30க்கும் மேற்பட்ட அமைப்புகள் ஓரணியாய் கருஞ்சட்டையுடன் திரளுகிறார்கள் டிச.23இல் கருஞ்சட்டை கடலாகிறது, திருச்சி
திருச்சியில் டிசம்பர் 23ஆம் தேதி பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் மாபெரும் கருஞ்சட்டைப் பேரணி யும், மாநாடும் திட்டமிடப்பட்டுள்ளது. பெரியாரை ஏற்றுக் கொண்ட தமிழ் தேசிய அமைப்புகள் – முற்போக்கு அமைப்புகள் – பெரியாரிய அமைப்புகள் இணைந்து பெரியாரே தமிழர்களின் ஒற்றை அடையாளம் என்று பார்ப்பனிய இந்துத்துவ வாதிகளுக்கு பிரகடனப்படுத்துவதே இந்தப் பேரணியின் நோக்கம். கூட்டமைப்பில் இடம் பெற்றுள்ள திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் தமிழ்நாடு முழுதுமிருந்தும் திருச்சி நோக்கி தனிப் பேருந்து வாகனங்களில் திரண்டு வர தயாராகி வருகிறார்கள். அண்மையில் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் உள்ளிட்ட தலைமைக் கழகப் பொறுப்பாளர்கள், தமிழ்நாடு முழுதும் திராவிடர் விடுதலைக் கழக மாவட்டக் கழக கலந்துரையாடல் கூட்டங்கள் வழியாக தோழர்களை சந்தித்து வருகின்றனர். அப்போது திருச்சி கருஞ் சட்டைப் பேரணியில் கழகத் தோழர்கள் பெருமளவில் பங்கேற்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி வருகிறார்கள். கழகத் தோழர்கள்...
