Tagged: கருத்தரங்கம்

நீட் தேர்வுச்சதியும், மோடி அரசின் கல்விக் கொள்ளையும் – கருத்தரங்கம் மதுரை 01092017

நாளை (01.09.2017) மதுரையில், “கருத்தங்கம்” ‘நீட் தேர்வுச்சதியும், மோடி அரசின் கல்விக் கொள்ளையும்’ ‘பறிபோகும் சமூக நீதி’ எனும் தலைப்பில் கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் கருத்துரையாற்றுகிறார். மேலும் பல்வேறு தலைப்புகளில் தோழமை அமைப்புகளின் தலைவர்கள் கருத்துரையாற்றுகிறார்கள். நாள் : 01.09.2017 வெள்ளிக்கிழமை. நேரம் : மாலை 5 மணி இடம் : இராமசுப்பு அரங்கம், மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் எதிரில், மதுரை. நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு : தமிழ்நாடு மாணவர் இயக்கம், தமிழ்நாடு மாணவர் கழகம்.

இந்தியா – இலங்கை ஒப்பந்தத்தின் 30-ஆம் ஆண்டு… தோற்றது ஒப்பந்தமா ? இந்திய பாதுகாப்பா? கருத்தரங்கம் சென்னை 29072017

இந்தியா – இலங்கை ஒப்பந்தத்தின் 30-ஆம் ஆண்டு… தோற்றது ஒப்பந்தமா ? இந்திய பாதுகாப்பா? #கருத்தரங்கம்…. நாள் : இன்று (29.07.2017)மாலை 5 மணிக்கு இடம் : கவிக்கோ அரங்கம், மயிலாப்பூர், சென்னை -04 #கருத்தாளர்கள் : தோழர்.பண்ருட்டி.இராமச்சந்திரன் தோழர்.கொளத்தூர் மணி தோழர்.ஆழி.செந்தில்நாதன் தோழர்.செந்தில் தோழர்.ஜவாஹிருல்லா தோழர்.தியாகு தோழர்.T.S.S.மணி வாருங்கள் தோழர்களே.! ஈழத் தமிழர்களின் உரிமைக்கு குரல் கொடுப்போம்.! திராவிடர் விடுதலைக் கழகம்- சென்னை மாவட்டம் தொடர்புக்கு : 7299230363

“ஜாதி ஒழிப்புப் போராளி” புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்தநாள் கருத்தரங்கம் சென்னை 23042017

“ஜாதி ஒழிப்புப் போராளி” டாக்டர்.B.R.அம்பேத்கர் பிறந்தநாள் கருத்தரங்கம் சென்னை பெரம்பூர் சடையப்ப தாஸ் தெருவில் அமைந்துள்ள தாய் ராம்பாய் பவன் 23042017 அன்று மாலை 5 மணிக்கு நடந்தது.   இந்நிகழ்வில் கருத்துரை  தோழர் விடுதலை இராசேந்திரன் அவர்கள் அம்பேத்கரை திசை திருப்பும் சதி என்ற தலைப்பிலும், எழுத்தாளர் வே.மதிமாறன் அவர்கள் அம்பேத்கரின் ஜாதி ஒழிப்பு தத்துவம் பற்றியும் மிக தெளிவாக தங்கள் கருத்துக்களை வழங்கினர் அம்பேத்கரின் அறிய வேண்டிய சிந்தனைகள் ஆழமான புரிதலோடு அனைவரும் அறிந்து சென்றார்கள்.

ஜாதி ஒழிப்பு போராளி அம்பேத்கர் பிறந்தநாள் கருத்தரங்கம் பெரம்பூர் 23042017

“ஜாதி ஒழிப்புப் போராளி” டாக்டர்.B.R.அம்பேத்கர் பிறந்தநாள் கருத்தரங்கம்… கருத்துரை : தோழர்.விடுதலை இராசேந்திரன் பொதுச் செயலாளர், திவிக ‘அம்பேத்கரை திசை திருப்பும் சதி’ எழுத்தாளர். வே.மதிமாறன் ‘அம்பேத்கரின் ஜாதி ஒழிப்பு தத்துவம்’ நாள் : 23.04.2017 ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணியளவில் இடம் : தாய் ராம்பாய் பவன், 37, சடையப்ப தாஸ் தெரு, பெரம்பூர் பெரம்பூர் மேம்பாலம் அருகில். அம்பேத்கரின் அறிய வேண்டிய சிந்தனைகள்…… ஆழமான புரிதலுக்கு அனைவரையும் அழைக்கிறோம்……. திராவிடர் விடுதலைக் கழகம்- சென்னை மாவட்டம் தொடர்புக்கு : 7299230363

இதுவே கழகத்தின் நிலைப்பாடு “இனி தோழமையை முடிவு செய்ய வேண்டியது இஸ்லாமிய அமைப்புகள்தான்!”

