில் அனேகவித சீர்திருத்த மணங்கள் நடைபெற்றிருக்கின்றன. அதாவது பார்ப்பனப் புரோகிதமில்லாத – அர்த்தமற்ற, அவசிய மற்ற சடங்குகள் இல்லாத, புரோகிதமே இல்லாத ஓரேநாளில் ஒரே மணியில் நடைபெறக்கூடிய வீண்செலவு இல்லாத முதலிய மாதிரியிலும் மற்றும் கலப்பு மணங்களும்,...

பார்ப்பன வக்கீல்கள்,  மாணவர்கள் “காங்கிரஸ்” பிரசாரம் 0

பார்ப்பன வக்கீல்கள், மாணவர்கள் “காங்கிரஸ்” பிரசாரம்

  இப்போது கோர்ட்டும் பள்ளிக்கூடமும் மூடப்பட்டு லீவு நாளாய் இருப்பதால் அந்த நாளைக் காங்கிரஸ் பிரசாரம் மென்னும் பார்ப்பன பிரசாரத் திற்காக ஊர் ஊராய் சென்று வெகு கவலையாய்ப் பிரசாரம் செய்யப் பார்ப்பன வக்கீல்களும், மாணவர்களும் உபயோகிக்கின்றார்கள். இதுபோன்ற கவலை பார்ப்பனரல்லாத வக்கீல்களுக்குள்ளும், மாணவர்களுக்குள்ளும் சிறிதும் யாருக்கும் கிடையாது.  பார்ப்பனரல்லாத வக்கீல்களையும், மாணவர்களையும் காங்கிரஸ் பிரசாரம் செய்யும்படி நாம் விரும்பவிலை.  ஆனால் பார்ப்பனப் புரட்டை எடுத்து வெளியிடும் பிரசாரம் ஏன்  செய்யக்கூடாது என்றுதான் கேட்கின்றோம்.  பார்ப்பனரல் லாத சமூகம் ஒரு மனிதன் தன்னை தூக்கி ஏதோ  விடுவதன் மூலமே மேலேறலாம் என்று நினைத்தால் எவ்வளவுதான் தூக்கிவிட முடியும்? கைக்கு எட்டும் அளவுக்கு மேல் எப்படித்தான் தூக்கிவிட முடியும்? நமது நாட்டில் பார்ப்பனரல்லாதார் முன்னேற்றம் என்பது வெறும் உத்தியோக ஆத்திரமே அல்லாமல் அதுவும் தனிப்பட்டவர்கள் தனது தனது சொந்த உத்தியோக நலத்திற்கு ஆத்திரப் படுவதல்லாமல்  அந்த சமூக நலத்திற்குப் பாடுபடுவது என்பது யாரிடத்...

சி. இராஜகோபாலாச்சாரியாரின் வேலைத்திட்டம் 0

சி. இராஜகோபாலாச்சாரியாரின் வேலைத்திட்டம்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் உயர்திரு. சி. இராஜ கோபா லாச்சாரியார்  அவர்கள் பணம் வசூலிப்பதற்காக வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் அந்தப் பணத்தின் மூலம் செய்யப்படும் வேலைத் திட்டங் களையும் குறிப்பிட்டிருக்கின்றார். அவைகளில் 5-வது திட்டமாக:- ஹிந்தி:- “ஜனங்களிடையே இருக்கும் குருட்டு நம்பிக்கையையும், மூடப்பழக்கவழக்கங்களையும் போக்கி பகுத்தறிவும் ஏற்படுவதற்குப் பாடு பட வேண்டும்” என்பதாகக் குறிப்பிட்டிருக்கிறார். இது தற்காலத்திற்கு ஏற்றதொரு வேஷமேயானாலும் இவர்களும் இவர்களது சிஷ்யகோடிகளும் செல்லு மிடங்களிலெல்லாம் பாரதக்கதையையும், ராமாணயக் கதையையும், நளன் கதையையும் மற்றும் விஷ்ணுவின் 10 அவதாரக் கதைகளையும் பிரசங்கம் செய்து, பிரசாரம் செய்து கொண்டே போவது குருட்டு நம்பிக்கையையும், மூடப்பழக்கவழக்கங்களையும் ஒழித்து பகுத்தறிவை உண்டாக்கும் பிரசார மாகுமா? என்று வணக்கத்துடன் கேட்கிறோம்: அன்றியும் அந்த ³ அறிக்கையில் உள்ள 8 திட்டங்களிலும் தீண்டாமை விலக்கு திட்டத்தை மாத்திரம் வெகு ஜாக்கிரதையாகவே நமது ஆச்சாரியாரவர்கள் அடியோடு ஒரு வார்த்தை கூட சொல்லாமல் விட்டிருக் கிறது மிகவும் குறிப்பிடத்தக்கதாகும்....

ஈரோட்டில் போலீஸ் அக்கிரமம் 0

ஈரோட்டில் போலீஸ் அக்கிரமம்

சகோதரர்களே! போலீஸார் அத்துமீரி நடந்த காரியத்தை கண்டிப் பதற்கு நாம் இக்கூட்டம் கூடியதாக சொல்லப்பட்டது என்றாலும் “போலீசார் ஏன் அடித்தார்கள்” என்று விசாரணை செய்ய நாம் இங்கு கூடவில்லை.  ஆனால் ஒரு கண்ணியமுள்ள கனவானை கடைவீதியில் வைத்து அவ மானம் செய்ததான அக்கிரம காரியத்தை கண்டிக்கவே கூடியிருக்கின்றோம். ஒருவன் குற்றம் செய்தால் குற்றத்திற்கு உரிய எந்த நியாயமான தண்டனையையும் அடைவதில் நாம் சிபார்சுக்குப் போகப்போவதில்லை.  மேலும் குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பதிலும், அவர்களை தண்டிப்ப திலும் நாம் போலீசாருக்கு உதவிபுரிய வேண்டியது அவசியந்தான்.  குற்றவாளி களை பிடிப்பதில் நாம் உதவி செய்யாது, போலீசுக்கு  விரோதமாக நடந்தால் ஊரில் சமாதானம் என்பது ஏற்படாது என்பது நாம் உணர்ந்ததேயாகும்.  ஆனால் இந்த சந்தர்ப்பத்தில் போலீசார் நடந்து கொண்ட முறையானது அக்கிரமமானதாகும்.  ஏனெனில், போலீசார் ஒரு பெரிய மனிதரை அடித்து விட்டார்கள்.  இதைக் கண்டிக்காமல் .இருக்க முடியாது.  இல்லா விட்டால் நாளைக்கும் இப்படித்தான் செய்வார்கள்.  மேலும் அவர்களால் அடிக்கப்...

