Category: சேலம் கிழக்கு

எங்கள் தலைமுறைக்கு ஜாதிவேண்டாம் – சேலம் கிழக்கு தொடர் பரப்புரைக் கூட்டங்கள்

சேலம் மாவட்டம் இளம்பிள்ளை பகுதி திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக “எங்கள் தலைமுறைக்கு ஜாதிவேண்டாம் – எங்கள் சந்ததிக்கு வேலை வேண்டும்” தொடர் பரப்புரைக் கூட்டங்கள் மக்கள் ஆதரவோடு சிறப்பாக நடைபெற்று வருகின்றது. முதலில் இரண்டு தெருமுனைக் கூட்டங்கள் மட்டும் நடத்துவதற்காக காவல் நிலையத்தில் அனுமதி கோரப்பட்டது. இதற்கு மகுடஞ்சாவடி காவல் ஆய்வாளர் அனுமதி மறுத்தும், ஒரு மாத காலத்திற்கு எந்த நிகழ்ச்சிகளுக்குமே அனுமதி இல்லை என்றும் கடிதம் கொடுத்தார். (ஆனால் அ.தி.மு.க சார்பாக நடைபெற்ற கூட்டத்திற்கு காவல்துறை பாதுகாப்பு வழங்கியது) மாவட்ட கழக பொறுப்பாளர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளரை சந்தித்து முறையிட்ட பின்னால், நாள் ஒன்றிற்கு ஒரு கூட்டம் வீதம் பத்து நாட்கள் நடத்த திட்டமிடப்பட்டு மீண்டும் காவல் நிலையத்தில் எழுதி கொடுக்கப்பட்டது. முதலில் மனுவை பெற மறுத்த உதவி ஆய்வாளர், உயர் அதிகாரிகளிடம் தொலைபேசியில் பேசிவிட்டு மனுவை பெற்றுக்கொண்டார். பின்னர் கூட்டங்களின் எண்னிக்கையை அல்லது நாட்களை குறைத்து கொள்ள...

0

கழகச் செயல்வீரர்கள் எடுத்த பெரியார் பிறந்த நாள் விழாக்கள்

கழகச் செயல்வீரர்கள் உற்சாகத்துடன் களப்பணியாற்றி வருகிறார்கள். பல்வேறு பகுதிகளில் நடந்த பெரியார் பிறந்த நாள் விழாக்கள் குறித்த செய்தி. சேலம் : தந்தை பெரியாரின் 137ஆவது பிறந்த தினத்தையொட்டி, 17-09-2015 அன்று, சேலம் மாவட்டம் இளம்பிள்ளை பகுதி திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக இருசக்கர வாகனப் பேரணி சிறப்பாக நடைபெற்றது. அன்று காலை 7-30 மணிக்கு இளம்பிள்ளை பேருந்து நிலையம் அருகே வைக்கப்பட்டிருந்த பெரியார் படத்திற்கு மாலை அணிவித்து, தோழர்கள் அனைவரும் தங்களின் வாகனங்களில் கழக கொடியினை கட்டி அலங்கரித்துக் கொண்டு, காடையாம்பட்டி நோக்கி புறப்பட்டனர்; அங்கு விடுதலை சிறுத்தைகள் அமைப்பு சார்பாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சுமார் 8-00 மணியளவில் அப்பகுதியில் பெரியார் படத்திற்கு மாலை அணிவித்து, பிறந்தநாள் கேக் வெட்டி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. தொடர்ந்து வாகனப் பேரணி திருமலைகிரி, சிவதாபுரம் வழியாக 9-00 மணியளவில் சேலம் மாநகரை அடைந்தது. சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள பெரியார்...