பெரியார் இயக்கத்துடனான தோழமையை முடிவு செய்ய வேண்டியது, இஸ்லாமியர் அமைப்புகள்தான் – இதுவே கழகத்தின் நிலைப்பாடு என்று சென்னையில் பாரூக் படத்திறப்பு நிகழ்வில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி அறிவித்தார். இஸ்லாமிய மத அடிப்படைவாதிகளால் இறை மறுப்பாளராக இருந்த ஒரே காரணத்துக்காக படுகொலை செய்யப்பட்ட திராவிடர் விடுதலைக் கழகத் தோழர் மனித நேயப் போராளி பாரூக் படுகொலைக்கு கண்டனக் கூட்டம் கருத்தரங்கமாக சென்னையில் மார்ச் 26 மாலை இராயப்பேட்டை இலாயிட்ஸ் சாலையில் உள்ள விஜய் திருமண மண்டபத்தில் கழக சார்பில் நிகழ்ந்தது. ‘பாரூக் படுகொலையும் நமது நிலையும்’ என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கிற்கு மாவட்ட செயலாளர் உமாபதி தலைமை தாங்கினார். தலைமைக் குழு உறுப்பினர் கு. அன்பு தனசேகரன், ‘சேவ் தமிழ்’ செந்தில், திருமுருகன் காந்தி (மே 17) வழக்கறிஞர் திருமூர்த்தி, இஸ்லாமியராக பிறந்தாலும், இஸ்லாமிய மதக் கருத்தியலை மறுக்கும் தோழர்கள் நடத்தும் நாத்திகர் பண்பாட்டுக் கழகம் சார்பில் அலாவுதின் ஆகியோர்...

‘சங்கர் நினைவு நாள்’ கருத்தரங்கம் உடுமலைப்பேட்டை 13032017

13032017 அன்று மாலை உடுமலைப்பேட்டையில் ‘சங்கர் நினைவு நாள்’ கருத்தரங்கம் . கழகத்தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் “ஜாதி ஒழிப்புச் சமூகத்திற்காக அண்ணல் அம்பேத்கர் பெரியார் செய்ததும்-  நாம் செய்ய வேண்டியதும்” எனும் தலைப்பில் கருத்துரையாற்றினார். நாள் : 13.03.2017 திங்கட் கிழமை. நேரம் : மாலை 4.00 மணி இடம்: பாலாஜி திருமண மண்டபம், கல்பனா திரையரங்கு பின்புறம், உடுமலைப்பேட்டை. ஜாதி ஆணவப் படுகொலைகளுக்கு எதிராக அணி திரள்வோம் வாரீர்! நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு : பெரியார் அம்பேத்கர் மார்க்ஸ் வாசகர் வட்டம் . திருப்பூர் மாவட்டம்.

நீதி கட்சி நூற்றாண்டு நிறைவுவிழா கருத்தரங்கம் சென்னை 03012017

சென்னை தெற்கு மாவட்ட தி.மு.க சார்பில் நீதி கட்சி நூற்றாண்டு நிறைவுவிழாவில் மாபெரும் கருத்தரங்கம் திரு மா சுப்பிரமணியன் MLA அவர்கள் தலைமையில் 03012017 மாலை 5.00 மணிக்கு சென்னை நீலாங்கரை சுகன்யா திருமண மண்டபத்தில் நடைபெற்றது இக்கருத்தரங்கில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி அவர்கள் சமஸ்கிருத திணிப்பு என்னும் தலைப்பிலும், சுப.வீ அவர்கள் நீட் தேர்வு என்ற தலைப்பிலும், கோவை இராமகிருஷ்ணன் அவர்கள் பண்பாட்டு படையெடுப்பு என்ற தலைப்பிலும் நீண்டதொரு கருத்துரை வழங்கினார்கள்