திரு. சத்தியமூர்த்தி 0

திரு. சத்தியமூர்த்தி

உயர்திரு. சத்தியமூர்த்தி அய்யர் தென் இந்தியாவிலுள்ள பார்ப்பன அரசியல்வாதிகளையெல்லாம் விட மிகவும்  நல்லவர் என்றே சொல்லு வோம் – அவருக்கு சூது வஞ்சகம் ஆகிய காரியங்கள் அவ்வளவு அதிக மாய் அதாவது  பிறத்தியார் கண்டுபிடிக்க முடியாதபடி செய்தவற்குத் தகுந்த  அளவு தெரியாது  என்றே  சொல்லுவோம். ஆதலால் இப்படிப்பட்ட வர்களால் பார்ப்பனரல்லாதாருக்கு அதிகமான கெடுதி ஒன்றும்  செய்துவிட முடியாது.  அந்த முறையிலேயேதான் அவரை நல்லவர் என்று சொல்லு கின்றோம்.  அவருடைய  பொதுநல சேவையின் ஆரம்பமானது மிகவும் பரிசுத்தமாகவே ஆரம்பிக்கப்பட்டது  என்பதே  நமது அபிப்ராயம்.  ஆனால் பிறகு அவரை அய்யங்கார் கூட்டப்பார்ப்பனர்கள் அய்யர்கூட்டப் பார்ப்பனர் களுக்கு விரோதமாய் உபயோகித்துக்கொள்ள நினைத்து  திரு.சத்திய மூர்த்தியை மிகவும் தூக்கிவைத்துக் கெடுத்து விட்டார்கள். அவரும் இந்த அய்யங்கார்  கூட்டத்தையும்  அவர்களது அரசியலையுமே நம்பி தன்னைப் பற்றி அதிகக்கவலை எடுத்துக் கொள்ளாமல் போய் விட்டதினாலும்  தனக்கு என்று ஒரு கொள்கையை பிடித்து வைத்துக் கொள்ளாமல்  போனதினாலும் கிரமப்படி அவருக்கு இருந்திருக்க...

3 வது மாகாண சுயமரியாதை  மகாநாடு 0

3 வது மாகாண சுயமரியாதை  மகாநாடு

விருதுநகரில் நடக்கவிருக்கும் 3-வது சுயமரியாதை மகாநாடானது முன் குறிப்பிட்டபடி ஜுன்-µ 6,7, தேதிகளில் நடத்துவது சற்று தாமதித்து அதாவது ஒரு வாரம் பொறுத்து நடத்த வேண்டியதாக ஏற்பட்டு விட்ட தென்று தெரிவிக்க  வேண்டியதாகிவிட்டது.  ஏனெனில் மகாநாட்டிற்குத் தலைமை வகிக்க ஏற்கனவே  இசைந்து  அதை  உத்தேசித்தே சுமார் 1 மாதத்திற்கு முன்னதாகவே இங்கு  வந்து நீலகிரியில் (ஊட்டியில்) தங்கியிருந்த உயர்திருவாளர் சர். ஹரி சிங்கவர் அவர்களுக்கு பல்லில் வலி ஏற்பட்டு அதனால் ஒரு பல் எடுக்கவேண்டியதாகியும் மேலும் அவருக்கு அந்த  வலி நிற்காமல் மிகவும் தொந்திரவு கொடுத்ததால் அவர் மகாநாட்டுக்கு வர  முடியாமலும் அதுவரை இங்கு இருக்க முடியாமலும் திடீரென்று தமது  ஊருக்குப் புறப்பட வேண்டியதாகிவிட்டது.  ஆன போதிலும் மகாநாட்டை எந்த  விதத்திலும் ஒரு வாரம் முன்பின்னாகவாவது நடத்திவிடலாம் என்கிற தீர்மானத்தின்  மீதே தலைவர் உயர்திருவாளர் சௌந்திரபாண்டியன் அவர்களும், மற்றும்  விருதுநகர் பிரமுகர்கள்  திருவாளர்கள் வி.வி.ராமசாமி, செந்தில்குமார நாடார் முதலியவர்களும் வெகு மும்மரமாகவே...

தீண்டாமை 0

தீண்டாமை

உலகத்திலுள்ள கொடுமைகள் எல்லாவற்றையும்  விட, இந்தியாவில் மக்களை  மக்கள் தீண்டாமை என்கின்ற இழிவு  சம்மந்தமாக செய்துவரும்  கொடுமையே மிகப் பெரிதாகிய கொடுமையென்றும், அதற்குச் சமானமாக வேறு  எந்தக் கொடுமையையும் கூற முடியாதென்றும், எல்லா மக்களாலும் அரசியல் சமூக இயல் வாதிகளாலும்  சொல்லப்பட்டு பொது மக்களால் ஒப்புக் கொள்ளப்பட்ட விஷயமுமாகும். ஆனால், அது விஷயத்தில் மாத்திரம் பயன்படத்தக்க வழியில் ஏதாவதொரு முயற்சியை இதுவரையில் யாரும் எடுத்துக் கொள்ளாமலே வெறும் வாய்ப்பந்தல் போடுவதினாலேயே மக்களை  ஏமாற்றிக் கொண்டு காலங்கழித்து வருவதும்  பிரத்தியட்சத்தில் தெரிந்த காரியமாகும். சமீப காலத்தில் இந்தியாவில் ஏற்பட்ட ஒரு சட்டமறுப்பு கிளர்ச்சியில் உப்புக் காய்ச்சுவது, வனத்தில் பிரவேசிப்பது,  கள்ளுக்கடை  மறியல் செய்வது, ஜவுளிக்கடை மறியல் செய்வது, என்பவைகள்   போன்ற சில  சாதாரணமானதும், வெறும் விளம்பரத்திற்கே  ஆனதுமான காரியங்கள் செய்யப்பட்டு 40 ஆயிரம்பேர் வரையில் ஜெயிலுக்குப்  போயும் அடிப் பட்டும்  உதைபட்டும் கஷ்டமும்பட்டதாக  பெருமை பாராட்டிக் கொள்ளப் பட்டதே தவிர இந்த மிகக்...

திருச்சி பார்ப்பனரல்லாத வாலிபசங்க இரண்டாவது ஆண்டு விழா 0

திருச்சி பார்ப்பனரல்லாத வாலிபசங்க இரண்டாவது ஆண்டு விழா

தலைவர் அவர்களே ! சகோதரர்களே!! “சுயமரியாதையும் சுயராஜியமும்” என்பதுபற்றி பேசுவது இங்குள்ள சிலருக்கு திருப்தியைக் கொடுக்காது என்பது எனக்குத் தெரியும்.  ஆனால் அந்தப்படி அதிருப்திப்படுபவர்களில் அநேகர் நான் பேசிய விஷயங்கள் முழுவதையும் உணர்ந்த பின்பு ஒரு சமயம் திருப்தி அடையக்கூடும் என்று நம்புகின்றேன். சிலர் எந்த விதத்திலும் திருப்தி அடைய மாட்டார்கள் என்றாலும் சுயராஜ்யம் என்பதைப் பற்றி மற்றவர்கள் பேசுபவைகளில் இருந்து நான் அடையும் அதிருப்தி அவ்வளவு அவர்களுக்கு நான் பேசுவதில் ஏற்படாது என்றே நினைக்கின்றேன். பொதுவாகவே, சுயராஜ்யம், சுயராஜ்யம் என்கின்ற கூப்பாடு நாட்டில் நிறைந்து அந்த வார்த்தைக்கும் ஒருவித செல்வாக்குண்டாக்கப்பட்டிருக்கும் இந்தச் சமயத்தில் அதற்கு விரோதமாக ஒருவர் பேசுவது  என்பது சற்று கஷ்டமான வேலை என்பதோடு அளவுக்கு மீறின தைரியம் வேண்டி யிருக்கும் என்று சொல்லுவார்கள்.  ஆனால் எனக்கு அது அவ்வளவு கஷ்டமாகவோ, அதிக தைரியம் வேண்டிய காரியமாகவோ தெரிய வில்லை.  ஏனெனில் எனது அனுபவத்தில் அது மிக சாதாரண...

