Category: குடி அரசு 1931

திருப்பூர் காங்கிரஸ் பிரசாரமும் பணமுடிப்பின் யோக்கியதையும் 0

திருப்பூர் காங்கிரஸ் பிரசாரமும் பணமுடிப்பின் யோக்கியதையும்

சென்ற வாரத்தில் இவ்வூருக்கு திரு. இராஜகோபாலாச்சாரியுள்பட சில காங்கிரஸ் பிரமுகர்கள் வந்து சேர்ந்தார்கள். உடனே பத்திரிகை நிரூபருக்கு ஆள் அனுப்பினார்கள். நிரூபரும் உடனே வந்து சேர்ந்தார். திரு. இராஜ கோபாலாச்சாரியாரின் திக்விஜயங்களையும் அவருடைய பிரசாரத்தின் முக்கிய கொள்கைகளையும் பத்திரிகைக்கு தந்தி கொடுக்கப்பட்டது. பின்னர் பணமுடிப்புக்கு ஒரு புதிய வழி கண்டுபிடிக்கப்பட்டது. சிறை சென்ற திருமதி. பத்மாவதி ஆஷருக்கு திருப்பூர் பொதுஜனங்களின் பெயரால் அவர் செய்த தியாகத்தை பாராட்டி ஒரு பண முடிப்பு கொடுப்பதென்றும் ³ யாரின் தலைமையில் கிராம பிரசாரத்துக்கு ³ பணம் செலவழிக்கப்படுமென்றும், ஆனால்  ³ பணமுடிப்பை திரு. இராஜகோபாலாச்சாரியரிடம் கொடுத்து விடவேண்டியதென்றும் முடிவு செய்யப்பட்டது. உடனே, திரு. ஆஷர் கம்பெனியார் ரூ. 501 பிரபல பஞ்சு வியாபாரியும் காங்கிரஸ் தலைவரான வருமான ஒரு கனவான் ரூ. 101 பட்டியல் போட்டு விட்டார்கள். பிறகு சர்க்கா சங்கத்தின் சர்டிபிகேட் பெற்ற கதர் வியாபாரிகளுக்கு உடனே இந்த நிதிக்கு துகை போடும்படி...

அருஞ்சொல் பொருள்

அருஞ்சொல் பொருள்

    அங்குஸ்தான்       –                      தையற்காரர்கள் விரலில் அணியும்                                                                                          பூண் அசக்தர்கள்              –                      இயலாதவர்கள், சக்தியற்றவர்கள் அட்டாலி                     –                      பரண், மேல்மாடி அதிக்கிரமம்           –                      நெறி தவறல், வரம்பு மீறல் அனுஷ்டானம்     –                      வழக்கம், ஒழுக்கம் ஆகர்ஷணை         –                      ஈர்ப்பு, உள்வாங்குகை ஆஸ்பதம்                  –                      இடம், பற்றுக்கோடு இராஜிய துறை    –                      அரசியல் துறை ஒட்டிக்கிரட்டி        –                      ஒன்றுக்கு இரண்டு, சரிமடங்கு                                                                               அதிகமாக கர்னகடூரம்              –                      காதுகளால் கேட்க முடியாத கலிதம் (ஸ்கலிதம்)                –                      விந்து நழுவுகை, ஒழுகுதல் காயமாகி                    –                      உறுதியாகி கெம்பு     –                      சிவப்பு இரத்தினக்கல் சர்க்கா    –                      இராட்டை, இராட்டையின் முன்னேறிய வடிவம்சித்தித்துவிடும்         ...

அவர்களும் நாமும்

அவர்களும் நாமும்

நாம் விடுதலை பெற்று நம்முடைய துன்பங்கள் எல்லாம் ஒழிந்து சுகத்தோடு வாழ வேண்டுமென விரும்பினால், முதலில் நம்மை நாம் சீர்திருத்தஞ்செய்து கொள்வது அவசியமானதாகும். நாம் விடுதலை பெறுவதற்குப் பெரிய தடைகளாக நம்மைச் சூழ்ந்து கொண்டு நிற்பவை எவை என்று ஆராய வேண்டுவது முதல் வேலை. ஆராய்ந்து கண்டுபிடித்து அத்தடைகளை அடியோடு நீக்குவதற்கான எண்ணத்தைப் பலப்படுத்திக் கொண்டு, பின்பு அவற்றை ஒழிப்பதற்குரிய வழிகளைக் கண்டு பிடிக்க வேண்டும்; கண்டு பிடித்த அவ்வழிகளை உறுதியோடும், உண்மையோடும், அஞ்சாமலும் கைக்கொண்டு அந்தத் தடைகளை ஒழிக்க முயல வேண்டியதே சிறந்த செய்கையாகும். இவ்வாறு தான் மற்ற நாகரீகம் பெற்ற-சுயேட்சை பெற்ற நாடுகளில் உள்ளவர்கள் நடந்து அவர்கள் தற்காலத் திலிருக்கும் உன்னத நிலையை அடைந்திருக்கின்றனர். நமது நாட்டிலோ பலருடைய மனத்திலும், விடுதலை பெற வேண்டும் என்ற எண்ணம் மாத்திரம் சில ஆண்டுகளாக உறுதிப்பட்டு நிலைத்திருந்தாலும், எந்த வழியில் அந்த விடுதலையை அடைவது என்பதைப் பற்றிச் சரிவரச் சிந்திக்காமலும், சரியான...

திரு. படேலின் வைதீகம்

திரு. படேலின் வைதீகம்

திப்பாரா ஜில்லா மாஜிஸ்திரேட்டை இரண்டு மாணவிகள் அக்கிரமமாகச் சுட்டுக்கொன்ற கொடுஞ் செயலைக்கண்டிக்கும் பொருட்டு பம்பாயில் பெண்களின் கண்டனக்கூட்டம் ஒன்று கூடிற்று. அதில் காங்கிரஸ் தலைவர் திரு. வல்லபாய் படேல் அவர்கள் பேசும் போது கீழ்க்கண்டவாறு கூறினார். “இது மிகவும் கொடிய குற்றம். இந்தியப் பெண்களின் பரம்பரை வழக்கத்திற்குத் தகுந்த செய்கையாகாது. இந்தியப்பெண் கள் சமூகத்திற்கே இது ஒரு நீங்காத பழியாகும். அவர்களுடைய புகழுக்கே கேடு விளைக்கின்றது. உயிர்களை அழிக்கக்கூடிய கருவிகளைப் பெண்கள் கையில் எடுப்பதே தகாத காரியம். உயிரை உற்பத்தி செய்வதும் காப்பாற்றுவதுமே அவர்களுக்கு இடப்பட்ட கட்டளையேயன்றி, கொல்லும்படி கட்டளையிடப்படவில்லை” என்பது திரு. படேல் அவர்களின் பேச்சு. இதிலுள்ள அபிப்பிராயங்களில் கொலை செய்யும் அக்கிரமத்தன்மையைக் கண்டிக்கும்சொற்கள் முழுவதை யும்  நாம் பாராட்டுகிறோம். இவ்வாறு கொலை செய்த-வெறி பிடித்த பெண் களின் கொடுந்தன்மையை நாம் பலமாகக் கண்டிக்கின்றோம். ஆனால் “உயிரை உற்பத்தி செய்வதும் அதைக் காப்பாற்றுவதுமே அவர்களுக்கு இடப்பட்ட கட்டளை” என்று கூறிய...

யார் செயல் ? யாருக்கு நன்றி ?

யார் செயல் ? யாருக்கு நன்றி ?

காங்கிரசில் உள்ள பார்ப்பனர்கள் அனைவரும், வருணாச்சிரம தருமத்தையும், மதத்தையும், கடவுளையும், வேதங்களையும், புராணங்க ளையும் பிரசாரம் புரிந்து, நமது இயக்கத்தால் சிறிது கண் திறந்து வருகின்ற பாமர மக்களை மீண்டும் மூடநம்பிக்கையில் கட்டுப்படுத்தி வைக்கவே காங்கிரசை உபயோகப்படுத்திக் கொண்டு வருகின்றனர் என்று நாம் அடிக்கடி கூறிவருவதில் சிறிதும் தவறில்லை யென்பதற்கு மற்றொரு உதாரணம் கிடைத்திருக்கிறது. “தென்னாட்டுக் காந்தி” எனக் காங்கிரஸ் கூலிகளால் கொண்டாடப் படும் திரு. சி. ராஜகோபாலாச்சாரியார் அவர்களைப்பற்றி நாம் ஒன்றும் அதிகமாகக்கூற வேண்டியதில்லை. அவர் ஒரு பழுத்த வருணாச்சிரம தரும வாதியாகிய “கடவுள் பக்தர்” ஆக விளங்குகிறார் என்பது பலருக்கும் தெரிந்த விஷயமாகும். குடுகுடுப்பைக்காரன் போகுமிடந்தோறும், தனது குடுகுடுப்பையையும், தன் தோளின் மேல் ஒரு மூட்டைக் கந்தைத் துணி யையும் சுமந்துகொண்டு போவதைப் போல, திரு. ராஜகோபாலாச்சாரி யாரவர்களும் எங்கே போனாலும் புராணங்களையும், கடவுளையும் சுமந்தே தான் செல்லுவார். அவர் எந்த அறிக்கை வெளியிட்டாலும், எங்கே என்னென்ன பேசினாலும்,...

துடையையுங் கிள்ளி விட்டுத்              தொட்டியையும் ஆட்டுதல்

துடையையுங் கிள்ளி விட்டுத்              தொட்டியையும் ஆட்டுதல்

கலகம், கிளர்ச்சி, ஆர்ப்பாட்டம் முதலிய காரியங்களைப் பார்ப்பதி லும், அவற்றில் ஈடுபடுவதிலும் சாதாரணமாக எல்லா மக்களுக்கும் ஒரு உற்சாகமும், ஆசையும்  உண்டாவது இயல்பான விஷயமாகும். அமைதியாக -பொறுமையாக-தடபுடலான காரியம் ஒன்றுமில்லாமல்- இருப்பதால் மனத்திற்கு ஒருவித உற்சாகமும் இருப்பதில்லை; என்னமோ ஒருவிதமான மந்தமாகவே இருக்கும். ஆகவே, அமைதியாக இருக்கும் மக்களை-கிளர்ச்சியான-கலகமான-ஆர்ப்பாட்டமான காரியங்களைச்  செய்யும்படி தூண்டி விடுவது மிகவும் சுலபமான விஷயமாகும். கொஞ்சம் பேசுந்திறமையுடைய- எழுதுந்திறமையுடைய எவராலும் இக்காரியம் செய்யமுடியும். மக்களை அடக்கி வைத்திருக்கின்ற ஒரு ஸ்தாபனத்தின் மீதோ, அல்லது ஒரு தலைவன் மீதோ அல்லது ஒரு சமஸ்தானத்தின் மீதோ, அல்லது ஒரு ஜமீன் மீதோ அல்லது ஒரு அரசாங்கத்தின் மீதோ பொது ஜனங்கள் ஒப்புக் கொள்ளும்படியான விதத்தில் குற்றங்களையும், பழிகளையும் சுமத்திச் சாதுரியமாகப் பேசினால் போதும். உடனே ஒன்றுந் தெரியாத அவர்கள் துவேஷமும், வெறியும், உணர்ச்சியுங்கொண்டு கலகஞ் செய்வதற்குத் தயாராகி விடுவார்கள். இத்தகைய துவேஷத்தை உண்டாக்கும் தலைவர்கள் சொல்லுகின்றபடியெல்லாம் கேட்கப் பொதுஜனங்களும் பின்வாங்க...