எண்ணூரில் மதவாத எதிர்ப்பு கருத்தரங்கம்

சென்னை மாவட்டம் எண்ணூர் கத்திவாக்கத்தில் அமைந்துள்ள சிந்தனை சிற்பி சிங்காரவேலர் படிப்பகம் சார்பாக 20.11.2016 அன்று மாலை “மதவாதம் – கல்வி வியாபாரக் கொள்கைக்கு எதிராக பொது வெளி கருத்தரங்கம்” அரிகரன் தலைமையில் சிறப்புடன் நடை பெற்றது. இந்த நிகழ்ச்சியில் திராவிடர் விடுதலைக் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் “ஆட்சியில் இந்துத்துவம்: விளைவுகள் – சவால்கள்” என்ற தலைப்பில் ஒன்றரை மணி நேரம் உரையாற்றினார்.  இந்துத்துவம் இந்து என்று சொல்லப்படுகிறவர்களுக்கு எப்படியெல்லாம் கல்வி தர மறுக்கிறது என்பதை வரலாற்று ஆதாரங்களுடன் முன் வைத்தது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.  கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, புதிய கல்விக் கொள்கையின் பேராபத்துகள் குறித்து விரிவாகப் பேசினார். தோழர் பகத்சிங் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். இந்நிகழ்வில் வழக்கறிஞர் திருமூர்த்தி மற்றும் சென்னை மாவட்டத் தோழர்கள் கலந்துக் கொண்டனர். செய்தி: செந்தில்FDL பெரியார் முழக்கம் 24112016 இதழ்

“கொலைக் களமாகும் சிறைக்கூடம் ” -கருத்தரங்கம் திருப்பூர் 16102016

“கொலைக் களமாகும் சிறைக்கூடம் ” -கருத்தரங்கம். 16.10.16 ஞாயிறு மாலை 5 மணிக்கு திருப்பூர்,பல்லடம் சாலை, DRG CLASSIC ஹோட்டலில் “கொலைக் களமாகும் சிறைக்கூடம் ” எனும் தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் கழக தலைவர் கலந்து கொண்டு திருப்பூர் குணா அவர்கள் எழுதியுள்ள “தமிழகம் தன் இசுலாமியப் பிள்ளைகளின் விடுதலையைப் பேசட்டும்” நூலை வெளியிட்டு கருத்துரை வழங்கினார். இந்நிகழ்வில் “கோவை கலவரத்தில் எனது சாட்சியம்” நூல் அறிமுகம் நடைபெற்றது.இந்நூலை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஏ.வி.அப்துல்நாசர் அவர்கள் எழுதியுள்ளார்,இந்நூலை தோழர் பழனி சஹான் அவர்கள் தொகுத்துள்ளார். மேலும் இந்நிகழ்வில் அறிவியல் மன்ற அமைப்பாளர் சிவகாமி, பதியம் பாரதிவாசன்,எழுத்தாளர் திருப்பூர் குணா,வழக்கறிஞர் உமர்கயான் (தமிழக மக்கள ஜனநாயக கட்சி),அருண் (திருவள்ளுவர் பேரவை,முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஏ.வி.அப்துல்நாசர் , தோழர் பழனி சஹான்,ஷேக் பரீத்,வழக்கறிஞர் ராமராஜ்,தங்கராஜ் பாண்டியர், செல்வாபாண்டியர் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு : தமிழக மக்கள் சனநாயகக் கட்சி, தமிழர் நடுவம்,...

மாட்டிறைச்சி – எனது உரிமை; எனது உரிமை – கருத்தரங்கம் மதுரை 25092016

மதுரையில் தமிழ்ப்புலிகள் அமைப்பின் ஒருங்கிணைப்பில் “மாட்டிறைச்சி – எனது உரிமை – எனது உரிமை “ என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. முதலில் நிகழ்ச்சி நடத்த திட்டமிருந்த பள்ளி மைதானத்துக்குக் கடைசி நேரத்தில் அனுமதி மறுக்கப் பட்டதால், மக்கள் கண்காணிப்பகம் அலுவலகத்தில் அந்நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்வில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, தமிழ்ப்புலிகள் கட்சித் தலைவர் நாகை திருவள்ளுவன், தீண்டாமை ஒழிப்பு முன்னணித் தலைவ்ர் சாமுவேல்ராஜ், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் ஷேக் மொய்தீன் மற்றும் தமிழ்ப்புலிகள் அமைப்பின் பொறுப்பாளர்கள் உரையாற்றினர்.