திருச்சி பார்ப்பனரல்லாத வாலிபசங்க இரண்டாவது ஆண்டு விழா 0

திருச்சி பார்ப்பனரல்லாத வாலிபசங்க இரண்டாவது ஆண்டு விழா

தலைவர் அவர்களே ! சகோதரர்களே!! “சுயமரியாதையும் சுயராஜியமும்” என்பதுபற்றி பேசுவது இங்குள்ள சிலருக்கு திருப்தியைக் கொடுக்காது என்பது எனக்குத் தெரியும்.  ஆனால் அந்தப்படி அதிருப்திப்படுபவர்களில் அநேகர் நான் பேசிய விஷயங்கள் முழுவதையும் உணர்ந்த பின்பு ஒரு சமயம் திருப்தி அடையக்கூடும் என்று நம்புகின்றேன். சிலர் எந்த விதத்திலும் திருப்தி அடைய மாட்டார்கள் என்றாலும் சுயராஜ்யம் என்பதைப் பற்றி மற்றவர்கள் பேசுபவைகளில் இருந்து நான் அடையும் அதிருப்தி அவ்வளவு அவர்களுக்கு நான் பேசுவதில் ஏற்படாது என்றே நினைக்கின்றேன். பொதுவாகவே, சுயராஜ்யம், சுயராஜ்யம் என்கின்ற கூப்பாடு நாட்டில் நிறைந்து அந்த வார்த்தைக்கும் ஒருவித செல்வாக்குண்டாக்கப்பட்டிருக்கும் இந்தச் சமயத்தில் அதற்கு விரோதமாக ஒருவர் பேசுவது  என்பது சற்று கஷ்டமான வேலை என்பதோடு அளவுக்கு மீறின தைரியம் வேண்டி யிருக்கும் என்று சொல்லுவார்கள்.  ஆனால் எனக்கு அது அவ்வளவு கஷ்டமாகவோ, அதிக தைரியம் வேண்டிய காரியமாகவோ தெரிய வில்லை.  ஏனெனில் எனது அனுபவத்தில் அது மிக சாதாரண...

காங்கிரஸ் கூட்டத்தில் சொற்பொழிவு 0

காங்கிரஸ் கூட்டத்தில் சொற்பொழிவு

சகோதரர்களே! நமது ஊருக்கு வந்த விருந்தாளியை வரவேற்கவும், அவருக்கு நமது மரியாதையைக் காட்டிக்கொள்ளவும் என்று நமது ஊர் மக்களின் பிரதிநிதி ஸ்தாபனமாகிய முனிசிபல் சபை திரு. சென்குப்தா அவர்களுக்கு ஒரு வரவேற்புப்  பத்திரமளிக்கத் தீர்மானித்து, அவ்வரவேற்பளிக்கும் கூட்டத் திற்கு என்னை தலைமை வகிக்க வேண்டுமென்று நமது முனிசிபல் சேர் மென் திரு. ஷேக் தாவுத் சாயபு அவர்கள் விரும்பியபடியும், உங்கள் எல்லோருடைய ஆமோதிப்புப் படியும் எனக்கு அளிக்கப்பட்ட இந்தப் பெருமைக்கு நன்றி செலுத்துகின்றேன். திரு. சென்குப்தா அவர்கள் முதலில் முனிசிபல்  நிர்வாகத்தைப்  பாராட்டிப் பேசியபின் இந்த முனிசிபாலிட்டிக்கு மின்சார சப்ளை பொ றுப்பை ஒருவெள்ளைக்காரக் கம்பெனிக்கு அரசாங்கத்தார் கொடுத்து விட்டதைக் கண்டித்துப்  பேசினார்.  அது மிகவும் சரியானதேயாகும். ஆனா லும்,  அக்குற்றம் முழுவதும் அரசாங்கத்தாருடையதல்ல.  அவர்களுக்கு நம்மிடம் இவ்வளவு அலட்சியம் ஏற்படுவதற்கு நமது கேவல நிலைமையே  காரணமாகும். நமக்கு உண்மையில் அரசாங்கத்தார் செய்தது தப்பு என்றும் அவர்கள் நம்மை அலட்சியம் செய்தது...

‘சுதந்திர வீரன்’ 0

‘சுதந்திர வீரன்’

சுதந்திர வீரன் என்னும் பத்திரிகையின் முதல் மலர், முதல் இதழ் வரப்பெற்றோம்.  அதன் தலையங்கத்தில் கடவுள், காந்தி, காங்கிரஸ், புராதான நாகரீகம், தேசீயம் ஆகியவைகளைப் புகழ்ந்தும், எழுதியிருக்கின் றதுடன் இதையே தமது கொள்கையாகவும் கொண்டிருப்பதாகவும் அறியக் கிடக் கின்றது.  ஆதலால் இதன் கொள்கை ‘காந்தீயம்’ என்பதாகவே தெரிய வரு கின்றது.  இப்பத்திரிகைக்கு உயர்திரு. எஸ். சத்தியமூர்த்தி ஐயரால் அனுப்பப் பட்டிருப்பதாய்க் காணப்படும் ஒரு வாழ்த்துச் செய்தியில் “இந்தியா சுய ராஜியம் இழந்து அன்னியர் கையில் சிக்கிப் படும் கஷ்டத்தில் ஒரு பாகத்தை அனுபவிப்பதுடன் தமிழ் நாட்டார் தங்கள் சுயமரியாதையையும் இழந்து கஷ்டப்படுகின்றார்கள்.” “ஆகவே சுதந்திர வீரன் சுயராஜியத்திற்குப் போராடுவதுடன் தமிழ் நாட்டார் இழந்ததை (சுயமரியாதையை) அடைய உதவுமென்று நம்பு கின்றேன்”  என்பதாக எழுதி இருக்கின்றார்.  ஆகவே இதை லட்சியம் செய்து நடக்கும் முறையில் முயன்று நின்று வெற்றிபெற விரும்புகின்றோம். ஆசிரியர் திரு.ஜெ.பி.ராட்ரிக்ஸ் “சுதந்திர வீரன்” ஆபீஸ், பெரிரா வீதி, தூத்துக்குடி குடி...

ஜனாப் அலாவுதீன் ராவுத்தர் 0

ஜனாப் அலாவுதீன் ராவுத்தர்

தென்னிந்திய நல உரிமைச் சங்க உதவித் தலைவரும், மதுரை முனிசிபல் கௌன்சிலரும், நமது நண்பருமான ஜனாப் கா.ம. அலாவுதீன் ராவுத்தரவர்கள் 5.5.31ந் தேதி காலை 7மணிக்கு தமது 55 வது வயதில் முடிவு எய்திய செய்தி கேட்டு நாம் பெரிதும் வருந்துகின்றோம்.  ஜனாப் ராவுத் தரவர்கள் பிராமணரல்லாதாரின் முன்னேற்றத்தில் அதிகக் கவலை பூண்டு, மிக்க அக்கரையுடன் தொண்டாற்றியவராவர்.  ஜஸ்டிஸ் கக்ஷி தோல்வி யடைந்த பிறகு மதுரையில் கூட்டப்பட்ட பார்ப்பனரல்லாதார் மகா நாட்டின் போது மிக்க ஊக்கத்துடன் ஒத்துழைத்து மகாநாட்டை சிறப்புர நடத்திவைத்த பெரியார்களில் இவரும் ஒருவர் ஆவார்.  இவர் காலஞ்சென்றது எல்லா பிராமணரல்லாதார்களுக்கும், சிறப்பாக மதுரை பிராமணரல்லாதாருக்கும் ஓர் பெரிய நஷ்டத்தை விளைவித்ததுடன் அவர்களின் முன்னேற்றத்தில் மிக்க கவலையுடன் அரும்பாடுபட்டு வந்த ஒரு உற்ற நண்பரை இழந்து விட்டார் களெனக் கூறுவது மிகையாகாது.  நமது அனுதாபத்தை அன்னாரின் குடும்பத் தாருக்குத் தெரிவித்துக் கொள்ளுகிறோம். குடி அரசு – இரங்கல் செய்தி – ...