இரண்டு ஆச்சாரியார்கள்                                  தனி உரிமையும் மதமும் வேண்டுமாம்.  – தேசீயத்துரோகி

இரண்டு ஆச்சாரியார்கள்                                  தனி உரிமையும் மதமும் வேண்டுமாம். – தேசீயத்துரோகி

  மத நடுநிலைமையின் ஆபத்து நாசிக்கில் உள்ள கோயிலில் பிரவேசிக்கவும், “ராமகுண்டம்” என்னும் தீர்த்தக் குளத்தில் குளிக்கவும் தீண்டாதார்கள் சத்தியாக்கிரகம் செய்து வருகின்றனர். இச்சத்தியாக்கிரகத்தை வைதீக இந்துக்கள் தடுத்து வருகின்றனர். இதைப்பற்றி “இந்திய சனாதன வைதீகசபை”த் தலைவர், திரு.காசிகிருஷ்ணமாச்சாரியார் என்பவர் ஒரு அறிக்கை விடுத்திருக்கிறார். அவ்வறிக்கையில், “நாசிக்குக்காக மிஸ்.மேயோவை மறுபடியும் இந்தியாவின் மீது கிளப்பி விட்டுவிடாதீர்கள். சனாதன தர்மிகளும், பஞ்சமர் களும் சுயநலக்காரர்களின் வார்த்தைகளைக் கேட்டு ஒருகாரியத்தை யும் செய்ய வேண்டாமெனக் கேட்டுக் கொள்ளுகிறேன். சத்தியாக் கிரகத்தின் நோக்கம் “சத்தியத்தைக் காப்பதேயாகும்”. “ராமகுண்ட தீர்த்தம்” பொதுச்சொத்தல்ல. அது பொதுச் சொத்தாக இருந்தால் தான், தீண்டாதார்களும் ஜாதி இந்துக்களைப் போல அதில் உரிமைக் கொண்டாட முன்வரலாம். காங்கிரசும் மற்றும் பொருப்புள்ள ஸ்தாபனங்களும், மூலாதார உரிமைகளை ஒப்புக்கொண்டிருக்கின் றன. சொந்த அதிகாரமுள்ள சொத்துக்களையும், தர்ம ஸ்தாபனங் களையும் பொதுச்சொத்துக்களாக மாற்ற மேற்படி ஸ்தாபனங்கள் ஒப்புக் கொள்ள முடியாது” என்ற விஷயங்கள் காணப்படுகின்றன. இதிலிருந்து காங்கிரஸ்...

தியாகிகளின் வீரச்செயல்

தியாகிகளின் வீரச்செயல்

நமது நாட்டுத் “தேசீய வீரத் தியாகிகள்” ஆகிய காங்கிரஸ்காரர்கள்  இதுவரையிலும்,  மற்றவர்களைப் பதவி வேட்டைக்காரர்கள் என்று சொல்லிக் கொண்டிருந்தது போக, இப்பொழுது அவர்களே பதவிகளுக்கு ஆசை கொண்டு நுனி நாக்கிலிருந்து தண்ணீர் சொட்டும்படி ஓடிக்கொண்டி ருக்கிறார்கள். இவ்விஷயத்தை, ஸ்தல ஸ்தாபனத் தேர்தலுக்குக் காங்கிரஸ் காரர்கள் பலர் ஆங்காங்கே போட்டி போடுவதைக் கொண்டு தெரிந்துக் கொள்ளலாம். ஆனால், இந்தத் “தியாகிகள்” எதற்காக ஸ்தல ஸ்தாபனங் களுக்குப் போகிறோம் என்று சொல்லுகிறார்கள் என்பதைக்கேட்டால் தான் இவர்களுடைய அரசியல் ஞானமும், தேசாபிமான மிகுதியும், ஸ்தல ஸ்தாபனங்களின் பிரயோசனத்தை இவர் எவ்வாறு அறிந்து கொண்டிருக் கிறார்கள் என்ற செய்தியும் விளங்கும். ஸ்தல ஸ்தாபனங்களில் அங்கம் பெற முன் வருகின்றவர்கள், “நான் நகரின் சுகாதாரத்திற்காக உழைப்பேன். ஏழை ஜனங்களின் வரிகளைக் குறைக்கப்பாடுபடுவேன். நகரில் தண்ணீர் வசதியுண்டாக்கப் பாடுபடுவேன். விளக்கு வசதிகளை அதிகப்படுத்த முயலுவேன். ஏழை மக்களுக்கு குடியுருப்பு வசதிகளை உண்டாக்க முயலுவேன். நகரில் பள்ளிக்கூடங்களை மிகுதிப்படுத்தவும், கட்டாயக்கல்வியை உண்டாக்கவும்...

நமது ஆசிரியரின் ஐரோப்பா பிரயாணம்

நமது ஆசிரியரின் ஐரோப்பா பிரயாணம்

இன்று 13-12-31-ல் நமது ஆசிரியர் திரு. ஈ.வெ.இராமசாமி அவர்கள் திரு.இராமனாதன்                    அவர்களுடன் (ஹஅbடிளநை) அம்போய்சி என்னும் பிரஞ்சு கப்பலில் ஐரோப்பா முழுவதும் சுற்றுப் பிரயாணம் செய்வதற்கு புறப்பட்டு விட்டனர். திரு.இராமசாமி அவர்கள் உடல்நிலை தொடர்ந்த பிரயாணத்திற்கு இடங்கொடுக்க முடியாத நிலையிலிருப்பினும் இயக்க வளர்ச்சியை முன்னிட்டு என்ன நேர்ந்த போதிலும் தமது சுற்றுப் பிரயாணத்தை முடித்து வருவதென்ற எண்ணத்துடனேயே  புறப்பட்டு விட்டார். சுற்றுப்பிரயா ணத்தை முடித்து விட்டு மீண்டும் நம் நாடு திரும்புவதற்கு ஏறக்குறைய 3,4 மாதங்கள் செல்லுமெனத் தெரிய வருகின்றது. இவர்களது சுற்றுப்பிரயாண நிகழ்ச்சிகளும், அவ்வப்போது நமதியக்க சம்பந்தமான கட்டுரைகளும், நமது பத்திரிகையில் வெளிவரும் என்பதையும் தெரிவித்துக் கொள்ளு கின்றோம். மேலும் மேல் நாட்டுப் பழக்க வழக்கங்களைப் பற்றி நமது மக்கள் நன்கு தெரிந்து கொள்ளுமாறு இது வரையிலும் மேல் நாடு சென்ற எந்த இந்தியரும் நடு நிலைமையான தாராளமனப்பான்மையுடன் அபிப்பி ராயம் கூறியதில்லை. இது மாத்திரமல்லாமல் மேல் நாடு...

அன்று சொன்னதற்கு அழிவில்லை

அன்று சொன்னதற்கு அழிவில்லை

கொஞ்ச நாளாக நமது நாட்டில் ஒவ்வொரு நாளும் அரசியல் கிளர்ச்சிப் பத்திரிகைகளைப் படிக்க ஆவல் உண்டாக்கிக் கொண்டிருந்த தும், விடிந்து எழுந்தது முதல் படுக்கைக்குப்போகும் வரையிலும் வேலை யற்றவர்கள் வேலையுள்ளவர்கள் ஆகிய எல்லோராலும், எங்கும் பேசப் பட்டுவந்ததுமாகிய வட்டமேஜை மகாநாட்டின் இரண்டாவது கூட்டம் முடிந்துவிட்டது. ‘திரு.காந்தி அவர்கள் வட்டமேஜை மகாநாட்டிற்குப் போயிருக்கிறார், அவர் தமது அபாரமான சக்தியினால் பிரிட்டிஷாரை நடுநடுங்க வைத்துச் சுயராஜ்யத்தை வாங்கி முன்னதாக இந்தியாவுக்கு பார்சல் அனுப்பிவிட்டுத்தான் இங்கிலாந்தைவிட்டுப் புறப்படுவார்’ என்று ‘காந்தி பக்தர்கள்’ நினைத்துப் பேசிக் கனவுகண்டு கொண்டிருந்த சுயராஜ்ய மும் இன்னதென்று தெரிந்து விட்டது. ஆனால், இந்த சுயராஜ்யமும் காங்கிரசின் பிரதிநிதியாகிய திரு.காந்தி அவர்கள் வட்டமேஜை மகாநாட்டிற்குப்போன பிறகுதான் கிடைத்தது என்று சொல்லுவதற்கில்லாமற் போய்விட்டது பற்றி காங்கிரஸ்காரர்கள் ஆயாசப்படுவதோடுங்கூட ஆத்திரமும் படக்கூடும் என்பதில் சந்தேக மில்லை. காங்கிரஸ் பிரதிநிதிகள் இல்லாமல் நடைபெற்ற முதல் கூட்டத் திலேயே- சென்ற ஜனவரி மாதத்தில் பிரிட்டிஷ் முதல் மந்திரி வெளியிட்ட...

இந்திய வைத்திய கலாசாலையின்                    மேல் துவேஷம்                                               தமிழ் வைத்தியத்திற்கு உலை  – தேசீயத்துரோகி

இந்திய வைத்திய கலாசாலையின்                    மேல் துவேஷம்                                               தமிழ் வைத்தியத்திற்கு உலை – தேசீயத்துரோகி

  மதம், ஜாதி, பாஷை, கலை, நாகரீகம்,பழக்கவழக்கம் முதலிய எல்லா வற்றிலும், தங்களுடையதே பெரிதென்றும், ஆகையால் தங்களுக்கே முதன்மை ஸ்தானம் கொடுக்கவேண்டுமென்றும், நீண்டகாலமாகப் பார்ப்பனர்கள் போராடிக்கொண்டும் பெரும்பாலும், இப்போராட்டத்தில் வெற்றி பெற்றுக் கொண்டும் வருகின்றனர். தங்களுக்கு ஆதிக்கமில்லாத வழியிலும், லாபமில்லாத வழியிலும், மற்றவர்களுக்கு லாபமும், ஆதிக்க மும் சிறிதளவு உண்டு என்ற வழியிலும் செய்யப்படும் காரியங்கள் எவையா யிருந்தாலும் அவைகளைப்பற்றித் தப்புப்பிரசாரம் பண்ணத் தொடங்கிவிடு கின்றனர். அவைகள் தேசத்துரோகமான செயல்களென்றும், அவைகளால் தங்கள் மதத்திற்கு ஆபத்து வந்துவிட்டதென்றும், பாஷைக்கு ஆபத்து வந்துவிட்ட தென்றும், கலைகளுக்கு ஆபத்துவந்துவிட்டதென்றும், குலைக்கத் தொடங்கி விடுகின்றனர். இது எப்பொழுதும் நமது நாட்டில் பார்ப்பனர்களால் ஆடப்படும் நாடகமாகவே இருந்து வருகின்றது. இதற்கு உதாரணமாகச் சென்ற 1.12.31ல் சென்னை ஆயுர்வேத சபை யின் ஆதரவில் திரு.சத்தியமூர்த்தி சாஸ்திரியார் அவர்கள் தலைமையில் நடந்த பொதுக்கூட்டத்தை எடுத்துக்கொள்ளலாம். அக்கூட்டம் காலஞ் சென்ற பனக்கால் அரசரின் முயற்சியினால்  சென்னையில் ஏற்படுத்தப் பட்டிருக்கும் இந்திய வைத்திய...

மூட்டைப்பூச்சிகளின் சேஷ்டை

மூட்டைப்பூச்சிகளின் சேஷ்டை

‘பம்பாய் ஐக்கோர்ட்டிலிருந்து டாக்டர் அம்பெட்காருக்கு ஒரு சம்மன் அனுப்பப்பட்டது. அவர் இங்கிலாந்திலிருப்பதால் இச்சம்மன் திரும்பி வந்து விட்டது. அவர் இந்தியாவில் அடி வைத்தவுடன் அவரை வரவேற்க இச்சம்மன் தயாரயிருக்கும். ஐந்தாவது மாகாண மாஜிஸ்திரேட் டால் வழக்கு விசாரிக்கப்படும், பம்பாய் எல்பினஸ்டன் ரோடு, கோவாப் பரோட்டிவ் கிரெட்டிட் சொசைட்டியின் காரியதரிசி திரு.ராமகிருஷ்ணா வால் மேற்படி வழக்குத் தொடரப்பட்டிருக்கிறது. டாக்டர் அம்பெட்கார் அடிதடி, கொள்ளை, சட்டவிரோதமான கூட்டத்தில் சேர்ந்தது ஆகியவை களே அவ் வழக்கு தொடர்வதற்கு காரணமாகக் காட்டப்பட்டிருக்கின்றது’ என்று  பத்திரிகைகளில் ஒரு செய்தி காணப்படுகின்றது. இதன் உண்மை என்னவோ அதைப்பற்றி நாம் தற்சமயம் ஒன்றும் கூறவிரும்பவில்லை. ஆனால், காங்கிரஸ், காந்தீயம் இவைகளுக்கு விரோதமான அபிப்பிராயம் உடையவர்கள் யாரோ அவர்களை நம் நாட்டுப் பார்ப்பனர்களும், அவர் களால் தூண்டப்பட்ட கோடரிக்காம்புகளும், சும்மாவிடமாட்டார்கள் என்ப தும், மூட்டைப் பூச்சிகள் போல அவர்களுக்கு ஏதாவது சில்லரைத் தொந்தரவுகளைச் செய்து கொண்டே இருப்பார்கள் என்பதும் ஆகிய விஷயத்தை மாத்திரம்...