தமிழ் ஈழத்திற்கு புதிய அரசியல் சட்டம் தயாராகிறது

நாடு கடந்த தமிழீழ அரசு தோழமை மய்யத்தின் சார்பில் ‘ஈழம் தொடரும் துயரமும்; நமது கடமையும்’ எனும் தலைப்பில் கருத்தரங்கம் கடந்த செப்.25 மாலை 6 மணியளவில் சென்னை கவிக்கோ மன்றத்தில் சிறப்புடன் நடந்தது. நாடு கடந்த தமிழீழ அரசு குறித்தும் அதில் இடம் பெற்றுள்ள தமிழக உறுப்பினர்கள் தமிழினியன், முகேஷ் தங்கவேலு ஆகியோரை அறிமுகம் செய்தும் பேராசிரியர் சரசுவதி அறிமுக உரையாற்றினார். விடுதலை இராசேந்திரன், தியாகு, அருட் தந்தை குழந்தைசாமி, பேராசிரியர் அபுல்பாசல், பேராசிரியர் மணிவண்ணன் ஆகியோர் உரையாற்ற, நிறைவாக பண்ருட்டி இராமச்சந்திரன் பேசினார். அருட்தந்தை குழந்தைசாமி ஒரு மாத காலம் தமிழர் பகுதி முழுதும் நேரில் சென்று பார்வையிட்டு திரும்பியுள்ளார். அவர் மக்களின் துயரங்களை சிங்கள ஆக்கிரமிப்பு களை பகிர்ந்து கொண்டார். நாடு கடந்த தமிழீழ அரசு சார்பில், தமிழ் ஈழத்துக்கான புதிய அரசியலமைப்பு, சர்வதேச சட்ட நிபுணர்களைக் கொண்டு உருவாக்கப்பட்டு வருகிறது என்ற தகவலைதோழர் தியாகு அறிவித்தார். நிறை வுரையாற்றிய முன்னாள் அமைச்சர்...

மாட்டிறைச்சி எனது உணவு, எனது உரிமை – கருத்தரங்கம் மதுரை 25092016

தமிழ்புலிகள் கட்சி நடத்தும் கருத்தரங்கம் பகல் 1.30 மணிக்கு தோழர் கொளத்தூர் மணி அவர்களின் பார்ப்பனீயத்தின் உணவு கோட்பாடு – தலைப்பில் கருத்துரை

கருத்தரங்கம்: ஈழம்… தொடரும் துயரமும்; நமது கடமையும்!

நாள் 25-09-2016 ஞாயிறு மாலை 5 மணி இடம்: கவிக்கோ மன்றம், சிஐடி காலனி, மயிலாப்பூர், சென்னை. தலைமை: பேராசிரியர் சரசுவதி, கருத்தாளர்கள்: பேராசிரியர் மணிவண்ணன், அருட்தந்தை குழந்தைசாமி, விடுதலை இராசேந்திரன், தியாகு. சிறப்புரை: மூத்த தலைவர் பண்ருட்டி இராமச்சந்திரன். நன்றியுரை: த.தமிழினியன் நிகழ்ச்சித்தொகுப்பு: முகேஷ் தங்கவேல் நிகழ்ச்சி ஏற்பாடு: நாடு கடந்த தமிழீழ அரசு தோழமை மையம் தொடர்புக்கு: +91 9444145803, +91 9751524004 தமிழீழ ஆதரவாளர்கள் அனைவரும் உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்துடன் இந்நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்

மத்தியரசின் புதிய கல்விகொள்கையை எதிர்த்து கருத்தரங்கம் ப.வேலூர் 14082016

கல்வி மேம்பாட்டு கூட்டமைப்பு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட மத்திய பேரரசுவின் புதிய கல்விக்கொள்கையை எதிர்த்து கருத்தரங்கம். நடுவண் அரசே, மாநில உரிமையை பறிக்காதே என்ற முழக்கத்தோடு கல்வியை மாநில பட்டியலில் சேர்க்க வலியுறுத்தி 14082016 அன்று மாலை 5 மணிக்கு நகர வர்த்தகர் சங்கம், ப.வேலூரில் நடைபெற்றது சிறப்பு அழைப்பாளராக பேராசிரியர் திரு நாகநாதன், மேலான் திட்டக்குழு துணைத்தலைவர் மற்றும் கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி, தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம் தோழர் முகிலன் கலந்து கொண்டனர்.  

