திராவிடர் விடுதலைக் கழக இணையதள செயல்பாட்டாளர்களின் கலந் துரையாடல் மற்றும் பயிற்சி வகுப்பு
6.4.2014 ஞாயிற்றுக் கிழமை அன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சென்னை நுங்கம்பாக்கம் இரயில் நிலையம் எதிரிலுள்ள ‘பிரிட்ஜ் அகடாமி’ அரங்கில், திராவிடர் விடுதலைக் கழக இணையதள செயல்பாட்டாளர்களின் கலந் துரையாடல் மற்றும் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. கழக இணைய தள செயலாளர் அன்பு. தனசேகரன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், கழதத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், அமைப்புச் செயலாளர் தி.தாமரைக் கண்ணன் உள்பட 50 தோழர்கள் கலந்து கொண்டனர். திராவிடர் விடுதலைக் கழக அதிகாரபூர்வ இணையதளமான செழுமைப்படுத்துவது குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது. இணையதளங்களில் பெரியார் பற்றியும், பெரியார் இயக்கங்கள் பற்றியும் அவதூறு பரப்புவதை, எப்படி எதிர்கொள்வது என்றும் விளக்கமளிக்கப்பட்டது. இணையதளத்தில் பெரியார் முழக்கம், புகைப்படம், ஒலி, ஒளி, அறிக்கைகள், நிகழ்வுகள், மின்னூல்கள் முதலியவற்றை பதிவேற்றுவதற்கு தனித்தனியாக பொறுப்பாளர்கள் கீழ்கண்டவாறு நியமிக்கப்பட்டனர்.
‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ இதழை இணையத்தில் பதிவேற்றும் பணி, கணியூர் தமிழ்ச் செல்வன், சூலூர் வீரமணி ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டது. தாமரைக் கண்ணன் இதற்கான கண்காணிப்புப் பொறுப்பை ஏற்பார். தலைமைக் கழக அறிக்கைகளை பதிவேற்றும் பணி கழகத் தலைவர் கொளத்தூர் மணி மேற்பார்வையில் கோகுல கண்ணனுக்கும், வீடியோ, ஆடியோ படங்களைப் பதிவேற்றும் பொறுப்பு செல்லையா முத்துசாமிக்கும், ஊடகங்களில் வெளிவரும் கழகத் தொடர்பான செய்திகளைக் கவனித்து பதிவேற்றும் பணிக்கு அன்பு தனசேகரன், ஜஸ்டின் ராஜ் ஆகியோரும், ‘ஜாதி மறுப்புத் திருமண மய்யம்’ தொடர்பான பதிவேற்றலுக்கு அ.ப. சிவாவும், முகநூல் பணிகளை பரிமளராசன், மணிகண்டன் ஆகியோர் தாமரைக்கண்ணன் மேற்பார்வையிலும், தமிழ்நாடு மாணவர் கழக செயல்பாடுகளை ஆண்டிமடம் சிவக்குமாரும், தகவல் சேமிப்புப் பணிகளை கணியூர் தமிழ்ச் செல்வனும் பொறுப்பேற்று செயல்படுவார்கள். இது தவிர, நிலையான பணிகளான ‘குடிஅரசு’ தொகுப்புகளை பதிவேற்றுதலை விஜய்குமாரும், புரட்சிப் பெரியார் முழக்கம், கடந்தகால இதழ்களை உடுமலை மலரினியனும், மின்நூல்களை தபசி. குமரன், அருண்குமாரும், பொறுப்பாளர்களின் முகவரி பட்டியலை தபசி. குமரனும், உறுப்பினர் சுயவிவரப் பட்டியலை திண்டுக்கல் இராவணனும் இணைய தளங்களில் பொறுப்பேற்று செயல் படுவார்கள். விக்கி பீடியாவுக்கு கழகம் தொடர்பான அறிமுக விளக்கத்தை விடுதலை இராசேந்திரன் எழுதுவார்.
சுயமரியாதை கலை பண்பாட்டுக் கழகத்துக்கான இணையத்தில் கலை, இலக்கியம், திரைப்படம் தொடர்பான விமர்சன-ஆய்வு கட்டுரைகளை வெளியிட முடிவு செய்யப்பட்டது. அ.ப. சிவா, பாரதிவாசன், மலரினியன், மே.கா. கிட்டு, ஜஸ்டின் ராஜ், பரிமளராசன், மணிகண்டன், தமிழ்ச் செல்வன், செல்வக்குமார், சூலூர் வீரமணி, பிரபா. அழகர், இராவணன், தாமரைக்கண்ணன் ஆகியோர் இதற்கான கட்டுரைகளை தொடர்ந்து எழுதுவார்கள். கட்டுரைப் பிரிவு பதிவேற்றம் மற்றும் முகநூலுக்கு கொளத்தூர் குமார், வீடியோ ஆடியோ, புகைப்படங்களுக்கு செல்லையா முத்துசாமி, செய்திகள் அறிவிப்புகளுக்கு அ.ப.சிவா ஆகியோர் பொறுப்பு ஏற்பார்கள்.
பெரியார் முழக்கம் 10042014 இதழ்