தொடரும் இனப்படுகொலைக்கு… தமிழீழம் ஒன்றே தீர்வு – இன எழுச்சிக் கருத்தரங்கம்
9-8-2015 ஞாயிறு, மாலை 5-30 மணிக்கு, தமிழீழ விடுதலைக்கான மாணவர்-இளைஞர் கூட்டியக்கத்தின் சார்பாக ” தொடரும் இனப்படுகொலைக்கு …… தமிழீழம் ஒன்றே தீர்வு” எனும் முழக்கத்தை முன்வைத்து, இன எழுச்சிக் கருத்தரங்கம்,சேலம் விஜயராகவாச்சாரி நினைவு அரங்கில் நடைபெற்றது.
தமிழ்நாடு மாணவர் இளைஞர் இயக்கத்தின் தலைவர் ஜெகதீஷ் தலைமை ஏற்றார். தமிழ் இளைஞர் மற்றும் மாணவர் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் வீர.பிரபாகரன் முன்னிலை வகித்தார். நிகழ்வில் பல்வேறு மாணவர் இயக்கங்களின் பிரதிநிதிகள் உரையாற்றினர். சேலம் வழக்கறிஞர் சந்தியூர் பார்த்திபன், கோவை வழக்கறிஞர் ப.சு. சிவசாமித் தமிழன், நோர்வே முனைவர் விஜய் அசோகன், தந்தை பெரியார் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கோவை. கு. இராமகிருட்டிணன், திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
கருத்தரங்கில் ஏராளமான மாணவர்களும், பொதுமக்களும் கலந்துகொண்டனர்.