பேராசிரியர் வீ. அரசு ஆய்வுரை (2) பெரியாரின் சுயமரியாதையும் வள்ளலாரின் ஜீவகாருண்யமும் ‘மனிதத்தை’யே பேசின
அருட்பெருஞ்ஜோதி பாடலோடு வள்ளலாரின் கட்டுரைகளை மறைத்து விடுகிறார்கள். அந்தக் கட்டுரைகளில் சமயத் தெய்வங் களையும், ஜாதி ஆச்சாரங்களையும் எதிர்த்தவர் வள்ளலார். சென்னை மாவட்டக் கழகம் சார்பாக, ‘வைதீகத்தை எதிர்த்த வள்ளலார்’ என்ற தலைப்பில், 22.10.2022 அன்று சென்னை, தேனாம்பேட்டை அன்பகத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் “வள்ளலாரின் இறுதிப் பத்தாண்டுகள்”” என்ற தலைப்பில் பேராசிரியர் வீ.அரசு ஆற்றிய உரை. உரையில் இராமலிங்கனாரின் பிறப்பு முதல் அவர் சென்னைக்கு குடியேறி பிறகு சென்னையை விட்டு வெளியேறி சன்மார்க்க சங்கத்தை உருவாக்கியது வரை, வள்ளலாரின் இளமைக்கால வரலாறுகளில் தொடங்கி வள்ளலாரின் வைதீக எதிர்ப்பு எப்படி பரிணமித்தது என்பதை பேராசிரியர் விளக்குகிறார். வள்ளலார் முதலில் பாசுரங்களைப் பாடி வந்தவராகவே இருந்திருக்கிறார். வள்ளலாருக்கு தாக்கத்தை ஏற்படுத்திய தமிழ் பக்தி மரபைச் சேர்ந்தவர்கள் என்று கூறினால், மாணிக்கவாசகர், திருமூலர், அருணகிரிநாதர், பட்டினத்தார், தாயுமானவர். இவர்கள் ஏற்படுத்தியது, தமிழ் பக்தி மரபுகளில் மிக முக்கியமான மரபு. இந்த மரபில் தான் வள்ளலார் ஊறியிருந்தார்....