திருச்சி மாவட்டக் கழகம் நடத்திய போராட்டம் வெற்றி

திருச்சி மாவட்டம் 19 ஆவது வார்டு ஜெயில்பேட்டை பகுதியில் குடிசை மாற்று வாரியத்தால் கட்டப்பட்டு வரும் 320 குடியிருப்புகள், கட்டிடப் பணிகள், அவர்கள் நிர்ணயித்த 12 மாதங்கள் முடிந்து, மேலும் 6 மாதகாலம் தாமதமாகி வருகிறது. இதனை கண்டித்தும், விரைந்து கட்டிடப் பணிகளை தரமாக முடித்து பயனாளிகளுக்கு வழங்க வேண்டும் என வலியுறுத்தியும் கழகத்தின் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் தோழமை அமைப்புகளை இணைத்துக் கொண்டு கடந்த 21.2.13 அன்று நடைபெற்றது.

கழகத்தின் ஆர்ப்பாட்டத்தினை கவனித்த தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் திருச்சி மாவட்ட தலைமை பொறியாளர் சுரேஷ், கழகத் தோழர் பொன்னுசாமியை அழைத்து, “போரட்டத்தினை கவனித்தோம்; இன்னும் 3 மாத காலங்களில் கட்டிப் பணியை விரைந்து முடித்து விடுவோம்” என உறுதி கூறினார்.

தொடர்ந்து 100க்கும் மேற்பட்ட பணியாளர்கள் புதிதாக வரவழைக்கப்பட்டு, கட்டிடப் பணி விரைவாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையே கட்டுமானத்துக்கு தடை கோரி, தனி நபர் ஒருவர் தொடர்ந்த வழக்கும் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது. இது கழக ஆர்ப் பாட்டத்திற்குக் கிடைத்த வெற்றி.

பன்னாட்டு விசாரணை கோரி உரத்த நாட்டில் போராட்டம்

ஜெனிவாவில் நடந்து கொண்டிருக்கும் அய்.நா. மனித உரிமை ஆணைய மாநாட்டில் சுதந்திரமான பன்னாட்டு விசாரணை வேண்டும் என இந்திய அரசு தீர்மானம் கொண்டு வர வலியுறுத்தி 26.2.2014 புதன் கிழமை அன்று உரத்தநாடு பேருந்து நிலையம் அருகில் அடையாள பட்டினி போராட்டம் நடைபெற்றது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகர செயலாளர் அ. கண்ணன் தலைமை தாங்கினார். நாம் தமிழர் கட்சி அ. நல்லதுரை, மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் மக்கள் விடுதலைக் கட்சி இரா. அருணாச்சலம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோ. ஜெய்சங்கர், திராவிடர் விடுதலைக் கழகம் கு. பாரி, வழக்கறிஞர் காசி. விஸ்வநாதன், ம.தி.மு.க. துரை. ராமச்சந்திரன், விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆம்பல் ஏ. சரவணன், தமிழ் தேசிய பொதுவுடைமைக் க;சி நா.வைகரை, ப. விஜயன் உள்ளிட்டோர் உரையாற்றினர்.

You may also like...