ஆணவ படுகொலைகளை தடுத்திட தமிழக அரசு தனி சட்டம் இயற்றவேண்டும்” தலைவர் கொளத்தூர் மணி பேச்சு மன்னார்குடி அம்பேத்கர் பிறந்த நாள் 18042016

”ஆணவ படுகொலைகளை தடுத்திட தமிழக அரசு தனி சட்டம் இயற்றவேண்டும்” அம்பேத்கர் 125வது பிறந்த நாள் விழாவில்’கழக தலைவர் கொளத்தூர் மணி பேச்சு மன்னார்குடி ஏப். 20. தமிழகத்தில் ஜாதியின் பெயரால் நடைபெறுகின்ற ஆணவ படுகொலைகளை தடுத்து நிறுத்திட தமிழக அரசு உடனடியாக தனி சட்டத்தை இயற்ற வேண்டுமென அம்பேத்கர் 125வது பிறந்த நாள் விழா கருத்தரங்கில் திராவிடர் விடுதலைக்கழக தலைவர் கொளத்தூர்மணி பேசினார். புரட்சியாளர் அம்பேத்கர் 125வது பிறந்த நாளை முன்னிட்டு திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் மன்னார்குடி சிட்டி ஹாலில் கருத்தரங்கம் திருவாரூர் மாவட்ட செயலாளர் காளிதாசு தலைமையில் நடைபெற்றது. அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்ட செயலாளர் சேரன்குளம் செந்தில்குமார் வரவேற்றார். திராவிடர் விடுதலைக்கழக நாகை மாவட்ட செயலாளர் மகேசு, மாவட்ட அமைப்பாளர் அன்பசரன், மாவட்ட பொருளாளர் விஜயராகவன், புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் பூபதி கார்த்திகேயன், தஞ்சை மாவட்ட செயலாளர் சித.திருவேங்கடம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துவக்கத்தில் தலைவர்களின்...

தமிழக உரிமை மீட்பு கருத்தரங்கம் சென்னை 16042016

நாள் : 16.04.2016 சனிக்கிழமை.மாலை 4 மணி. இடம் : இக்சா அரங்கம்,எழும்பூர் சென்னை. பல்வேறு தலைப்புகளில் தோழமை இயக்கங்களின் தலைவர்கள் கலந்து கொண்டு கருத்துரையாற்றும் இக்கருத்தரங்கில் ”உயர்கல்வி பல்கலைக் கழகங்கள் மீது காவிமயம்” எனும் தலைப்பில் கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் கருத்துரையாற்றுகிறார். நிகழ்சி ஒருங்கிணைப்பு : தமிழ்நாடு மக்கள் கட்சி.

புரட்சியாளர் அம்பேத்கர் 125வது பிறந்த நாள் கருத்தரங்கம் மன்னார்குடி 18042016

புரட்சியாளர் அம்பேத்கர் 125வது பிறந்த நாள் கருத்தரங்கம். நாள் : 18.04.2016 திங்கள் மாலை 6 மணிக்கு இடம் : சிட்டி ஹால்,மன்னார்குடி. ”ஜாதி மறுப்பு திருமணங்களும்,ஆணவ படுகொலைகளும்” எனும் தலைப்பில் கழக தலைவர் தோழர் கொளத்தூர்மணி அவர்கள் உரையாற்றுகிறார்.

”ஜாதி ஆணவக் கொலைகளைத் தடுக்க அரசும் சமூகமும் செய்யவேண்டியது என்ன?” – கருத்தரங்கம் திருச்சி