தீண்டாதார் கல்வி

தீண்டாதார் கல்வி

தாழ்த்தப்பட்டவர்களுக்குத் தனித்தொகுதி கொடுக்கக்கூடாது என்றும், தனித்தொகுதி கேட்டவர்கள் தாழ்த்தப்பட்டவர்களின் பிரதிநிதிகள் அல்லவென்றும், தேசீயவாதிகளும் தேசீயப்பத்திரிகைகளும் பிரசாரம் செய்துகொண்டு வருகின்றன. ஆனால், அவர்கள் பொதுப்பள்ளிக் கூடங்க ளில்கூட சேர்ந்து படிப்பதற்கு நமது நாட்டு மக்கள் தடையாக இருக்கிறார் கள் என்ற விஷயத்தை அறிந்தால் தாழ்த்தப்பட்ட தீண்டாதார்களை உயர்ந்த ஜாதி இந்துக்கள் எவ்வளவு கீழாகவும் கொடுமையாகவும் நடத்துகிறார்கள் என்பது விளங்கும். சென்னை சர்க்கார் 1930-31 வருஷத்தில் தொழில் இலாகா செய்துள்ள வேலையைப்பற்றி வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தீண்டப்படாதார்களுக்காக 1784 தனிப் பள்ளிக்கூடங்கள் இருப்பதாகக் குறிப்பிட்டிருக்கின்றனர். இவ்வாறு தீண்டாதவர்களுக்கெனத் தனிப்பள்ளிக் கூடங்கள் வைப்பதற்குக் காரணம் ‘கிராமாந்தரங்களில் ஜாதித் துவேஷங் கள் வேரூன்றிக் கிடப்பதால் அவர்கள் பொதுப்பள்ளிக்கூடங்களில் சேர்ந்து படிக்க முடியவில்லை’என்றும் கூறியிருக்கின்றனர். இதிலிருந்து நமது தேச நிலை எவ்வாறு இருக்கிறதென்பதை அறிந்துகொள்ளலாம். இந்த நிலையில் உள்ள நமது நாட்டில் தீண்டாதார் பொதுத்தொகுதியில் நின்று எவ்வாறு தேர்த லில் வெற்றிபெறமுடியும் என்பதை யோசித்துப்பாருங்கள். பரோடா அரசாங்கத்தார் தீண்டாதார்களும் சமூக...

எல்லாம் பழய ஆதிக்கம் செலுத்தவே

எல்லாம் பழய ஆதிக்கம் செலுத்தவே

நமது நாட்டில் ஆங்கிலப்படிப்பு பரவ ஆரம்பித்ததன் பலனாகவும், ஏழு ஆண்டுகளாக நமது இயக்கம் யாருக்கும் அஞ்சாமல், எந்த எதிர்ப் புக்கும் பின் வாங்காமல் உண்மைகளை எடுத்துக்கூறிப் பிரசாரம் செய்ததன் பலனாகவும், பார்ப்பனீயத்திற்கும், வருணாச்சிரம தருமங்களுக்கும் ஏற்கனவே ஏற்பட்டிருந்த மதிப்பு கொஞ்சம் கொஞ்சமாகத் தளர்ச்சியடைய ஆரம்பித்துவிட்டது. இதனால் உயர்ந்த ஜாதிக்காரர்கள் என்று சொல்லிக் கொண்டும், பூதேவர்கள் என்று கூறிக்கொண்டும் இருந்த பார்ப்பனர் களுடைய கௌரவமும் குறைய தொடங்கிவிட்டது என்பதும் உண்மை யாகும். ஆகையால், அவர்கள் காங்கிரசின் பெயராலும், அரசாங்க உத்தியோ கத்தின் செல்வாக்காலும் மற்றும் பல பொது இயக்கங்களின் பெயராலும் தங்களைத் தலைவர்களாகவும், தியாகிகளாகவும், தேசாபிமானிகளாகவும் செய்து கொண்டு பார்ப்பனரல்லாத மக்களை ஏமாற்றி வாழ்ந்து வந்தவர்கள். இப்போது மேற்படி பொது இயக்கங்களிலும் பார்ப்பனரல்லாதார் புகுந்து தங்களுக்கும் பங்கு கொடுக்க வேண்டும் என்று போராட ஆரம்பித்தவுடன் வேறு பல பேர்களாலும், பிரசாரங்களாலும் தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்ட முயற்சி செய்கின்றார்கள். நமது இயக்கமானது பார்ப்பனர்களை நமது...

“சர்வம் பார்ப்பன மயம்” – திருவாங்கூர்

“சர்வம் பார்ப்பன மயம்” – திருவாங்கூர்

புதிய மகாராஜா பட்டத்திற்கு வந்தவுடன் திருவாங்கூர் சமஸ்தானக் குடிமக்களுக்கு இனியேனும் உண்மையான சுதந்தரம் உண்டாகும் என்று நம்பினோம். இதற்கு அறிகுறியாக கப்பற் பிரயாணம் செய்து அந்நிய நாடு சென்று வந்தவர்கள் உள்ளே போகக்கூடாது என்று தடுக்கப்பட்டிருந்த கோயில்களுக்குள் அவர்களும் போகலாம் என்று முன்னிருந்த தடை நீக்கப்பட்டது. இதைக்கொண்டு “இனி திருவாங்கூர் மக்கள் வைதீகக் கொடுமையிலிருந்தும் நீக்கப்படுவார்கள் போலும்” என்றும் சந்தோஷப் பட்டோம். ஆனால் இப்பொழுது சர்.சி.பி. ராமசாமி அய்யர் அவர்களை மேன்மை தங்கிய மகாராஜாவுக்கு அரசியல் ஆலோசனை கூறும் உத்தியோ கஸ்தராக நியமிக்கப்பட்டதிலிருந்து கப்பலேறி அந்நிய நாடுகளுக்குச் சென்றுவந்த சர்.சி.பி. ரா. அய்யர் அவர்கள் கோயிலுக்குள் போவதற்குத் தடை இருக்கக் கூடாது என்பதற்காகவே முன்னிருந்த தடை நீக்கப்பட்டது என்றே நினைக்க வேண்டியதிருக்கிறது. அன்றியும் இப்பொழுதிருக்கும் மகாராஜா அவர்கள், ஒரு சமயம் சர்.சி.பி.ரா. அய்யர் அவர்களுடன் இங்கிலாந்து முதலிய தேசங்களுக்குப் பிரயாணம் செய்து வந்தால் அப்பொழுது மகாராஜா கோயிலுக்குள் போவதற்கு யாதொரு தடையும்...

மற்றொரு ‘சனியன்’ “கார்த்திகைத் தீபம்”

மற்றொரு ‘சனியன்’ “கார்த்திகைத் தீபம்”

மதத்தின் பெயரால் ஏற்பட்ட பண்டிகைகளின் மூலமாகவே நமது நாட்டுச் செல்வங்களும், மக்களின் உழைப்பும் பெரிதும் வீணாகிக்கொண்டு வருகின்றன என்பதை நாம் பலதடவை எடுத்துக்காட்டிப் பேசியும், எழுதி யும் வருகிறோம். எவ்வளவு பேசினாலும், எவ்வளவு எழுதினாலும் நமது மக்களுக்கு இன்னும் அப்பண்டிகைகளில் உள்ள அபிமானமும், மூட நம்பிக்கையும் ஒழிந்த பாடில்லை.  “அடிமேல் அடிஅடித்தால்  அம்மியும் நகரும்”  என்பதைப்போல, அடிக்கடி அவற்றின் புரட்டுக்களை வெளிப் படுத்தி வருவதனால் நமது மக்களுக்கு அவைகளின் உண்மை விளங்கக் கூடும் என்று கருதியே  நாமும் இடைவிடாமல் எழுதிக் கொண்டு வரு கிறோம். சென்ற மாதத்தில் தான் நமது நாட்டின் செல்வத்தைக் கொள்ளை கொண்டு பாழாக்கிச்சென்ற தீபாவளிப் பண்டிகையைப்பற்றி எழுதியிருந் தோம்.  அப்பண்டிகையால் நமக்குக் கிடைத்த பலன் என்ன? தீபாவளியின் பெயரால் ஏறக்குறைய 20 கோடி மக்களாவது பண்டிகை கொண்டாடி இருப்பார்கள்.  இவர்கள் பண்டிகை கொண்டாடியதன் பயனாய் சுமார் 10 கோடி ரூபாய்க்குக் குறையாமல் பாழ்பட்டிருக்கும் என்பதில் சந்தேக மில்லை....

கார்ப்பொரேஷன் தேர்தலைப்பற்றி பார்ப்பனர் குறை கூறுவதன் ரகசியம் ஐஐ  – தேசீயத்துரோகி

கார்ப்பொரேஷன் தேர்தலைப்பற்றி பார்ப்பனர் குறை கூறுவதன் ரகசியம் ஐஐ – தேசீயத்துரோகி

  சென்னை கார்ப்பொரேஷனில் திரு.ஏ.ராசசாமி முதலியார் தலைவ ராயிருக்கும் காலத்தில், தலைவர் தேர்தலுக்குப் போட்டி போட்டுக் கொண்டு அதனால் வகுப்புச் சண்டையை வளர்க்கும் தொல்லையை நீக்குவதற்காக ஒரு சமரசமான முடிவு செய்து கொண்டனர். அந்த முடிவின்படி ஒவ்வொரு வருஷமும், தலைவர் தேர்தல் கஷ்டமில்லாமல் நடக்க ஏதுவாயிற்று. அவ்வொப்பந்தம் சென்னையில் உள்ள ஒவ்வொரு வகுப்பினரும் தங்கள் தங்கள் எண்ணிக்கைக்குத் தக்கவாறு கார்ப்பொரேஷனில் தலைமைப்பதவி பெற வழிசெய்தது. அவ்வொப்பந்தம் ஏற்பட்ட காலத்தில் அனேகமாக எல் லோரும் அதை நியாயமான ஒப்பந்தம் என்று பாராட்டினர். அவ்வொப்பந்த மாவது, பிராமணரல்லாதார் பிராமணர் பிராமணரல்லாதார் கிருஸ்தவர் பிராமணரல்லாதார் முஸ்லீம் பிராமணரல்லாதார் தாழ்த்தப்பட்டவர்கள் என்று இவ்வாறு குறிப்பிட்டபடி அந்தந்த வகுப்பிலிருந்து தலைவர்களைத் தேர்ந்தெடுக்கவேண்டியது என்பதாகும். இவ்வொப்பந்தப் படியே முதலில் திரு.பி.டி.குமாரசாமி செட்டியார் அவர்கள் தலைவராக தெரிந்தெடுக்கப்பட்டார். அவருடைய உத்தியோக காலமாகிய ஒரு வருஷம் முடிந்தபின், அடுத்த தலைவர் தேர்தல் சென்ற 12-11-31ல் நடைபெற்றது. இத்தேர்தலில் முன் ஏற்படுத்திய திட்டப்படி ஒரு...

திரு.காந்தி தனித்தொகுதியை                    மறுப்பதின் ரகசியம் ஐ  சீர்திருத்தம் கூடாது என்பதேயாகும்  – தேசீயத்துரோகி

திரு.காந்தி தனித்தொகுதியை                    மறுப்பதின் ரகசியம் ஐ சீர்திருத்தம் கூடாது என்பதேயாகும் – தேசீயத்துரோகி

  திரு.காந்தியும், காங்கிரசும், பார்ப்பனர்களும் தனித்தொகுதி கூடாது கூடாது என்று கூச்சலிட்டுக் கொண்டு வருகின்றனர். தனித்தொகுதி இருந்தால், அரசியலில் எல்லா வகுப்பினர்களும் சம உரிமை பெற முடியும். ஆகையால் தனித்தொகுதியோடு கூடிய அரசியல் சீர்திருத்தமே வேண்டுமென்றும், நாட்டில் உள்ள சிறுபான்மை வகுப்பினர்களும், அவர்களின் தலைவர்களும் கூறுகின்றனர். இதை நாட்டின் உண்மை நிலையைத் தெரிந்த நடுநிலையாளர்கள் சரியென்று ஒப்புக் கொள்ளுகின் றனர். ஆனால், தனித்தொகுதிக்கு எதிராக இருக்கின்றவர்கள், தனித்தொகுதி வேண்டுமென்று கூறுபவர்களையும், அதை ஆதரிப்பவர்களையும், வகுப்பு வாதிகள் என்றும் தேசத்துரோகிகள் என்றும் தாராளமாக பிரசாரஞ் செய்கின் றனர். தேசீயப் பத்திரிகைகளும், இவர்கள் பாடும் பல்லவியையே பாடி வருகின்றன. இந்த முறையிலேயே பார்ப்பனரின் மகாத்துமாவாகிய திரு.காந்தி யும், அவரைப் பின்பற்றுபவர்களும், ஒரேயடியாகத் தனித்தேர்தல் முறை கூடாது என்று கூறுவார்களானால் அதில் ஏதாவது தேசிய நோக்கம் இருக்க லாம் என்றாவது சொல்ல இடமுண்டு. ஆனால் இங்கிலாந்து வட்டமேஜை மகாநாட்டிற்குப் போன பின் திரு. காந்தியும், மாளவியா...

