கரூர்  முனிசிபல் நிர்வாகம்                   அரசாங்கத்தாரின்   பாராட்டுதல்

“மிகவும் சாமார்த்தியகரமாகவும், விர்த்தியாகத் தக்க வழியிலும், ஸ்தல ஸ்தாபன ஆட்சியின் கருத்துக்கள் நிறைவேற்றும்படியான முறையில் வெற்றிகரமாகவும் கரூர் முனிசிபல் நிறுவாகம் நடத்திக் காண்பிக்கப்பட்டி ருக்கின்றது” என்று சென்னை அரசாங்கத்தார் இந்த மாகாண ஜில்லா முனிசிபாலிட்டிகள் சம்மந்தமாக எழுதி வெளியிட்ட 29-30 வருஷத்திய பொது  நிர்வாகக் குறிப்பில் குறிப்பிட்டிருக்கின்றார்கள்.

இந்த பாராட்டுதலைப் பார்த்து நாம் மிகுதியும் மகிழ்ச்சி அடைவ தோடு கரூர் முனிசிபல் அக்கிராசனரையும், அங்கத்தினர்களையும் மனமாரப் பாராட்டுவதோடு கரூர் முனிசிபாலிடிக்கு இந்த மாதிரியான ஒரு நன்மை யையும்,  கௌரவத்தையும், நற்சாட்சிப் பத்திரத்தையும்  சம்பாதித் துக் கொடுக் கத்தக்க  அங்கத்தினர்களையும், தலைவரையும் தெரிந்தெடுத்த கரூர் மகா ஜனங்களையும் பாராட்டி போற்றுகின்றோம்.

குடி அரசு – செய்திக்குறிப்பு –  10.05.1931

 

 

 

You may also like...

Leave a Reply