நடுவண் ஆட்சியின் ஈவிரக்கமற்ற பெட்ரோல் – கேஸ் விலை உயர்வு
சிலிண்டர் ‘கேஸ்’ விலை 785 ஆகிவிட்டது. பா.ஜ.க.வின் பொருளாதாரப் புலிகள் இதை நியாயப்படுத்துகிறார்கள். இந்த ஒரு மாதத்தில் மட்டும் ரூ.75 உயர்ந்துள்ளது. 2014 மே மாதத்தில் டெல்லியில் பெட்ரோல் விலை ஒரு லிட்டர் அனைத்து வரிகளும் நீங்கலாக ரூ.47.12; இது பிப்ரவரி யில் 2021இல் வரிகள் நீங்கலாக ரூ.29.34 ஆக குறைந்தது. ஆனால், அடிப்படையான பெட்ரோல் விலை மீது நடுவண் ஆட்சி வரி, டூட்டி, கமிஷன், லெவி என்ற பெயர்களில் 217 சதவீத வரிகளைப் போட்டு குறைந்த விலைக்கு மக்களுக்குக் கிடைக்காமல் பார்த்துக் கொள்கிறது. 2021 பிப்ரவரியில் பெட்ரோலின் சர்வதேச சந்தை நிலவரப்படி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.29.34 காசுகள் மட்டுமே. இத்துடன் மத்திய அரசு போடும் வரி 32.98 (38 சதவீதம்), விற்பனையாளர் கமிஷன் ரூ.3.69 (4 சத வீதம்), விற்பனை வரி ரூ.19.92 (23 சதவீதம்), ஆக அனைத்தையும் சேர்த்து ரூ.86.3-க்கு விற்கப் படுகிறது. (அனைத்து வரிகள் கமிஷன்...