“நான்” 0

“நான்”

சென்ற வாரத்திற்கு முந்திய வாரத்தில் ஆத்மா என்னும்  விஷயத்தைப் பற்றி எழுதிய வியாசத்தின் இறுதியில்   அதன்  தொடர்ச்சி பின்னால் வரும் என்று  எழுதப்பட்டிருந்தது.  அதாவது ஆத்ம உணர்ச்சி என்று சொல்லப்படு வதான “நான்” (என், எனது, என்னுடைய) என்பதின் தன்மையைப் பற்றி எழுதுவதாக எழுதியிருந்தோம். ஆகவே இப்போது மனிதன் தன்னை உணர்த்தும் வகையில் நான் என்று சொல்லிக் கொள்வது எது என்பதே இப்போது இவ்வியாசத்தில் ஆராய்வதாகும்.  முன் வியாசத்தில் ஆத்மா என்பதைப் பற்றிச் சொன்னது போலவேதான் இப்போது  “நான்” என்பதைப்  பற்றியும் சொல்ல வேண்டி யிருக்கின்றது. மனிதன் தன்னை நான் என்று  சொல்லிக் கொள்வது எதனால்? அது எது? என்னும் ஆராய்ச்சியானது இந்து மதம் என்பதின் கடைசி அதாவது “வேதாந்த” தத்துவமாகப் பாவிக்கப்பட்டு  “அதைக் கண்டுபிடிப்பதே கடவுளைக் கண்டு பிடித்ததாகும்” என்று சொல்லப்பட்டிருக்கின்றது. உதாரணமாக  “தன்னை அறிந்தவனே கடவுளை அறிந்தவனா வான்” என்றும், “தன்னைத்தான் அறிந்தால் கடவுளை அறியவேண்டிய தில்லை” “தன்னை...

‘தேசீய’வாதிகளும்  ‘தேச’ பக்தர்களும் 0

‘தேசீய’வாதிகளும் ‘தேச’ பக்தர்களும்

  நமது நாட்டு அரசாங்கத்தாரை தனிப்பட்ட   முறையில் பார்த்தோ மேயானால் நமது நலத்தைப்பற்றிய பொறுப்பு ஒரு சிறிதும் அற்றவர்கள் என்பதையும் அவர்கள் தங்கள் ஜாதி, தங்கள் நாடு ஆகியவைகளின் நன்மையையே பெரிதும்  கவனித்து  அதற்காகவே இந்திய நாட்டின் ஆட்சி நடத்தும் உரிமையை  அடைந்து ஆட்சி புரிந்து வருகின்றார்கள் என்ப தையும் நாம் வெகு நாளாய் எடுத்துக்காட்டி வந்திருக்கின்றோம் என்பதோடு அந்த ஆட்சியானது அதாவது   பிரிட்டிஷ் ஆட்சியானது இந்தியாவில் அன்னிய  ஆட்சிக்கு முன் வெகு காலமாய்  இருந்து வந்ததாக  சரித்திரங் களில் காணப்படும் இந்திய மன்னர்களின் ஆட்சியைவிட – இந்திய “தெய்வ அவதார”  ஆட்சிகளைவிட எவ்வளவோ பங்கு மேலானதும் மனிதத் தன்மை பொருந்தியதாகுமென்பதையும் அவ்வப்போது எடுத்துக் காட்டி  ஆதாரங்களுடன் மெய்பித்து வந்திருக்கின்றோம். மேலும் இந்தியாவில் இருந்ததாகச் சொல்லப்படும் யோக்கியமான ஆட்சிமுறைகள் என்பவைகள் எல்லாம் இன்றையதினம் நம்மால் சுட்டுப் பொசுக்கவேண்டும் என்று சொல்லப்படும் படியான மனுதர்ம ( பார்ப்பன ஆதிக்க ) ஆட்சிமுறையாகத்தானிருந்து வந்ததாகக்...

ஊத்துக்குளி ஜமீன்தாரர் மரணம் 0

ஊத்துக்குளி ஜமீன்தாரர் மரணம்

ஊத்துக்குளி ஜமீன்தாரர் (பாளையத்தார்) உயர்திரு. திவான்பகதூர் முத்துராமசாமி காளிங்கராயர் அவர்கள் 1-5-31 தேதி வெள்ளிக்கிழமை இரவு 10 மணிக்கு ஊத்துக்குளியில் தமது அரண்மனையில் முடிவெய்தினார் எனக்கேட்டு மிகவும் வருந்துகின்றோம். ஜமீன்தாரர் அவர்கள் கோயமுத்தூர் ஜில்லாவில் புராதனமும், பிரபலமும், கீர்த்தி வாய்ந்ததுமான ஒரு பாளையத்தார் ஆவார்கள்.  இவர் 1864 ´ ஜனவரி µ 24-ந் தேதி பிறந்தார்.  இன்றைக்கு இவரது வயது 67 ஆகின்றது. 1881ல் பட்டத்திற்கு வந்தார்.  இவர் பட்டத்துக்கு வந்து இன்றைக்கும் 50 வருஷம் ஆகின்றது.  இந்த ஜமீன் பரம்பரைக்கிரமத்தில் இவர் ஒருவரே 50 வருஷம் பட்டம் ஆண்டார் என்பதோடு இவர் 33-வது பாளையதாரர் ஆவார். இவர்களது பாரம்பரியர்களால்தான் பவானியிலி ருந்து ஈரோடு வழியாக கொடுமுடி வரை வெட்டப்பட்டிருக்கும் காளிங்கராயன் வாய்க்கால் என்னும் 50 மைல் நீளமுள்ள வாய்க்கால் வெட்டப் பட்டதாகும்.  இந்த ஜமீன்தாரர் அவர்கள் பட்டம் ஏற்றுக்கொண்டது சிறு வயதாய் இருந்தாலும் ஒரு ஆங்கில உபாத்தியாயர் மூலமே கல்வி,...

