வினா விடை
கூட்டணி பேச்சுவார்த்தைக்காக தலைமை அலுவலகத்தில் காத்திருந்த எடப்பாடி பழனிசாமி; யாரும் வராததால் அதிருப்தி – செய்தி கவலை வேண்டாம்… தங்கமணி, வேலுமணியை ஆளுக்கொரு கட்சி தொடங்கவைத்து பேச்சுவார்த்தைக்கு வரச் சொல்லிவிடலாம். தமிழ்நாட்டில் இருந்து 39 எம்.பி.க்களை டெல்லிக்கு அனுப்பும் வரை நமக்கு ஓய்வே இல்லை – அண்ணாமலை 39 எம்.பி.க்களை அனுப்பப் போகிற கட்சிக்குத்தானே வேலை? பாஜகவுக்கு என்ன வேலை? ஊழல் கட்சிகளின் ஆட்சிக்கு பூட்டுப்போட மக்கள் முடிவு – நரேந்திர மோடி ஆமாம்… துவாரகா எக்ஸ்பிரஸ், ஆயுஷ்மான் பாரத், டோல்கேட் ஊழல் செய்த கட்சிக்கு முடிவு கட்டப் போகிறார்கள். பொதுமக்களுக்கு அளித்த ஒவ்வொரு வாக்குறுதியையும் பாஜக நிறைவேற்றிவிட்டது – அமித் ஷா கருப்புப் பணத்தை மீட்டு 15 லட்சம் ரூபாய் இன்னும் வரவு வைக்கவில்லையே! மதுரை எய்ம்ஸ் செங்கல்லோடு நிற்கிறதே? இந்தியாவை யாராவது அச்சுறுத்த நினைத்தால் சரியான பதிலடி கொடுப்போம் – ராஜ்நாத் சிங்...
