வினாக்கள்… விடைகள்…!

பா.ஜ.கவில் நமோ மோடி பஜனை பாடுவதை ஏற்க முடியாது.   – ஜஸ்வந்த் சிங்

எவ்வளவு காலத்துக்குத்தான் ராம பஜனையே பாடிக் கொண்டிருப்பது? ஒரு மாற்றம் வேண்டாமா?

எம்.ஜி.ஆர்., கலைஞர், ஜெய லலிதாவை முதலமைச்சர் களாக்கியதே காங்கிரஸ் தான்.  – தங்கபாலு

காங்கிரஸ் முதல்வர் நாற்காலியில் உட்காரும் வாய்ப்புகள் வந்தபோதும்கூட காங்கிரஸ் அதை உதறிவிட்டு, இவர்களை முதல்வராக்கியதா சொல்ல வர்றீங்க… அப்படித் தானே….

பா.ஜ.க. கூட்டணியை நடிகர் ரஜினி ஆதரிப்பதாக வெளிப் படையாக அறிவிக்க வேண்டும்.    – பா.ஜ.க. தலைவர்கள்    வற்புறுத்தல்

ஆமாம்! ரஜினி ‘வாய்ஸ்’ கொடுத்தால்தான் மோடி அலை வீசுதுன்னு மக்களை நம்ப வைக்க முடியும் !

குஜராத்தில் மனிதமலத்தை எடுக்கும் தொழிலில் 13 லட்சம் பேர் ஈடுபட் டுள்ளார்கள்.  – கர்மோச்சி அந்தோலன் ஆய்வு மய்யம் தகவல்!

சும்மா சொல்லக்கூடாது; மோடி எப்படி எல்லாம் வேலை வாய்ப்புகளை உருவாக்குறாரு, பாருங்க!

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 3 மற்றும் 4 ஆவது பிரிவுகள் தொடங்க, ரஷ்யாவுடன் இந்தியா ஒப்பந்தம் போடலாம்; தேர்தல் ஆணையம் அனுமதி. – செய்தி

அப்படியே, இலங்கையில் ராஜபக்சே மீது போர்க் குற்ற விசாரணை நடத்துறதுக்கும், இந்தியா சார்பில் அனுமதி வழங்கிடுங்க.

விஜயகாந்த் தொகுதி பக்கமே போகவில்லை என்கிறார்கள். கருணாநிதியும், ஜெய லலிதாவும் தொகுதிக்குப் போனார்களா?   – பிரேமலதா கேள்வி

சரி; எல்லோருமே தொகுதி பக்கம் போகும் தவறை செய்யவே இல்லைன்னு, ‘சத்தியமா’ ஒத்துக்கறோம். எதுக்கு பஞ்சாயத்து!

காங்கிரஸ் கை சின்னத்தில் நின்று தோற்றாலும் சரி, ஜெயித்தாலும் சரி, பெருமை தான்!  – அமைச்சர் வாசன்

இதோ பாருப்பா; கட்சியை விட்டுட்டு சின்னத்துக்கு பெருமை சேர்க்க கிளம் பிட்டாரு!

தேர்தல் முடியும் வரை எந்த ஆளுநரும் வெளி மாநிலத்துக்குப் போகக் கூடாது.  – குடியரசுத் தலைவர்  உத்தரவு

‘மருத்துவ சான்றிதழ்’ தந்தால் அனுமதிப்பீர்களா?

You may also like...