மக்களே! பார்ப்பனீயம்  ஜாக்கிரதை!!

மக்களே! பார்ப்பனீயம்  ஜாக்கிரதை!!

க்ஷநுறுஹசுநு டீகு க்ஷசுஹழஆஐசூஐளுஆ தென் இந்தியாவில் உள்ள பார்ப்பனர்கள் மறுபடியும் கதர், காங்கிரஸ், மறியல் என்னும் பெயர்களைச் சொல்லி மூடமக்களிடம் உண்டியல் பிச்சை, தட்டப்பிச்சை முதல் பல தந்திரங்களால் பணம் வசூலிக்க வழிகளுண் டாக்கி, பார்ப்பனரால்லாதாரையே கூலிகளாகப் பிடித்து அவர்கள் வசம் அம் மார்க்கத்தை ஒப்புவித்து கூப்பாடு போடச்செய்து, பிரசாரம் செய்ததின் பயனாய் அடங்கிக்கிடந்த பார்ப்பனீயம் இப்போது மறுபடியும் தலை விரித்து ஆடத் தொடங்கி இருக்கிறதென்பது யாவரும் அறிந்ததேயாகும். பார்ப்பனீயத்தின் கருத்தெல்லாம், தேசம் பார்ப்பனர்கள் ஆதிக்கத் திற்கு வரவேண்டுமென்பதைத்  தவிர வேறு ஒரு காரியமும் இல்லை என்பதும் வெகு காலத்திற்கு முன்பே விளங்கிய விஷயமாகும். அதற்காக என்று செய்யப்படும் கதர்-காங்கிரஸ்-மறியல் முதலிய பிரசாரத்தின் கருத் தெல்லாம் சட்டசபை தாலூகா, ஜில்லாபோர்டுகள் முனிசிபாலிட்டி முதலிய வைகளை பார்ப்பனரல்லாதாரிடமிருந்து பிடுங்கி பார்ப்பன ஆதிக்க வசம் ஒப்புவிக்கும் தரகர் வேலை என்பதைத் தவிர மற்றபடி இவற்றால் எல்லாம் மதுபானமோ, ஏழ்மைத்தன்மையோ, அடிமைத்தன்மையோ ஒழியப்போவ தில்லை என்பதும்...

இரண்டு சந்தேகம்?                                                                          – சித்திரபுத்திரன்

இரண்டு சந்தேகம்?                                                                         – சித்திரபுத்திரன்

  1.போக்கிரி : திருமதி ஸ்லேட்டர் அம்மாளை மீராபாயம்மாளாக்கி, முக்காடு போட்டு ஆபாசமாக்கி சீமைக்கு அழைத்துப் போய் இந்திய நாகரீகத்தைப் பாருங்கள் என்று வெள்ளைக்காரர்களுக்கு காட்டுகிறாரே அது ஏன்? முக்காடு என்ன அவ்வளவு அழகா? அல்லது, தன்னை ஒரு சனாதன இந்து என்பதற்காகவா? யோக்கியன்: அதைப்பற்றி கவலை உனக்கு எதற்கு? அது அவரவர்கள் இஷ்டத்தைப் பொறுத்தது. போக்கிரி                     : சரோஜனி அம்மாள் அப்படியில்லையே? யோக்கியன்: மறுபடியும் பேசுகிறாயே? போக்கிரி: சரி, அதைப்பற்றி பின்னால் பேசிக்கொள்ளலாம். திரு. காந்திக்கு திரு.ஏ. ரங்கசாமி அய்யங்கார் அவர்களின் யோக்கியதை தெரி யுமா? தெரியாதா? யோக்கியன்: தெரியும். ஏன்? போக்கிரி                     : அவர் காந்தியை மீறித்தானே வட்டமேஜைக்குப் போனார்? யோக்கியன்: ஆம். போக்கிரி                     : அப்படி இருக்க, திரு.காந்தி அவரை எதற்காகத் தனக்கு அரசியல் ஆலோசனை சொல்லும் அமைச்சராக வைத்துக்கொண்டார். யோக்கியன்: இது வேண்டுமானால் நல்ல கேள்வி. ஏன் வைத்துக் கொண்டார் என்றால், திரு. ஏ.ரங்கசாமி அய்யங்கார்...

சென்னையில் சுயமரியாதை

சென்னையில் சுயமரியாதை

சென்னை நகரத்தில் பல இடங்களில் அநேகமாக நாள் தவறாமல் சுமார் ஒரு மாதமாகப் பொதுக் கூட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக் கின்றன. சுயமரியாதை இயக்கத் தோழர்கள் திரு.பொன்னம்பலனார், குருசாமி, பண்டிதர் திருஞானசம்பந்தர், எஸ்.ராமநாதன், டி.வி.சுப்பிர மணியம் முதலியவர்கள் சாதிப்புரட்டு, சமயப்புரட்டு, காங்கிரஸ் புரட்டு  முதலியவைகளை எடுத்துக்காட்டி சமதர்மப் பிரசங்கங்கள் செய்து வருகின் றனர். ஆயிரக்கணக்கான பொதுஜனங்கள் உற்சாகத்துடன் கூட்டங் களுக்குப் போய் உண்மையுணர்கின்றனர். இவ்வாறு நடைபெறும் பொதுக் கூட்டங்களைப் பற்றிய நிகழ்ச்சிகளைத் தேசீய பத்திரிகைகள் வெளியிடுவ தில்லை. இதற்கு மாறாக கூட்டங்களில் கலகஞ் செய்வதற்காக காலிகளைத் தூண்டிவிட்டுக் கொண்டிருக்கின்றன. தேசீயப்புரட்டு வெளியாகி அதனால் பொது ஜனங்கள் விழிப்படையும் போது தேசீயப்  பத்திரிகைகளும், தேசீய வாதிகளும் வேறு இதைத் தவிர என்ன தான் செய்யக்கூடும்? குடி அரசு – துணைத் தலையங்கம் – 08.11.1931

காங்கிரஸ் புரட்டுக்குத்  தோல்வி

காங்கிரஸ் புரட்டுக்குத்  தோல்வி

சென்னை நகரசபைக்கு செனட்டிலிருந்து ஒரு பிரதிநிதியைத் தெரிந்தெடுப்பதற்கு தேர்தல் நடைபெற்றது. அதற்குத் திரு.புர்ரா சத்திய நாராயணாவும், இங்கிலாந்திற்கு வட்டமேஜை மகாநாட்டுப் பிரதிநிதியாகச் சென்றிருக்கும் திவான்பகதூர் ஏ.ராமசாமி முதலியாரும் போட்டியிட்டனர். இவர்களில் திரு.ராமசாமி முதலியாருக்கு 109 ஓட்டுகளும் , திரு.சத்திய நாராயணாவுக்கு 46 ஓட்டுகளும் கிடைத்தன. திரு. ராமசாமி முதலியாரே செனட்டின் பிரதிநிதியாக நகரசபைக்கு தெரிந்தெடுக்கப்பட்டார். இந்தியா வுக்கு தானே பிரதிநிதி என்று சொல்லிக்கொள்ளும், காங்கிரசைக் சேர்ந்த திரு.சத்தியநாராயணாவுக்கு செனட்டு அங்கத்தினர்களின் ஆதரவில்லா மையைக் கொண்டு படித்தவர்களிடத்தில் காங்கிரசுக்கு எவ்வளவு செல் வாக்கு இருக்கிறதென்பதைத் தெரிந்து கொள்ளலாம். ‘காங்கிரசுக்கு விரோத மான ஜஸ்டிஸ்கட்சி’யைச் சேர்ந்த திரு.ராமசாமி முதலியார் அவர்கள் ஊரில் இல்லாதிருந்தும் வெற்றிபெற்றதைப் பாராட்டுகின்றோம். குடி அரசு – துணைத் தலையங்கம் – 08.11.1931

வகுப்புவாதிகள் அயோக்கியர்களா?

வகுப்புவாதிகள் அயோக்கியர்களா?

இந்தியர்களின் அடிமைத் தன்மைக்கும் இழி நிலைக்கும் மதமும், ஜாதியும், வகுப்பும் அவை சம்பந்தமான மூடநம்பிக்கை எண்ணங்களும், வெறிகளும், சடங்குகளும் இவற்றிற்காக ஒருவரை ஒருவர் அவநம்பிக்கை கொண்டு அடக்கி ஆள நினைப்பதுமே முக்கியமான காரணங்களாகும் என்பதாக நாம் பல தடவை சொல்லி வந்திருக்கின்றோம். பலமாக அனேக உதாரணங்களுடன் எழுதியும் வந்திருக்கின்றோம். மதங்களின் பேரால் பல முக்கிய மதங்களும், அநேக கிளை மதங் களும் உட்பிரிவு மதங்களும் ஏற்பட்டு, மக்களை பெரும் பெரும் பிரிவு களாகப் பிரித்துவிட்டதென்றாலும் வருணாச்சிரமத்தையும், ஜாதிப்பிரிவு களையும், பலவகுப்புப் பிரிவுகளையும் கொண்டதான இந்துமதமானது எல்லா மதங்களையும் விட மக்கள் சமூகத்திற்கு பெரிய இடையூறாய் இருந்து கொண்டு மக்களின் ஒற்றுமையையும், தன்னம்பிக்கையையும் அடியோடு பாழாக்கி வருவதுடன் இதன் காரணமாய் மக்கள் வலி இழந்து, சுயமரியாதை இழந்து, சுதந்திரமற்று நடைப்பிணங்களாகவும் பகுத்தறிவற்ற மிருகத் தன்மையிலும் கேவலமாகவும் வாழ்ந்து வருகிறார்கள். இதற்கு உதாரணமாக, சென்னை மாகாணத்தை மாத்திரம் எடுத்துக் கொண்டு பார்த்தாலே போதும். இந்துகள்...

தமிழன்

தமிழன்

ஈப்போவில் பிரசுரிக்கப்படும் “தமிழன்” என்னும் தமிழ் தினசரி பத்திரிகையின் வெளியீடுகள் வரப்பெற்றோம். இப்பத்திரிகையானது தேசத்திற்கும், மக்கள் சுயமரியாதைக்கும் வெகு காலமாக உழைத்து வரும் பெரியார் உயர்திரு.சுவாமி அற்புதானந்தா அவர்களை ஆசிரியராகக் கொண்டுள்ளது. சமூக ஊழியமும், சமூக சீர்திருத்தமும் புரிவதே இப்பத்திரிக்கையின் பொது நோக்கமாயிருந்த போதிலும், தீண்டாதார், ஏழை, எளியவர்களின் குறைகளை முக்கியமாக தீர்ப்பதற்காக வெளிவந்துலாவும்  ஓர் சிறந்த தமிழ் தினசரி இதுவேயாகும். தமிழ் மக்களுக்குள் புகுத்தப்பட்டிருக்கும் ஜாதி மத வித்தியாசங்களையும், பிறவியினால் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளையும் கண்டித்து, தீண்டாமை, நெருங்காமை, பாராமை முதலிய அட்டூழியங்களை அறவேயழித்து, கலப்பு மணம், விதவை மணம், புரோகிதமற்ற மணம், புரோகிதமற்ற ஈமக்கடன் முதலியவைகளை ஆதரித்து, மக்களின் பகுத் தறிவை வளர்த்து, அவர்கள் முன்னேற்றமடையும்படியான துறைகளில் ஈடுபட்டுழைத்தலுமாகிய அரிய கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு, பாடுபட முன்வந்ததற்காக நாம் அதை முழுமனதுடன் வரவேற்ப துடன், நமது வாசகர்களையும், இப்பத்திரிகைக்கு உடனே சந்தாதாரர்களாகச் சேர்ந்து ஆதரிக்க வேணுமாய் கேட்டுக் கொள்ளுகின்றோம். நாடெங்கும்...

