மே மாதம் முழுதும் கழக பயிற்சி முகாம்கள்!

11.3.2014 செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் சென்னை தலைமை நிலைய அலுவலகத்தில் திராவிடர் விடுதலைக் கழக தலைமைக் குழு கூடியது. கழக செயலவைத் தலைவர் சு.துரைசாமி தலைமையில், கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் ஆகியோர் முன்னிலையில் கூடிய இக்கலந்துரையாடல் கூட்டத்தில் கீழ்கண்டோர் பங்கேற்றனர்:

ஈரோடு ப. இரத்தினசாமி, பால். பிரபாகரன், தி.தாமரைக்கண்ணன், தபசி. குமரன், சூலூர் தமிழ்ச்செல்வி, புதுவை லோகு அய்யப்பன், அன்பு. தனசேகரன், இராம. இளங்கோவன், பல்லடம் விஜயன், மேட்டூர் அ. சக்திவேல், மயிலாடுதுறை இளையராஜா, திண்டுக்கல் இராவணன், கொளத்தூர் குமார், திருப்பூர் சிவகாமி, பேராசிரியர் இராமகிருட்டிணன்.

தலைமைக் குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகள்:

  1. பொறுப்பாளர்களுக்கான பயிற்சி வகுப்புகள்:

சேலம் மண்டல பொறுப்பாளர்களுக்கான பயிற்சி வகுப்புகள் மே மாதம் 2, 3, 4 ஆகிய மூன்று நாட்கள் ஏற்காட்டிலும்,

கோவை மண்டல பொறுப்பாளர்களுக்கான பயிற்சி வகுப்புகள் மே மாதம் 12, 13, 14 ஆகிய மூன்று நாட்கள் உடுமலையிலும்,

மதுரை மண்டல பொறுப்பாளர்களுக்கான பயிற்சி வகுப்புகள் மே மாதம் 15, 16, 17 ஆகிய மூன்று நாட்கள் கொடைக்கானலிலும்,

நெல்லை மண்டல பொறுப்பாளர்களுக்கான பயிற்சி வகுப்புகள் மே முதல் வாரத்தில் மார்த்தாண்டத்திலும்,

தஞ்சை மண்டல பொறுப்பாளர்களுக்கான பயிற்சி வகுப்புகள் மே மாதம் 24, 25, 26 ஆகிய மூன்று நாட்கள் பூம்புகாரிலும்,

ஈரோடு மண்டல பொறுப்பாளர்களுக்கான பயிற்சி வகுப்புகள் ஜூன் மாதம் 6, 7, 8 ஆகிய மூன்று நாட்கள் கோபியிலும்,

சென்னை மண்டல பொறுப்பாளர் களுக்கான பயிற்சி வகுப்புகள் மே மாதம் 10, 11 ஆகிய இரண்டு நாட்கள் நடத்துவது என்றும் முடிவு செய்யப் பட்டுள்ளது.

  1. குழந்தைகள் பழகு மகிழ்வு முகாம்:

மே மாதம் 12 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை இரண்டு கட்டமாக ஐந்தைந்து நாட்கள் குழந்தைகள் பழகு மகிழ்வு முகாம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. ஐந்து நாட்களுக்கான கட்டணம் ரூ.1000 (ரூபாய் ஆயிரம்).

  1. இணைய தள தோழர்கள் சந்திப்பு:

6.4.2014 ஞாயிற்றுக் கிழமை அன்று சென்னையில், இணைய தள தோழர்கள் சந்திப்பு நடத்த முடிவுசெய்யப்பட்டது.

பெரியார் முழக்கம் 20032014 இதழ்

You may also like...