குழந்தைகள் பழகு மகிழ்வு முகாம்: பங்கேற்பாளர்களுக்கு வேண்டுகோள்

குழந்தைகள் பழகு மகிழ்வு முகாம்: பங்கேற்பாளர்களுக்கு வேண்டுகோள்

தமிழ்நாடு அறிவியல் மன்றத்தின் சார்பாக கோடை விடுமுறைக் காலத்தில் கொடைக்கானலில் குழந்தைகள் பழகு மகிழ்வு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மே மாதம் 15 முதல் 19 வரை 5 நாள்கள் முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் 8 வயது முதல் 16 வயது வரை உள்ள குழந்தைகள் பங்கேற்கலாம். 5 நாள்களுக்கு உணவு தங்குமிடம், சுற்றுலா உள்பட ரூ.1000 மட்டும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பங்கேற்க விரும்புவோர் ஏப்ரல் 15 ஆம் தேதிக்குள் முன்பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

முகாமிற்கு குழந்தைகளை அனுப்பும் பெற்றோர்கள் கவனத்திற்கு:

  1. பயிற்சி நடைபெறும் இடம் : கொடைக்கானல்
  2. வரவேண்டிய இடம் : திண்டுக்கல் பேருந்து நிலையம்
  3. வரவேண்டிய நேரம் : 14.05.2014 புதன் கிழமை 4 மணிக்குள் திண்டுக்கல் பேருந்து நிலையத்திற்கு வந்துவிட வேண்டும். அங்கிருந்து கொடைக்கானலுக்கு குழந்தைகளை மட்டும் தனிப் பேருந்தில் நாங்களே அழைத்துச் சென்றுவிடுவோம்.
  4. குளிப்பதற்கு சோப்பு, ஷாம்ப், பேஸ்ட், ப்ரஷ், துண்டு ஆகியவற்றைக் கொடுத்து அனுப்புங்கள்.
  5. கொடைக்கானலில் பயிற்சி நடக்கும் நாட்களில் குளிர் அதிகமாக இருக்கும் என்பதால், குளிர் தாங்கும் ஆடைகள், உல்லன் துண்டுகள், தொப்பிகளைக் கொடுத்தனுப்புங்கள்.
  6. குழந்தைகள் தங்கம், வெள்ளி நகைகளையும், விலை உயர்ந்த கடிகாரங்களையும் அணிந்து வரவேண்டாம்.
  7. செல்ஃபோன் கொண்டுவர வேண்டாம். கையில் தனியாக செலவுக்கு என தொகைகள் கொடுத்து அனுப்ப வேண்டாம்.
  8. 19.05.2014 திங்கள் மாலை 2.00 மணிக்கு முகாம் முடிந்துவிடும். பெற்றோர்கள் திண்டுக்கல் பேருந்து நிலையத்திற்கு 19.05.2014 மாலை 4 மணிக்கு வந்து குழந்தைகளை அழைத்துச் செல்லவும்.
  9. பெற்றோர்கள் பயிற்சி முகாமில் தங்க அனுமதி இல்லை.
  10. பெற்றோர்கள் முகாம் நடைபெறும் இடத்தில் அல்லாமல் கொடைக்கானலில் தனியார் விடுதிகளில் அறை எடுத்து தங்குவதாகத் திட்டம் இருந்தால் முன்கூட்டியே தகவல் தெரிவிக்கவும். கோடை விழா நடைபெறும் நாக்ள் என்பதால் தங்குமிடம் மட்டுமே ஒரு நாளுக்கு ரூ.2000 வரை ஆகும். சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் போக்குவரத்து நெரிசல் மிகக் கடுமையாக இருக்கும். எனவே அந்த நாட்களில் பயணத் திட்டத்தை வைத்துக் கொள்ள வேண்டாம்.

ஆசிரியர் சிவகாமி, மாநில அமைப்பாளர்       –              9842448175

ஆசிரியர் ப. சிவக்குமார், மாநில அமைப்பாளர்          –              9688856151

முனைவர் இராமகிருட்டிணன், மாநில அமைப்பாளர்        –              9486161500

பெரியார் முழக்கம் 10042014 இதழ்

You may also like...