திரிகூட சுந்தரனார் திருமணம்

திரிகூட சுந்தரனார் திருமணம்

நண்பர் உயர்திரு. திரிகூட சுந்திரர் அவர்களுக்கு திருநெல்வேலி யில் சுயமரியாதை முறைப்படி திருமணம் நடந்த சங்கதி மற்றொறு பக்கம் பிரசுரித்திருக்கிறோம். அவர் ஒருநாளும் சுயமரியாதைக் கொள்கைகளுக்கு எதிராக இருந்த தில்லை. நமது இயக்கத்தை பாராட்டி எழுதி இருக்கும் வியாசங்கள் அநேகம் ‘குடி அரசி’லும், “ரிவோல்டி” லும் காணலாம். உடல் நலிவால் அவரது திருமண அழைப்பிற்குச் செல்ல நமக்கு வசதி ஏற்படவில்லையானாலும் அத்திருமணம் நடந்த முறையை அறிந்து நாம் மிகுதியும் மகிழ்ச்சி அடைவதுடன் திரிகூட சுந்திரரை நாம் மிகுதியும் பாராட்டுகிறோம். மணமக்கள் சீர்திருத்தத் துறையில் தொண்டாற்றி மனித சமூகத்திற்கு விடுதலையையும், சுயமரியாதையையும் உண்டாக்க ஆசைப்படுகின்றோம். குடி அரசு – வாழ்த்துச் செய்தி – 01.11.1931    

தீபாவளியும் காங்கிரசும்

தீபாவளியும் காங்கிரசும்

தீபாவளிப் பண்டிகைக்கு இன்னும் சில தினங்களே இருக்கின்றன. நமது நாட்டில் ஏற்பட்டிருக்கும் பணநெருக்கடியின் மூலம் மிகச் செல்வந்தர் என்று கருதப்படுகிறவர்களில் பலர் அன்றாடம் செலவிற்கு வகையின்றி திண்டாடுகிறார்கள். ஏழைக்குடியானவர்களும், தொழிலாளிகளும் தானிய விலை குறைந்ததின் காரணத்தாலும் வேலையில்லாத் திண்டாட்டத்தின் காரணத்தாலும் ஏக்கமுற்றிருக்கின்றனர். இந்த நிலையில் மதத்தின் பெயரால் அனுஷ்டிக்கப்படும் பழைய பழக்கவழக்கங்களில் நமது மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் குருட்டுப் பற்றுதலால் தீபாவளியின் போது ஏராளமான பொருள் நமது நாட்டில் வீண் விரையமாக்கப்படுகிறது. அப்படிப்பட்ட வீண் செலவுகளில் பட்டாசு முதலிய வெடிகள் சுடுதல், பலகார தின்பண்டங்களை அளவுக்கு மிஞ்சி சாப்பிடுதல், புது வஸ்திரங்கள் வாங்குவதில் தன் நிலைமைக்கு அதிகமாகச் செலவு செய்தல் முதலியன முக்கியமாகும். இவற்றில் வெடிகள் சுடுவதின் மூலம் நமது நாட்டுப் பொருள் சீனா முதலிய அந்நிய நாடுகளுக்கு அனுப்பப்பட்டு அவ்வந்நிய நாடுகளில் நமது நாட்டிலுள்ள மூட ஜனங்கள் தேவைக்கு வெடி கள் செய்வதென்று மனித நன்மைக்கு உபயோகமில்லாத ஒரு தொழில் வளர்க்கப்பட்டு...

புரட்டு!  சுத்தப் புரட்டு!

புரட்டு!  சுத்தப் புரட்டு!

நமது செல்வத்தை அன்னிய நாட்டார் கொள்ளையடிப்பதாகச் சொல்லுவது சுத்தப் புரட்டு. நமது செல்வத்தை கொள்ளையடித்து நம்மைப் பட்டினிப்போட்டு வதைப்பவர்கள் நமது கடவுள்களும், நமது பார்ப்பனர்களும், நமது முதலாளி, ஜமீன்தாரர், மிராசுதாரர், வட்டிக் கடைக்காரர் ஆகியவர்களுமே யாவார்கள். அந்நிய நாட்டார் கொள்ளையடிக்கும் செல்வமெல்லாம் நம் முடையதல்ல. நம்மை கொள்ளை அடித்து பட்டினிபோடும் பாதகர்களாகிய மேற்கண்ட முதலாளி, ஜமீன்தாரன், மிராசுதாரன், வட்டிக் கடைக்காரன் முதலியவர்கள் செல்வமேயாகும். ஆகையால் அதைப்பற்றி நாம் கவலைப்பட வேண்டியதில்லை. மேலே சொல்லப்பட்ட இந்தக் கூட்டங்களை ஒழித்தால்தான் நமது செல்வம் நமக்குக் கிடைக்கும். அப்போது நாம் வயிறார உண்ணலாம். கஷ்டப்படும் நாடுகளுக்குத் தருமமும் செய்யலாம். இப்படிக்கு 100 க்கு 90 மக்களாகிய தொழிலாளிகள், வேலையாளர்கள், கூலியாட்கள், பண்ணையாள்கள்.   குடி அரசு – பெட்டிச்செய்தி – 25.10.0931

இரண்டில் லொன்று வேண்டும்  – சித்திரபுத்திரன்

இரண்டில் லொன்று வேண்டும் – சித்திரபுத்திரன்

  ஏதாவது ஒரு காரிய சித்திக்கு இரண்டிலொரு சக்தி வேண்டும். அவையாவன. “கை” பலம் (பலாத்காரம்) “புத்தி” பலம் (சூக்ஷி அல்லது தந்திரம்) மொகலாயர் கை பலத்தில் ஆண்டார்கள். வெள்ளையர் புத்தி பலத்தில் ஆண்டார்கள். இந்திய பொது மக்களுக்கு இரண்டும் இல்லை, எப்போதும் இருந்த தில்லை. ஆதியில் ஆங்காங்குள்ள கொள்ளைக் கூட்டத்தலைவர்கள் அவ்வப்போது சில்லரை சில்லரையாய் ஆண்டிருப்பார்கள். ஆனால், ஆரியர்களுடைய சூக்ஷியானது மக்களைப் பிரித்து வைத்து புத்தியும், பலமும் இல்லாமல் செய்து தாங்கள் மாத்திரம் எந்தக் காலத்திலும், எப்போதும் ஆதிக்கம் செலுத்தி தாங்கள் மாத்திரம் மேன்மை யாய் வாழும்படி செய்து கொண்டார்களே ஒழிய இந்தியாவுக்கோ, அல்லது இந்தியப் பொதுமக்களுக்கோ எவ்வித பயனும் ஏற்படவில்லை. திரு.காந்திக்கு பலமும் இல்லை, புத்தியும் இல்லை. ஆனால் ஆரி யரின் கையாளாய் இருப்பதால், ஆரியர்கள் தங்களது சூக்ஷியை திரு.காந்தி மூலமாய் வெளியாக்குவதன் மூலமும், அவற்றிற்கு விளம்பரம் கொடுப்பதன் மூலமும் ஏதாவது வெற்றி கிடைத்தால் அது ஆரியருக்கு மாத்திரம்...

தீண்டாதாருக்கு விமோசனம்  முகமதியரைத் தழுவுவதை விட வேறு கதியில்லை  – எவனெழுதினாலென்ன

தீண்டாதாருக்கு விமோசனம் முகமதியரைத் தழுவுவதை விட வேறு கதியில்லை – எவனெழுதினாலென்ன

  தீண்டாதார் நிலை சகோதரர்களே ! தீண்டாதார் என்பதாக ஒதுக்கித் தள்ளிவைத் திருக்கும் நம்முடைய சமூகத்தின் எண்ணிக்கை இந்தியாவில் சுமார் 7 கோடி மக்கள் இருக்கின்றோம். நாம் தெருவில் நடந்தாலும், மற்றவர்கள் கண்ணில் நாம் தென்பட்டாலும், நமது நிழல் மற்ற மனிதர்கள் மேல் பட்டாலும் தீட்டு ஒட்டிக்கொள்ளுமென்றும், தோஷமென்றும், உடனே குளித்தாக வேண்டு மென்றும், சிலர் குளிப்பதுகூட போதாதென்று ஏதாவது ‘பிராயச்சித்தம்’ செய்து கொள்ளவேண்டும் என்றும் சொல்லுகின்றார்கள். இவை தவிர, நமக்கு குடிக்கத் தண்ணீர் வேண்டுமானால் நாமாகப் போய் மொண்டு கொள்ளும்படியானதொரு பொதுக்குளமோ, குட்டையோ, ஏரியோ, கிணரோ கிடையாது. நாம் எந்தக் குளத்தை யாவது, கிணற்றை யாவது தொட்டுவிட்டால் அவற்றை மந்திரங்கள் சொல்லி புண்ணியார்ச் சனை செய்து தண்ணீரையும், மாட்டு மூத்திரத்தையும் தெளித்து சுத்தம் செய்தாகவேண்டும். நாம் குடி இருக்கவேண்டிய இடமோ ஊருக்கு ஒரு மைல், அரை மைல் தூரத்தில் குடிசைகள் கட்டிக்கொண்டு அங்குதான் வாழ வேண்டும். அங்கும்கூட ஓட்டு வில்லை...

ஆதி திராவிடர்களுக்கு இந்துக்களின் துரோகம்

ஆதி திராவிடர்களுக்கு இந்துக்களின் துரோகம்

உயர்திரு காந்தி அவர்கள் “ஆதிதிராவிடர்கள் கேட்கும் உரிமையை என் உயிர் போகும் அளவும் எதிர்த்தே தீருவேன்” என்று சொன்னதில் இருந்தும், “ஆதிதிராவிட தலைவர்கள் என்று சொல்லிக் கொண்டு லண்டனுக்கு வந்திருப்பவர்கள் ஆதிதிராவிடர்களின் தலைவர்கள் அல்ல” என்று சொன்னதில் இருந்தும், “ஆதிதிராவிட தலைவர்கள் வெட்கப்பட்டு (அவமானப்பட்டு) ஓடும் படியாக நான் செய்யப்போகும் காரியத்திற்கு நீங்கள் உதவி புரிய வேண்டும்” என்று இந்திய மாணவர்களைக் கேட்டுக் கொண்டதிலிருந்தும், “ஆதி திராவிடருக்கு நான் தான் (காங்கிரசுதான்) பிரதிநிதியே யொழிய வேறு யாரும் இருப்பதை நான் ஒப்புக்கொள்ள மாட்டேன்” என்றும், மற்றும் ஆதிதிராவிட  தலைவர்களை அவமானமாகப் பேசியதில் இருந்தும், ஆதிதிராவிட மக்களுக்கு திரு.காந்தியின் மீது அதிருப்தி ஏற்பட இடமுண்டாய் விட்டது. இந்த சங்கதி தெரிந்த இந்திய காங்கிரசுகாரர்கள் என்பவர்கள் பலர் ஆங்காங்குள்ள சில ஆதி திராவிட கூலிகளைப் பிடித்து, கூலி கொடுத்து கூட்டி வைத்து, ஆதிதிராவிட தலைவர்களை ஏளனமாகப் பேசும்படி செய் தும், அவர்களிடம் தங்களுக்கு நம்பிக்கை...

 தீர்மானம்

 தீர்மானம்

பார்ப்பனர்களும், சுயநலக்காரர்களும், வயிற்றுப்பிழைப்புக்காரர் களும் காங்கிரஸ் மறியல் பகிஷ்காரம் என்ற வார்த்தைகளால் பாமரமக்களை ஏமாற்றி தேசத்தைப் பழைய அதாவது பார்ப்பன ஆதிக்க காலத்திற்கும், சோம்பேரிகள், பணக்காரர்கள் ஆதிக்கத்திற்கும் கொண்டு போகப் பார்க் கின்ற படியால் அவ்விதம் நடைபெறாதபடி பார்த்துக்கொள்ள வேண்டு மென்றும், ஆங்காங்குள்ள சுயமரியாதைக்காரர்கள் கவனித்துக்கொள்ள வேண்டு மென்றும் இம்மகாநாடு கேட்டுக்கொள்ளுகிறது. வட்டமேஜை மாநாடு முறிந்தால் கவலைப்பட வேண்டியதில்லை வட்டமேஜை மகாநாட்டின் முதல் சப்கமிட்டி கூட்டமானது முறிந்து முடிவு பெற்று விட்டது. எப்படி எனில் “இந்தியர்களாகிய நாம் நமக்குள் இருக்கும் வகுப்பு வித்தியாசங்களுக்கு பரிகாரம் செய்து கொள்ள நமக்குள் ளாகவே ஒரு பைசலுக்கு வரமுடியவில்லை” என்கின்றதான முடிவுக்கு வந்து விட்டது.                  எவ்விஷயத்தில் நமக்குள்ளாக நாம் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை என்கின்ற முடிவுக்கு வரப்பட்டது என்றால், நமக்கு அடுத்தாற்போல் பிரிட்டிஷாரால் வழங்கப்படப்போகும் சுதந்திரத்தையோ, அல்லது அவர்களிடம் இருந்து “கை பலத்தால்” தட்டிப் பிடுங்கிக் கொள்ளப் போகும் சுயேச்சையையோ நமக்குள் நாம்...

