தலித் – சிறுபான்மையினரின் நிலங்கள் மோசடி கும்பல் ஆக்கிரமிப்பைக் கண்டித்து திருப்பூரில் ஆர்ப்பாட்டம்
திருப்பூர் ராயபுரம், அணைமேடு பகுதியில் சுமார் 80 ஆண்டுகளுக்கு மேலாக தலித் மக்கள், சிறுபான்மை மக்கள் மற்றும் சில பிற்படுத்தப்பட்ட மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதியை நிலமோசடி கும்பல் போலி ஆவணங்கள் தயார் செய்து குண்டர்களை வைத்து மிரட்டி அபகரிக்க நினைப்பதை கண்டித்து திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு 14.09.2015 அன்று காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். கழகத் தலைவர் தன் கண்டன உரையின் போது, இந்த இடத்தை 80 ஆண்டுகளுக்கு மேல் வாழ்விடமாக கொண்டு வாழ்ந்து வரும் அம் மக்களை போலி ஆவணங்களை தயார் செய்து நிலமோசடி கும்பல் அபகரிக்க நினைப்பதையும், காவல்துறையும் கூட அதற்கு உடந்தையாக இருப்பதையும் வன்மையாக கண்டிக்கிறோம். மேலும் அந்த இடத்திற்கு உண்மையான உரிமையாளர்கள் யாரேனும் இருந்தால் அவர்களை கண்டுபிடித்து அவர்களிடமிருந்து இந்த நிலத்தை வாங்கி 80 ஆண்டுகளுக்கு மேல் அங்கு வாழும்...