ஏற்காடு கிராமப் பகுதியில் கழகப் பரப்புரைக்கு உற்சாக வரவேற்பு 0

ஏற்காடு கிராமப் பகுதியில் கழகப் பரப்புரைக்கு உற்சாக வரவேற்பு

ஏற்காடு ஒன்றிய கழகத்தின் சார்பாக எங்கள் தலைமுறைக்கு சாதி வேண்டாம்; வேலை வேண்டும் என்கின்ற பரப் புரை பயணம், ஏற்காட்டின் கிராமப் பகுதியான செம்மனத்தம் மற்றும் நாகலூரில் நடைபெற்றது. முதல் நிகழ்வு காலை 11 மணிக்கு அப்பகுதியின் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கிளைச் செயலாளர் ராஜா தலைமையில் தொடங்கியது. பிரச்சாரத்தின் நோக்கம் குறித்து மா. தேவதாஸ், பெருமாள் ஆகியோர் விளக்கிப் பேசினர். அந்த கிராமத்திற்கு வியாபாரம் செய்ய வந்திருந்த 60 வயதுடைய முதியவர் ஒருவர் நாம் இதுவரை கேட்டிராத பார்ப்பன எதிர்ப்புப் பாடல் ஒன்றை பாடி அனைவரையும் சிலிர்க்க வைத்தார். அவரைத் தொடர்ந்து ஆத்தூர் மகேந்திரனின், ‘மந்திரமல்ல தந்திரமே’ நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. இரண்டாம் நிகழ்வாக, நாகலூர் என்ற கிராமத்தில், அப்பகுதியைச் சேர்ந்த கழகத் தோழர் சந்தோஷ் தலைமையில் பரப்புரை சிறப்பாக நடைபெற்றது. அப்பகுதியிலுள்ள சுய உதவிக் குழுவின் சுபம் அடார்னஸை சேர்ந்த நண்பர்கள் கழகத் தோழர்களைப் பாராட்டி இனிப்பு வழங்கியும்,...

0

குக்கிராமங்களை குலுக்கிய பெரியார் பிறந்தநாள் வாகனப் பேரணி

தந்தை பெரியாரின் 137 -வது பிறந்த தினத்தையொட்டி, 17-09-2015 அன்று, சேலம் மாவட்டம் இளம்பிள்ளை பகுதி திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக இருசக்கர வாகனப் பேரணி சிறப்பாக நடைபெற்றது. அன்று காலை 7-30 மணிக்கு இளம்பிள்ளை பேருந்து நிலையம் அருகே வைக்கப்பட்டிருந்த பெரியார் படத்திற்கு மாலை அணிவித்து, தோழர்கள் அனைவரும் தங்களின் வாகனங்களில் கழக கொடியினை கட்டி அழங்கரித்துக்கொண்டு, காடையாம்பட்டி நோக்கி புறப்பட்டனர்; அங்கு விடுதலை சிறுத்தைகள் அமைப்பு சார்பாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சுமார் 8-00 மணியளவில் அப்பகுதியில் பெரியார் படத்திற்கு மாலை அணிவித்து, பிறந்தநாள் கேக் வெட்டி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. தொடர்ந்து வாகணப் பேரணி திருமலைகிரி, சிவதாபுரம் வழியாக 9-00 மணியளவில் சேலம் மாநகரை அடைந்தது. சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சியில் (மாவட்ட கழக ஏற்பாட்டில்) கலந்துகொண்டு, நான்கு ரோடு, புதிய பேருந்து நிலையம், ஐந்து ரோடு, கொல்லப்பட்டி வழியாக சுமார் 10-00 மணியளவில் இரும்பாலை சென்றடைந்தது வாகணப் பேரணி. அங்கு மூத்த பெரியார் தொண்டர் இரும்பாலை பழனிச்சாமி அய்யா அவர்கள் தோழர்களை...

0

எங்கள் தலைமுறைக்கு ஜாதிவேண்டாம்

எங்கள் தலைமுறைக்கு ஜாதிவேண்டாம் – எங்கள் சந்ததிக்கு வேலை வேண்டும் தொடர் பரப்புரைக் கூட்டங்கள் சேலம் மாவட்டம் இளம்பிள்ளை பகுதி திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக “எங்கள் தலைமுறைக்கு ஜாதிவேண்டாம் – எங்கள் சந்ததிக்கு வேலை வேண்டும்” தொடர் பரப்புரைக் கூட்டங்கள் மக்கள் ஆதரவோடு சிறப்பாக நடைபெற்று வருகின்றது. முதலில் இரண்டு தெருமுனைக் கூட்டங்கள் மட்டும் நடத்துவதற்காக காவல் நிலையத்தில் அனுமதி கோரப்பட்டது. இதற்கு மகுடஞ்சாவடி காவல் ஆய்வாளர் அனுமதி மறுத்தும், ஒரு மாத காலத்திற்கு எந்த நிகழ்ச்சிகளுக்குமே அனுமதி இல்லை என்றும் கடிதம் கொடுத்தார். (ஆனால் அ.தி.மு.க சார்பாக நடைபெற்ற கூட்டத்திற்கு காவல்துறை பாதுகாப்பு வழங்கியது) மாவட்ட கழக பொருப்பாளர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளரை சந்தித்து முறையிட்ட பின்னால், நாள் ஒன்றிற்கு ஒரு கூட்டம் வீதம் பத்து நாட்கள் நடத்த திட்டமிடப்பட்டு மீண்டும் காவல் நிலையத்தில் எழுதி கொடுக்கப்பட்டது. முதலில் மணுவை பெற மறுத்த உதவி ஆய்வாளர், உயர் அதிகாரிகளிடம் தொலைபேசியில் பேசிவிட்டு மணுவை பெற்றுக்கொண்டார். பின்னர் கூட்டங்களின் எண்னிக்கையை அல்லது நாட்களை குறைத்து கொள்ள வேண்டினார். அதை ஏற்க மறுத்த தோழர்கள்...