நாகை முதலாவது                                சுயமரியாதை மகாநாடு

நாகை முதலாவது                                சுயமரியாதை மகாநாடு

தலைவர் அவர்களே! நண்பர்களே!! *இத்தீர்மானத்தை எதிர்த்துப் பேசியவர்களால் தான் இத்தீர்மானத்திற்கு பெருத்த ஆதரவளிக்கப் பட்டதாக கருதுகின்றேன். திரு.சிவஞானம் எதிர்த்ததால் தான் அத் தீர்மானத்தை உங்களுக்கு விளக்க எனக்கு ஒரு சந்தர்ப்பம் ஏற்பட்டது. இல்லாவிட்டால் ஒரு சமயம் ஒருவர் இருவராவது தாக்ஷண்ணியத்திற்காக கைதூக்கவேண்டியிருக்கும். ஆதலால் நான் சொல்வதை நன்றாய் கவனித்து உங்கள் இஷ்டத்தை தெரிவியுங்கள். தீர்மானத்தை எதிர்ப்பவர்கள் மீது கோபிப்பது கோழைத்தனமாகும். தீர்மானத்தில் உண்மையும், வீரமும் இல்லை என்று கருத வேண்டியதாகும். தவிர எதிர்ப்பவர்கள் அநேகர் உண்மையாகவே அவர்களுக்கு விளங்காமல் எதிர்த்தாலும் எதிர்க்கலாம். அவர்களுக்கு விளங்கவைக்க வேண்டியது நமது கடமை. அதனால் மற்றவர்களுக்கும் விளங்கும். அன்றி யும் அவ்விளக்கம் மற்றவர்களுக்கு பிரசாரம் செய்யவும் உதவும். நண்பர்களே! கள்ளுக்கடை மறியலானது குடி நிறுத்துவற்காக செய்யப்படுவதில்லை என்பது எனது அனுபவ ஞானமான முடிவு. நான் தென்னாட்டில் மறியலை நடத்தி இருக்கின்றேன். என் மனைவி யையும், சகோதரியையும், என் பந்து சிநேகிதர்களின் தாயார், மகள் முதலிய வர்களையும்...

வகுப்புவாரி பிரதிநிதித்துவம்

வகுப்புவாரி பிரதிநிதித்துவம்

இன்றையதினம் ‘இந்தியா தேசத்தில் இந்திய மக்களுக்குள் இருந்துவரும் ஜாதி மத பேதங்களுக்குத் தகுந்தபடியான பிரதிநிதித்துவம் ஏற்படக்கூடாது’ என்பதே தான் இந்திய காங்கிரஸ் கொள்கையாகவும், தீவிர தேசீயமாகவும் இருந்து வருகின்றது. அன்றியும் இந்தப்படி சொல்லுகின்ற வர்கள் தான் தேசீயவாதிகளாகக் கூடும். நம்மைப்பொறுத்தவரையிலும், ‘ஜாதி மத வகுப்புப்படி மக்களுக்கு பிரதிநிதித்துவம் அளிக்கப்பட வேண் டும்’ என்று சொல்லுவதாலேயே தீவிர தேசீயவாதிகள் லிஸ்டில் நமது பெயர் பதியப்படாமல், வகுப்புவாதிகள் தேசத்துரோகிகள் லிஸ்டிலும் நமது பெயர் பதியப்பட்டுவிட்டது. ஆனபோதிலும் ஜாதி, மதம், வகுப்பு ஆகியவை களை அடியோடு அழிக்கவேண்டும் என்று சொல்லுகின்ற ‘ஜாதிமதத் துரோக’ லிஸ்டிலும் நமது பெயர் மாத்திரமேதான் இருக்கின்றதே யொழிய மற்றபடியான ‘தீவிர தேசீயவாதிகள்’ பெயரெல்லாம் ஜாதிமத வகுப்பைக் காப்பாற்றும் லிஸ்டிலேயே தான் பதியப்பட்டிக்கின்றன. இதில் இருந்து பகுத் தறிவுள்ள மக்கள் ஜாதிமத வகுப்புவாதிகள் யார்? என்பதை ஒருவாறு உணர்ந்து கொள்ளலாம். ஆனாலும் சொந்த அறிவே சிறிதும் இல்லாத பாமரமக்கள் நம்மை குறைகூறாமல் இருக்கமாட்டார்கள்....

நாகையில் பொதுக் கூட்டம்

நாகையில் பொதுக் கூட்டம்

தலைவரவர்களே! சகோதரர்களே!!  சகோதரிகளே!!! தலைவர் அவர்கள் சும்மா இருந்த உங்களை தூண்டிவிட்டு கேள்விகள் கேட்கும்படி செய்துவிட்டார். நான் வம்பு சண்டைக்கு வரவில்லை. வலியவந்தால் நான் எப்படி ஓட முடியும்? உங்கள் சந்தேகத்தையெல்லாம் தீர்க்கக் கூடிய தீரனல்ல நான். எனக்கு தோன்றியதை, நான் சரியென்று கருதியதை சொல்லுகின்றேன். உங்களுக்கு சரி என்று பட்டதை ஒப்புக்கொள்ளுங்கள். மற்றதைத் தள்ளி விடுங்கள். அவ்வளவு தான் சொல்ல முடியும். என்னை ஒரு மகாத்மா என்றோ, மனித தன்மைக்கு மீறிய சக்தி உடையவனென்றோ கருதி ஒன்றையும் கேட்டுவிடாதீர்கள். சாதாரணமான மனிதன் என்று கருதி நான் சொன்னவற்றில் உங்களுக்கு விளங்காதது ஏதாவது இருந்தால் கேளுங்கள். எனக்கு தோன்றியதை சொல்லுகிறேன். சரி தப்பு என்று கூட என்னிடம் சொல்லாதீர்கள். உங்களுக்குத் தோன்றியபடி நினைத்துக் கொள்ளுங்கள். திருந்துங்கள். எனக்கு ஆட்சேபனை இல்லை, நான் பேசு பவற்றில் தப்பிதங்கள் இருக்கலாம் என்பதில் ஆட்சேபனை இல்லை. ஆனால் நான் சரி என்று நினைத்ததைச் சொல்ல எனக்கு...

பெண்களுக்குச் சொத்துரிமை

பெண்களுக்குச் சொத்துரிமை

மைசூர் அரசாங்கத்தில் பெண்களுக்குச் சொத்துரிமை அளிக்கச் சட்டம் 1931-´அக்டோபர் மாதம் 22 தேதி நடைபெற விருக்கும் சட்டசபையில் இந்து லா என்னும் இந்துக்கள் சட்ட சம்பந்தமான விஷயங் கள் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும். கடந்த 2 சட்டசபைகளில் மேற்படி விஷயங்கள் சம்பந்தமான பொதுக் கொள்கைகள் யாவும் ஒப்புக்கொள்ளப்பட்டாய் விட்டன. அதின் மீது ஏற்பாடு செய்திருக்கும் திட்டங்கள் வரப்போகும் சட்டசபையின் விவாதத்திற்குக் கொண்டு வரப் படும். அவையாவன :- பெண்களுக்குத் தாங்கள் பெண்களாகப் பிறந்த காரணத்தாலோ, அல்லது அவர்களுக்குச் சொத்துரிமை உண்டு என்பதற்கு மதசம்பந்தமான ஆதாரங்கள் இல்லை என்கின்ற காரணத்தாலோ அவர்களது வாரிசு சொத்துரிமை மறுக்கப்படக்கூடாது. ஒரு பாகம் பிரியாத குடும்பத்தில் உள்ள ஒருவர், தான் சுயார்ஜிதமாக சம்பாதித்து வைத்திருக்கும் சொத்திலும் பெண் சந்ததிகளுக்கு உரிமை உண்டு. ஒவ்வொரு விதவைக்கும் தானாகவே தத்து எடுத்துக்கொள்ள உரிமையுண்டு. புருஷன் கண்டிப்பாய் தத்து எடுத்துக் கொள்ளக் கூடாது என்று ஏற்பாடு செய்திருந்தால் விதவைக்குத் தத்து எடுத்துக்...

அரசாங்கமும் தேசீயமும்

அரசாங்கமும் தேசீயமும்

“வேகின்ற வீட்டில் பிடுங்கினது லாபம்”  என்பதாக ஒரு பழமொழி யுண்டு. அது போலவே இன்று பிரிட்டிஷ் அரசாங்கமும், இந்திய தேசீயமும் நடைபெற்று வருகின்றன. ஏனென்று கேட்பதற்கு ஆளில்லை. இரு கூட்ட மும் சேர்ந்து பாடுபட்டுழைக்கும் மக்களின் இரத்தத்தை உறிஞ்சும் சூட்சியை அறியத்தக்க புத்தி இந்திய மக்களுக்கு இல்லை. ஆனால் சீர்திருத்தத்தைப் பற்றியும், சுதந்திரத்தைப்பற்றியும், சுயராஜ்யத்தைப் பற்றியும் பேச்சுக்களுக்கும் கிளர்ச்சிகளுக்கும் மாத்திரம் குறைவில்லை. பொருளாதாரத் துறையைப்பற்றி நீலிக்கண்ணீர் விடுவதிலும், சுதேசி பிரசாரம் செய்வதிலும் மதுபானத்தைப் பற்றி மிக்கக் கவலைப்பட்டவர்கள் போல் நடித்து காங்கிரஸ் ஒரு புறம் பகிஷ்காரமும், மறியலும் அரசாங்கம் ஒரு புறம் பிரசாரமும் செய்வதாக செய்யும் ஆர்ப்பாட்டங்களிலும் குறை வில்லை. அதே சமயத்தில் “பொருளாதார நெருக்கடியை சரிப்படுத்த” சர்க்காரார் புதிய புதிய வரி போடுவதிலும் காங்கிரஸ் மக்களுக்கு அதிக செலவை உண்டுபண்ண கதர்த்தொழிலை விர்த்தி செய்வதிலும் குறை வில்லை.    இந்த இரண்டு காரியங்களிலும் தேசத்தில் பொருளாதாரக் கஷ்ட மும், அடிமைத்தன்மையும், அறியாமையும்...

சமதர்ம  அறிக்கை

சமதர்ம  அறிக்கை

முகவுரை தற்காலம் உலகில் ரஷியாவிலும், ஸ்பெயினிலும், மற்றும் சைனா முதலிய இடங்களிலும் சமதர்மம், பொதுவுடைமை தர்மம் ஆகியவை களின் பேரால் அரசாக்ஷிகளும் கிளர்ச்சிகளும் நடைபெற்று வருவது யாவரும் அறிந்த ஒரு  உண்மையாகும். இவ்வுணர்ச்சியானது ரஷியாவில் தான் முதல் முதல் தோன்றியதாக நமது மக்களில் அனேகர் கருதிக் கொண்டிருக்கின்றார்கள். சமதர்ம உணர்ச்சி சம்பந்தமான சரித்திரத்தைக் கவனித்து ஆராய்ந்து பார்ப்பவர் களுக்கு இக்கருத்து சரியானதல்ல என்பதாகத் தோன்றும். ஏனெனில், உலகில் சமதர்ம உணர்ச்சி என்பதானது பல நூற்றாண்டுகளுக்கு முன்பே தோன்றியிருப்பதற்கு அத்தாட்சிகளிருக் கின்றன. சமதர்ம உணர்ச்சி ஒரு எண்ணமாய் ஏற்பட்டு அதன் தத்துவங் களைப்பற்றியும், கொள்கைகளைப்பற்றியும் வெளியில் எடுத்து மக்களுக்குத் தெரியும்படியாக மகாநாடுகள் மூலமும் அறிக்கை மூலமும் வெளிப்பட்டிருப்பதாக நமக்கு விளங்கும்படியாய் காணப்படும் காலமே இன்றைக்கு சுமார் 80, 90 வருஷங்களுக்கு முன்பு என்று தெரிகின்றது.  அதாவது 1847 ம் வருஷத்திலேயே லண்டன் மாநகரத்தில் உலகத்திலுள்ள சமதர்மவாதிகளுடைய மகாநாடு (காங்கிரஸ்) ஒன்று நடந்திருப்பதாகவும், அதன்...

10000       லக்ஷம் ரூபாய் இனாம் !

10000 லக்ஷம் ரூபாய் இனாம் !

