‘சுதந்திர வீரன்’
சுதந்திர வீரன் என்னும் பத்திரிகையின் முதல் மலர், முதல் இதழ் வரப்பெற்றோம். அதன் தலையங்கத்தில் கடவுள், காந்தி, காங்கிரஸ், புராதான நாகரீகம், தேசீயம் ஆகியவைகளைப் புகழ்ந்தும், எழுதியிருக்கின் றதுடன் இதையே தமது கொள்கையாகவும் கொண்டிருப்பதாகவும் அறியக் கிடக் கின்றது. ஆதலால் இதன் கொள்கை ‘காந்தீயம்’ என்பதாகவே தெரிய வரு கின்றது. இப்பத்திரிகைக்கு உயர்திரு. எஸ். சத்தியமூர்த்தி ஐயரால் அனுப்பப் பட்டிருப்பதாய்க் காணப்படும் ஒரு வாழ்த்துச் செய்தியில் “இந்தியா சுய ராஜியம் இழந்து அன்னியர் கையில் சிக்கிப் படும் கஷ்டத்தில் ஒரு பாகத்தை அனுபவிப்பதுடன் தமிழ் நாட்டார் தங்கள் சுயமரியாதையையும் இழந்து கஷ்டப்படுகின்றார்கள்.”
“ஆகவே சுதந்திர வீரன் சுயராஜியத்திற்குப் போராடுவதுடன் தமிழ் நாட்டார் இழந்ததை (சுயமரியாதையை) அடைய உதவுமென்று நம்பு கின்றேன்” என்பதாக எழுதி இருக்கின்றார். ஆகவே இதை லட்சியம் செய்து நடக்கும் முறையில் முயன்று நின்று வெற்றிபெற விரும்புகின்றோம்.
ஆசிரியர் திரு.ஜெ.பி.ராட்ரிக்ஸ்
“சுதந்திர வீரன்” ஆபீஸ்,
பெரிரா வீதி,
தூத்துக்குடி
குடி அரசு – மதிப்புரை – 17.05.1931