0

சேலம் (கிழக்கு) மாவட்டக் கலந்துரையாடல்

சேலத்தை அடுத்த கருப்பூரில் உள்ள மாவட்டத் தலைவர் தோழர் க. சக்திவேல் அவர்களின் பண்ணை இல்லத்தில் 5-8-2015 பிற்பகல் 4.00 மணிக்கு நடைபெற்றது

0

தாரமங்கலத்தில் ” உஷாரய்யா, உஷாரு .. “ என்னும் மூடநம்பிக்கைகளை அம்பலப்படுத்தும் குறுந்தகடு வெளியீடு

1-8-2015 சனிக்கிழமை மாலை 5-00 மணியளவில், சேலம் மாவட்டம், தாரமங்கலம் அங்காள பரமேஸ்வரி சமுதாயக் கூடத்தில், ” உஷாரய்யா, உஷாரு .. “ என்னும் மூடநம்பிக்கைகளை அம்பலப்படுத்தும் குறும்படத் திரையிடலும், குறுந்தகடு வெளியீடும் நடந்தது. தோழர் கோகுலக்கண்ணன் வரவேற்புரை ஆற்றினார். குறும்படத்தை திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி வெளியிட, தாரமங்கலம் பேரூராட்சியின் முன்னாள் தலைவர் சின்னாமி பெற்றுக் கொண்டார்.கழகத் தலைவர் கொளத்தூர் மணி, கவிஞர் அ. முத்துசாமி, மேட்டூர் முல்லைவேந்தன் மற்றும் பல்துறை சான்றோர் பாராட்டுரைக்குப் பின்னர், திரைப்பட இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் பாராட்டுரை வழங்கினார். நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்களும், கழகத் தோழர்களும் கலந்துகொண்டனர்.

0

“பெரியாரியல் பேரொளி” தோழர் பட்டுக்கோட்டை சதாசிவம் ( வளவன் ) 75ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா

பெரியாரியல் கொள்கைகளை கிராமம் கிராமமாக சென்று பரப்பும் பணியை தொடர்ந்து பல ஆண்டுகளாக செய்துவருபவரும், ஏராளமான பெரியாரியல் பரப்புரையாளர்களை உருவாக்கியவருமான தோழர் பட்டுக்கோட்டை சதாசிவம் ( வளவன் ) அவர்களுக்கு 24-7-2015ஆம் நாள் 75ஆம் ஆண்டு பிறந்தநாள் ஆகும். பேச்சின்போக்கில் இதை அறிந்துகொண்ட மேட்டூர் நகரக் கழகத் தோழர்கள் அவருக்கு பிறந்தநாள் விழா எடுக்க முடிவுசெய்து கழகத் தலைமையிடம் அனுமதி கோரினர். கழகத் தலைவரும், கழகப் பொதுச்செயலாளரும் கலந்துபேசி அவரது நீண்ட கால பெரியாரியல் பரப்புரைப் பணிகளைக் கருத்தில் கொண்டு அவ்விழாவை நடத்த அனுமதித்ததோடு, அவருக்கு “ பெரியாரியல் பேரொளி ” என்ற விருதினை அளிக்கவும் ஆலோசனைக் கூறினர். அதையடுத்து 24-7-2015 வெள்ளியன்று மேட்டூர் மகலட்சுமி திருமண மண்டபத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் அவ்விழாவை எடுத்தனர். அது விழா என்ற அளவோடு முடிந்துவிடாமல் அதை ஒரு பயிலரங்கமாகவும் நடத்தினர். கழகத் தலைவர் கொளத்தூர் மணி ‘ இட ஒதுக்கீட்டின்...