விருதுநகர் சுயமரியாதை மகாநாடு

விருதுநகர் சுயமரியாதை மகாநாடு ஜூன் முதல் வாரத்திலாவது இரண்டாவது வாரத்திலாவது நடத்துவதாக உறுதி செய்யப்பட்டு வேண்டிய ஏற்பாடுகள் செய்து வந்ததில் மகாநாட்டுத் தலைவர் திரு. சர் ஹரிசிங்கவர் அவர்கள் நீலகிரியில் இருந்து உடல் நலமில்லாமல் திரும்பிப்போய் விட்ட தாலும் வெய்யில் கடுமையை உத்தேசித்து வேறுதக்க தலைவர் சமீபத்தில் கிடைப்பதற்கில்லாமல் இருப்பதால் மகாநாட்டை ஆகஸ்டு வாக்கில் நடத்து வதாக தள்ளிப்போட்டு விட்டதாய் விருதுநகர் மகாநாட்டு வரவேற்புக் கமிட்டி யார் தீர்மானம் செய்திருப்பதாக தெரிவித்துவிட்டார்கள்.  மகாநாட்டு விஷய மானது இந்தப்படி அடிக்கடி மக்கள் ஏமாற்றமடையும் படி நடந்து வருவது பலருக்கு மிகவும் வருத்தத்தைக் கொடுக்கக் கூடியதா யிருந்தாலும் அதற்கு அனுகூலமாக சம்பவங்கள் ஏற்பட்டு வருகின்றதை நாம் மறுப்பதற்கில்லை என்பதையும் ஒருவாறு தெரிவித்துக் கொள்ளு கின்றோம்.  இதை ஆதாரமாய் வைத்துக் கொண்டு நமது இயக்க எதிரிகள் விசமப்பிரசாரம் செய்யக்கூடும். ஆனாலும் வரவேற்புக் கமிட்டியார்  இதை உணராதவர்கள் என்று சொல்லி விட முடியாது.  இதற்காக அவர்கள் மகா நாட்டை எந்த முறையில் நடத்த வேண்டுமென்று கருதி இருக்கின்றார்களோ அதை மாற்றிக்கொள்ள அவர்கள் இஷ்டப்படவில்லை.  ஆகையால் நண்பர்கள் இந்த ஒரு தவணை யையும் பொறுத்துக்கொள்ள வேண்டு கின்றோம்.

குடி அரசு – துணைத் தலையங்கம் – 31.05.1931

You may also like...

Leave a Reply