9-4-2016 சனிக்கிழமை மாலை, திருச்சி, புத்தூர் நால்ரோடு, சண்முகம் திருமண மண்டபத்தில், இளந்தமிழகம் இயக்கத்தின் ஒருங்கிணைப்பில், ”ஜாதி ஆணவக் கொலைகளைத் தடுக்க அரசும் சமூகமும் செய்யவேண்டியது என்ன?” என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது. கருத்தரங்கத்தின் தொடக்கத்தில்,விரட்டு கலை பண்பாட்டு மையக் குழுவினரால் பறை முழக்கமும்,வீதி நாடகமும் நிகழ்த்தப்பட்டன. அதனைத் தொடர்ந்து, இளந்தமிழகத் தோழர் ஜாசெம் தலைமையில் கருத்தரங்கம் தொடங்கியது. கருத்தரங்கில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, எவிடென்சு அமைப்பின் இயக்குனர் கதிர், கர்நாடக தலித் சுயமரியாதை இயக்கத்தின் பேராசிரியர் சிவலிங்கம்,கம்யூனியூஸ்ட் கட்சி (மா.லெ) மக்கள் விடுதலை கட்சியின் தலைமைக் குழு உறுப்பினர் செல்வி, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்க துணைப் பொதுச்செயலாளர் நந்தலாலா, இளந்தமிழகம் இயக்கத்தின் தோழர் நாசர் ஆகியோர் உரையாற்றினர். அனைவரும் எராளமான புள்ளிவிவரங்களோடும், அக்கறையோடு சேகரித்துவந்த செய்திகளோடும் மிகச் செறிவாக உரையாற்றியது வந்திருந்தோருக்கு பயனுள்ளதாகவும், தொடர்ந்து செயலாற்றுவதற்கு பெரும் ஊக்கமாகவும் அமைந்தது. நிகழ்வில் திராவிடர் விடுதலைக் கழக்த்...

ஆணவப் படுகொலைகளைத் தடுக்க அரசும் சமூகமும் செய்ய வேண்டியது என்ன? கருத்தரங்கம் திருச்சி 09042016

”ஆணவக் கொலைகளைத் தடுக்க அரசும் சமூகமும் செய்ய வேண்டியது என்ன ?” – இளந்தமிழகம் நடத்தும் கருத்தங்கம். நாள்: ஏப்ரல் 9, சனிக்கிழமை நேரம்: மாலை 5 மணி. இடம்: சண்முகா திருமண மண்டபம், புத்தூர் நாலு ரோடு, திருச்சி. கருத்துரை வழங்குபவர்கள்:- தோழர். கொளத்தூர் மணி தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம் தோழர். எவிடென்ஸ் கதிர் எவிடென்ஸ் அமைப்பு, மதுரை தோழர். சிவலிங்கம் தலைவர், சுயமரியாதை தலித் இயக்கம், கர்நாடகா தோழர். செல்வி தலைமைக்குழு உறுப்பினர், கம்யூனிஸ்ட் கட்சி (மா.லெ.) மக்கள் விடுதலை, தமிழ் நாடு தோழர். நந்தலாலா மாநில துணைத் தலைவர், தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் தோழர். தமிழ் நாசர், செயற்குழு உறுப்புனர், இளந்தமிழகம் இயக்கம்

தந்தை பெரியார் மற்றும் தலைவர் காமராஜர் அவர்களின் நினைவலைகள் -கருத்தரங்கம் மேட்டுப்பாளையம் 20032016

தமிழ்நாடு அறிவியல் மன்றம் சார்பில் ”தந்தை பெரியார் மற்றும் தலைவர் காமராஜர் அவர்களின் நினைவலைகள்” எனும் கருத்தரங்கம் பட்டுக்கோட்டை அழகிரி அவர்கள் பிறந்த நாளான 20.03.2016 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 4.30 மணிக்கு மேட்டுப்பாளையம் அன்னபூர்ணா அரங்கில் நடைபெற்றது. தமிழ்நாடு அறிவியல் மன்ற மாநில அமைப்பாளர் தோழர் ஆசிரியர் சிவகாமி அவர்கள் தலைமை தாங்கினார். திராவிடர் விடுதலைக் கழகத்தின் கோவை புறநகர் மாவட்ட தலைவர் தோழர் பா.இராமச்சந்திரன் அவர்கள் வரவேற்புரையாற்றினார். கழக மாநில பொருளாளர் தோழர் திருப்பூர் துரைசாமி,மாநகர் மாவட்டத் தலைவர் தோழர் நேரு தாசு,மாநகர் மாவட்ட செயலாளர் தோழர் நிர்மல் குமார்,பகுத்தறிவாளர் கழக தோழர் கள்ளக்கரை சுந்தரமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஓவியர் தோழர் தூரிகை சின்னச்சாமி அவர்கள் கைரேகையிலேயே வரைந்த கை’நாட்டுக்காக’ உழைத்த காமராஜர் எனும் ஓவியத்தை கருத்தரங்கில் கழக தலைவர் அவர்களிடம் வழங்கினார். ”கல்வி கற்காத காமராஜரின் கல்விப்புரட்சி” எனும் தலைப்பில் கழக தலைவர் ‘தோழர் கொளத்தூர்...