ஹிந்து 0

ஹிந்து

இந்த வியாசமானது ஹிந்து மதம் என்பது என்ன? ஹிந்துக்கள் என்பவர் யார்?  ஹிந்து மதத்தால் மக்களுக்கு விடுதலை உண்டா? என்பதைப் பற்றி ஆராய்தல் என்னும் தன்மையில் எழுதப்படுவதாகும். இதற்குமுன் பல தடவைகளில் இதைப்பற்றிய ஆராய்ச்சிகள் பல ரூபமாக வெளிவந்திருந்த போதிலும்  அவ்வாராய்ச்சியில் நமது முக்கிய தத்துவங்கள் சிலவற்றிற்கு அநுகூலமாக அதாவது நமது கருத்துக்களை ஒத்ததாகக் காணப்படும் சில  விஷயங்கள் இவ்வார “நவ சத்தி”யின் உப தலையங்கத்தில் காணப்படுவதால் அதனை எடுத்துக்காட்டவும் மற்றும் அவைகளில் இருந்து இந்துக்கள்,  இந்துமதம் ஆகியவைகள் எவ்வளவு தூரம் சமய சமூகம் என்பவைகளுக்கு பொருப்பற்ற  தன்மையாகவும், ஒரு நாட்டின் கேட்டிற்கே இவை முக்கிய ஆதாரமாகவும் இருக்கின்றது என்பதை எடுத்துக்காட்டவும் இதை எழுதுகின்றோம். அதாவது “நவ சக்தி”யின் 6-5-1931¦²  உபதலையங்கம் இந்துக்கள் யார்?  என்னும் தலைப்பில் திரு.வி.கல்யாணசுந்திர முதலியார் அவர்கள்  எழுதி இருப்பதின்  சுருக்கமாவது;- வடநாட்டில் சத்பந்திகள் என்று ஒரு சமூகத்தார் இருக்கின்றார்கள். அவர்களில் சாந்தேஷ் என்னும் ஜில்லாவில் மாத்திரம்...

கரூர்  முனிசிபல் நிர்வாகம்                   அரசாங்கத்தாரின்   பாராட்டுதல் 0

கரூர்  முனிசிபல் நிர்வாகம்                   அரசாங்கத்தாரின்   பாராட்டுதல்

“மிகவும் சாமார்த்தியகரமாகவும், விர்த்தியாகத் தக்க வழியிலும், ஸ்தல ஸ்தாபன ஆட்சியின் கருத்துக்கள் நிறைவேற்றும்படியான முறையில் வெற்றிகரமாகவும் கரூர் முனிசிபல் நிறுவாகம் நடத்திக் காண்பிக்கப்பட்டி ருக்கின்றது” என்று சென்னை அரசாங்கத்தார் இந்த மாகாண ஜில்லா முனிசிபாலிட்டிகள் சம்மந்தமாக எழுதி வெளியிட்ட 29-30 வருஷத்திய பொது  நிர்வாகக் குறிப்பில் குறிப்பிட்டிருக்கின்றார்கள். இந்த பாராட்டுதலைப் பார்த்து நாம் மிகுதியும் மகிழ்ச்சி அடைவ தோடு கரூர் முனிசிபல் அக்கிராசனரையும், அங்கத்தினர்களையும் மனமாரப் பாராட்டுவதோடு கரூர் முனிசிபாலிடிக்கு இந்த மாதிரியான ஒரு நன்மை யையும்,  கௌரவத்தையும், நற்சாட்சிப் பத்திரத்தையும்  சம்பாதித் துக் கொடுக் கத்தக்க  அங்கத்தினர்களையும், தலைவரையும் தெரிந்தெடுத்த கரூர் மகா ஜனங்களையும் பாராட்டி போற்றுகின்றோம். குடி அரசு – செய்திக்குறிப்பு –  10.05.1931      

கதரும் – ஹிந்தியும் 0

கதரும் – ஹிந்தியும்

இந்திய நாட்டின்  சுயராஜ்யத்திற்கு கதரும், ஹிந்தியுமே முக்கிய மான மந்திரங்களாகப் பிரசாரம் செய்யப்பட்டு  வருகின்றன.  சென்ற ஒத்துழை யாமையின் போது கதர்  கட்டாதவர்களுக்கு ஓட்டு இல்லாமல் இருந்தது.   இப்போது மில்  முதலாளிகளின்  தாக்ஷண்யத்திற்குக் கட்டுப்பட்டு அந் நிபந்தனை கைவிடப்பட்டு விட்டாலும்,  இப்போது வேறு  ஒன்று அதாவது ஹிந்தி படிக்காதவர்களுக்கு பிரதிநிதித்துவமே இல்லை என்கின்ற கட்டளை ஏற்பட்டு அதனால் தென்னாட்டாருக்குப் பிரதிநிதித்துவம் கூட  இல்லாமல்  செய்தாய் விட்டதாக சொல்லப்பட்டாய் விட்டது. கதரைப் போன்ற ஒரு மோசடியான வியாபாரம் வேறு எதுவுமே இல்லை என்றே சொல்லவேண்டும். சாதாரணமாக வியாபாரத்தில்  அதிக மோசடி செய்கின்றவர்கள் மருந்து வியாபாரிகளேயாவர்கள்.  கதரைப்பார்த்த பின்பு (பேடண்ட் மெடி ஷன் என்று) உரிமை செய்துகொண்ட மருந்து வியாபாரிகள் மோசடி எத்தனையோ பங்கு நல்லதென்பதோடு  அவைகளில் அநேகம் சில சமயங் களில் நல்ல பலனையும் கொடுத்து வருகின்றது. ஆனால் இந்தக் கதர் ஆரம்பம் முதல் அந்தம் வரை ஏமாற்ற மானதாகவே முடிவு பெறுகின்றது. ...

வங்காள மாகாண பெண்களுக்குக்கூட காங்கிரசின் மீது கசப்பு 0

வங்காள மாகாண பெண்களுக்குக்கூட காங்கிரசின் மீது கசப்பு

கல்கத்தா டவுன் ஹாலில் வங்காள ஸ்திரீகள் மகாநாடு ஸ்ரீமதி சாரளா தேவி சௌத்ராணி தலைமையில் நடைபெற்றது. ஸ்திரீகளின் உரிமைகள் வற்புறுத்தப்பட்டும் அதை எவரும் சட்டை செய்யவில்லை என்றும், சிறப்பாக பண்டிதர் ஜவர்லால் நேரு கூட அதை அசட்டை செய்தது ஆச்சர்யமான தென்றும் சென்குப்தாவை மாகாண இளைஞர் மகாநாட்டில் தலைமை வகிக்காது தடுத்தது ரொம்பவும் சரி என்று ஆதரித்ததும், பலர் பிரசங்கமாரி பொழிந்தார்கள். பிறகு அங்கு செய்யப்பட்ட தீர்மானங்களாவன:- சாரதா சட்டம் உடனே அமுலில் கொண்டு வரப்பட வேண்டுமென்றும், பெண்களுக்கு விவாகரத்து உரிமை இருக்க வேண்டுமென்றும், கலப்பு மணம், விதவை மணம், இவைகளை அனுஷ்டிக்க வேண்டுமென்றும், ஆண் களுக்கும் பெண்களுக்கும் ஒரே மாதிரியான ஒழுக்க முறை இருத்தல் வேண்டுமென்றும் தீர்மானிக்கப்பட்டது. சிறைபுகுந்த வங்க நாட்டு பெண்களை நமது நாட்டு வீரர்கள் போற்றுகிறார்கள், புகழுகிறார்கள், வீரமணிகளென்கிறார்கள், இவர்கள் வங்க நாட்டு வீரப் பெண்மணிகளின் அடிகளை பின்பற்ற வேண்டுமென்றே சுயமரியாதைக்காரர்கள் விரும்புகிறார்கள். கேரள நாட்டில் காந்தி...