புதிய மாதிரி ராட்டின இயந்திரப் பரிசுக்கு              அக்டோபர் 31² வரை வாய்தா இப்போது இருந்துவரும் நூல் நூற்கும் ராட்டினமானது நூற்கும் விஷயத்தில் அதிக நேரமும் கொஞ்ச உற்பத்தியும் ஆவதின் மூலம் நூற்பவர்களுக்கு பிரயாசை அதிகமாகவும் கூலி குறைவாகவும் கிடைத்து வருவதை உத்தேசித்து புது மாதிரியான, அதாவது கொஞ்ச நேரத்தில் கொஞ்சப் பிரயாசையில் அதிக நூலும் அதிக கூலியும் கிடைக்கும்படியான அபிவிர்த்தியுள்ள ஒரு புது மாதிரியான ராட்டின எந்திரத்தைக் கண்டு பிடித்து குறிப்பிட்ட காலத்துக்குள் கொடுப்பவர்களுக்கு ஒரு லட்ச ரூபாய் (100000 ரூ) இனாம் கொடுப்பதாக உயர்திரு காந்தியவர்கள் கொஞ்ச நாளைக்கு முன்பு வெளிப்படுத்தியிருந்தார். இது வரையில் அம் மாதிரியான ஒரு அபிவிர்த்தி இயந்திரம் யாராலும் கண்டுபிடிக்கப்படாததால் அப் பரிசுக்கு இன்னமும் சிறிது காலம் வாய்தா அதிகமாகக் கொடுக்கப்பட்டிருப் பதாய் ஆமதாபாத் குஜ்ராத் வித்தியா பீடத்தார் தெரிவிக்கிறதாக தினசரிப் பத்திரிகைகளில் காணப்படுகின்றது. அதாவது, “100000 ரூ. பரிசுக்காக புதிய ராட்டின யந்திரம் கண்டுபிடிப்பவர்கள்...

சாரதா சட்டத்திற்கு அழிவா?                 வைதீகர்கள் கூக்குரல்  காந்தியின் குட்டித் தலைவர்கள் இதற்கென்ன பரிகாரஞ் செய்கிறார்கள்?

சாரதா சட்டத்திற்கு அழிவா?                 வைதீகர்கள் கூக்குரல் காந்தியின் குட்டித் தலைவர்கள் இதற்கென்ன பரிகாரஞ் செய்கிறார்கள்?

  இந்திய நாட்டின்கண் வாழும் மக்களே! “வைதீகம்” செய்யும் கொடுமைகளை பிறந்த நாள் முதல் இறக்கும் வரை கண்கூடாகக் காணும் மானிடர்களே! நம்மை ஆதிக்கத்தில் ஆழ்த்தி வைத்திருக்கும் கொடுமை களை கண்ணுற்றும், போதாக்குறைக்குப் பிராமணர்கட்குத் தாசராய் அடிமை கொண்டு சுற்றித்திரியும் தலைவர்களே! காந்தியின் குட்டித்தலைவர் கள் என்று சொல்லி, ஊர் ஊராய் பிரசங்கம் செய்யும் ராஜகோபாலாச் சாரியின் அடிச்சுவட்டை பின்பற்றும் தலைவர்களே! அடியேன் கீழே கொடுக்கும் உறையை நன்றாய் கவனித்து சுயமரியாதைக்காரர்கள் சொல்வது உண்மையா-பொய்யா என்று ஆராய்ந்து அதன்பின் வசைப் புராணம் தொடங்குவதை ஆரம்பியுங்கள். கூலிக்கு உண்மையையும், மானத்தையும் விற்கும் பேர்வழிகளைக் கொண்டு, பத்திரிகை நிரப்ப வேண்டி, வியாசம் எழுதும் சாம்பராணிகளே! கவனியுங்கள்! மந்தப் புத்தியை அகற்றி சொந்தப் புத்தியை கொண்டு பார்த்தால் அடியேன் சொல்லுவது உண்மை என்பது நன்கு புலப்படும்; இனி நாம் எடுத்துக் கொண்ட விஷயத்தை ஆராய்வோம். தென்னிந்திய நாட்டிலே தஞ்சை, திருச்சினாபள்ளி ஜில்லாக்களின் இந்திய சட்டசபை அங்கத்தினரான...

புதுக்கோட்டை

புதுக்கோட்டை

இச்சென்னை மாகணத்திலிருக்கும் 2 1/2 கோடி மக்கள் உள்ள தமிழ் நாட்டில் புதுக்கோட்டை சமஸ்தானம் ஒன்றுதான் தமிழ்மன்னர் ஆட்சியில் இருந்து வருகிறது என்று சொல்லக்கூடியதாகும். ஆனாலும் அதுவும் வெகுகாலமாகவே பார்ப்பன ஆதிக்க ஆட் சிக்கே அடிமையாயிருந்து வந்திருக்கின்றது என்பதை யாரும் மறுக்க முன் வரமாட்டார்கள். ஆட்சி முறை மாத்திரம் தான் பார்ப்பன ஆதிக்கத் திலிருந்த தென்று சொல்லிவிட முடியாது. அச்சமஸ்தான பட்டத்திற்கு வரும் அரசர்கள் வாரிசிலும் அரசு செலுத்தும் முறையிலும் பார்ப்பன ஆதிக்கம் புகுந்து அச்சமஸ்தானம் பார்ப்பனர்கள் இஷ்டப்படி ஆட்டு விக்கப்பட்டதாய் இருந்து வந்திருக்கின்றது. புதுக்கோட்டை ராஜியபார பட்டத்திற்கு வரவேண்டியவர் அரசரின் குமாரர் என்பது அச்சமஸ்தானத்தின் சட்டமாயிருந்தாலும் பார்ப்ப னீயத்தின் காரணமாகவே வருணாச்சிரமக் கொள்கை தாண்டவமாடி அரச குமாரருக்கு பட்டமில்லாமல் வேறு ஒருவருக்குப் பட்டம் ஏற்பட்டது. அந்தப்படி வேறு ஒருவருக்கு ஏற்பட்ட பட்டமும் ஒரு சிறு குழந்தைக்கு ஏற்பட்டதால் அக் குழந்தை பெரியதாகி பட்டம் ஏற்க இனியும் 10 வருஷ காலத்திற்கு...

கேள்வி  மூன்று கன்றுக்குட்டிகள்

கேள்வி மூன்று கன்றுக்குட்டிகள்

  மூன்று பசுவின் கன்றுக்குட்டிகள் ஒன்றாய் ஒரு காட்டில் மேய்ந்து கொண்டிருந்தன. அவற்றில் குடியானவர் வீட்டுக்கன்றுக்குட்டி:- “நண்பர்களே வீட்டுக்கு போகலாம், பால் கரக்கும் நேரமாய் விட்டதால் நாம் போய் பால் குடிக்கலாம்” என்றது. செட்டியார் வீட்டு கன்றுக்குட்டியானது “பால் கரக்கின்ற நேர மானால்தான் என்ன முழுகிப் போய்விட்டது? வயிரார பால் கிடைக்கவா போகின்றது?” என்றது. மூன்றாவதான அய்யர் வீட்டுக்கன்றுக்குட்டியானது “நீங்கள் என் னமோ பேசிக்கொள்ளுகின்றீர்களே? எனக்கு ஒன்றுமே விளங்க வில்லையே” என்றது. ஒவ்வொன்றும் இந்தப்படி பேசியதின் கருத்து என்ன? பதில் குடியானவன், கன்றுக்குட்டிக்கு வயிராரப் பால் கொடுப்பது வழக்கம். செட்டியார், கன்றை அவிழ்த்து விட்டு முலைக்காம்பில் வாய்வைத்து முட்டி கொஞ்சம் பால் குடித்தவுடனேயே கன்றுக்குட்டியை பிடித்துக்கட்டி விடுவது வழக்கம். அய்யரோ, கன்றுக்குட்டியை மாட்டுக்கு எதிரில் காட்டுவதைத்தவிர பக்கத்தில் கட்டி இருக்கக்கூட சம்மதிக்காமல் பால் கரந்து கொள்ளுவார். ஆதலால் அவை தன் தன் அனுபவங்களையே பேசின. குடி அரசு – விளக்கக்குறிப்பு –...

சுயமரியாதை இயக்கமும்                   இராமாநந்த சட்டர்ஜீயும்

சுயமரியாதை இயக்கமும்                   இராமாநந்த சட்டர்ஜீயும்

சமீபத்தில் விருதுநகரில் நடந்த 3-வது சுயமரியாதை மகாநாட்டுத் தீர்மானங்களில் மதங்களைப் பற்றிச் செய்யப்பட்ட தீர்மானத்தைப்பற்றி அதாவது, “மதத்தின் பேரால் அனுஷ்டிக்கப்படும் பழக்கங்களும் பயிற்சி களும் சமூக சீர்திருத்தத்திற்கு தடையாயிருந்து வருவதால், மதங்கள் ஒழியவேண்டும் என்றும் மதங்கள் ஒழியாமல் சகோதரத்துவம் ஏற்படா தென்றும் மதச்சண்டை ஒழியவேண்டுமானால் மக்களுக்குள் மதத்தைப் பற்றிய உணர்ச்சி ஏற்படுவதை நிராகரிக்க வேண்டுமென்றும்” செய்யப்பட்ட தீர்மானத்தின் மீது வங்காளத்தில் வெகுகாலமாய் நடைபெற்று வரும் “மாடர்ன் ரிவ்யூ” என்னும் பிரபல பத்திரிகையின் ஆசிரியராகிய உயர்திரு இராமானந்த சட்டர்ஜீ அவர்கள் மேற்படி பத்திரிகையில் சில ஆnக்ஷ பணைக் குறிப்புகள் எழுதியிருக்கிறார். அதன் சாராம்சமாவது:- “மக்களுக்குள் எப்பிரிவினராயினும் சுயமரியாதையைப் பெற விரும்புவறேல் அதற்கு ஒவ்வொருவரும் ஆதரவளிக்க வேண்டியது அவசியமாகும். ஆனால் சுயமரியாதைக்காரர்களின் தீர்மான விஷயத்தில் நாம் பின்வருமாறு நினைப்பது தவராயிருந்தால் திருத்தவேண்டுமாய் கோறுகிறோம். தென்னிந்திய சுயமரியாதை இயக்கத்தார் சொல்லும் எல்லாக் கொள்கைகளிலும் நியாயமிருக்கின்றதென்று நம்மால் ஒப்புக்கொள்ள முடியவில்லை. விருதுநகர் மகாநாட்டின் தலைவர் திரு. ஆர்.கே.ஷண்முகம்...

கடலூரில் திருவாளர் ஈ.வெ.இராமசாமி

கடலூரில் திருவாளர் ஈ.வெ.இராமசாமி

சகோதரர்களே! சகோதரிகளே!! மணமக்களே!!! புதிய முறையான திருமணம் இப்பகுதிக்கு இது புதியது. பூசைமேடு கோவிந்தசாமிதிருமணம் முன் நடைபெற்றது. அதன்பின் இன்று இங்குவந்திருக்கிறோம். தலைவர் முனிசிபல் கவுன்சிலர் புதிய முறையில் திருமணம் நடைபெறுமென்று கூறியபடி சுயமரியாதை திருமணம் என்றால் என்ன? நான் இங்கு வந்ததும் உறவினர், தோழர் முதலியவர்களின் அதிர்ப்தி ஏற்பட்டதாகக் கேள்விப் பட்டேன். அதன் காரணம் பகுத்தறிவில்லாமையே. மதம், புராணம், பழக்கம், வழக்கம், மோக்ஷம், நரகம் கற்பிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அதிர்ப்தியும், பயமும், நடுக்கமும் தான் தோன்றும். நன்கு யோசித்து திரு.பெருமாள் அவர்கள் போல் துணிவுடன் செய்தால்தான் வரும்கால உலகிற்கு பயன் தரும். இதுபோன்ற திருமணங்கள் பலவிடங்களில் நடந்துகொண்டு வருகிறது. சிலவிடங்களில் விளம்பரத்திற்காக சிறிது ஆர்பாட்டத்துடன் சுயமரியாதை இயக்கத்து திருமணம் நடைபெறுகின்றது. நான் கூறுவது சிலருக்கு வியப்பாகத் தோன்றினாலும் தோன்றலாம். உங்கள் அறிவுப்படி கொள்ளவும் தள்ளவும் உரிமை உங்கட்கு உண்டு. பழமை, புதுமை என்ற பாகுபாடின்றி பகுத்தறிந்து முடிவுப்படி செய்யுங்கள். திரு மணம்...

கடலூரில் சுயமரியாதைக் கூட்டம்

கடலூரில் சுயமரியாதைக் கூட்டம்

தலைவரவர்களே! சகோதரிகளே!! சகோதரர்களே!!! சுயமரியாதை இயக்கம் என்பதைப் பற்றி பேசவேண்டுமென்பதாக நண்பர் பெருமாள் அவர்களால் இக்கூட்டம் கூட்டப்பட்டிருக்கின்றது. நாங்கள் திரு.பெருமாளின் குமாரத்தியின் திருமணத்திற்கு என்று அழைக்கப்பட்டு இங்கு வந்தோம். இந்தச் சந்தர்ப்பத்தில் இந்த ஊரில் ஒரு பொது கூட்டத்தில் பேசவேண்டுமென்றஆசை அநேக நண்பர்களுக்கு இருந்ததால் நானும் இந்த சந்தர்ப்பத்தை வீணாக்காமல் சிறிது பேசலா மென்றே கருதுகின்றேன். சுயமரியாதை இயக்கத்தின் தீவிரமான கொள்கைகளை யெல்லாம் இப்போது உங்களுக்கு எடுத்துச் சொல்வது என்பது சற்று கஷ்டமானதா யிருக்குமென்றே கருதுகின்றேன். ஏனென்றால் இதற்குமுன் இங்கு இந்தப் பிரசாரம் நடத்தப்பட்டதாக எனக்குத் தெரியவில்லை. அதன் தீவிரக் கொள்கைகளை நீங்கள் முதல் முதலாக கேட்கும்போது அது உங்களைத் திடுக்கிடச் செய்யும். அவற்றின் உண்மையை அறிவது என்பது இன்றே சுலபத்தில் புலப்படக்கூடியதாகாது. ஆதலால் உங்களுக்கு சிறிது நிதானமான முறையில் தான் பேச வேண்டிய வனாயிருக்கிறேன். அதாவது இந்த நான்கு, ஐந்து வருஷங்களுக்கு முன் கிராம ஜனங்களின் முன் நான் எந்த...

