திராவிடர் விடுதலைக் கழக செயலவை நிகழ்வுகள்

29.3.2014 அன்று மயிலாடு துறையில் திராவிடர் விடுதலைக் கழக செயலவை – செயலவைத் தலைவர் திருப்பூர் சு.துரைசாமி தலைமையில் நடந்தது. நாகை மாவட்ட கழகத் தலைவர் மகா லிங்கம், ‘கடவுள்-ஆத்மா’ மறுப்பு களைக் கூற, தஞ்சை மண்டலச் செயலாளர் வழக்கறிஞர் இளைய ராசா வரவேற்றுப் பேசினார். கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் தொடக்க உரையாற்றினார். பொருளாளர் இரத்தினசாமி, கழகப் பரப்புரைக்காக 30 பேர் பயணிக்கக்கூடிய பயன்படுத்தப் பட்ட வாகனம், கழகத் தலைவர் ஒப்புதலுடன் வாங்கப்பட் டுள்ளதையும், அதற்குத் தேவை யான நிதி குறித்தும் விளக்கினார். ஒவ்வொரு மாவட்டக் கழகமும் வாகனத்துக்கான நன்கொடை யாக பொது மக்களிடமிருந்து திரட்டித்தரக்கூடிய நிதி மற்றும் குடும்ப ரீதியாக வழங்கக்கூடிய நிதியை நிர்ணயம் செய்யலாம் என்ற ஆலோசனையை முன் வைத்தார். அதன்படி செயலவை உறுப்பினர்கள் இயக்கம் மற்றும் குடும்ப சார்பில் வழங்கக் கூடிய நன்கொடையைத் தெரிவித்தனர்.

உரையாற்றிய மாவட்ட பொறுப்பாளர்கள் : சென்னை ஜான், காஞ்சிபுரம் தினேஷ், வேலூர் திலீபன், விழுப்புரம் அய்யனார், கிருட்டிணகிரி குமார், தர்மபுரி பரமசிவன், காவலாண் டியூர் ஈஸ்வரன், சேலம் மேற்கு சூரியகுமார், சேலம் கிழக்கு சக்திவேல், ஈரோடு நாத்திக ஜோதி, ஈரோடு தெற்கு சண்முக பிரியன், நிவாஸ், செல்வராஜ், மோகன் தாஸ். கோவை புறநகர் மேட்டுப் பாளையம் இராமச்சந்திரன், கோவை மாநகர் கிருட்டிணன், பொள்ளாச்சி விஜயராகவன், நிர்மல், திருப்பூர் சு. துரைசாமி, கரூர் மோகன்தாஸ், நாமக்கல் சாமிநாதன், பெரம்பூர் தாமோ தரன், திருச்சி ஆரோக்யசாமி, மதுரை பாண்டியன், நெல்லை அன்பரசு, குமரி சேவியர், தூத்துக் குடி பொறிஞர் சி. அம்புரோசு, தஞ்சை பாரி, நாகை முகேஷ், திருவாரூர் காளிதாஸ், திண்டுக்கல் நல்லதம்பி, மேட்டூர் கோவிந்த ராசு.

மண்டல செயலாளர்கள் : சேலம் சக்திவேல், தஞ்சை இளை யராசா, மதுரை இராவணன்.

தலைமைக் குழு உறுப் பினர்கள் : தமிழ்நாடு மாணவர் கழகம் சிவக்குமார், தமிழ்நாடு அறிவியல் மன்றம் சிவகாமி சிவக்குமார், சுயமரியாதை கலை பண்பாட்டுக் கழக சார்பில் குமார், தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், அமைப்புச் செய லாளர் தாமரைக் கண்ணன், பரப் புரைச் செயலாளர் பால்.பிரபா கரன் ஆகியோர் உரையாற்றினர்.

இறுதியில் தீர்மானங்களை அறிவித்து கழகத் தலைவர் கொளத்தூர் மணி உரையாற்றி னார். மாவட்டத் தலைவர் மகாலிங்கம் நன்றி கூறினார்.

மயிலாடுதுறை கழகத் தோழர்கள் நிகழ்ச்சிக்கு சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தனர். அமைப்புச் செயலாளர் தாமரைக் கண்ணன், மயிலாடுதுறை கழகத் தோழர்களின் மிகச் சிறந்த ஏற்பாடு களைப் பாராட்டிப் பேசினார்.

பெரியார் முழக்கம் 03042014 இதழ்

You may also like...