கதர் போர்டு நினைத்தது முடிந்தது 0

கதர் போர்டு நினைத்தது முடிந்தது

உப்பு சத்தியாக்கிரகத்தின்போது வேதாரண்யத்திற்கு சென்று சிறை சென்ற திருப்பூர் உதவி ஸ்டேஷன் மாஸ்டர் வேலையிலிருந்த திரு. சிதம்பரய்யர் என்னும் பார்ப்பனர் இப்பொழுது திருப்பூர் அகில பாரத சர்க்கா சங்கத்தைச் சேர்ந்த காதி வஸ்திராலயத்தில் ரூபாய் 50 சம்பளத்தில் காஷியர் வேலையில் அமர்த்தப்பட்டிருக்கிறார். ³யாரை வேதாரண்யத்திற்கு அனுப்பும்போது ³யாரை உபசரித்து அனுப்புவதற்காக கூடிய கூட்டத்தில் திரு. சூ.ளு.வரதாச்சாரியார், திரு.சிதம்பரய்யரைப் பற்றி வானமளாவப் புகழ்ந்தது எல்லோருக்கும் தெரியும், “ திரு. சிதம்பரய்யர் அவர்கள் ரயில்வே உத்தியோகத்தில் இருந்த போதிலும் ஒழிந்த நேரங்களில் கதர் வாங்கிக் கொண்டு போவதும் கதர் விற்பனை செய்வதும் கதரின் மேல் அவருக்குள்ள பற்றுதலும் மிகவும் சிலாகிக்கத்தக்கது என்றும், இப்படிப்பட்டவர்கள் தேசத்துக்கு பாடுபட வந்திருப்பது நம் பாக்கியமே” என்றும், பலவாராக புகழ்ந்து பேசினார். அப்போதே கூட்டத்திலுள்ளவர்கள் உப்பு சத்தியாகிரகம் தீர்ந்து ஜெயிலிலிருந்து வெளிவந்ததும் திரு. சிதம்பரய்யருக்கும் சர்க்கா சங்கத்தில் ஒரு வேலை கிடைக்கும் என்றும் பலபேர் நினைத்துக் கொண்டி ருந்தார்கள். அதுபோலவே...

உபாத்தியாயர்கள் 0

உபாத்தியாயர்கள்

நமது நாட்டில் உள்ள தொழில் வகுப்புத்தொகுதிகளில் உபாத்தியாயர் வகுப்புத்தொகுதி என்பதே மிகவும் மோசமானதும், முட்டாள் தனமானது மான தொகுதி என்று சொல்லுவோம். அக்கூட்டத்தாரில் பெரிதும் அநேகருக்குச் சிறிதும் பகுத்தரிவு என்பதும், உலக கல்வி என்பதும் கிடையாது என்பது நமது 40, 50 வருஷத்திய அனுபவமாகும்.  அதிலும் பார்ப்பன உபாத்தியாயர்களைப் போன்றதும் பண்டித  உபாத்தியாயர்களைப் போன்றதுமான முட்டாள் தனமும் அசந்தர்ப்ப குணமும் அதிகப்பிரசங்கித்தனமும் மற்ற உபாத்தியாயர்களிடம் சற்று குறைவாகவாக இருக்கலாம். பொதுவாகவே உபாத்தியாயர்கள் என்பவர்களுக்குப் பகுத்தறிவு உதயத்திற்கு வழியில்லாமலே போய் விடுகின்றதான தன்மையே அவர்களது மூடத்தனத்திற்குக் காரணமாகும். முதலாவது உபாத்தியாயர் தொழில் என்பது இப்போது நமது நாட்டில் கிராமபோன் யந்திர வேலையாகவேதான் இருக்கின்றது. என்னவெனில், ஏதோ ஒன்றைப் படிப்பது, அதை ஒப்புவிக்கும் முறையில் பரீட்சை கொடுப்பது, மறுபடியும் அதை பிள்ளைகளுக்கு கிராம் போன் மாதிரி போதிப்பது ஆகிய காரியங்களைத் தவிர வேறு பகுத்தறிவு பெற சிறிதும் நேரமும், அவசியமும், சௌகரியமும் இல்லாத வாழ்க்கை...

இரண்டு தமிழ் தினசரி பத்திரிகைகள் 0

இரண்டு தமிழ் தினசரி பத்திரிகைகள்

இவ்வாரம் “திராவிடன்” “இந்தியா” என்கின்றதான இரண்டு தமிழ் தினசரிப் பத்திரிகைகள் வெளிவந்திருக்கின்றன. இவற்றுள் முன்னையது முன்னாலேயே இருந்துவந்தது. சிறிது காலம் நிறுத்தப்பட்டு, மறுபடியும் புத்துயிர்பெற்றுத் தோன்றியதாகும்.  பின்னையது புதிதாகவே தோன்றிய தாகும். எப்படி இருந்த போதிலும் இவைகள் இரண்டும் சமய சமூக மத விஷயங்களுக்கு வக்காலத்து பேசும் வகையில் நமக்கு எச்சரிக்கை செய்து  கொண்டே புறப்பட்டிருக்கின்றபடியால்  நமது கொள்கைகளுக்கு இவை களால் ஆதரவு எதிர்பார்ப்பதற்கில்லை என்றே கருத வேண்டியிருக் கின்றது. ஏனெனில் நாமோ பல மதங்களையும் பல சமயப் பிரிவுகளையும், சமூகப் பிரிவுகளையும் ஒழித்து மக்கள் யாவரையும் ஒரே சமூகமாக்க வேண் டும் என்னும் கொள்கையின் மீது பல சமயக் கொள்கைகளையும், பல மதக் கொள்கைகளையும், பல சமூகக் கொள்கைகளையும்  அவற்றுள் இருக்கும் உட்பிரிவுக்  கொள்கைகளையும் அதனால் இருந்து வரும் வேற்றுமை, உயர்வு, தாழ்வு வித்தியாசத்தையும், தங்களுடைய சமூகமோ, சமயமோ மேலானது என்கின்ற எண்ணத்தையும் அடியோடு துலைத்தாகவேண்டும் என்று முடிவு செய்து...

அர்ச்சகர் – ஜோசியர் சம்பாஷணை  -சித்திரபுத்திரன் 0

அர்ச்சகர் – ஜோசியர் சம்பாஷணை -சித்திரபுத்திரன்

அர்ச்சகர்:- என்ன ஜோசியரே கோவிலுக்கு முன்போல் ஆளுகள் வருவதே இல்லையே! குடும்ப நிர்வாகம் வெகு கஷ்டமாகவல்லவா இருக்கிறது. ஜோசியர்: – என்ன காரணம் ? அர்ச்சகர்;-  இந்த எழவு எடுத்த சுயமரியாதைதான். ஜோசியர்:- சுயமரியாதை காரணம் என்றால் சுயமரியாதைக் காரர்கள் சாமி இல்லை, பூதம் இல்லை என்றுசொல்லி மக்களைக் கோவிலுக்குள் போகக்கூடாது என்று  பிரசாரம் செய்கின்றார்களே அதனாலா? அர்ச்சகர் :- இல்லை – இல்லை  அதற்கெல்லாம் நமக்கு பயமில்லை. இன்னமும் ஆயிரந்தடவை வேண்டுமானாலும் சாமியில்லை, பூதம் இல்லை என்று சொல்லட்டும், கோவிலை வேண்டுமானாலும் இடிக்க வேண்டுமென்று சொல்லட்டும். அதனால் நமக்கு ஒன்றும் கெட்டுப் போகாது. ஜோசியர்:- மற்றென்ன காரணம்  என்று சொல்லுகிறீர்கள்? அர்ச்சகர்;- கோவில்களுக்குத் தேவதாசிகள் வருகின்றதான முக்கிய கைங்கரியத்தைப் பற்றி கண்டபடி பேசி, அதை நிருத்திவிட்டார்களல்லவா?  அதனால்தான்? ஜோசியர்:- இதற்கும் பக்திக்கும் சம்மந்தமென்ன? இதனால்   எல்லாம் மக்களுக்குக் கடவுள் பக்தி குறைந்து விடுமா? அர்ச்சகர்:- கடவுள் பக்தி என்றால் என்ன...

