வருந்துகிறோம்

பச்சையப்பன் கலாசாலை தமிழ் புலவரும் “திராவிடன்” பத்திராதி பருமான உயர்திரு. மணி திருநாவுக்கரசு முதலியார் அவர்கள் திடீரென முடிவெய்திய செய்தி கேட்டு நாம் பெரிதும் வருந்துகின்றோம்.  இவர் ஓர் தமிழ் பண்டிதராய் விளங்கியதுடன், சமூதாயச் சீர்திருத்தத்தில் ஆர்வங் கொண்டு, சமூக முன்னேற்றத்திற்காக பல உபன்யாசத் தொண்டுகளும் புரிந் திருக்கிறார்.  பார்ப்பனரல்லாதார் இயக்கத்திற்கு பாடுபட்டவர்களில் ஒருவரா வார்.  பொதுவாக தமிழுலகமும், சிறப்பாக பிராமணரல்லாத உலக மும் ஓர் நண்பரை இழந்து விட்டார்களெனக்கூறுவது மிகையாகாது .  ஆகவே அவரது பிரிவுக்கு வருந்துவதோடு, நமது வருத்தத்தை அவருடைய குடும்பத் தாருக்கும் முக்கியமாக அவரது உடற்பிறந்த  பின்னோர் திருவாளர் மணி கோடீஸ்வர முதலியார் க்ஷ.ஹ.டு.கூ., அவர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

குடி அரசு – இரங்கல் செய்தி – 31.05.1931

You may also like...

Leave a Reply