சேலம் மாவட்ட சமஸ்கிருத எதிர்ப்பு போராட்டம் 08072016

8-7-2016  வெள்ளியன்று காலை 11-00 மணியளவில், மத்திய அரசு பள்ளி, உயர்கல்வி நிலையங்களில் சமஸ்கிருதத்தைத் திணிக்க மேற்கொள்ளும் முயற்சிகளைக் கண்டித்தும், மக்களின் பேச்சு மொழியாய் இல்லாத செத்த மொழியான சமஸ்கிருதத்தை அரசியல் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் அலுவல் மொழியாக சேர்த்திருப்பதை நீக்கக் கோரியும், சேலம் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் ஒருங்கிணைப்பில், சேலம் தலைமை அஞ்சல் அலுவலகத்தின் முன்னர் கண்டன ஆர்ப்பாட்டம், திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் நடைபெற்றது.

கண்டன ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு அமைப்புகளின் பொறுப்பாளர்களும் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்ட முழக்கங்களுக்கு இடையிடையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மண்டல செயலாளர் இரா.நாவரசன், ம.தி.மு.க. மாநகர செயலாளர் வழக்குரைஞர் ஆனந்தராஜ், அருந்ததிய மக்கள் இயக்க நிறுவுநர் வழக்குரைஞர் பிரதாபன், த.மு.மு.க. மாவட்ட செயலாளர் பி.சுல்தான், மக்கள் உரிமை பாதுகாப்பு மைய மாவட்ட செயலாளர் வழக்குரைஞர் மாயன், கம்யூனிஸ்ட் கட்சி (மா.லெ) மக்கள்விடுதலை தோழர் மணிமாறன், பகுஜன் சமாஜ் கட்சி மாவட்ட செயலாளர் வழக்குரைஞர் சந்தியூர் பார்த்திபன், த.பெ.தி.க. மாவட்ட செயலாளர் தங்கராசு, மூத்த பெரியார் தொண்டர் ஏற்காடு ஆசிரியர் தேவதாஸ் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

ஆர்ப்பாட்டத்தில் ஏறத்தாழ 120 தோழர்கள் கலந்துகொண்டனர். ஏரளமான பார்வையாளர்கள் ஆர்ப்பாட்ட முழக்கங்களையும், உரைகளையும் ஆர்வமாகக் கேட்டனர். காவல்துறையினரும் பேருந்து வழித்தடத்தை மாற்றுப் பாதையில் திருப்பிவிட்டு நிகழ்ச்சி சிறக்க உதவினர். ஆர்ப்பாட்டத்தை மாவட்டத் தலைவர் சி.கோவிந்தராசு ஒருங்கிணைத்தார். மாவட்ட செயலாளர் இரா.டேவிட் நன்றி கூறினார்.

IMG_4853 IMG_4854 IMG_4862 IMG_4868 IMG_4874 IMG_4890 IMG_4896 IMG_4897 IMG_4901 IMG_4902 IMG_4906 IMG_4910 IMG_4920 IMG_4923 IMG_4947 IMG_4949 IMG_4952 IMG_4954

You may also like...