பிரிட்டிஷ் ஆக்ஷியின் இன்றைய தீமைகள்  ஐ நியாயம் வழங்கு முறை  சிவில் இலாகா 0

பிரிட்டிஷ் ஆக்ஷியின் இன்றைய தீமைகள் ஐ நியாயம் வழங்கு முறை சிவில் இலாகா

பிரிட்டிஷார் ஆக்ஷியின் பயனாய் இந்திய மக்களுக்குள்ள கஷ்டங் களில் முக்கியமான கஷ்டங்கள் இரண்டு.  அவை  வரிக்கஷ்டமும் அல்ல, வியாபாரக்கஷ்டமும் அல்ல. ஆனால் இந்திய அரசியல் பிழைப்புக்காரர்கள் பாமரமக்களை ஏமாற்றி தாங்கள் தான் இந்திய ஜனப்பிரதிநிதிகள் என்று காட்டிக்கொண்டு அரசாங்கத்தாரிடம் உத்தியோகம், பதவி, பட்டம், பெற வரியைப்பற்றியும், வெளிநாட்டு வியாபாரத்தைப்பற்றியும் கள்ளைப்பற்றியுமே எடுத்துச் சொல்லி மக்களை ஏமாற்றுவார்கள். அறிவோடு கூடி நடுநிலைமையில்  இருந்து ஒரு மனிதன் யோசித்துப் பார்த்தானேயானால் இவைகள் யெல்லா வற்றையும்  விடமுக்கியமாய் இருக்கும் குறைகள் தானாகவே புலப்படும்.  அதாவது வக்கீல் தன்மைகளும் உத்தியோக தன்மைகளுமேயாகும்.  இவ் விரண்டும் இந்தநாட்டில் பிரபுத்தன்மையைக்  காப்பாற்ற இருக்கின்றதே ஒழிய நியாயத்தைச்செய்யவோ ஏழைகளைக் காப்பாற்றவோ  இல்லவே யில்லை.  அரசியல் துறையில் சம்மந்தப்பட்டதான வக்கீல்  முறையும்  உத்தி யோக முறையும் இந்தியாவில் இந்த மாதிரி இல்லாதிருந்திருக்கு மானால் இந்த நாட்டில் இவ்வளவு ஒழுக்கக்குறைவும் நாணயக்குறைவும் தரித்திரமும் மக்களுக்கு கஷ்டமும் அலைச்சலும் இருக்க முடியவே முடியாது என்ப தோடு...

பஞ்சமா பாதகங்கள் 0

பஞ்சமா பாதகங்கள்

“பஞ்சமா  பாதகங்கள்” என்னும் ஒரு புத்தகம் தன் ஆசிரியரான திரு. அ. அய்யாமுத்து அவர்களால் நமது பார்வைக்கு அனுப்பப்பட்டதை பார்வையிட்டோம். அப்புத்தகத்தில் பஞ்சமா பாதகமெனப்படும் கொலை, களவு, பொய், கள், காமம் என்னும் ஐந்து விஷயங்களும்  உலகில் எந்த சந்தர்ப்பங்களில் உண்டாகின்றன? அவை ஏன்? யாரால் உண்டாக்கப்பட்டது?   அது உலக வழக்கில் எப்படி நடைபெறுகின்றன? இன்ன இன்ன விதத்தில் இன்ன இன்ன காரணங்களால் நடைபெரும்  பஞ்சமா பாதகங்கள் குற்றமுடையன வாகுமா? உண்மையில் நடைபெரும் பஞ்சமா பாதகங்கள்  குற்றமாய் கருதப் படுகின்றனவா?  என்பவைகளையும் இன்றைய நிலையில் அதாவது சமூக, மத,அரசியல் நிலையில் பஞ்சமா பாதகம் என்பது நிகழாமல் இருக்க முடியுமா  என்றும் அவை  உண்மையில் நடக்கப்படாமலும்   மற்றவருக்கு துன்பம் இழைக்காமலும் இருக்க வேண்டுமானால்  எப்படி உலக சமுதாயக்  கொள்கை இருக்க வேண்டும் என்பதையும்  விவரித்து விளக்கி எழுதப் பட்ட புஸ்தக மாகும். இப்புத்தகம் கிரௌன் 1-8 சைசில் 50 பக்கங்களுக்கு மேல் கொண்ட...

ஒரு நல்ல சேதி  ஈரோடு முனிசிபாலிடி 0

ஒரு நல்ல சேதி ஈரோடு முனிசிபாலிடி

  ஈரோடு முனிசிபாலிடியானது கொஞ்ச காலத்திற்கு முன் இருந்து வந்த பொருப்பற்றதும், நாணையமற்றதுமான நிர்வாகத்தின் பயனாய் செல்வங்கள் பாழாகி கண்டபடி கண்டவர்களால் ஒழுங்குகளும், பண்டங் களும் கையாளப்பட்டு கடைசியாக கடனில் மூழ்கி சம்பளம் வகையறா பட்டுவாடா செய்யவும் சக்தியற்று இந்த மாகாண பாப்பர் முனிசிபா லிடியிலும் ஒழுக்க ஈனமான முனிசிபாலிடியிலும் முதல்நெம்பராய் இருந்து வந்ததானது மாறி, தற்கால சேர்மென் ஜனாப், கே.எ. ஷேக்தாவூத் சாயபு அவர்கள் காலத்தில் நாணையமும், பொருப்பும் பெற்று செல்வ நிலைமையிலும் சற்று நன்னிலை அடைந்து இப்போது நல்ல முனிசிபாலிடிகளில் ஒன்று என்று சொல்லத்தக்க பாதையில் சென்று கொண்டிருக்கின்றது.  அவரது சொந்த செல்வாக்கினால் ஈரோடு முனிசிபாலிடியால் கல்வி இலாக்காவுக்கு கொடுக்கப்பட வேண்டிய ரூ. 44,000 – ம் கவர்ன்மெண்டார் தள்ளிக் கொடுத்து வஜா செய்து கொண்டார்கள்.  மற்றும் அவரது சொந்த பிரயத்தனத்தினால் ஜில்லா போர்டுக்கு கொடுப்பட வேண்டிய 2, 3 வருஷ பாக்கியாகிய சுமார் 25,000 ரூபாயும் ஒருவிதத்தில்...

