தமிழக காவிரி விவசாயிகள் சங்க கொடியை கழக தலைவர் அறிமுகம் செய்தார்

IMG_6264

தஞ்சையில் 11.08.2015 திகதி நடைபெற்ற விவசாயிகள் வாழ்வுரிமை மாநாட்டில் பங்கேற்ற திராவிடர் விடுதலை கழகத்தின் தலைவர், தோழர் கொளத்தூர் மணி,தி.மு.கவின் செய்தி தொடர்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான டி.கேஎ.எஸ். இலங்கோவன், காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் எஸ்.திநாவுகரசர்,தமிழ் மாநில காங்கிரசின் சட்டமன்ற உறுப்பினர் என்.ஆர். ரெங்கராஜன், தே.மு.தி.கவின் மயிலாடுதுறை சட்ட மன்ற உறுப்பினர் பால அருட்செல்வன் ஆகியோரும், பல்வேறு விவசாய சங்கங்களின் தலைவர்களும் உரையாற்றினர்.

மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட  தீர்மானங்களை ஆதரித்தும், விளக்கியும் கழகத் தலைவர் கொளத்தூர் மணி  சிறப்புரையாற்றியதைத் தொடர்ந்து, அந்த மாநாட்டின் நெறியாளரும், அந்த இயக்கத்தின் தலைவருமான தோழர் பி.ஆர்.பாண்டியன், அந்த இயக்கத்தின் கொடியினை அறிமுகப்படுத்துகின்ற பொறுப்பினை தலைவர் கொளத்தூர் மணி அவர்களிடம் வழங்கினார்.

அப்போது தோழர் பி.ஆர்.பாண்டியன் ,
” விவசாயிகள் வாழ்வுரிமை மாநாட்டிற்கு எல்லா கட்சிகளுடைய தலைவர்களையும் அழைத்திருந்தேன். அவர்களில் பெரும்பாலோர் வந்திருந்தனர். வர இயலாதவர்கள் தங்களின் பிரதிநிதிகளை அனுப்பி பங்கேற்றனர். அவர்களை எல்லாம் விட்டுவிட்டு எங்கள் கொடியினை தலைவர் அண்ணன் கொளத்தூர் மணி அவர்கள்தான் அறிமுகப்படுத்த வேண்டும் என்று நாங்கள் எண்ணியதற்குக் காரணம். இன்றைக்கு விவசாயிகள் தங்களுடைய வாழ்வாதாரத்திற்கான போராட்டக்களத்தில் நின்று கொண்டிருக்கின்றோம்
போராளிகளாக,

அப்படிப்பட்ட எங்களுடைய இயக்கத்தின் கொடியினை உண்மையான ஒரு போராளியைக் கொண்டு அறிமுகப்படுத்த வேண்டும் என்று நாங்கள் நினைத்தோம், எனவேதான் தகுதியான ஒரு போராளியைக் கொண்டு, எங்கள் விவசாயத் தோழர்கள் எல்லோரின் ஒப்புதலோடு தலைவர் கொளத்தூர் மணி அவர்களைக் கொண்டு எங்கள் இயக்கத்தின் கொடியினை அறிமுகப்படுத்துகின்றோம்” என்று பலத்த கைத்தட்டல்களுக்கிடையே அறிவித்தார்

IMG_6273 IMG_6286 IMG_6291 IMG_6302

You may also like...

Leave a Reply