காசில்லாமல் நடத்தலாம்                          – சித்திரபுத்திரன்

காசில்லாமல் நடத்தலாம்                         – சித்திரபுத்திரன்

  ஐயா! உங்கள் கலியாணத்திற்கு மந்திரம் வேண்டுமா? பார்ப்பான் வேண்டுமா? மந்திரம் பிரதானமானால் மந்திரத்தை ஒரு கிராமபோன் ரிகார்ட்டில் பிடித்து வைத்துக் கொண்டால் தாலி கட்டுகின்றபோது கிராம போன் வைத்து தாலிகட்டி விடலாம். பார்ப்பான் வேண்டுமானால் ஏதாவது ஒரு பார்ப்பானை பொட்டகிராப் பிடித்து அதை மணவரையில் வைத்து தாலிகட்டி விடலாம். இரண்டும் வேண்டுமானால் இரண்டையும் வைத்து தாலி கட்டி விடலாம். வாத்தியம் வேண்டுமானாலும் கிராமபோனிலேயே மதுரை பொன்னுச்சாமி வாத்தியம் வைக்கலாம். ஒன்றும்  வேண்டாம், பெண்டாட்டியும் புருஷனும் ஆனால் போதும் என்றால் விரலில் மோதி ரத்தை மாட்டி கழுத்தில் மாலை போட்டு கையைபிடித்து அழைத்துக் கொண்டு போகலாம். குடி அரசு – சிறு குறிப்பு – 20.09.1931

கர்ப்ப ஆக்ஷி முறை                                              ஓர் சந்தேகம்

கர்ப்ப ஆக்ஷி முறை                                              ஓர் சந்தேகம்

நமது நண்பர் ஒருவர் கருப்பத்தடையின் அவசியத்தைத் தான் ஒப்புக் கொண்ட போதிலும் அனுஷ்டிக்கப்படவேண்டிய முறையைப் பற்றி அடியிற்கண்டவாறு ஆnக்ஷபிக்கிறார்:- அதாவது, “கர்ப்ப உற்பத்திக்கு ஹேதுக்கள் சுக்கிலம் சுரோணிதம் என்று கூறப்படுவனவேயாகும். கலவி காலத்தில் ஆடவனிடமிருந்து சுக்கிலமும், ஸ்தீரியினிடமிருந்து சுரோணிதமும் வெளியாகிறது. கர்ப்ப உற்பத்திக்கு சுக்கில ஸ்கலிதம் தான் அவசியமானதேயொழிய சுரோணித ஸ்கலிதம் அவசியமல்ல. உதாரணமாக ஒரு ஸ்தீரி பத்துக் குழந்தைகள் பெற்றிருக் கலாம். அவளுக்கு சுரோணிதமே ஸ்கலிதமாகாமலிருக்கலாம். அதாவது புருஷ இச்சையே பூர்த்தியடையாமலிருக்கலாம். ஸ்கலிதமான சுக்கிலம், கருப்பையின் வாயிலை நோக்கி நழுவிப் போகும்போது, நிதம்பத்தின் வரைகளில் தங்கியிருக்கும் சுரோணிதக் கிருமிகள், சுக்கிலத்திலுள்ள ஆண் சினைகளிடம் ஸ்வீகரித்துக் கொண்டு கருப்பையில் பிரவேசிக்கிறது. உடனே கருப்பை வாய் மூடிக்கொள்ளுகிறது. அதிலிருந்து மாதவிடாய் நின்று கர்ப்ப உற்பத்தி உண்டாகிறது. இதுகாறும் கூறியவற்றிலிருந்து சுக்கில சுரோணித கிருமிகள் கருப்பையில் பிரவேசித் தால்தான் கர்ப்பம் ஏற்படும் என்பது புலனாகிறது. கிருமிகளை கருப்பையில் புகவிடாமல் செய்தாலும், அல்லது அவற்றை சக்தியிழந்து...

சி.இராஜகோபாலாச்சாரியாரின்                       ஜாதிப் பிரசாரம் 0

சி.இராஜகோபாலாச்சாரியாரின்                       ஜாதிப் பிரசாரம்

உயர்திரு சி.இராஜகோபாலாச்சாரியார் அவர்கள் செம்டம்பர் 10- தேதி “இந்து” பத்திரிகையில் ஜாதிக்கட்டுப்பாட்டின் மூலம் மதுவிலக்கு செய்வதை சட்டமாக்க வேண்டும் என்பதற்கு சமாதானம் எழுதும் முறை யில், ஒவ்வொரு ஜாதிக்கும், கிளை ஜாதிகளுக்கும் தம் தம் ஜாதியினரை ஜாதிப் பஞ்சாயத்து மூலம் அடக்கியாளுவதை ஆதரித்து எழுதியிருக் கிறார். உண்பது, பருகுவது மற்றும் நடை உடை பாவனைகள் முதலிய விஷயங்களில் ஒவ்வொரு ஜாதியாரும் அந்த ஜாதியில் பிறந்த மக்களை கட்டாயப் படுத்த உரிமையுண்டு என்று கூறுகிறார். ஜாதிக்கட்டுப் பாட்டை மீறுகிறவர்களை ஜாதிப்பிரஷ்டம் மூலமும், வேலையிலிருந்து நீக்குவதன் மூலமும் தண்டிப்பது நியாயமென்றும் வற்புறுத்துகிறார். மேற்கண்ட கூற்றை ஊன்றி கவனிக்கும்படி வாசகர்களைக் கேட்டுக் கொள்ளுகிறோம். “காங் கிரஸ் வருணாச்சிரமத்தை வளர்க்க ஏற்பட்டிருக்கும் ஒரு ஸ்தாபன”மென்று நாம் கூறிவருவதை மறுக்கும் அன்பர்கள் திரு. இராஜகோபாலாச்சாரியார் கூற்றில் பதிந்திருக்கும் கொள்கையை அலசிப் பார்க்கவேண்டும். காங்கிரஸ் ஸ்தாபனத்தில் தேசீயமும், மதுவிலக்கும் வெறும் போர்வைகளென்றும், வருணாசிரம பாதுகாப்பே காங்கிரசின் ஆணித்தரமான நோக்கமென்பதும் இப்பொழுதாவது...

ஒரு பெண்ணுக்கு பல புருஷர்கள் 0

ஒரு பெண்ணுக்கு பல புருஷர்கள்

இந்தியாவில் ஒரு புருஷனுக்கு பல பெண்ஜாதிகள் இருந்து வருவது சாதாரணமாகவும், அவ்வழக்கம் சமூகத்தில் ஒப்புக்கொள்ளப்பட்டதாகவும், மதத்துடனும் மதச்சம்பந்தமான கடவுள்கள், மதாச்சாரியார் முதலியவர்களுக் குள்ளும் இருந்து வருவதாகவும் ஒப்புக்கொள்ளப்பட்டு வருகின்றது. ஆனால் ஒருவித சீர்திருத்தக்காரர்கள் என்பவர்கள் மாத்திரம், அதுவும் வெள்ளைக்கார தேசத்தை, அவர்களது நாகரீகத்தைப் பின்பற்றிய வர்கள் என்கின்ற முறையில் சிலர் ஒரு புருஷனுக்கு ஒன்றுக்கு மேல்பட்ட பெண்கள் கூடாது என்று சொல்லுவார்கள். அதற்குக் காரணம் சொல்லவும் தெரியாது. இரண்டு பெண்டாட்டிகள் கட்டின மதாச்சாரியாரை வணங்கு வார்கள். இரண்டு பெண்டாட்டிகள் கட்டின சாமியையும் கும்பிடுவார்கள். அதற்கு, கோயில்கட்டி, இரண்டு பெண்டாட்டிகளை வைத்து கும்பாபி ஷேகம் செய்து, பூசை உற்சவமும் செய்வார்கள். தாங்களும் பல பெண் களிடம் சாவகாசமும் செய்திருப்பார்கள். தங்கள் காதலிகளாக பயன் படுத்தியும் வருவார்கள். ஆனால் வாயில் மாத்திரம் இரண்டு பெண்டாட்டி களைக் கட்டிக்கொள்வது சீர்திருத்தத்திற்கு கொள்கைக்கு விரோதம் என்பார்கள். ஆகவே இக் கூட்டத்தார் சீர்திருத்தம் என்பதற்கு அருத்தம் தெரியாதவர்களும், அதில்...

இந்தியாவின் பொருள் நஷ்டத்திற்கு காரணம் 0

இந்தியாவின் பொருள் நஷ்டத்திற்கு காரணம்

இந்திய நாடு எவ்விதமான வளத்திலும் மற்ற நாடுகளை விட இளைத்ததல்ல என்பதும், இந்தியாவில் இராஜாக்கள் ஜமீன்தாரர்கள் முதலிய செல்வவான்களும், மற்றும் அவர்களுக்குச் சமானமான மடாதிபதிகள், ஆச்சாரிய பீடங்கள், கோடீஸ்வரர்கள் ஆகியவர்களும் ஆன பிரபுக்கள் மற்ற நாடுகளுக்கு இளைக்காத அளவில் தாராளமாய் இருந்து வருகின் றார்கள் என்பதும் யாவரும் அறிந்த உண்மையாகும். அதுபோலவே வியா பாரிகளும், வியாபாரப் பொருள்களும் கூட மற்ற நாடுகளைப் போலவேதான் இங்கு இருந்து வருகின்றன. விவசாயத்துறையிலும் ஏராளமான பூமிகள் இருப்பதும், அவற்றிற்கு அனுகூலமான இயற்கை நீர் பாசான வசதிகள் இருப்பதும், ஒவ்வொரு மிராசுதாரர்கள் 1000 ஏக்ரா, பதினாயிரம் ஏக்கரா, சிலர் லக்ஷம் ஏக்ரா -பூமிகளையும் உடையவர்களாக இருப்பதும், விவசாயம் செய்யப்பட வேண்டிய பூமிகள் இன்னும் எவ்வளவோ இருப்பதுமான நாடாகவும் இருப்பதின் மூலம் விவசாயத்துறையிலும் இந்தியா மற்ற நாடுகளுக்கு இளைக்காததாகவே இருந்து வருகின்றது. இப்படிப்பட்ட பல்வளமும் பொருந்திய இந்திய நாடு ஏன் தரித்திர மான நாடு என்றும், அடிமையான நாடு...

ஆ.ஹ.,டு.கூ. உபாத்தியாரின் கடவுள் பாடம் 0

ஆ.ஹ.,டு.கூ. உபாத்தியாரின் கடவுள் பாடம்

உபாத்தியாயர்:- பெட்டியை தச்சன் செய்தான், வீட்டை கொத்தன் கட்டினான், சாப்பாட்டை  சமையற்காரன் சமைத்தான், உலகத்தைக் கடவுள் உண்டாக்கினார். தெரியுமா? மாணாக்கன்: – தெரிந்தது சார். ஆனால், ஒரு சந்தேகம் சார். உபாத்தியாயர்: – என்ன சொல்? மாணாக்கன்:- அப்படியானால், கடவுளை யார் உண்டாக்கினார் சார்? உபாத்தியாயர்:- முட்டாள்! இந்தக் கேள்வியை உனக்கு யார் சொல்லிக் கொடுத்தது? அவர்  தானாகவே உண்டானார். இனிமேல் இப்படி யெல்லாம் கேட்காதே. மாணாக்கன்:- ஏன் சார்? கேட்டால் என்ன சார்? உபாத்தியாயர்:- அது! நிரம்பவும் பாவம். மாணாக்கன்:- பாவம் என்றால் என்ன சார்? உபாத்தியாயர்:- சீ! வாயை மூடு. நீ அயோக்கியன், “குடிஅரசு” படிக்கிறாயோ? ஏறு பெஞ்சி  மேல். குடி அரசு – உரையாடல் – 13.09.1931