தந்தை பெரியார் மற்றும் தலைவர் காமராஜர் அவர்களின் நினைவலைகள் கருத்தரங்கம் மேட்டுப்பாளையம் 20032016

தமிழ்நாடு அறிவியல் மன்றம் நடத்தும், ”தந்தை பெரியார் மற்றும் தலைவர் காமராஜர் அவர்களின் நினைவலைகள்” கருத்தரங்கம். பட்டுக்கோட்டை அழகிரி அவர்கள் பிறந்த நாளில், இடம் : அன்னபூர்ணா அரங்கம்,மேட்டுப்பாளையம். நேரம் : மாலை 4.30 மணி. நாள் 20.03.2016 ஞாயிற்றுக்கிழமை. தலைமை : ஆசிரியர் சிவகாமி, தமிழ்நாடு அறிவியல் மன்றம் மாநில அமைப்பாளர். வரவேற்புரை : பா.இராமச்சந்திரன்,புறநகர் மாவட்ட தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம். முன்னிலை : திருப்பூர் துரைசாமி, மாநில பொருளாளர், திராவிடர் விடுதலைக் கழகம். நேரு தாசு,மாநகர் மாவட்டத் தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம். நிர்மல் குமார்,மாநகர் மாவட்ட செயலாளர், திராவிடர் விடுதலைக் கழகம். கள்ளக்கரை சுந்தரமூர்த்தி,பகுத்தறிவாளர் கழகம், கருத்துரை : ”கல்வி கற்காத காமராஜரின் கல்விப்புரட்சி” எனும் தலைப்பில் கழக தலைவர் ‘தோழர் கொளத்தூர் மணி’ அவர்கள். ”தமிழகத்தில் தந்தை பெரியாரின் சமுதாயப்புரட்சி” எனும் தலைப்பில் ‘ரெயின்போ வெங்கட்ராமன்’, மேட்டுப்பாளையம் நுகர்வோர் பாதுகாப்பு இயக்கத் தலைவர். நன்றியுரை...

இந்துத்துவாவும் பெண்களின் உரிமைகளும் – கருத்தரங்கம் ஈரோடு 12032016

இன்று (12.03.2016) ஈரோட்டில், ”உலக மகளிர் நாள் சிறப்புக் கருத்தரங்கம் !” நாள் : 12.03.2016,சனிக்கிழமை,மாலை 5.30 மணி. இடம் : யாளி ரெசிடென்சி அரங்கு,பிரப் சாலை,ஈரோடு. மக்கள் சிவில் உரிமைக் கழகம் நடத்தும் இக்கருத்தரங்கில் தமிழ்நாடு அறிவியல் மன்ற மாநில அமைப்பாளர் ஆசிரியர் தோழர் சிவகாமி அவர்கள் ”இந்துத்துவாவும் பெண்களின் உரிமைகளும்” எனும் தலைப்பிலும் புரட்சி விடியல் பெண்கள் மையத்தின் ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் தோழர் தமயந்தி அவர்கள் ”மதவெறியும் ஜனநாயக உரிமைகளும்” எனும் தலைப்பிலும் சிறப்புரையாற்றுகிறார்கள்.