ஆத்மா 0

ஆத்மா

ஆத்மா, என்னும் விஷயத்தைப்பற்றி எழுதப்பட்டிருப்பதைப் பார்க்கும் நமது நண்பர்கள் பலர் இது ஒரு தத்துவ விசாரணை விஷயம். இதைப்பற்றி எழுதவோ, பேசவோ வேண்டிய அவசியம் சமுதாய சீர்திருத் தக்காரருக்கு எதற்கு? சுயமரியாதைக்காரர்கள் அனாவசியமாய் கண்ட கண்ட விசயங்களிலெல்லாம் தலையிட்டு சீர்திருத்தத்  துறையைப் பாழாக்கிக் கொள்ளுவானேன்? என்று கூசாமல் பேசுவார்கள்.  ஆனால் இப்படிப்பட்ட நண்பர்கள் சமுதாய சீர்த்திருத்தம் என்பது என்ன என்பதாக சரிவர உணராத வர்கள் என்று நினைத்துவிட்டு நம் பாட்டுக்கு நாம் மேலே செல்லக் கூடிய நிலையிலேயே இருக்கின்றோம். ஏனெனில் சமுதாய சீர்த்திருத்தம் என்றால் ஏதோ  அங்கும் இங்கும் இடிந்துபோன – சுவண்டு போன – ஆடிப்போன பாகங்களுக்கு சுரண்டி கூறுகுத்தி, மண்ணைக் குழைத்து சந்து பொந்துகளை அடைத்துப் பூசி மெழுகுவது என்றுதான் அநேகர் கருதி இருக்கின்றார்கள்.  ஆனால் நம்மைப் பொருத்த வரை நாம் அம்மாதிரி துறையில் உழைக்கும் ஒரு சமுதாய சீர்திருத்தக்காரரல்ல என்பதை முதலில் தெரித்துக் கொள்ளுகின்றோம்.  மற்ற படி...

சுயமரியாதை இயக்கத்தைப்பற்றி  அய்யர் – அய்யங்கார் சம்பாஷணை  – சித்திரபுத்திரன் 0

சுயமரியாதை இயக்கத்தைப்பற்றி அய்யர் – அய்யங்கார் சம்பாஷணை – சித்திரபுத்திரன்

  அய்யர் :- என்ன அய்யங்கார்வாள் சுயமரியாதை இயக்கம் ஆரம்ப மான காலத்திலேயே நான் பிராமணாளுக்கு ஆபத்து வந்துவிட்டதே என்றும்  இதற்கு ஏதாவது வழிசெய்யக் கூடாதா என்றும் கேட்டதற்கு “அது இந்தியாவில் மாத்திரம் நடக்காது சீக்கிரம் ஒழிந்துவிடும்” என்று சொன்னீர். இப்பொழுது நாளுக்கு நாள் அது வளர்ந்து கொண்டே வருகிறதே. எல்லோரும் அதை ஆதரிக்கவும் துணிந்துவிட்டார்களே:  அதாவது சைவர் கள் ஒன்று கூடி“ 3000 வருஷத்திற்கு முன் இருந்த கொள்கைகள் எல்லாம் சுயமரியாதை இயக்க கொள்கைகள்தான்” என்கிறார்கள். வைணவர்கள் ஒன்று கூடி  தங்கள் கொள்கையும் அதாவது “ராமாநுஜர் கொள்கையே சுயமரியாதை இயக்க கொள்கை” என்கிறார்கள்.  ஸ்மார்த்தர்கள் “சங்கரர் மதமே வேதாந்த மதம். ஆகையால் ஸ்மார்த்த மதமே சுயமரியாதை  இயக்க கொள்கைதான்” என்கின்றார்கள். மகமதியர்கள் ஒன்றுகூடி “1,300 வருஷத்திற்கு முன்னேயே சுயமரியாதை இயக்க கொள்கையைத்தான் நபிகள் நாயகம் உபதேசித் திருக்கிறார்கள்” என்கின்றார்கள்.  பௌத்தர்கள் “2,000 வருஷத்திற்கு முன்னா லேயே  பகவான் புத்தர் சுயமரியாதை...

ஏழாவதாண்டு 0

ஏழாவதாண்டு

நமது “குடி அரசு” தோன்றி ஆறாண்டு நிறைவு பெற்று ஏழாவதாண் டின் முதல் மலராய் இவ்வாரப்பதிப்பு வெளியாகின்றது. இந்த சென்ற ஆறாண்டுகளாய் “குடி அரசு”  நாட்டிற்கு செய்து வந்த தொண்டைப்பற்றி இதன் வாசகர்களுக்கு நாம் எடுத்துக்காட்ட வேண்டியதில்லை. இந்த நாட்டின் சமுதாய உலகத்திலும், மத உலகத்திலும், அரசியல் உலகத்திலும் இந்த வீசம் நூற்றாண்டில் ஏற்பட்ட மாறுதல்களுக்கு ஒரு சிறு அளவாவது “குடி அரசு” தன்னை பொருப்பாளியாக்கிக் கொள்ளுவதில் யாரும் ஆnக்ஷபணையோ பொறாமையோ படமாட்டார்கள் என்றே கருதுகின்றோம். “குடி அரசி”ன் கொள்கைகளை ஆதிமுதற்கொண்டு இதுவரையில் கவனித்துவந்த எவரும் சற்று மேல்நிலையில் உள்ளவர்கள் அவற்றை “மிகவும் அதிதீவிரக்கொள்கை” யென்றும்,  “சாத்திய மற்றது” என்றும் . “இது எந்தக்காலத்தில் நடக்கப்போகின்றது” என்றும், “கொள்கை சரி, போக்கு சரியல்ல” என்றும், “மிக வேகமாய் போகின்றது” என்றும், மற்றும் இது போன்ற பல மாதிரியாகவே சொல்லிவந்ததும், சற்று கீழ் நிலையில் உள்ளவர் கள் குடி அரசு கொள்கை “கடவுள்...

இந்து மத தர்ம பரிபாலன சட்டம் 0

இந்து மத தர்ம பரிபாலன சட்டம்

இந்து மத பரிபாலன சட்டம் ஒன்று சென்னை சட்ட சபையில் சுமார் 6, 7 வருஷத்திற்கு முன் கொண்டுவரப்பட்ட காலத்தில் பார்ப்பனர் எல்லோரும் ஏகோபித்தும் பார்ப்பனரல்லாதார்களில் பலர் பார்ப்பனருடன் சேர்ந்து கொண்டும் அச்சட்டத்தை “மதத்தில் சர்க்கார் பிரவேசித்து விட்டார்கள்” என்று ஆnக்ஷபித்ததுடன் இச்சட்டம் கொண்டு வரப்பட்டவர் கள் மீதும் கெட்ட எண்ணம் கற்பித்து எவ்வளவோ எதிர்பிரசாரம் செய்தும் வந்தது யாவரும் அறிந்ததேயாகும். அதுமாத்திரமல்லாமல் காங்கிரஸ் முதலிய அரசியல் ஸ்தாபனங் களின் பேராலும் பல பார்ப்பனர்கள் அச்சட்டத்தை எதிர்த்ததும் இந்தக் காரணத்தைவைத்தே தேர்தல்களில் எதிர்பிரசாரம் செய்ததும் பொது ஜனங் களுக்கு ஞாபகமிருக்கலாம். ‘இந்து’ ‘சுதேசமித்திரன்’ முதலிய “தேசீய” பத்திரிகைகளும் அச்சட்டத்தைக் கண்டித்து எழுதி பார்ப்பன சந்தாதாரர் களைக் கொண்டு மகஜர்கள் வாங்கி சர்க்காருக்கு அனுப்பியதும் ஞாபக மிருக்கலாம். அப்படிப்பட்ட நெருக்கடியான காலத்தில் நாமும் நமது நண்பர் கள் பலரும் பொது ஜன அபிப்பிராயம் என்பதற்கு எதிராய் நின்று பார்ப்பனர் களின் எதிர்ப்புகளை யெல்லாம்...