சேலம் மாவட்டம், காவலாண்டியூரில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா!

சேலம் மாவட்டம், காவலாண்டியூரில் 17.9.16 தந்தை பெரியார் 138வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு கழக கொடியேற்று விழா, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கும் நிகழ்வு காலை 9.00மணிக்கு நடைபெற்றது.

இந்நிகழ்வில் காவலாண்டியூர் கிளை கழக தலைவர் தோழர் மாரியப்பன் தலைமையில் தோழர்கள் ஊர்வலமாக சென்று கழக கொடியை ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. காவலாண்டியூரில் தோழர் சுந்தரமும், செ.செ.காட்டுவளவில் தோழர் சின்ராசு, கண்ணாமூச்சியில் தோழர் மாரியப்பன், மூலக்கடையில் தோழர் இராசேந்திரன், காந்தி நகரில் தோழர் சரசுவதி ஆகியோர் கழக கொடியை ஏற்றினர். ஊர்வலத்தில் தோழர்கள் விஜயகுமார், சித்துசாமி, மாரியப்பன், பழனிசாமி, சின்ராசு, அபிமன்யூ, இராசேந்திரன், சந்திரன், அவினாசி, பழனிசாமி, தங்கராஜ், சேகர், பச்சியப்பன், சுந்தரம், சித்தன், பிரகாஷ், ராணி, சரசுவதி ஆகியோர் இருசக்கர வாகனத்தில் ஊர்வலமாக சென்றனர்.

மூலக்கடையில் தோழர் இராசேந்திரன் அனைவருக்கும் தேநீர் வழங்கினார்.

14333224_1806924372924788_8967987251632136359_n 14333553_1806924446258114_2188565861775619206_n 14358928_1806924409591451_4982391625968753072_n 14364808_1806924342924791_3100862411654665403_n 14368627_1806924499591442_1111015469691490261_n 14368874_1806924469591445_6208185960398958053_n

You may also like...