கல்வி நிறுவனங்களும் ஜாதிப் பாகுபாடும்’ கருத்தரங்கம் மதுரையில் 03022016

3-2-2016 அன்று மாலை 5-00 மணிக்கு, மதுரை, தமிழ்நாடு இறையியல் கல்லூரியின் துரைராஜ் பீட்டர் அரங்கத்தில், எவிடன்ஸ் அமைப்பின் ஒருங்கிணைப்பில், ‘கல்வி நிறுவனங்களும் ஜாதிப் பாகுபாடும்’ என்னும் தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கத்திற்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமை வகித்தார். தோழர் முத்து அனைவரையும் வரவேற்றார். கருத்தரங்கின் நோக்கங்களை விளக்கி எவிடன்ஸ் நிறுவன செயல் இயக்குநர் கதிர் தொடக்கவுரையாற்றினார். அவரைத் தொடர்ந்து எழுத்தாளர் கவின் மலர், சமூக ஆர்வலர் ஜோசுவா ஐசக், பேராசிரியர் செம்மலர் ஆகியோரின் உரையைத் தொடர்ந்து மதுரை மக்கள் கண்காணிப்பகத்தின் செயல் இயக்குநர் வழக்கறிஞர் ஹென்றி டிபேன் சிறப்புரை ஆற்றினார். தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் பொதுச் செயலாளர் சாமுவேல்ராஜ் நிறைவுரை ஆற்றினார். கருத்தரங்கில் ரோகித் வெமுலாவின் மரணம் குறித்தும், மத்திய பா.ஜ.க ஆட்சியின் தலித், சிறுபான்மையோர் விரோத போக்கு குறித்தும், ஏற்கனவே உயர் கல்வி நிறுவனங்களில் நிகழ்ந்த மரணங்களைத் தொடர்ந்து அமைக்கப்பட்ட விசாரணைக் குழுக்களின் பரிந்துரைகளைச்...

கல்வி நிறுவனங்களும் ஜாதியப் பாகுபாடும் – மதுரையில் கருத்தரங்கம்

”கல்வி நிறுவனங்களும்,ஜாதியப் பாகுபாடும்” கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் தலைமையில் கருத்தரங்கம் ! எவிடன்ஸ் அமைப்பின் சார்பில், நாள் : 03.02.2016. மாலை 4.30 மணி. இடம் : துரைராஜ் பீட்டர் ஹால், தமிழ்நாடு இறையியல் கல்லூரி,அரசரடி,மதுரை. தோழர்கள் எவிடன்ஸ் கதிர், ஹென்றி டிபேன், கவின் மலர், செம்மலர் ஆகியோர் உரையாற்றுகிறார்கள் ! சமத்துவம் மலர இணைந்து செயல்படுவோம். அன்புடன் அழைக்கிறோம்.

‘இந்து’ மதப் போர்வைக்குள் பதுங்கிக் கிடக்கும் பார்ப்பன பயங்கரவாதம் முகமூடியைக் கிழித்தது ஈரோடு மாநாடு 

‘இந்து’, ‘இந்துத்துவம்’ என்ற கூச்சல் களுக்குப் பின்னால் பதுங்கிக் கிடப்பது பார்ப்பனர்களும் பார்ப்பனியமும்தான் என்ற உண்மையை வரலாற்றிலிருந்தும் பா.ஜ.க. பரிவாரங்களின் ஆட்சி அதிகார செயல்பாடு களிலிருந்தும் ஏராளமான தகவல்களை முன் வைத்தது, ஈரோட்டில் திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய ‘இந்து’ பார்ப்பன பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு. மாநாட்டில் உரையாற்றிய பலரும் உண்மையான எதிரிகளை அடையாளப் படுத்தும் சரியான மாநாடு என்று பாராட்டினர். வெற்று ஆரவாரங்கள் – தனி நபர் துதிகள் இல்லாமல் தொடக்கம் முதல் இறுதி வரை அறிவார்ந்த கருத்துகளையும் சிந்தனைகளையும் முன் வைத்ததும், மாநாட்டுப் பார்வையாளர்கள் இறுதிவரை செவிமெடுத்ததும் இந்த நாட்டின் சிறப்பாகும். மாநாட்டு நிகழ்ச்சிகள் பற்றிய ஓர் தொகுப்பு: ஈரோடு மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் தந்தை பெரியார் பிறந்த ஈரோட்டு மண்ணில் “இந்து பார்ப்பன-பயங்காரவாத எதிர்ப்பு மாநாடு” நவம்பர் 8 ஞாயிறு பகல் 11 மணியளவில் ஈரோடு பவானி ரோடு கே.கே.எஸ்.கே. திருமண மண்டபத்தில் பார்ப்பன...

தமிழகத்தில் காலூன்றத் துடிக்கும் ஆர்.எஸ்.எஸ் மதவாதத்திற்கு எதிரான கருத்தரங்கம் சென்னை 28112014 விடுதலை இராசேந்திரன் உரை

தமிழகத்தில் காலூன்றத் துடிக்கும் ஆர்.எஸ்.எஸ் மதவாதத்திற்கு எதிரான கருத்தரங்கம் சென்னை 28112014 விடுதலை இராசேந்திரன் உரை