வினாக்கள்… விடைகள்…!
கோயில் கருவறைக்குள் உள்ள சிலை மந்திரத்தால் உயிரூட்டப்பட்டது; பாதுகாப்புக்காக கருவறையை அற நிலையத் துறை வீடியோ படம் எடுப்பது, பக்தர்களைப் புண்படுத்துவதாகும். – அர்ச்சகர் சங்கம் எதிர்ப்பு ஆகம விதிகளில் திருத்தம் கொண்டு வந்து கருவறைக்குள் ஒரு கண்காணிப்புக் காமராவைப் பொருத்தி விடலாமே! குரங்கு, எலி, பூனைகளுக்கு காபிப் பழத்தை உணவாகக் கொடுத்து, அவை மலம் கழிக்கும் போது வெளியாகும் கொட்டைகள்தான் உயர்ந்த ‘காபி’ ரகமாக தயாரிக்கப்படுகிறது. – ‘இந்து’ தமிழ் ஏடு செய்தி அக்கிரகாரத்துல ‘பேஷா’ மணக்கும் காபி வாசனை – ரகசியம், இப்பதாண்டா அம்பி புரியறது! ஜப்பான் நாட்டில் திருமணங்களை நடத்தி வைக்க புரோகிதர்களாக ரோபோக்களை (எந்திர மனிதர்களை) பயன்படுத்து கிறார்கள். – ‘தினமலர்’ செய்தி அந்த ரோபோக்களை எங்க நாட்டுக்கு அனுப்பிடா தீங்க… ஓமகுண்டம் புகை மூட்டத்துல ஓட்டம் புடுச்சிடும். செவ்வாய்க் கிரகத்துக்கு இந்தியா விண்கலம் அனுப்பிய அடுத்த 15 நாளில் அமெரிக்காவும் அனுப்பியுள்ளது. – செய்தி இரண்டு கலங்களும்...
